search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "congress party"

    • காங்கிரஸ் மேலிட நிர்வாகிகள் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவை சந்தித்தனர்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி பங்கீட்டு குழுவுடன் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார்.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகளுக்கு முடிவடைந்த நிலை இருந்தது.

    இந்நிலையில், இன்று மாலையில் காங்கிரஸ் மேலிட நிர்வாகிகள் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவை சந்தித்தனர்.

    அதன்படி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்தனர்.

    தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய கே.சி.வேணுகோபால், அஜோய்குமார், முகுல் வாஸ்னிக், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் அண்ணா அறிவாலயம் வந்தனர்.

    இதற்கிடையில், காங்கிரஸ் கேட்கும் மொத்த தொகுதிகள் குறித்தும், எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி பங்கீட்டு குழுவுடன் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார்.

    காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது, மக்கள் நீதி மய்யத்திற்கு எந்த தொகுதி ஒதுக்குவது, கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவாதித்தார்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


    • ராஜினாமா கடிதம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பியதாக தகவல்.
    • ஒய்.எஸ்.ஷர்மிளா, ஆந்திர காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு.

    ஆந்திர மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமாகவும் இருப்பவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவரது சகோதரி ஒய்.எஸ். சர்மிளா. இவர் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியை தொடங்கி அதன் தலைவராக இருந்து வருகிறார்.

    இவர் கடந்த 4ம் தேதி தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக் கொண்டார். டெல்லி அலுவலகத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    வரவிருக்கும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு, ஆந்திர மாநிலத்தில் சர்மிளாவிற்கு முக்கிய பதவி கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில், ஆந்திர பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து கிடுகு ருத்ர ராஜு ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை கடந்த வாரம் அவர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

    அண்மையில் கட்சியில் இணைந்த முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, ஆந்திர காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • குரூஸ் பர்னாந்து பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள அவரது சிலைக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    குரூஸ் பர்னாந்து பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள அவரது சிலைக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினரும், கவுன்சிலருமான சந்திர போஸ், மண்டல தலைவர்கள் சேகர், ஐசன் சில்வா, ராஜன், அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன், ஊடகப்பிரிவு மாநில செயலாளர் முத்து மணி ,மாணவர் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் பிரவீன் துரை, மாவட்டத் துணை தலைவர்கள் பிரபாகரன், டேவிட் வசந்தகுமார், ரஞ்சிதம் ஜெபராஜ், சின்னகாளை, மைக்கில் பிரபாகர், ஜோபாய் பச்சேக், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வெங்கடசுப்பிரமணியன் ,மாவட்ட பொதுச்செயலாளர் மிக்கேல், மாவட்ட செயலாளர்கள் கோபால், கதிர்வேல், காமாட்சி தனபால், ஜெயராஜ், மாரிமுத்து, ஜெபத்துரை, வார்டு தலைவர்கள் முத்துராஜ், சண்முகசுந்தரம், தனுஷ், சுப்பிரமணியன், ஜெய கிங்ஸ்டன், ஜூட்சன், கருப்பசாமி , கிருஷ்ணன் , முகமது மீராசா, மெர்லின் பிச்சையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பா.ஜனதா அரசை கண்டித்து சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டப்ப நாயக்கன்பட்டி கனரா வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மாநகர தலைவர் ஏ.ஆர்.பி. பாஸ்கர் தலைமையில் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

    சேலம்:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்த 100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டப்ப நாயக்கன்பட்டி கனரா வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மாநகர தலைவர் ஏ.ஆர்.பி. பாஸ்கர் தலைமையில் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். இதில் மாநகர பொருளாளர் தாரை ராஜகணபதி, மாநகர வர்த்தக பிரிவு தலைவர் எம்.டி சுப்பிரமணியம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மெடிக்கல் பிரபு, பச்சப்பட்டி பழனி, திருமுருகன், மாநில சேவாதள பிரிவு வெங்கட்ராஜ், மாநில வக்கீல் பிரிவு பொதுச்செயலாளர் தேன்மொழி பிங்கி, கொண்டப்ப நாயக்கன்பட்டி கிராம கமிட்டி தலைவர் காமராஜ், மண்டல தலைவர்கள் ராமமூர்த்தி, சாந்தமூர்த்தி, நிசார் அஹமது, மோகன், ராமன், நாகராஜ் கோவிந்தராஜ், மாநகர செயலாளர் சஞ்சய் காந்தி, சுப்பிரமணியன், ஆரோக்கியநாதன் இளைஞர் காங்கிரஸ் அம்மாபேட்டை கோவிந்தன், தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் எம்.பாலப்பட்டியில் உள்ள கனரா வங்கி முன்பு இளைஞர் காங்கிரஸ் மாநகர தலைவர் பிரபு தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்தை மாநில பொதுச் செயலாளர் எம்.ஆர். சுரேஷ், மாநில செயலாளர் வசந்தம் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தனர். இதில் மத்திய அரசுக்கு எதிராக நூதன முறையில் சட்டி ஏந்தி 100 நாள் வேலை திட்டத்தை முடக்காதே என கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் பொதுக்குழு உறுப்பினர் தனசேகர், மணி, காளியண்ணன், அல்லிகுட்டை ராமசாமி, ராமநாதன், குணாலினிசக்தி, கதிரவன், வரதராஜ், ஏழுமலை, பிரகாஷ், பூபதி, சேட்டு, ரஜேந்திரன் உள்பட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • தச்சநல்லூர் தளவாய்புரம் கெங்கையம்மன் கோவில் தெற்கு தெருவின் முகப்பில் இருந்து வாய்க்கால் பாலம் வரை சாலை மிகவும் மோசமாக உள்ளது.
    • சாலையில் நடுவே உள்ள 2 மின்கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி வாரந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் ராஜு முன்னிலை வகித்தார்.

    நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் தச்சை மண்டல தலைவர் கெங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தச்சநல்லூர் தளவாய்புரம் கெங்கையம்மன் கோவில் தெற்கு தெருவின் முகப்பில் இருந்து வாய்க்கால் பாலம் வரை சாலை மிகவும் மோசமாக உள்ளது. அந்த சாலையை சீரமைத்து தர வேண்டும். அந்த பகுதியில் குறுகிய தெருவாக இருப்பதால் கட்டுமான பணிகள் நடைபெறும் போது வாகனங்கள் உள்ளே வருவதற்கு வசதி இல்லாமல் இருக்கிறது.

    மேலும் இந்த தெருவில் 2 மின்கம்பம் சாலையில் நடுவே உள்ளது. அதனை அப்புறப்படுத்த வேண்டும். இது தொடர்பாக கவுன்சிலரிடம் தெரிவி க்கும்போது அவர் ஒருதலை பட்சமாக நடந்து கொள்கிறார். பொதுப்பாதை அமைந்துள்ள இடத்தில் அரசு கட்டிடத்தை கொண்டு வர கவுன்சிலர் முயற்சி செய்கிறார். எனவே அதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கூறியுள்ளனர்.

    • காங்கிரஸை எதிர்த்து பா.ஜ.க. தீவிரமாக களம் இறங்கி உள்ளது
    • 5 வருடங்களில் காங்கிரஸார் என்ன சாதனை செய்தார்கள் என கேட்டார் மோடி

    சத்தீஸ்கர் மாநிலத்தின் சட்டசபையில் உள்ள 90 இடங்களுக்கு இம்மாதம் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.

    கடந்த சட்டசபை காலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பூபேஷ் பாகேல் தலைமையில் ஆட்சி நடைபெற்றது. இதனால், மீண்டும் தொடர்ந்து ஆட்சிக்கு வர காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பா.ஜ.க.வும் தீவிரமாக களம் இறங்கியுள்ளன.

    பா.ஜ.க.வை வெற்றியடைய செய்ய இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர் இன்று அம்மாநில கன்கெர் நகரத்தில் பா.ஜ.க. ஏற்பாடு செய்த ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    காங்கிரஸ் இருக்கும் இடத்தில் வளர்ச்சி இருக்காது. மாநில மக்களும், பா.ஜ.க.வும் இணைந்து சத்தீஸ்கர் மாநிலம் உருவாக பாடுபட்டனர். காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த போது, இங்குள்ள பா.ஜ.க.வுடன் சண்டையிட்டு கொண்டே இருந்தது. இது ஒரு எம்.எல்.ஏ.வையோ அல்லது முதல்வரையோ தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அல்ல. இது உங்கள் குழந்தைகளின் வருங்காலத்தை குறித்து நீங்கள் முக்கிய முடிவெக்க வேண்டிய தேர்தல். சத்தீஸ்கரின் அடையாளத்தை வலிமைப்படுத்த பா.ஜ.க. உழைக்கிறது. கடந்த 5 வருடங்களில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் சொத்து மதிப்பு கூடியதை தவிர அவர்கள் என்ன சாதனை செய்தார்கள்? ஏழைகள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு என்ன கிடைத்தது? இம்மாநில அரசாங்க அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதில் புது சாதனை படைத்து விட்டனர். மக்களுக்கு தரமில்லாத சாலைகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகளே கிடைத்தன.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
    • 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

    ஆரணி:

    ஆரணி டவுன் காமராஜர் சிலை அருகே தேசிய காங்கிரஸ் கட்சியினர் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தின் ஓராண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு நடை பயணம் நகர தலைவர் பொன்னையன் தலைமையில் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காங்கிரஸ் தலைவர் தவணி அண்ணாமலை பங்கேற்றார்.

    மேலும் நடைபயணம் காமராஜர் சிலை தொடங்கி பழைய பஸ் நிலையம் மார்க்கெட் வீதி மண்டி தெரு வழியாக காந்தி சிலையில் முடிந்தன.

    பின்னர் நடை பயன பேரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நடை பயன சாதனைகள் எடுத்துரைத்தும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் செல்வம் நகர நிர்வாகிகள் உதயகுமார் பிள்ளையார் குருமூர்த்தி, சம்பந்தம், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபு மற்றும் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    • மாநில துணை தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் ஒருங்கிணைப்பாள ருமான தேவதாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
    • ஜெரால்டு, ராஜ்மோகன், சண்முகம், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் கட்சியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியோர் இணைந்தனர்.

