என் மலர்
நீங்கள் தேடியது "Bihar CM"
- புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று நடந்தது.
- விழாவில் பிரதமா் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் பங்கேற்பு.
பீகார் மாநில சட்டசபை தோ்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களைக் கைப்பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி, அசைக்க முடியாத பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைத்தது. பா.ஜ.க. 89 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
ஐக்கிய ஜனதா தளம் 85, மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) 19, மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சியின் இந்துஸ் தானி அவாம் மோா்ச்சா 5, மாநிலங்களவை எம்.பி. உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டீரிய லோக் மோா்ச்சா 4 இடங்களைக் கைப்பற்றின.
ஐக்கிய ஜனதா தளத்தை விட பா.ஜ.க. அதிக தொகுதி களில் வென்றாலும் நிதிஷ் குமாா் முதல்-மந்திரியாகத் தொடா்வார் என்று கூட்டணிக் கட்சிகள் உறுதி செய்தன.
இதைத்தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளம் புதிய எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் பாட்னாவில் நேற்று நடை பெற்றது. கட்சியின் சட்ட சபை குழு தலைவராக நிதிஷ் குமாா் ஒரு மனதாக தோ்வு செய்யப்பட்டாா்.
பின்னா், தேசிய ஜன நாயக கூட்டணி புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடை பெற்றது. அதில், பீகார் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நிதிஷ் குமார் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
அதன் பிறகு கூட்டணிக் கட்சித் தலைவா்களுடன் சென்று கவர்னர் ஆரிப் முகமது கானை சந்தித்த நிதிஷ் குமாா், தனது ராஜினாமா கடிதத்தை சமா்ப்பித்தாா். தனது ஆதரவு எம்.எல்.ஏ.க் களின் கடிதங்களை வழங்கி, புதிய ஆட்சி அமைப்பதற்கான நடைமுறைகளைத் தொடங்குமாறு கேட்டுக் கொண்டாா்.
அதன்படி, நடப்பு சட்டசபை கலைக்கப்பட்டு, மாநிலத்தில் ஆட்சியமைக்க நிதிஷ் குமாருக்கு கவர்னர் அழைப்பு விடுத்தாா்.
இதைத்தொடர்ந்து பாட்னாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று நடந்தது.
முதலமைச்சராக 10-வது தடவையாக 74 வயது நிதிஷ்குமார் பதவி ஏற்றார். விழாவில் பிரதமா் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பா.ஜ.க. உள்பட தேசிய ஜனநாய கூட்டணியின் மூத்த தலைவா்கள் பங்கேற்றனர்.
- ராகுல் காந்தி கடந்த 17- ந் தேதி சாசாராம் பகுதியில் யாத்திரையை தொடங்கினார்.
- இந்த யாத்திரையில் தேஜஸ்வி யாதவும் இந்த யாத்திரையில் ராகுல்காந்தியுடன் கலந்து கொண்டார்.
பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை வலியுறுத்தி, வாக்கு திருட்டை கண்டித்து, 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த 17- ந் தேதி சாசாராம் பகுதியில் யாத்திரையை தொடங்கினார்.
செப்டம்பர் 1-ல் தலைநகர் பாட்னாவில் யாத்திரையை முடிக்கிறார். இந்த யாத்திரையில் பீகார் முன்னாள் துணை முதல்- மந்திரியும், ராஷ்டீரிய ஜனதாதள தலைவருமான தேஜஸ்வி யாதவும் ராகுல்காந்தியுடன் கலந்து கொண்டார்.
இந்நிலையில், பீகாரில் இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ் தன்னிச்சையாக தம்மை அறிவித்தார்.
வாக்காளர் அதிகார யாத்திரையில் ராகுல்காந்தி மற்றும் அகிலேஷ் யாதவின் முன்னிலையில் தேஜஸ்வி யாதவ் இதனை அறிவித்தார்.
- பீகாரில் 125 யூனிட் வரை எவ்வித மின் கட்டணமும் செலுத்த தேவையில்லை.
- இத்திட்டம் வரும் ஆகஸ்டு 1 முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது.
பாட்னா:
பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
மக்கள் பயன்பெறும் வகையில் மின் நுகர்வில் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளேன். வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம் 125 யூனிட் வரை எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இத்திட்டம் வரும் ஆகஸ்டு 1 முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதன்மூலம் 1. 67 கோடி பேர் பயன்பெறுவர்.
