என் மலர்

  நீங்கள் தேடியது "evks elangovan"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஓ.பன்னீர்செல்வம் மகன் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடருவேன் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
  சென்னை:

  தேனி பாராளுமன்ற தொகுதியில் தோல்வி அடைந்தது ஏன்? என்பது குறித்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. திருஷ்டி பரிகாரம் இருக்க வேண்டும் என்பதற்காக, என்னவோ? நான் தேனி தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறேன்.

  என்னுடைய தோல்வி உருவாக்கப்பட்டது. மக்கள் ஓட்டு போடாமல் ஏற்பட்ட தோல்வி அல்ல. அதிகார பலம், பணம் பலம் இருந்தும் கூட தேனி தொகுதியில் 4.5 லட்சம் மக்கள் எனக்கு வாக்களித்து இருக்கிறார்கள்.

  இந்த தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் மகன் போட்டியிட தேனி தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஆணையம் தனி முக்கியத்துவம் கொடுத்து தில்லுமுல்லுகளை செய்திருக்கிறது. பணம் மழையாக இல்லை, சுனாமியாக கொட்டி இருக்கிறது.

  தேனி தொகுதியில் எப்படியாவது ஓ.பன்னீர்செல்வம் மகன் வெற்றி பெற வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக இருந்தார். தமிழிசை சவுந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகியோர் மீது இல்லாத காதல், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் மீது மட்டும் மோடிக்கு இருந்தது ஏன்? என்று தெரியவில்லை. தில்லுமுல்லுகள் செய்தாலும் கூட தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான பெரியகுளத்தில் நான் அதிக வாக்குகள் பெற்று இருக்கிறேன்.

  தேனி தொகுதியில் தில்லுமுல்லுகள் நடந்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. எனவே ஓ.பன்னீர்செல்வம் மகன் வெற்றியை எதிர்த்தும், தேர்தல் ஆணையத்தின் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். தேனி தொகுதியில் வி.வி.பேட் எந்திரத்தில் பதிவான ஒப்புகைச்சீட்டுகளை எண்ண வேண்டும் என்று வழக்கில் குறிப்பிடுவேன். வாக்குப்பதிவு எந்திரங்களை விட வாக்குச்சீட்டு முறை தான் சிறந்தது என்று நாங்கள் வலியுறுத்துவோம்.

  தமிழகத்தில் அமைந்தது போல் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்காததே மோடி வெற்றிக்கு காரணமாக அமைந்துவிட்டது. ராகுல்காந்தி தான் பிரதமராக வருவார் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தது போன்று வடமாநிலங்களில் மற்ற கட்சி தலைவர்கள் அறிவிக்காதது தான் காங்கிரஸ் கட்சி தோல்விக்கு காரணமாக அமைந்தது.

  தமிழக, கேரள மக்கள் போன்று வடமாநில மக்கள் விவரம் உள்ளவர்களாக இல்லை. மோடியின் பொய் பிரசாரங்களை நம்பி, மயங்கி இருக்கிறார்கள். அவர்கள் விரைவில் தெளிவு பெறும் போது, அங்கே பா.ஜ.க. தோல்வியை சந்திக்கும்.

  டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் பெற்ற வெற்றியை வைத்துக்கொண்டு தன்னை மிகப்பெரிய சக்தியாக வெளியே காட்டிக் கொள்ள முயன்றார். ஆனால் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருவேளை அவர் கட்சி பெயரை ‘அப்பா தி.மு.க.’ என்று மாற்றிக்கொண்டால் ஏதாவது, எதிர்க்காலம் இருக்க வாய்ப்பு உள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  பேட்டியின்போது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கோபண்ணா, சிவராமன், ரங்கபாஷ்யம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேனியில் தாம் பெற்ற வெற்றியை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்குகிறேன் என ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கூறினார்.
  தேனி:

  பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அபார வெற்றி பெற்றது.

  தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் அபார வெற்றி பெற்றது. மீதமுள்ள ஒரு தொகுதி தேனி ஆகும்.

  இந்த தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.

  இதில், அதிமுகவின் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரசின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றுள்ளார்.

  இதை தொடர்ந்து தேனி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு வெற்றி சான்றிதழ் தரப்பட்டது.  தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி பல்லவி பல்தேவ் வெற்றி சான்றிதழை வழங்கினார்.

  வெற்றி சான்றிதழை பெற்ற ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் இந்த வெற்றியை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்குகிறேன் என தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேனி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனைவிட அதிமுக வேட்பாளரான ரவீந்திரநாத் குமார் 76 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
  தேனி:

  பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அபார வெற்றி பெற்றது.

  தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் அபார வெற்றி பெற்றது. மீதமுள்ள ஒரு தொகுதி தேனி ஆகும்.

  இந்த தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். 

