என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bihar CM Nitish Kumar"

    • இந்தியாவில், சட்டத்தின் ஆட்சி மேலோங்கி நிற்கிறது
    • நிதிஷ்குமார் அப்பெண்ணை வேறு எங்காவது தொட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?

    பீகாரில் திங்கள்கிழமை அன்று (டிச.15) 1000க்கும் மேற்பட்ட ஆயுஷ் மருத்துவர்கள், அரசுப் பணிக்கான தங்கள் நியமன கடிதங்களை, அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரிடம் இருந்து பெற்றனர். அப்போது முஸ்லீம் பெண் மருத்துவர் ஒருவரும் பெற்றார்.

    அவருக்கு பணி நியமன ஆணையை வழங்கும்போது நிதிஷ், அப்பெண் மருத்துவர் அணிந்திருந்த ஹிஜாபை பிடித்து இழுத்தார். அவரின் இந்த செயலை அவரின் அருகில் இருந்தவர்களும் தடுக்க முயன்றனர். ஆனால் பீகாரின் முதலமைச்சரோ சிரித்துக் கொண்டே இந்த வேலையை செய்தார். இந்தச் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே நிதிஷ்குமாரின் இந்த செயலால் அப்பெண் மருத்துவர் தனக்கு அரசு வேலை வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

    இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்,

    "அப்பெண் வேலையை மறுக்கலாம் அல்லது நரகத்திற்குகூட செல்லலாம். அது அவளுடைய விருப்பம். ஆனால், நிதிஷ்குமார் செய்தது சரியே. அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. நீங்கள் பாஸ்போர்ட் எடுக்கப் போகிறீர்கள் என்றால், உங்கள் முகத்தைக் காட்ட மாட்டீர்களா? விமான நிலையத்திற்குச் செல்லும்போது, உங்கள் முகத்தைக் காட்ட மாட்டீர்களா? மக்கள் பாகிஸ்தான் மற்றும் ஆங்கிலேயர்களைப் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் இது இந்தியா. இந்தியாவில், சட்டத்தின் ஆட்சி மேலோங்கி நிற்கிறது,"  என தெரிவித்துள்ளார். 

    முன்னதாக இதுதொடர்பாக கருத்து தெரிவித்த உத்தரபிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத், நிதிஷ்குமார் அப்பெண்ணை வேறு எங்காவது தொட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? எனப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • நிதிஷ் குமாரின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
    • நிதிஷ் குமாரின் இந்த செயலுக்கு உ.பி அமைச்சர் சஞ்சய் நிஷாத் சரச்சை கருத்து.

    பீகாரில் கடந்த திங்கட்கிழமை அன்று, ஆயுஷ் மருத்துவர்களுக்கான பணி நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    பீகார் தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள 'சம்வாத்' என்ற இடத்தில் நடைபெற்ற இந்த விழாவில் 1,283 ஆயுஷ் மருத்துவர்களுக்கு (ஆயுர்வேத, ஹோமியோபதி மற்றும் யுனானி) நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

    அங்கு புதிதாக நியமிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஒருவர், ஹிஜாப் அணிந்து நியமனக் கடிதத்தைப் பெற மேடை ஏறினார். அப்போது, மேடையில் நின்றிருந்த முதல்வர் நிதிஷ்குமார், "என்ன இது?" என்று கூறி அவரது ஹிஜாபைக் கீழே இறக்கினார்.

    நிதிஷ் குமாரின் பின்னால் நின்று கொண்டிருந்த பிகார் துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி, முதலமைச்சரைத் தடுக்க முயன்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நிதிஷ் குமாரின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

    இந்நிலையில், நிதிஷ் குமாரின் இந்த செயலுக்கு உ.பி அமைச்சர் சஞ்சய் நிஷாத் சர்சையையான கருத்தை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சஞ்சய் நிஷாத அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில்," அவர் ஹிஜாபை இழுக்கவில்லை, நியமனக் கடிதம் சரியான நபருக்கு வழங்கப்படுகிறதா என்பதை சரிபார்க்க அதை இழுத்துள்ளார்.

    இந்த விவகாரத்தை மக்கள் பெரிதாக்கக்கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவரும் ஒரு மனிதர், அவரை யாரும் வேட்டையாடக்கூடாது... ஹிஜாப்பை தொட்டது இவ்வளவு சலசலப்பை ஏற்படுத்தியது என்றால், வேறு எங்காவது தொட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?" என்று நேர்காணலின் போது அமைச்சர் சிரித்துக் கொண்டே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

    நிஷாத்தின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேத்திடம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர்," இந்த வெட்கக்கேடான வார்த்தைகளை உத்தரப் பிரதேச அரசு அமைச்சர் சஞ்சய் நிஷாத் சிரித்துக்கொண்டே கூறுகிறார். அவர் இதைச் சொல்லும் விதமும், அந்த நயவஞ்சகச் சிரிப்பும் அவரது இழிவான, அபத்தமான மற்றும் பெண் வெறுப்பு மனப்பான்மையைக் காட்டுகிறது," என்றார்.