சூரிய சக்தி மின்சார திட்டமும் மேலும் பரவலாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மானியம் வழங்கப்படும். ஏழை குடும்பங்களுக்கு இலவச சூரிய மின் உற்பத்தி உபகரணங்களும் வழங்கப்படும். இது மின் நெருக்கடியைக் குறைக்க உதவும். அனைத்து மக்களும் எளிய மின்சாரம் பெறவேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், நிதிஷ்குமார் அறிவிப்பு பற்றி ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் மற்றும் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 20 ஆண்டு கால ஆட்சியில் அவருடைய வாக்குறுதிகள் நீண்டகாலம் நம்பத்தக்க ஒன்றாக இருந்தது இல்லை. பீகாரில் சட்டசபை தேர்தல் வரவுள்ள சூழலில், 125 யூனிட் இலவச மின்சாரம் என அவர் அறிவித்து இருக்கிறார். இதனை நம்ப ஒருவரும் தயாராக இல்லை. பீகாருக்கு புதிய முதல் மந்திரி வருவார். நிதிஷ்குமார் சென்று விடுவார் என தெரிவித்தார்.
- பாஜகவின் 46வது நிறுவன தினத்தை முன்னிட்டும் அவர் இந்த தர்ம காரியத்தை செய்தது தெரியவந்துள்ளது.
- போர்வைகளை வழங்கும் வீடியோக்கள் இணையத்தில் படு வேகமாக வைரலாகி டிரால்களுக்கு உள்ளாகி வருகின்றன.
கொளுத்தும் வெயிலுக்கு பீகார் அமைச்சர் தனது தொகுதி மக்களுக்கு கம்பளிப் போர்வைகள் கொடுத்த வினோத சம்பவம் அரங்கேறி உள்ளது.
பீகாரில் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். இவரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. நிதிஷ் குமார் அமைச்சரவையில் பாஜகவை சேர்ந்த சுரேந்திர மேத்தா விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ளார்.
இந்நிலையில் 35 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை வாட்டி வதைத்து வரும் சுரேந்திர மேத்தா தனது பச்வாரா சட்டமன்றத் தொகுதியின் கீழ் உள்ள அஹியாபூர் கிராமத்தில் வசிக்கும் ஏழை மக்களுக்கு 500க்கும் மேற்பட்ட கம்பளிப் போர்வைகளை விநியோகித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாஜகவின் 46வது நிறுவன தினத்தை முன்னிட்டும் அவர் இந்த தர்ம காரியத்தை செய்தது தெரியவந்துள்ளது.
தான் செய்த நற்காரியத்தில் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த மேத்தா, "உலகின் மிகப்பெரிய கட்சி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் உணர்வோடு செயல்படும் பாஜகவின் 46வது நிறுவன தினத்தை முன்னிட்டு, பச்வாரா சட்டமன்றத் தொகுதியின் கோவிந்த்பூர்-2 பஞ்சாயத்தின் அஹியாபூர் கிராமத்தில் இன்று கொண்டாடப்பட்டு, மக்களுக்கு போர்வைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டார். அவர் போர்வைகளை வழங்கும் வீடியோக்கள் இணையத்தில் படு வேகமாக வைரலாகி டிரோல்களுக்கு உள்ளாகி வருகின்றன.
- எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.
- நிதிஷ் குமாரின் இந்த உறுதியை கேட்ட பிரதமர் மோடி குலுங்கி குலுங்கி சிரித்தார்.
பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் முதல்வர் நிதிஷ் குமாருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று 21,400 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அப்போது பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று நம்புவதாக தெரிவித்தார்.மேலும் இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன் என்று பிரதமருக்கு உறுதியளிக்கிறேன் என்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.
நிதிஷ் குமாரின் இந்த உறுதியை கேட்ட பிரதமர் மோடி குலுங்கி குலுங்கி சிரித்தார்.
பீகாரின் முதலமைச்சராக பதவி வகிக்கும் நிதிஷ் குமார் கடந்த பிப்ரவரியில், ராஷ்டீரிய ஜனதாதள கட்சி தலைமையிலான மகா கூட்டணியில் இருந்து விலகி, பின்னர் பாஜகவுடன் இணைந்து கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சரானார். கடந்த 10 ஆண்டுகளில் 7 முறை அவர் கூட்டணி மாறியுள்ளார் என்பது குறியப்படத்தக்கது.
பீகார் மாநிலத்தில் சமீபகாலமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்கள் உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் பெருகி வருகின்றன.
காவல்துறையை தனது முக்கிய இலாகாவாக வைத்திருக்கும் முதல் மந்திரி நிதிஷ்குமார், அதிகரித்துவரும் இந்த குற்றங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

போலீசார் லேசான தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் அவர்களை கட்டுப்படுத்தி தடுக்க முயன்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. #YouthCongress #BiharCM #NitishKumar
பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்–பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலிலும் இந்த கூட்டணி நீடிக்கிறது.
பீகாரில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம் தான் பெரிய கட்சி என்பதால் மக்களவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் அதிக தொகுதிகளை எதிர்பார்க்கிறது. அதேபோல் பாஜகவும் கணிசமான தொகுதிகளை பெறுவதில் உறுதியாக உள்ளது.
இந்த சூழ்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் இன்று டெல்லியில் பாஜக தலைவர் அமித் ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மக்களவைத் தேர்தல் கூட்டணி செயல்பாடுகள் குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர். #GeneralElections2019 #NitishKumar #AmitShah






