search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதிஷ்குமார்"

    • 'ஜிவித்புத்ரிகா' என்பது பீகாரில் உள்ள மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றாகும்.
    • பெண்கள் தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக விரதம் அனுசரித்து நதி அல்லது குளத்தில் புனித நீராடுவார்கள்.

    பீகாரில் ஜீவித்புத்ரிகா என்ற புனித நீராடும் பண்டிகையில் 37 குழந்தைகள் உட்பட மொத்தம் 43 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேரை காணவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    பீகார் மாநிலத்தின் 15 மாவட்டங்களில் உள்ள ஆறுகள் மற்றும் குளங்களில் பக்தர்கள் புனித நீராடும் போது இந்த துயர சம்பவம் நடந்ததாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

    'ஜிவித்புத்ரிகா' என்பது பீகாரில் உள்ள மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றாகும். இதில் பெண்கள் தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக விரதம் அனுசரித்து தங்கள் குழந்தைகளுடன் நதி அல்லது குளத்தில் புனித நீராடுவார்கள்.

    பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார். 

    • இன்று ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
    • மரக்கன்றுகளை நடுவதில் பீகார் அரசு கவனம் செலுத்துகிறது.

    ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஒரு மரத்திற்கு ராக்கி கயிறு கட்டினார். பின்னர் மரக்கன்றுகளை அவர் நட்டார்.

    இந்த நிகழ்வில் அவருடன் பீகார் துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் இருந்தனர்.

    இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பீகாரின் பசுமையை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மாநில அரசு 2012-ம் ஆண்டு முதல் ரக்ஷா பந்தன் பண்டிகையை 'பீகார் விருக்ஷ் சுரக்ஷா திவாஸ்' ஆக கடைபிடித்து வருகிறது. நாம் மரங்களை நட்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். மரக்கன்றுகளை நடுவதில் மாநில அரசு கவனம் செலுத்துகிறது. மாநிலத்தில் சுற்றுச்சூழல் சுற்றுலாவை அரசு ஊக்குவித்து வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இன்று டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது.
    • இந்த கூட்டத்தை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல் மந்திரிகளில் பலர் புறக்கணித்துள்ளனர்

    நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டது.

    தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பெயர் கூட பட்ஜெட்டில் வாசிக்கப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ததுடன் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல் மந்திரிகள் கலந்துகொள்ளும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல் மந்திரிகளில் பலர் புறக்கணித்துள்ளனர்

    அதே சமயம் எதிர்க்கட்சிகளில் இருந்து ஒரே முதல்வராக நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜியும் வெளிநடப்பு செய்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

    நிதிஷ்குமாருக்கு பதிலாக பீகாரின் துணை முதலமைச்சர்கள் சாம்ராட் சௌத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோர் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    • மத்திய பட்ஜெட்டில் பீகாருக்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு.
    • பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான எந்த திட்டமும் இல்லை.

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியது. கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு அடுத்தபடியாக தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களையும் வென்று முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக உள்ளன.

    இந்நிலையில் 2024- 25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

    அப்போது, மத்திய பட்ஜெட்டில் பீகாரில் புதிய சாலைகள் அமைப்பது உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

    பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான எந்த திட்டமும் இல்லை என்று நேற்று தெரிவித்த மத்திய அரசு தற்போது பீகார் மாநிலதிக்ரு சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

    இந்நிலையில், பட்ஜெட் தொடர்பாக பேசிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், "தேசிய ஜனநாயக கூட்டணியில் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும் என்று நான் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்தேன். எங்கள் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அல்லது சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று கோரினேன்.

    பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் முன்னரே அது கிடைக்காது என்று பலரும் பேசினார்கள். இப்போது பீகார் மாநிலத்திற்கு சிறப்பு நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது" என்று பேசியுள்ளார்.

    • பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரவேண்டும் என்பது நிதிஷ்குமாரின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.
    • பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான எந்த திட்டமும் இல்லை என்று மத்திய நிதி இணையமைச்சர் கூறியுள்ளார்.

    இந்தியாவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்து மோடி மூன்றாவது முறையாக பிரதமரானார். இந்த கூட்டணியில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

    பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரவேண்டும் என்பது கூட்டணியில் உள்ள நிதிஷ்குமாரின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.

    இந்நிலையில், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான எந்த திட்டமும் இல்லை என்று மத்திய நிதி இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி பாராளுமன்றத்தில் இன்று எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.