  இதில், அதிமுகவின் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரசின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றுள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேனி தொகுதிக்கு திருவள்ளூரில் இருந்து கூடுதலாக 20 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு சென்றதற்கு இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
  சென்னை:

  தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:-

  தேனி தொகுதியில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு வேண்டும் என்று எந்த கட்சியும் கோரிக்கை வைக்கவில்லை.

  தேர்தல் ஆணையம் தன்னிச்சையாகவே ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள பாலசமுத்திரம், பெரியகுளம் தொகுதியில் உள்ள வடுகப்பட்டி ஆகிய 2 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டுள்ளது.

  ஆனால் இதுபற்றி அறிவிப்பதற்கு முன்பே ரகசியமாக கோவையில் இருந்து 50 வாக்குப்பதிவு எந்திரங்களை தேனிக்கு கொண்டு சென்றனர். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன்பிறகுதான் 2 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்தப்போவதாக சொன்னார்கள்.

  அப்படியே பார்த்தாலும் இரு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு 50 எந்திரங்கள் எதற்கு?

  இந்த நிலையில் திருவள்ளூரில் இருந்து மேலும் 20 வாக்குப்பதிவு எந்திரங்கள், 30 விவிபாட் எந்திரங்களையும் கொண்டு சென்றுள்ளார்கள். இவ்வளவு எந்திரங்களை தேனியில் கொண்டு குவிப்பதற்கு என்ன காரணம்?

  இதையெல்லாம் பார்க்கும்போது ஏதோ, சதிசெயல் செய்ய திட்டமிடுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.

  தேர்தல் ஒழுங்காக நடந்தால் துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகனுக்கு டெபாசிட் கூட கிடைக்காது. அதனால்தான் எப்படியாவது தில்லுமுல்லு நடத்த வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள்.

  எத்தனை பெட்டிகளை மாற்றினாலும் அவர் மிகப் பெரிய தோல்வி அடைவார். மக்கள் மத்தியில் கடுமையான கோபமும், ஆத்திரமும் ஏற்பட்டுள்ளது. தேனி தொகுதியில் சட்டம், ஒழுங்கு சீர்கெடும் நிலையை உருவாக்கி வருகிறார்கள். இதுதொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் எங்கள் புகாரை தெரிவிப்போம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேர்தல் பிரசாரத்தில் பொய்யான குற்றச்சாட்டை கூறி வரும் மு.க.ஸ்டாலின் மற்றும் இளங்கோவன் மீது வழக்கு தொடரப்போவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #LokSabhaElections2019 #MKStalin #EVKSElangovan
  தேனி:

  தேனியில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

  மேகதாது அணை கட்ட தேனியில் இருந்து நான் மணல் அனுப்புவதாக தேனி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பிரசாரத்தின்போது பேசி உள்ளார். மேகதாதுவுக்காக நான் மணல் அனுப்புவதாக அவர் கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.


  அவதூறு பரப்பும் வகையில் அவர் இவ்வாறு பேசியது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் தந்துள்ளேம். பிரசாரத்தின்போது தவறான தகவலை கூறுவோர் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவதூறு பரப்பும் இளங்கோவன் மீது வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளோம். தேர்தல் பிரசாரத்தில் கூறும் பொய்யான குற்றச்சாட்டுகளை மக்கள் நம்ப மாட்டார்கள்.

  இதேபோல் பத்திரிகை செய்தியை சுட்டிக்காட்டி பொய்யான குற்றச்சாட்டை கூறும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும் வழக்கு  தொடரப்படும். காவிரி விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் வரலாற்று பிழையை செய்துள்ளன.

  இவ்வாறு அவர் கூறினார்.

  வாரிசு அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், தகுதியான நபராக இருந்தால் வாரிசு அரசியலில் எந்த தவறும் இல்லை என்றார். #LokSabhaElections2019 #MKStalin #EVKSElangovan
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேனி தொகுதியில் தனக்கும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கும் இடையே தான் போட்டி நிலவுவதாக தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #ThangaTamilselvan #ADMK #EVKSElangovan
  தேனி:

  தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.

  தினகரன் கட்சியில் முக்கிய பிரமுகராக உள்ள இவர் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.வாக இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இப்போது எம்.பி. தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளார்.

  இந்த தொகுதியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

  3 பேருமே பிரபல நபர்கள் என்பதால் தமிழ்நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக தேனி உள்ளது.

  தேர்தல் போட்டி தொடர்பாக தங்க தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

  அ.தி.மு.க. அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. அதுவும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால் அந்த கட்சிக்கு மக்களிடம் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

  பொதுமக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் இப்போது எங்களையே ஆதரிக்கிறார்கள். அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் கட்சியில் மிகவும் ஜுனியர். ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் என்ற ஒரே காரணத்தினால் அவரை முன்னிலைப்படுத்துகிறார்கள்.

