முதல்வர் பதவியை துறக்கிறார் நிதிஷ் குமார் - பரபரக்கும் பீகார் அரசியல் களம்!

நிதிஷ் குமார் விலகினால் பாஜகவைச் சேர்ந்தவர் முதலமைச்சராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.நிதிஷ் குமாரின் மகனான நிஷாந்த் குமார் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என தகவல்.
முதல்வர் பதவியை துறக்கிறார் நிதிஷ் குமார் - பரபரக்கும் பீகார் அரசியல் களம்!
Published on

நிதிஷ் குமாருக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் இதனால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய அவர் முடிவும் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் விலகினால் பாஜகவைச் சேர்ந்தவர் முதலமைச்சராக பதவியேற்பார் என கூறப்பட்டது.

அதேசமயம் நிதிஷ் குமாரின் மகனான நிஷாந்த் குமார் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், பீகார் முதலமைச்சராக பொறுப்பேற்ற 4 மாதங்களே ஆன நிலையில் பதவியில் இருந்து விலகுவதை நிதிஷ் குமார் உறுதி செய்துள்ளார்.

ராஜினாமா செய்வதை உறுதி செய்த நிதிஷ் குமார் பீகாரின் புதிய அரசிற்கு அனைத்து விதத்திலும் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதை உறுதி செய்த நிதிஷ் குமார் முழு மனதுடன் பீகார் மக்களுக்கு பணியாற்றியதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு தேர்தலில் என்டிஏ கூட்டணியில் வென்ற நிதிஷ்குமார் பீகார் முதலமைச்சராக 10வது முறையாக பொறுப்பேற்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com