    மத்திய அரசின் இந்த முடிவை பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார். அதில், நிதிஷ்குமார் மற்றும் அவரது கட்சியின் தலைவர்கள் மத்திய அரசின் அதிகாரத்தை அனுபவித்து கொண்டு, சிறப்பு அந்தஸ்து கோரிக்கை தொடர்பான பாசாங்குத்தனமான அரசியலை தொடரலாம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    அருணாச்சலப் பிரதேசம், அசாம், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 11 மாநிலங்களுக்கு இதுவரை சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

    • பாஜக அரசின் இந்த உத்தரவு அரசியலமைப்பிற்கு எதிரானது.
    • சாதி மற்றும் மதத்தின் பெயரால் பிரிவினையை உருவாக்கும் எதையும் நான் ஆதரிக்கமாட்டேன்.

    உத்தரபிரதேசத்தில் உள்ள கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களைக் காண்பிக்க வேண்டும் என்று முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

    சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    உத்தரபிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் பாஜக அரசின் உந்த உத்தரவிற்கு பாஜக கூட்டணியில் உள்ள 3 முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சாதி மற்றும் மதத்தின் பெயரால் பிரிவினையை உருவாக்கும் எதையும் நான் ஆதரிக்கமாட்டேன் என்று உத்தரபிரதேச அரசின் இந்த உத்தரவிற்கு மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

    அதே போல், உத்தரபிரதேச அரசின் இந்த உத்தரவு திரும்ப பெறப்பட வேண்டும் என்று நிதிஷ்குமார் கட்சியான ஜனதா தளத்தின் தலைவர் கே.சி. தியாகி தெரிவித்துள்ளார்.

    பாஜக அரசின் இந்த உத்தரவு அரசியலமைப்பிற்கு எதிரானது என்று ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் மாநில தலைவர் ராமஷிஸ் ராய் தெரிவித்துள்ளார்.

    உத்தரபிரதேச பாஜக அரசின் உத்தரவிற்கு பாஜக கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • டெல்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் இருவரும் போட்டி போட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

    திருப்பதி:

    பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இருவரும் தங்களுடைய மாநிலங்களுக்கு அதிக நிதி பெறுவதில் ஆர்வமாக உள்ளனர்.

    சந்திரபாபு நாயுடு கடந்த 15 நாட்களுக்கு முன்பு 2 நாட்கள் டெல்லியில் முகாமிட்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து பேசினார்.

    அப்போது பிரதமரிடம் ஆந்திர மாநில பிரிவுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் மற்றும் 7 அம்ச வளர்ச்சி குறித்த பட்டியலை வழங்கினார்.

    இந்த சந்திப்பு நடந்த 5 நாட்களில் ஆந்திர மாநிலத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

    இந்த நிலையில் மத்திய பட்ஜெட் கூட்டம் விரைவில் வர உள்ளது. இது தொடர்பாக பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் உத்தரவின் பேரில் அவருடைய கட்சியின் செயல் தலைவர் சஞ்சய் குமார் ஜா கடந்த திங்கட்கிழமை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.

    அப்போது பட்ஜெட்டில் பீகார் மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியது.

    இதனைத் தொடர்ந்து நேற்று 2-வது முறையாக சந்திரபாபு நாயுடு டெல்லி சென்றார். மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்திற்கு கணிசமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

    இன்று காலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், சந்திரபாபு நாயுடு சந்திப்பு நடைபெற இருந்தது. இந்த சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆந்திரா திரும்பினார்.

    மத்திய பட்ஜெட் அறிவிப்பு வெளியாகும் முன்பே சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய மாநிலத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய கூட்டணி தந்திரத்தை பயன்படுத்தி நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

    இது டெல்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஜே.பி. கங்கா பாதை திட்டத்தின் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
    • ஐ.ஏ.எஸ். அதிகாரி, ‘ஐயா தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்’ என்று பதற்றத்துடன் கூறினார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஜே.பி. கங்கா பாதை திட்டத்தின் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதி பணிகள் முடிந்ததைத்தொடர்ந்து, அந்த சாலைகளை அர்பணிக்கும் நிகழ்ச்சி பாட்னாவில் நேற்று நடந்தது.

    நிகழ்ச்சியில் முதல்-மந்திரி நிதிஷ்குமார், துணை முதல்-மந்திரிகள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா, ரவிசங்கர் பிரசாத் எம்.பி. மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பேசும்போது, 'மாநிலத்தின் நலனுக்காக சாலைப்பணிகளை விரைந்து முடியுங்கள். நீங்கள் விரும்பினால் உங்கள் கால்களில்கூட விழுகிறேன்' என்று கூறியபடி அங்கிருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை நோக்கி நெருங்கினார் நிதிஷ்குமார்.

