என் மலர்
உலகம்

இஸ்ரேல் தாக்குதல்: காசா பெண் மருத்துவரின் 9 குழந்தைகளும் உயிரிழந்த சோகம்
- கணவரும் மீதமுள்ள மகனும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
- இஸ்ரேல் தாக்குதலில் சுமார் 16,500 குழந்தைகள் உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது.
நேற்று காசாவில் பாலஸ்தீனிய பெண் மருத்துவரின் வீட்டில் இஸ்ரேல் குண்டுவீசி நடத்திய தாக்குதலில் அவரின் ஒன்பது குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட 9 குழந்தைகள், நாசர் மருத்துவ வளாகத்தில் உள்ள அல் தஹ்ரிர் மருத்துவமனை குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் அலா அல்-நஜ்ஜாரின் குழந்தைகள் ஆவர்.
கான் யூனிஸில் உள்ள அவரின் வீட்டை இஸ்ரேல் தாக்கியது. இந்த நேரத்தில் மருத்துவமனையில் மருத்துவர் பணியில் இருந்தார். வீட்டில் குழந்தைகளுடன் இருந்த கணவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்களின் மீதமுள்ள மகன் ஆபத்தான நிலையில் உள்ளார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் காசாவில் இஸ்ரேலிய இராணுவத்தின் படுகொலையில் 53,901 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 1.22 லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இஸ்ரேல் தாக்குதலில் சுமார் 16,500 குழந்தைகள் உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது.
மூன்று மாதங்களாக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் முற்றுகையால் காசா கடுமையான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்கிறது.