    புதுவை மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவல கத்தில் நடந்த இணைப்பு விழாவிற்கு மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., மாநில துணை தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் ஒருங்கிணைப்பாள ருமான தேவதாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    வக்கீல் பிரிவின் தலைவர் மருது பாண்டியன் முன்னிலை யில் ராஜ் பவன் தொகுதியில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி சித்தானந்தம் தலைமையில் காங்கிரசில் இணைந்தனர். காமராஜர் நகரை சேர்ந்த தொழிலதிபர் பரந்தாமன் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார்.

    விழாவில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு, மாநில காங்கிரஸ் பொதுச்செ யலாளர் திருமுருகன், மாநில செயற்குழு உறுப்பினர் பாபுலால்,வக்கீல்கள் ராமலிங்கம், கோவிந்தராசு, மாவட்டத் தலைவர் வேல்முருகன் வட்டாரத் தலைவர்கள் ராஜா, ஜெரால்டு, ராஜ்மோகன், சண்முகம், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ராகுல் காந்தி எம்பி பதவியை நீக்கியது செல்லும் என தீர்ப்பளித்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ஊரணிபுரம் கடைவீதியில் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம்ஊ ரணிபுரத்தில் ராகுல் காந்தி எம்பி பதவியை நீக்கியது செல்லும் என குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    திருவோணம் அருகே ஊரணிபுரம் கடைவீதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சூரியமூர்த்தி, தலைமை தாங்கினார், காங்கிரஸ் திருவோணம் வட்டார தலைவர் முத்து,

    முன்னிலை வகித்தார், மேலும் முன்னாள் கவுன்சிலர் மோகன்ராஜ், முருகையன், நகரத் தலைவர் அருணா ராஜேந்திரன் , ரத்தினவேல், முத்து பழனிவேல், சேசு, பாலசுப்பிரமணியன், பன்னீர்செல்வம், வி எஸ், வீரப்பன், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் தீர்ப்பை திரும்ப பெற கோரி கோஷமிட்ட வாரு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    • வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்படும்.
    • 2500 தென்னங்கன்றுகள் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் உள்ள 15 வார்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

    திட்டத்தை காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில விவசாய பிரிவு பொதுச்செயலாளர் சுர்ஜீத் சங்கர் தொடங்கி வைத்தார்.

    வக்கீல் அருண் ஷோரி முன்னிலை வகித்தார்.

    முதல் கட்டமாக 2500 தென்னங்கன்றுகளை வீடு வீடாக சென்று காங்கிரஸ் கட்சியினர் வழங்கினர். தொடர்ந்து, இத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்படும் என சுர்ஜித் சங்கர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் நடேசன் மற்றும் வட்டார தலைவர் வேனுகோபால், முன்னாள் வட்டார தலைவர் கனகராஜ், நாகை நகர தலைவர் உதய சந்திரன், மாவட்ட இணை செயளாலர் பாரதிராஜா, மாவட்ட பொதுச்செயலாளர் தெய்வானை, வட்டார பொருளாளர் மணிஷ், பஞ்சாயத்து தலைவர் ரவிகுமார், இளைஞரணி தலைவர் சுரேஷ், நகர துணை தலைவர் கார்த்தி, நகர துணை செயலாளர் நாகேந்திரன், மாவட்ட துணை தலைவர் மகளிர் அணி மாலா, நகர செயலாளர்கள் சுரேஷ், ஹரி, சென்னை ராஜா, ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சிவகாசியில் காங்கிரஸ் கட்சி கருத்தரங்கம் நடந்தது.
    • முன்னாள் இளைஞர் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார்.

    விருதுநகர்

    காங்கிரஸ் கட்சி சார்பில் சிவகாசியில் கருத்தரங்கம் நடைபெற்றது.

    முன்னாள் இளைஞர் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார்.

    வழக்கறிஞர்கள் முருகானந்தம், குப்பை யாண்டி, ராம்குமார் முன்னிலை வகித்தனர்.

    தலைமைப்பண்பு குறித்து பேராசிரியர் சிவனேசன் பயிற்சி அளித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் துணைத்தலைவர் முத்துமணி, வட்டார காங்கிரஸ் தலைவர் தர்மராஜ், நிர்வாகிகள் கணேசன், குருசாமி, ஷேக், பச்சையாத்தான், முத்துக்கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • வாயில் கருப்பு துணி கட்டி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    காங்கயம் :

    காங்கயம் நகர பஸ் நிலைய வளாகத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் கே.சரவணன் தலைமை தாங்கினார்.

    இதில் ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்தும், சூரத் நீதிமன்றம் அளித்த 2 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்தும், பா.ஜ.க., அரசை கண்டித்தும் இளைஞர் காங்கிரஸ் சார்பாக வாயில் கருப்பு துணி கட்டி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மணி, வடக்கு மாவட்ட துணை தலைவர் செல்வம் ராமசாமி உள்பட கட்சியின் மாவட்ட, நகர, வட்டார, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    ×