என் மலர்

  நீங்கள் தேடியது "5 state election"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பதவி ஏற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். #buildingstrongCongress #vibrantCongress #RahulGandhi
  புதுடெல்லி:

  அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக 16-12-017 அன்று ராகுல் காந்தி பதவி ஏற்று கொண்டார். சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தல்களில் சூறாவளியாக சுழன்று பிரசாரம் மேற்கொண்ட அவர், 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றியை தேடி தந்தார்.

  காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பதவி ஏற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில் அவரது பணிக்கும் 3 மாநில தேர்தல் வெற்றிக்கும் ஏராளமானவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக நன்றியும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

  இந்நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

  காங்கிரஸ் தலைவராக ஓராண்டை நிறைவு செய்யும் இந்நாளில், நமது கட்சியை வலிமையாகவும், ஒற்றுமையாகவும், வீரியம் மிக்கதாகவும் மாற்ற மீண்டும் உறுதி ஏற்கிறேன்.

  எனக்கு இன்று வாழ்த்து தெரிவித்து வந்துகொண்டிருக்கும் வாழ்த்து செய்திகளை கண்டு பிரமிப்பு அடைகிறேன். உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவுக்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகவும், உங்கள் அனைவருக்கும் ஒட்டுமொத்தமாகவும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என ராகுல் குறிப்பிட்டுள்ளார். #buildingstrongCongress #vibrantCongress #RahulGandhi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  5 மாநில தேர்தல் முடிவு பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்காது என்று டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். #victoryoffarmers #Congressworkers #RahulGandhi #2018Electionresults

  திண்டுக்கல்:

  புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கலெக்டர் வினயை சந்தித்து தேவேந்திர குல வேளாளர் ஜாதியை பட்டியல் இனத்தில் இருந்து வெளியே எடுக்க வேண்டும் என கிராம மக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மனுவாக அளித்தார். அதன் பின் வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  5 மாநில தேர்தல் முடிவுகள் அந்தந்த மாநில பிரச்சினைகளை எதிரொலித்தே அமையும். எனவே இதற்கும் பாராளுமன்ற  தேர்தலுக்கும் சம்பந்தம் கிடையாது. இந்த தேர்தல் முடிவுகளை பாராளுமன்ற தேர்தலுடன் ஒப்பிட்டு பார்க்க கூடாது.


  இந்த முடிவுகள் பாராளுமன்ற  தேர்தலில் எதிரொலிக்காது. இருந்தபோதும் தற்போது ஏற்பட்ட தோல்வியை பா.ஜ.க. எச்சரிக்கையாக கருதி வரும் நாட்களில் சிறப்பாக செயல்பட வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார். #victoryoffarmers #Congressworkers #RahulGandhi #2018Electionresults

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் மோடி அலை ஓய தொடங்கிவிட்டது என்றும் ராகுல் அலை வீச தொடங்கி இருப்பதாகவும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #Congress #Thirunavukkarasar #5StateElection
  சென்னை:

  5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:-

  தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் ஒரு மாநிலத்தில் கூட பா.ஜனதா வெற்றி பெறாததும், காங்கிரஸ் அடைந்துள்ள எழுச்சியும் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக அமைந்துள்ளது.

  பெரும்பாலான எதிர் கட்சிகள் ஒன்றுகூடி மோடியை வீழ்த்த திட்டமிட்டுள்ள நிலையில் இந்த வெற்றி காங்கிரசுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளது.

  மோடிக்கு மாற்று ராகுல் தான். பா.ஜனதாவுக்கு மாற்று காங்கிரஸ் தான் என்பதும் உறுதியாகி இருக்கிறது. மோடி அரசும், மாநில பா.ஜனதா அரசுகளும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதன் விளைவாக ஏற்பட்ட கோபம், ஏமாற்றம், வருத்தம் தான் பா.ஜனதாவை வீழ்த்தி இருக்கிறது.

