செங்கோட்டை நகர காங்கிரஸ் சார்பில் இந்திய ஒற்றுமை நடைபயண வெற்றி விழா

இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் வெற்றி விழா செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நடந்தது. காங்கிரஸ் மாநிலபொதுக்குழு உறுப்பினர் முத்துசாமி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
செங்கோட்டை நகர காங்கிரஸ் சார்பில் இந்திய ஒற்றுமை நடைபயண வெற்றி விழா
Published on

செங்கோட்டை:

செங்கோட்டை நகர காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சென்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் வெற்றி விழா தாலுகா அலுவலகம் முன்பு நடந்தது. விழாவிற்கு நகர காங்கிரஸ் தலைவர் ராமர் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் செண்பகம், மாவட்ட பிரதிநிதி ஆதிமூலம், நகர துணைத்தலைவர்கள் காதர் அலி, கோதரிவாவா, மாரியப்பன், நகர செயலாளர் இசக்கியப்பன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

நகர இலக்கிய அணி தலைவர் ராஜீவ் காந்தி வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காங்கிரஸ் மாநிலபொதுக்குழு உறுப்பினர் முத்துசாமி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும் தேசியக் கொடியை கையில் ஏந்தியும், பட்டாசு வெடித்தும் இந்திய ஒற்றுமை பயணத்தின் வெற்றி விழா கோஷங்கள் எழுப்பபட்டது. முன்னதாக காந்தி உருவச்சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நகர நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முடிவில் நகர இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சங்கரலிங்கம் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com