search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Golden Jubilee"

    • முகமது சதக் அறக்கட்டளை பொன்விழா நடந்தது.
    • ஏற்பாடுகளை அறக்கட்டளை செயல்திட்ட அலுவலர் விஜயகுமார் செய்திருந்தார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முகமது சதக் அறக்கட்டளை 1973-ம் ஆண்டு மாவட்டத் தில் கல்வி வளர்ச்சிக்கான கல்வி நிறுவனங்களை தொடங்கியது. இந்த நிறுவனம் தற்போது கீழக் கரை, ராமநாதபுரம், சென்னை ஆகிய இடங்க ளில் 17 கல்வி நிறுவனங் களை நடத்தி வருகிறது.

    இதன் பொன் விழா நிகழ்ச்சி கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள அல் ஹாஜ் டாக்டர் எஸ்.எம்.தஸ்தகீர் அரங்கில் நடந்தது.

    இதில் முகமது சதக் அறக்கட்டளை தலைவர் முகமது யூசுப் வரவேற்றார்.அறக்கட்டளையின் வளர்ச்சி குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டு பொன்விழா மலர் வெளி யிடப்பட்டது. முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் முதல்வர் அலா வுதீன் வெள்ளி செங்கோல் வழங்கினார்.

    அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் பி.ஆர்.எல்.ஹாமீது இப்ராகீம், பாலி டெக்னிக் கல்லூரி முதல்வர் சேக்தாவூது ஆகியோர் வெள்ளி வாள் வழங்கி கவுரவப்படுத்தினர்.

    தொடர்ந்து ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு கலிய மூர்த்தி கலந்து கொண்டு பேசினார். முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில் சாமி அண்ணாதுரைக்கு தேசத்தின் பெருமை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    மயில்சாமி அண்ணா துரை பேசுகை யில், நாட்டில் ஆண்-பெண் இரு பால் மாணவர்களும் இந்தி யாவை அறிவியலின் உச் சிக்கு எடுத்துக் சென்று பெருமைப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    ராமநாதபுரம் உதவி கலெக்டர் சிவானந்தம், முன்னாள் மாணவர்கள் ராஜ்சுப்ரமணியம், லோக சண்முகம், பரமேஸ்வரன், அருள்ராஜ் குமார், புரு ஷோத்தமன், மோகன், ரிஸ்வான் அலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து சிறந்த தொழிலதிபர் விருது சீனிவாசராஜாவுக்கும், சிறந்த பெண் தொழிலதிபர் விருது ரவூபா, பிரதிமா குப்பாலா ஆகியோருக்கும், வாழ்நாள் சாதனையாளர் விருது ஓடந்துறை சண்மு கம், சிறந்த பரோபகாரர் விருது பாத்திமா ரபீக், கதீஜா ரகுமான் ஆகியோ ருக்கும், அறிவியல் வித்தகர் விருது ரைஹானா பேகம், பெண்களின் பெருமை விருது ஷகிலா பாரூக் ஆகியோருக்கு வழங்கப் பட்டது.

    மேலும் மாணவர் சேவை, தொழில் சாதனை விருதுகளும் வழங்கப் பட்டது. முகமது சதக் அறக்கட்ட ளையின் இயக்குனர் எஸ்.எம்.ஏ.ஜெ.ஹபீப் முகமது, செயலாளர் ஹாஜியானி எஸ்.எம்.எச்.சர்மிளா ஆகியோர் சிறப்புரை யாற்றினர். அறக்கட்ட ளை கல்வி நிறுவ னங்களில் 25 வருடங்கள் மற்றும் அதற்கு மேலும் பணியாற்றி யவர்களுக்கு பணியாளர் சேவை விருது வழங்கப் பட்டது.

    முடிவில் முகமது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயக்குநர் எஸ்.எம்.ஏ.ஜெ.அப்துல் ஹலீம் நன்றி கூறினார். இதில், மாணவ-மாணவிகள் பெற்றோர்கள் பணியா ளர்கள் என 2 ஆயிரத்திற்கும் அதிக மானோர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை செயல்திட்ட அலுவலர் விஜயகுமார் செய்திருந்தார்.

    • அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அதிகாரிகளுடன் ஆலோசனை
    • வேளாண் அறிவியல் நிலையத்தின் பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை குருமாம்பேட் பகுதியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் 50-வது ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட உள்ளது.

