search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dhanushkodi Adithan"

    • முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு ராஜீவ் காந்தி ஜோதி யாத்திரை கடந்த 15-ந்தேதி பெங்களூரில் இருந்து தொடங்கியது.
    • வருகிற 21-ந் தேதி ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் முடிவடைகிறது.

    நெல்லை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராஜீவ் காந்தி ஜோதி யாத்திரை கடந்த 15-ந்தேதி பெங்களூரில் இருந்து தொடங்கி வருகிற 21-ந் தேதி ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் முடிவடைகிறது.

    இதனையொட்டி கன்னியாகுமரியில் இருந்து இன்று நெல்லைக்கு வந்த ஜோதி யாத்திரை குழுவினரை நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமை யில் வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை முன்பு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மற்றும் காங்கிரசார் வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கவி பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் முரளி ராஜா, மண்டல தலைவர்கள் ராஜேந்திரன், ரசூல் மைதீன், துணைத் தலைவர்கள் வெள்ள பாண்டியன், குறிச்சி கிருஷ்ணன், உக்கிரன் கோட்டை செல்லபாண்டி, சிவன் பெருமாள், பாளை பகுதி மகாராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் சொக்க லிங்க குமார், பரணி சேகர், உதயகுமார், அமைப்பு சாரா தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் ஜாகீர் உசேன், மாவட்ட மகளிர் அணி தலைவி ஸ்டெல்லா மேரி, துணைத்தலைவி மெட்டில்டா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • போராட்டத்தில் பங்கேற்ற கட்சியினர் அனைவரும் வாயில் கருப்பு துணி கட்டியிருந்தனர்.
    • ராகுல்காந்தியின் பதவி நீக்கம் என்பது ஜனநாயக படுகொலைக்கு நிகரானது.

    நெல்லை:

    அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை தகுதிநீக்கம் செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    நெல்லையில் மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் தச்சநல்லூரில் உள்ள காந்தி சிலையிடம் மனு அளிக்கும் அறவழி மவுன போராட்டம் இன்று நடைபெற்றது.

    மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டார்.

    போராட்டத்தில் பங்கேற்ற கட்சியினர் அனைவரும் வாயில் கருப்பு துணி கட்டியிருந்தனர்.

    பின்னர் தனுஷ்கோடி ஆதித்தன், சங்கரபாண்டியன் ஆகியோர் காந்தி சிலையிடம் மனு அளித்தனர். இதில் பொதுச்செயலாளர் மகேந்திர பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் கவிபாண்டியன், சொக்க லிங்ககுமார், மண்டல தலைவர்கள் கெங்கராஜ், ராஜேந்திரன், பரணி இசக்கி மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    போராட்டம் குறித்து முன்னாள் மத்தியமந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கூறியதாவது:-

    ராகுல்காந்தி எம்.பி.யின் பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று அறவழியில் மவுன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அதானி குறித்து பாராளுமன்றத்தில் பேசவிடாமல் தடுப்பதற்காகவே ராகுல்காந்தியை பதவிநீக்கம் செய்துள்ளனர். எனவே எங்களின் மக்கள் போராட்டம் தொடரும்.

    ராகுல்காந்தியின் பதவி நீக்கம் என்பது ஜனநாயக படுகொலைக்கு நிகரானது. அவர் இந்திய பிரதமர் ஆவதற்கு ஏதுவாக எங்களது இந்த போராட்டம் அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் தூத்துக்குடி 1-ம் கேட் காந்திசிலை முன்பு அறவழி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ. டேனியல்ராஜ் போராட்டத்தை தொடங்கிவைத்தார். மாநில துணை தலைவர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கொக்கிரகுளத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    நெல்லை:

    நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கொக்கிரகுளத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    நலத்திட்ட உதவிகள்

    மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். மூத்த குருவானவர் ஸ்டீபன் லயனல் கலந்து கொண்டு நற்செய்தி வழங்கினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    இதில் முன்னாள் மேயரும், மத்திய மாவட்ட தி.மு.க. துணை செயலாளரு மான விஜிலா சத்தியானந்த், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பெண்களுக்கு இலவச சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    விழாவில் கவுன்சிலர் அனுராதா சங்கர பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சொக்கலிங்க குமார், கவி பாண்டியன், உதயகுமார், வட்டார தலைவர் பாக்கிய குமார், மண்டல தலைவர்கள் கெங்கராஜ், ரசூல் மைதீன், நிர்வாகிகள் குறிச்சி கிருஷ்ணன், கே.எஸ்.மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக முன்னாள் அமைச்சர் கக்கனின் நினைவு தினத்தையொட்டி அவரது படத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், மாவட்ட தலைவர்கள் சங்கர பாண்டியன், ஜெயக்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தனுக்கு பொன்விழா நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லையில் இன்று நடைபெற்றது.
    • காங்கிரஸ் முன்னணி தலைவர்களை அழைத்து ஜனவரி மாதம் இறுதியில் பொன் விழா நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தனுக்கு பொன்விழா நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லையில் இன்று நடைபெற்றது.

    மாநில வக்கீல் அணி துணைத்தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், மேற்கு மாவட்ட தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ., தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ், மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் 1972-ம் ஆண்டு முதல் அரசியல், பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியின் சார்பாக தொடர்ந்து 3 முறை எம்.பி.யாகவும், மத்திய மந்திரியாகவும் பணியாற்றி உள்ளார்.

    பெருந்தலைவர் காமராஜரை அழைத்து மாணவர் காங்கிரஸ் மாநாடு நடத்தியவர். அவரது 50 ஆண்டுகள் அரசியல் சேவையை பாராட்டும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொது வாழ்க்கையில் பொன்விழா நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பொன்விழாவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மற்றும் காங்கிரஸ் முன்னணி தலைவர்களை அழைத்து ஜனவரி மாதம் இறுதியில் பொன் விழா நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    விழாவை நடத்து வதற்கு விழா கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

    கூட்டத்தில் வக்கீல் ராமேஸ்வரன், ஓ. பி. சி. பிரிவு மாநில துணைத் தலைவர் வக்கீல் காமராஜ், பஞ்சாயத்துராஜ் சங்க மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் தனசிங் பாண்டியன், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், சொக்கலிங்க்குமார், கவிப்பாண்டியன், ஓ.பி.சி. பிரிவு டியூக் துரைராஜ், மண்டல தலைவர்கள் பி.வி.டி. ராஜேந்திரன், அய்யப்பன், கெங்கராஜ்.மேற்கு மாவட்ட பொருளாளரும் ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலுருமான எஸ்பி.முரளிராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×