என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீகார் முதல்வர்"

    • புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று நடந்தது.
    • விழாவில் பிரதமா் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் பங்கேற்பு.

    பீகார் மாநில சட்டசபை தோ்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களைக் கைப்பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி, அசைக்க முடியாத பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைத்தது. பா.ஜ.க. 89 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

    ஐக்கிய ஜனதா தளம் 85, மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) 19, மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சியின் இந்துஸ் தானி அவாம் மோா்ச்சா 5, மாநிலங்களவை எம்.பி. உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டீரிய லோக் மோா்ச்சா 4 இடங்களைக் கைப்பற்றின.

    ஐக்கிய ஜனதா தளத்தை விட பா.ஜ.க. அதிக தொகுதி களில் வென்றாலும் நிதிஷ் குமாா் முதல்-மந்திரியாகத் தொடா்வார் என்று கூட்டணிக் கட்சிகள் உறுதி செய்தன.

    இதைத்தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளம் புதிய எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் பாட்னாவில் நேற்று நடை பெற்றது. கட்சியின் சட்ட சபை குழு தலைவராக நிதிஷ் குமாா் ஒரு மனதாக தோ்வு செய்யப்பட்டாா்.

    பின்னா், தேசிய ஜன நாயக கூட்டணி புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடை பெற்றது. அதில், பீகார் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நிதிஷ் குமார் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

    அதன் பிறகு கூட்டணிக் கட்சித் தலைவா்களுடன் சென்று கவர்னர் ஆரிப் முகமது கானை சந்தித்த நிதிஷ் குமாா், தனது ராஜினாமா கடிதத்தை சமா்ப்பித்தாா். தனது ஆதரவு எம்.எல்.ஏ.க் களின் கடிதங்களை வழங்கி, புதிய ஆட்சி அமைப்பதற்கான நடைமுறைகளைத் தொடங்குமாறு கேட்டுக் கொண்டாா்.

    அதன்படி, நடப்பு சட்டசபை கலைக்கப்பட்டு, மாநிலத்தில் ஆட்சியமைக்க நிதிஷ் குமாருக்கு கவர்னர் அழைப்பு விடுத்தாா்.

    இதைத்தொடர்ந்து பாட்னாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று நடந்தது.

    முதலமைச்சராக 10-வது தடவையாக 74 வயது நிதிஷ்குமார் பதவி ஏற்றார். விழாவில் பிரதமா் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பா.ஜ.க. உள்பட தேசிய ஜனநாய கூட்டணியின் மூத்த தலைவா்கள் பங்கேற்றனர்.

    வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் பாதிகப்பட்டுள்ள நாகாலாந்து மாநிலத்திற்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ரூ.ஒரு கோடி நிவாரண நிதி வழங்கியுள்ளார். #Nagalandflood #NitishKumar #NeiphiuRio
    பாட்னா :

    கேரளாவை போல் நாகாலாந்து மாநிலமும் கன மழை மற்றும் வெள்ளத்தால் பெரும் சேதம் அடைந்துள்ளது. இதற்கிடையே, தங்களுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு நாகாலாந்து முதல்வர் கோரிக்கை விடுத்தார். ட்விட்டரில் இது தொடர்பான வீடியோ ஒன்றை இம்மாத தொடக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

    அதில், நாகாலாந்தில் பெய்து வரும் கனமழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    வெள்ள பாதிப்பால், முக்கியமான என்.எச் 29 நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. எனவே, வெள்ள பாதிப்பை சரி செய்ய நாகாலாந்து மாநிலத்திற்கு நிதி அளிக்க கோரி முதல்வர் ரியோ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், நாகாலாந்து முதல்வரின் கோரிக்கையை ஏற்ற பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நிவாரண நிதியாக ரூ. 1 கோடி வழங்கியுள்ளார். நாகாலாந்து முதல்வரின் நிவாரண நிதி கணக்கிற்கு நிதியை அனுப்பிய நிதிஷ் குமார், முதல்வருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

    அதில், நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தினால் உயிரழந்த மக்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த இக்கட்டான நிலையில் இருந்து நாகாலாந்து மக்கள் விரைவில் மீண்டு வருவார்கள் எனவும் நிதிஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  #Nagalandflood #NitishKumar #NeiphiuRio
    ×