search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசியலில் 50 ஆண்டுகள் சேவை; தனுஷ்கோடி ஆதித்தன் பொன்விழாவிற்கு மல்லிகார்ஜூன கார்கேவை அழைக்க முடிவு- நெல்லையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
    X

    நெல்லையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் பேசிய போது எடுத்த படம்.

    அரசியலில் 50 ஆண்டுகள் சேவை; தனுஷ்கோடி ஆதித்தன் பொன்விழாவிற்கு மல்லிகார்ஜூன கார்கேவை அழைக்க முடிவு- நெல்லையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

    • காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தனுக்கு பொன்விழா நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லையில் இன்று நடைபெற்றது.
    • காங்கிரஸ் முன்னணி தலைவர்களை அழைத்து ஜனவரி மாதம் இறுதியில் பொன் விழா நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தனுக்கு பொன்விழா நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லையில் இன்று நடைபெற்றது.

    மாநில வக்கீல் அணி துணைத்தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், மேற்கு மாவட்ட தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ., தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ், மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் 1972-ம் ஆண்டு முதல் அரசியல், பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியின் சார்பாக தொடர்ந்து 3 முறை எம்.பி.யாகவும், மத்திய மந்திரியாகவும் பணியாற்றி உள்ளார்.

    பெருந்தலைவர் காமராஜரை அழைத்து மாணவர் காங்கிரஸ் மாநாடு நடத்தியவர். அவரது 50 ஆண்டுகள் அரசியல் சேவையை பாராட்டும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொது வாழ்க்கையில் பொன்விழா நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பொன்விழாவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மற்றும் காங்கிரஸ் முன்னணி தலைவர்களை அழைத்து ஜனவரி மாதம் இறுதியில் பொன் விழா நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    விழாவை நடத்து வதற்கு விழா கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

    கூட்டத்தில் வக்கீல் ராமேஸ்வரன், ஓ. பி. சி. பிரிவு மாநில துணைத் தலைவர் வக்கீல் காமராஜ், பஞ்சாயத்துராஜ் சங்க மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் தனசிங் பாண்டியன், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், சொக்கலிங்க்குமார், கவிப்பாண்டியன், ஓ.பி.சி. பிரிவு டியூக் துரைராஜ், மண்டல தலைவர்கள் பி.வி.டி. ராஜேந்திரன், அய்யப்பன், கெங்கராஜ்.மேற்கு மாவட்ட பொருளாளரும் ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலுருமான எஸ்பி.முரளிராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×