    கண்டனங்கள் வலுக்கும் நிலையில் சஞ்சய் நிஷாத் விளக்கம் அளித்துள்ளார்.

    அப்போது அவர்," அந்த கருத்துகளை நான் சிரித்துக்கொண்டே, சாதாரணமாக, எனது உள்ளூர் போஜ்புரி வட்டார மொழியில் கூறினேன். எந்தவொரு சமூகம், எந்தவொரு பெண் அல்லது எந்தவொரு மதத்திற்கும் எதிராக எந்தத் தீய நோக்கமும் இல்லை, அவமதிக்கும் எண்ணமும் இல்லை," என்றார்.

    இருப்பினும், ஹிஜாப் சர்ச்சை வீடியோ வைரலானதை தொடர்ந்து, நிதிஷ் குமார் மற்றும் சஞ்சய் நிஷாத் மீது லக்னோவின் கைசர்பாக் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சமாஜ்வாதி கட்சித் தலைவர் சுமையா ராணா, தனது வழக்கறிஞர்களுடன் சென்று, அந்த இரு தலைவர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி புகாரை அளித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுமார் 25க்கும் மேற்பட்ட மாநில கட்சிகள் எதிர்கட்சி கூட்டணியை உருவாக்கின
    • 3 சந்திப்புகளுக்கு பிறகு ஒன்றும் நடக்கவில்லை என்றார் நிதிஷ்குமார்

    இந்திய பாராளுமன்றத்திற்கு அடுத்த வருடம் தேர்தல் நடக்க இருக்கிறது. இம்மாதம் இந்தியாவின் 5 மாநிலங்களுக்கு வெவ்வேறு தேதிகளில் சட்டசபை தேர்தல்களும் நடக்க உள்ளது.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற பா.ஜ.க.விற்கு எதிராக காங்கிரஸை உள்ளடக்கி இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா கூட்டணி" எனும் கூட்டணியை அமைத்தன.

    இதில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் அடக்கம்.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து நிதிஷ்குமார் விமர்சித்துள்ளார்.

    அவர் இது குறித்து தெரிவித்ததாவது:

    இந்தியாவில் பல கட்சிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி, இந்தியாவின் வரலாற்றை மாற்ற முயற்சிப்பவர்களுக்கு எதிராக ஒன்று திரள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, கடின முயற்சிகளுக்கு பிறகு உருவானதே இந்தியா கூட்டணி. கூட்டணி உருவானதும் பாட்னாவிலும், பெங்களூரூவிலும், மும்பையிலும் பல சந்திப்புகள் நடந்தன. ஆனால், அதற்கு பிறகு ஒன்றுமே நடைபெறவில்லை. குறிப்பாக காங்கிரஸ் கட்சி, அடுத்த வருடம் நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தல் குறித்து அக்கறை காட்டவில்லை. அக்கட்சியின் கவனம் முழுவதும் நடக்க இருக்கும் 5 மாநில தேர்தல்களிலேயே உள்ளது. 5 மாநில தேர்தல்கள் முடிவடைந்ததும் மீண்டும் காங்கிரஸ் கட்சியினர் அனைவரையும் அழைப்பார்கள்.

    இவ்வாறு நிதிஷ்குமார் பேசினார்.

    • எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.
    • நிதிஷ் குமாரின் இந்த உறுதியை கேட்ட பிரதமர் மோடி குலுங்கி குலுங்கி சிரித்தார்.

    பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் முதல்வர் நிதிஷ் குமாருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று 21,400 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

    அப்போது பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று நம்புவதாக தெரிவித்தார்.மேலும் இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன் என்று பிரதமருக்கு உறுதியளிக்கிறேன் என்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.

    நிதிஷ் குமாரின் இந்த உறுதியை கேட்ட பிரதமர் மோடி குலுங்கி குலுங்கி சிரித்தார்.

    பீகாரின் முதலமைச்சராக பதவி வகிக்கும் நிதிஷ் குமார் கடந்த பிப்ரவரியில், ராஷ்டீரிய ஜனதாதள கட்சி தலைமையிலான மகா கூட்டணியில் இருந்து விலகி, பின்னர் பாஜகவுடன் இணைந்து கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சரானார். கடந்த 10 ஆண்டுகளில் 7 முறை அவர் கூட்டணி மாறியுள்ளார் என்பது குறியப்படத்தக்கது.

    பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று மருத்துவ பரிசோதனைகளுக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #BiharCM #NitishKumar
    புதுடெல்லி:

    டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.



    ஆனால், லேசான காய்ச்சல் மற்றும் கண் மற்றும் மூட்டுகளில் வலி ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனைகள் செய்து, சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை முடிந்து நாளை அவர் பீகாருக்கு செல்வார் என தெரிகிறது. #BiharCM #NitishKumar

    ×