    இதனால் மேடையில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சுதாரித்துக்கொண்ட அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி, பல சில அடிகள் பின்வாங்கி, 'ஐயா தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்' என்று பதற்றத்துடன் கூறினார்.

    இது தொடர்பான வீடியோ வைரலாகியது. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ், தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பலம் குறைந்த முதல்-மந்திரியால் இதைத்தான் செய்யமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.


    • மத்திய பட்ஜெட்டை வரும் ஜூலை 23ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
    • 3வது முறையாக மோடி பிரதமரான பிறகு செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும்.

    2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வரும் ஜூலை 23ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

    வரும் ஜூலை 22ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், வரும் 23ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 3வது முறையாக மோடி பிரதமரான பிறகு செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும்.

    இந்நிலையில், நடப்பு பட்ஜெட்டில் பீகார் மாநில திட்டங்களுக்காக ரூ.30,000 கோடியை ஒதுக்க வேண்டும் என்று நிதிஷ்குமார் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். அப்போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    இதற்கு முன்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநில திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி கேட்டதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் ஆதரவில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடித்து மோடி 3 ஆவது முறையாக பிரதமராகினார். ஆதலால் நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    • பீகார் மாநிலத்தில் கடந்த 15 நாட்களில் 9 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது.
    • பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சியில் இருப்பதால் கோடி மீடியாக்கள் இந்த விவகாரத்தை பற்றி பேசுவதில்லை.

    பீகார் மாநிலம் சிவன் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஒரே நாளில் 2 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாலம் இடிந்து விழுந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிந்து விழுந்த 2 பாலங்களும் எம்பி பிரபுநாத் சிங் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பீகார் மாநிலத்தில் கடந்த 15 நாட்களில் 9 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது. இவ்வாறு பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுவது பீகாரில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் தலைமையில் உள்ள ஆளும் ஜனதா தள கட்சி மீது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

    இந்நிலையில் பீகாரில் தொடர்ந்து பாலங்கள் இடிந்து விழுந்து வருவதை அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார். 

    அதில், "பா.ஜ.க கூட்டணியில் ஊழல் ஆட்சியில், பீகார் மாநிலத்தில், கடந்த 15 நாட்களில் 9 பாலங்களில் இடிந்து விழுந்துள்ளன. குறிப்பாக, இன்று (03.07.24) மட்டும், 3 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன.

    இந்த விவகாரத்தில் யார் குற்றவாளி என்பதை 18 ஆண்டுகால தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சொல்ல வேண்டும். ஆனால் பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சியில் இருப்பதால் கோடி மீடியாக்கள் இந்த விவகாரத்தை பற்றி பேசுவதில்லை.

    ஆனால், 6 கட்சிகள் அடங்கிய இரட்டை இயந்திர ஆட்சிக்கு 15 நாட்களில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான 10 பாலங்கள் இடிந்து விழுந்த பிறகும், எதிர்க்கட்சிகளை குறை சொல்ல எந்த சாக்குபோக்கும் கிடைக்காமல் இருப்பது விசித்திரமாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

    • பாலம் இடிந்து விழுந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
    • இடிந்து விழுந்த 2 பாலங்களும் எம்பி பிரபுநாத் சிங் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது.

    பீகார் மாநிலம் சிவன் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஒரே நாளில் 2 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பீகார் மாநிலத்தில் கடந்த 15 நாட்களில் 6 பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில் தற்போது மேலும் 2 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது.

    பாலம் இடிந்து விழுந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிந்து விழுந்த 2 பாலங்களும் எம்பி பிரபுநாத் சிங் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுவது பீகாரில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் தலைமையில் உள்ள ஆளும் ஜனதா தள கட்சி மீது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

    இதற்கிடையில் ஜார்கண்ட் மாநிலத்திலும் நேற்று கனமழையால் கிரிதிக் மாவட்டத்தில் உள்ள ஆர்கா நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.

    • பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கைக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம்.
    • தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு அழுத்தம் தருவது எங்கள் நோக்கமல்ல

    பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அல்லது சிறப்பு நிதித்தொகுப்பை மத்திய அரசு வழங்கவேண்டும் என நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு அளிப்பதால் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    இந்நிலையில், பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் என்பது எங்களது அடிப்படை கோரிக்கை என்று மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தர வேண்டும். மாநிலக் கட்சிகள் எந்த நிலைப்பாடு எடுத்தாலும் கவலையில்லை. பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கைக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். இதன்மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு அழுத்தம் தருவது எங்கள் நோக்கமல்ல" என்று அவர் தெரிவித்தார். 

    ×