    பொன் விழாவை விமர்ச்சியாக கொண்டாடுவதற்கு அரசு சார்பில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் வேளாண் அறிவியல் நிலையத்தை புனரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இது சம்பந்தமாக வேளாண்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆலோசனை செய்தார். கூட்டத்தில் வேளாண் துறை கூடுதல் இயக்குனர் வசந்தகுமார், வேளாண் அறிவியல் நிலையத்தில் முதல்வர் சிவசுப்பிரமணியன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் சந்திரகுமார், மாணிக்கவாசகம், வல்லவன், உதவி பொறியாளர்கள் கோபி தனசேகரன் பாவாடை மதிவாணன் விக்டோரியா, இளநிலை பொறியாளர் கருணாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் இந்தியாவில் முதன்முதலாக தொடங்கப்பட்ட இந்த வேளாண் அறிவியல் நிலையத்தின் பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

    மேலும் தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள மார்க்கெட் கமிட்டி இடத்தில் புதிதாக சட்டசபை கட்டப்படும் என கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

    தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள வேளாண் துறை சம்பந்தமான அனைத்து அலுவலங்களும் வில்லியனூர் பகுதியில் புதிதாக கட்டப்படும் 4 அடுக்கு மாடி வேளாண் துறை கட்டிடத்திற்கு மாற்றுது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தையும் விவசாயிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் வில்லியனூருக்கு கொண்டு செல்வது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.

    • காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தனுக்கு பொன்விழா நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லையில் இன்று நடைபெற்றது.
    • காங்கிரஸ் முன்னணி தலைவர்களை அழைத்து ஜனவரி மாதம் இறுதியில் பொன் விழா நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தனுக்கு பொன்விழா நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லையில் இன்று நடைபெற்றது.

    மாநில வக்கீல் அணி துணைத்தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், மேற்கு மாவட்ட தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ., தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ், மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் 1972-ம் ஆண்டு முதல் அரசியல், பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியின் சார்பாக தொடர்ந்து 3 முறை எம்.பி.யாகவும், மத்திய மந்திரியாகவும் பணியாற்றி உள்ளார்.

    பெருந்தலைவர் காமராஜரை அழைத்து மாணவர் காங்கிரஸ் மாநாடு நடத்தியவர். அவரது 50 ஆண்டுகள் அரசியல் சேவையை பாராட்டும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொது வாழ்க்கையில் பொன்விழா நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பொன்விழாவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மற்றும் காங்கிரஸ் முன்னணி தலைவர்களை அழைத்து ஜனவரி மாதம் இறுதியில் பொன் விழா நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    விழாவை நடத்து வதற்கு விழா கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

    கூட்டத்தில் வக்கீல் ராமேஸ்வரன், ஓ. பி. சி. பிரிவு மாநில துணைத் தலைவர் வக்கீல் காமராஜ், பஞ்சாயத்துராஜ் சங்க மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் தனசிங் பாண்டியன், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், சொக்கலிங்க்குமார், கவிப்பாண்டியன், ஓ.பி.சி. பிரிவு டியூக் துரைராஜ், மண்டல தலைவர்கள் பி.வி.டி. ராஜேந்திரன், அய்யப்பன், கெங்கராஜ்.மேற்கு மாவட்ட பொருளாளரும் ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலுருமான எஸ்பி.முரளிராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. பொன்விழா பொதுக்கூட்டத்தில் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.-நடிகர் வையாபுரி பேசுகிறார்கள்.
    • நிலையூரில் இன்று மாலை நடக்கிறது.

    மதுரை

    மதுரை அருகே நிலையூர் கைத்தறி நகரில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் இன்று மாலை நடக்கிறது.

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் நிலையூர் கைத்தறி நகரில் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணி அளவில் நடக்கிறது.

    பொதுக்கூட்டத்திற்கு திருப்பரங்குன்றம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கவுன்சிலர் நிலையூர் முருகன் தலைமை தாங்குகிறார். மாவட்ட இளைஞரணி செயலாளர், திருப்பரங்குன்றம் கிழக்கு பகுதி அ.தி.மு.க. செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ் முன்னிைல வகிக்கிறார்.

    ராஜன்செல்லப்பா-வையாபுரி

    பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., தலைமைக்கழக பேச்சாளர் நடிகர் வையாபுரி, மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

    இந்த பொதுக்கூட்டத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அனைத்து நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்கின்றார்கள்.

    மேற்கண்ட தகவலை திருப்பரங்குன்றம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர், ஒன்றிய கவுன்சிலர் நிலையூர் முருகன் தெரிவித்துள்ளார்.

    • ஏ.பி.சி.வீ.சண்முகம், பொதுவிழாவில் ஈடுபட்டு 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, பொதுவாழ்வில் பொன்விழா நடத்தப்பட்டது.
    • காங்கிரஸ்காரர்களுக்கு இன்று மரியாதை இருக்கிறது என்றால், அது தி.மு.க.வினால் தான் வந்து இருக்கிறது என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.