  வட மாநிலங்களில் மத்திய பிரதேசம்தான் இந்துத்துவாவுக்கு வலிமையான இடம். ஆர்.எஸ்.எஸ்.சின் கருவறை அந்த மாநிலம் தான். அங்கேயே கருச்சிதைவு செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி சாதாரணமானதல்ல. மோடிக்கு மக்கள் சரியான அடி கொடுத்து இருக்கிறார்கள். மோடி அலை ஓய தொடங்கிவிட்டது. ராகுல் அலை வீச தொடங்கி இருக்கிறது.


  ராகுல்காந்தியின் கடினமான உழைப்புக்கு மக்கள் அங்கீகாரம் அளித்து இருக்கிறார்கள். இந்த வெற்றி பாராளுமன்ற தேர்தலிலும் தொடரும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  காங்கிரஸ் பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில் சத்தியமூர்த்தி பவனில் திருநாவுக்கரசர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இனிப்பு வழங்கி கொண்டாடினார். முன்னாள் எம்.பி. விசுவநாதன், சிரஞ்சீவி, இதயத்துல்லா, மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Congress #Thirunavukkarasar #5StateElection
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐந்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. #Results2018 #CongressLeading
  ஜெய்ப்பூர்:

  தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 90 இடங்களை கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு நவம்பர் 12 மற்றும் 20-ந்தேதிகளில் இரு கட்டங்களாகவும், 230 இடங்களை கொண்ட மத்தியபிரதேச சட்டசபைக்கும், 40 இடங்களை கொண்ட மிசோரம் சட்டசபைக்கும் நவம்பர் 28-ந் தேதியும் தேர்தல் நடைபெற்றது.

  119 இடங்களை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கும், 200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கும் கடந்த 7-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ராஜஸ்தானில் ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்ததால் மீதமுள்ள 199 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.

  இந்நிலையில் பலத்த பாதுகாப்புடன் இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. அதன்பின்னர் மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாநிலங்களிலும் முன்னிலை நிலவரங்கள் வெளியாகத் தொடங்கி உள்ளன.  வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்தில் வெளியான தகவலின்படி காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் இருந்தது. மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக 5 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் 8 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது.

  இதேபோல் ராஜஸ்தானில் ஆளும் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. காலை நிலவரப்படி பாஜக 7 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 14 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக 15 தொகுதிகளிலும், காங்கிரஸ் 12  தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தது. தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சி 4 இடத்திலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் முன்னிலையில் இருந்தது. இந்த முன்னிலை நிலவரத்தில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருகிறது. எனவே, மதியம் 12 மணியளவில் உள்ள முன்னிலை நிலவரத்தைப் பொருத்து வெற்றி தோல்வியை கணிக்க முடியும். #Results2018 #CongressLeading
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் இன்று அறிவித்தார். #5StateElection #CECOPRawat
  புதுடெல்லி :

  ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் சட்டப்பேரவை ஆயுட்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதமும் மிசோரம் மாநில சட்டப்பேரவை ஆயுட்காலம் டிசம்பர் 15-ம் தேதியும் நிறைவடைகிறது. இதனால், இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

  மேலும், சமீபத்தில் கலைக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்திற்கும் இந்த 4 மாநிலங்களுடன் சேர்த்து தேர்தல் நடத்த ஆணையம் முடிவு செய்திருந்தது.

  இதனிடையே, நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் 5 மாநில தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. புதுடெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் 5 மாநிலத்திற்கும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்தார்.

  மேலும், அந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருவதாக அவர் அறிவித்தார்.  இந்த தேர்தலின் போது யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை வாக்காளர்கள் பார்க்கும் ஒப்புகை சீட்டு வாக்கு எந்திரம் பயன்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

  சத்தீஸ்கர் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக நவம்பர் 12-ம் வாக்குப்பதிவு  நடைபெறும். இரண்டாம் கட்டமாக நவம்பர் 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

  மத்தியப்பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் ஒரே கட்டமாக நவம்பர் 28-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும்.  அடுத்ததாக ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

  மேலும், 5 மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் டிசம்பர் 11-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்  என தேர்தல் ஆணையர் அறிவித்தார்.

  கர்நாடக மாநிலத்தில் சிமோகா, பெல்லாரி மற்றும் மாண்டியா மக்களவை தொகுதிகளுக்கு நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. #5StateElection #CECOPRawat
  ×