  நான் அ.தி.மு.க. பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். என் தந்தை அ.தி.மு.க.வில் முக்கிய பிரமுகராக இருந்தவர். அவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகவும் சீனியர்.  டி.டி.வி.தினகரனால் தான் ஓ.பன்னீர்செல்வம் அரசியலிலும், அரசிலும் முன்னுக்கு வந்தவர். இப்போது அவருக்கு எதிராகவே மாறி இருக்கிறார். இது அவருக்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவை ஏற்படுத்தும்.

  இந்த தொகுதியில் உள்ள நிலைமை எனக்கு சாதகமாக இருக்கிறது. டி.டி.வி.தினகரன் இந்த தொகுதி எம்.பி.யாக இருந்து சிறப்பான சேவைகளை செய்தார். அவர் எல்லா தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்றார்.

  இப்போது இங்குள்ள நிலவரப்படி அ.தி.மு.க. தனது செல்வாக்கை இழந்து விட்டது. அவர்கள் எல்லாம் அ.ம.மு.க.வுக்கு ஆதரவாக மாறி விட்டார்கள். எனக்கும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க. களத்திலேயே இல்லை.

  ஆர்.கே.நகர் தேர்தலில் அ.தி.மு.க.வை நாங்கள் தோற்கடித்தோம். அதுபோன்ற நிலை இங்கும் ஏற்படும். இந்த தொகுதியில் முஸ்லிம்கள் கணிசமாக உள்ளனர். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் அவர்கள் ஓட்டு அ.தி.மு.க.வுக்கு கிடைக்காது. கடந்த தேர்தலில் 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் இங்கு வெற்றி பெற்றது. அதே வேட்பாளரை இப்போது ஏன் நிறுத்தவில்லை?

  ஓ.பன்னீர்செல்வம் குடும்ப அரசியலை எதிர்ப்பதாக கூறுகிறார். ஆனால் தனது மகனை வேட்பாளராக்கி இருக்கிறார். தனது தம்பியை ஆவின் சேர்மனாக்கி இருக்கிறார்.

  இவ்வாறு தங்க தமிழ்ச் செல்வன் கூறினார். #LokSabhaElections2019 #ThangaTamilselvan #ADMK #EVKSElangovan
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா தங்கிய வீட்டில் இளங்கோவன் குடியேறியது அ.தி.மு.க. தொண்டர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. #Jayalalithaa #EVKSElangovan
  சென்னை:

  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2002-ம் ஆண்டு ஆண்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டார்.

  அப்போது அவர் தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள பங்களாவில் தங்கினார். சிங்கப்பூர் பங்களா என்று அழைக்கப்படும் அந்த வீட்டில் குடியேறி தினமும் ஆண்டிப்பட்டிக்கு பிரசாரம் செய்ய சென்றார்.

  இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்-அமைச்சராக பதவி ஏற்றார். அதன்பின் 2006-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் இந்த சிங்கப்பூர் பங்களாவில் தங்கியிருந்து வாக்கு சேகரித்தார்.

  ஜெயலலிதா தங்கியதால் அந்த பங்களா மிகவும் பிரபலம் ஆனது. அதை அம்மா வீடு என்றுதான் அப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.

  இந்த நிலையில் தேனி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தேனி என்.ஆர்.டி. நகரில் ஜெயலலிதா தங்கிய வீட்டில் குடியேறி உள்ளார். அங்கு தங்கியிருந்து தனது தேர்தல் பிரசாரத்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நடத்தி வருகிறார்.  ஜெயலலிதா தங்கிய வீட்டில் இளங்கோவன் குடியேறியது அ.தி.மு.க. தொண்டர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

  இதுகுறித்து தேனி நகர அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, “தேனியில் உள்ள சிங்கப்பூர் பங்களாவில் அம்மாவை தவிர யாரும் குடியிருந்ததில்லை. அம்மா வாழ்ந்த வீடு என்பதால் கோயிலாக பார்க்க வேண்டிய இவ்வீட்டினை தாரை வார்த்து விட்டனர்.

  அம்மாவை கடுமையாக விமர்சித்த இளங்கோவன் அந்த வீட்டில் குடியேறி விட்டார். அம்மாவிற்கும், அ.தி.மு.க.விற்கும் சென்டிமெண்டாக ராசியான வீடு என்று இருந்த பங்களா பறிபோய்விட்டதே என அ.தி.மு.க. தொண்டர்கள் கலைப்படுகிறார்கள்.