    தூத்துக்குடி:

    தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் ஏ.பி.சி.வீ.சண்முகம், பொதுவிழாவில் ஈடுபட்டு 50 ஆண்டுகள் ஆனதை யொட்டி, அவரை பாராட்டும் வகையில் பொதுவாழ்வில் பொன்விழா நடத்தப்பட்டது.

    மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ (தெற்கு), முரளிதரன் (மாநகரம்), காமராஜ் (வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகேந்திரன் வரவேற்று பேசினார். ஐ.என்.டி.யு.சி. செயற்குழு உறுப்பினர் ராஜ் நோக்க உரையாற்றினார்.

    சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். ஏ.பி.சி.வீ.சண்முகம் ஏற்புரை வழங்கினார்.

    விழாவில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:-

    மக்களை பிரிக்க பார்க்கிறார்கள்

    ஏ.பி.சி.வீ.சண்முகம் போன்றவர்களின் சேவை, இந்த நாட்டு மக்களுக்கு தேவையாக உள்ளது. அவர் தலைமையில் கட்சியினர் சுறுசுறுப்பாக இயங்கினார்கள். வாய்ப்பு வந்து இருக்குமேயானால் ஏ.பி.சி.வீ.சண்முகம் தலைமையில் லட்சக்க ணக்கான தலைவர்கள் தமிழகத்தில் உருவாகி இருக்க முடியும்.

    சாதி, மதம், மொழியின் பெயரால் ஆளுகின்றவர்கள் மக்களை பிரிக்க பார்க்கிறார்கள். அவர்களை எதிர்க்க நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். பா.ஜனதா கட்சியை தி.மு.க. எதிர்க்கும் அளவுக்கு கூட காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறதா என்று தெரியவில்லை.

    தமிழகத்தில் நல்ல முதல்-அமைச்சர் கிடைத்து உள்ளார். சமதர்மத்துடன் ஆட்சி நடத்தி வருகிறார். அவரை நாம் முழுமையாக ஆதரிக்க வேண்டும். காங்கிரஸ்காரர்களுக்கு இன்று மரியாதை இருக்கிறது என்றால், அது தி.மு.க.வினால் தான் வந்து இருக்கிறது. தி.மு.க. கூட்டணியின் ஆதரவோடுதான் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றது. தேர்தல் வெற்றி என்பது குறிக்கோள் அல்ல. இந்த நாடு காப்பாற்றப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கலந்து கொண்டவர்கள்

    விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் துணைத்தலைவர் ராமச்சந்திரன், செய்தி தொடர்பாளர் கோபண்ணா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயற்குழு உறுப்பினர் கனகராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத்தலைவர் நவாஸ்கனி எம்.பி., மணிமேகலை பிரசுரம் நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன், முன்னாள் எம்.பி. அப்பாத்துரை, காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் என்.ஷாஜகான், ஐசக் நாசர், சிவசுப்பிரமணியன், வ.உ.சி. கல்லூரி செயலாளர் ஏ.பி.சி.வீ.சொக்கலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழக காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகர் நன்றி கூறினார்.


    • பூலாங்குறிச்சியில் அரசு கல்லூரி பொன்விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
    • ரூ.1.20 லட்சம் மதிப்பில் புணரமைக்கப்பட் கிராம நிர்வாக அலுவலகத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியில் சிவலிங்கம் செட்டியார் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதன் பொன்விழா ஆண்டு நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, பெரியகருப்பன் ஆகியோர் கலந்து கொண்டு கல்லூரியில் சிவலிங்கம் சிலையை திறந்து வைத்து பேசினார்.

    இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கல்லூரியின் பொன்விழா மலரை வெளியிட்டு சிறப்பாக பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள்.

    சென்னை வாழ் பூலாங்குறிச்சி நகரத்தார் சங்கத்தின் சார்பில் பூலாங்குறிச்சி ஊராட்சி சார்பி்ல் ரூ.5.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இலவச கணினி மையம், ரூ.1.20 லட்சம் மதிப்பில் புணரமைக்கப்பட் கிராம நிர்வாக அலுவலகத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பொன் முத்துராமலிங்கம் (கல்லூரி கல்வி இணை இயக்குனர், மதுரை மண்டலம்), அபிராமி ராமநாதன் (படம் தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர்), நல்லம்மை அபிராமி ராமநாதன், ஆவின் பால்வளத் தலைவர் சேங்கைமாறன், திருப்பத்தூர் வட்டாட்சியா; திரு.வெங்கடேசன், கல்லூரி முதல்வர் முத்துச்சாமி, ஊராட்சி மன்றத்தலைவர் சுதாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×