  அம்மாவிற்காக கம்பீரமாக காத்து கொண்டிருந்த பிரசார வாகனம் இன்று காங்கிரஸ் கொடியுடன் நின்று கொண்டிருக்கிறது. #Jayalalithaa #EVKSElangovan
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேனி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் சொத்து மதிப்பு ரூ. 15½ கோடி என்று வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #Elangovan
  தேனி:

  தேனி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பு மனுவோடு தனது சொத்து விவரங்களையும் தாக்கல் செய்தார். அதன் விவரம் வருமாறு:-

  தனக்கு அசையும் சொத்துக்களாக ரூ.2 கோடியே 33 லட்சத்து 26 ஆயிரத்து 360-ம், அசையாத சொத்துக்களாக ரூ.13 கோடியே 25 லட்சம் என மொத்தம் ரூ.15 கோடியே 58 லட்சத்து 26 ஆயிரத்து 360 மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாக கூறியுள்ளார்.

  அசையும் சொத்துக்களில் ரூ.24 லட்சத்து 33 ஆயிரத்து 325 மதிப்பில் ஒரு கார் இருப்பதாகவும், கையிருப்பில் ரொக்கமாக ரூ.7 லட்சத்து 46 ஆயிரத்து 661 இருப்பதாகவும் கூறியுள்ளார். அசையாத சொத்துக்களில், ரூ.10 கோடி மதிப்பில் பூர்வீக சொத்துக்களும், ரூ.3 கோடியே 25 லட்சம் மதிப்பில் சுயமாக வாங்கிய சொத்துக்கள் உள்ளதாகவும் கூறியுள்ளார். அத்துடன் அவர், அரசுக்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகையாக ரூ.64 லட்சத்து 27 ஆயிரத்து 457 உள்ளதாக கூறியுள்ளார். அதற்கு, வருமான வரி நிலுவை சர்ச்சையில் உள்ளதால் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளதாக விளக்கமும் அளித்துள்ளார்.

  அதேபோல், அவர் தனது மனைவி பெயரில் ரூ.39 லட்சத்து 49 ஆயிரத்து 618 மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ.4 கோடியே 13 லட்சம் மதிப்பில் அசையா சொத்துக்களும், கூட்டுக் குடும்ப பெயரில் ரூ.21 லட்சத்து 65 ஆயிரத்து 294 மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்பில் அசையா சொத்துக்களும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #Elangovan

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேனி பாராளுமன்ற தொகுதியில் தான் யாரையும் போட்டியாக கருதவில்லை என்று காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்வோகன் தெரிவித்தார். #LSPolls #Congress #EVKSElangovan
  தேனி:

  தேனி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று மனுத்தாக்கல் செய்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  தேனி மாவட்ட மக்களின் அடிப்படை பிரச்சனைகளை அறிந்து அதனை நிறைவேற்ற பாடுபடுவேன். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக மதுரை-போடி அகல ரெயில் பாதை திட்டப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை மேற்கொண்ட 4 காண்டிராக்டர்கள் ஓடி விட்டனர்.

  கடைசியாக பணி செய்த ஆந்திராவைச் சேர்ந்த காண்டிராக்டர் ஒருவர் தன்னிடம் அதிக அளவு கமி‌ஷன் கேட்பதாக என்னிடம் கூறினார். தேனி மாவட்ட மக்களின் நீண்ட கால பிரச்சனையை கருத்தில் கொண்டு நான் வெற்றி பெற்ற 6 மாதத்தில் இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த பாடுபடுவேன்.


  தேனி தொகுதியில் நான் யாரையும் போட்டியாக கருதவில்லை. தற்போது பிஞ்சிலேயே பழுத்த பழம் நிறைய உள்ளது. நான் மரத்திலேயே பழுத்த பழம்.

  இந்த தொகுதிக்கு புது முகம் என்று என்னை கூறுகின்றனர். நடிகர் நடிகைகளில்தான் புதுமுகம் உண்டு. நான் அரசியலில் பல ஆண்டுகளாக பணி செய்துள்ளேன். நான் வெற்றி பெற்றால் தேனி மாவட்டத்தை சுற்றுலா தலமாக்குவேன். அதோடு மக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் குறைகளை நிவர்த்தி செய்வேன்.

  இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #Congress #EVKSElangovan
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேனி தொகுதியை பொறுத்தவரை பெரிய போட்டியாக கருதவில்லை. அத்தொகுதியில் வெற்றி பெறுவது உறுதி என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். #evkselangovan #congress #parliamentelection

  மதுரை:

  தேனி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ‌மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.‌ அவர் கூறியதாவது:-

  தேனி தொகுதியை பொறுத்தவரை பெரிய போட்டியாக கருதவில்லை. தேனி மாவட்ட மக்களுக்கு பா.ஜ.க ஆட்சியின் மூலம் பல கஷ்டங்கள் தான் ஏற்பட்டுள்ளது.

  தமிழகத்தை பொறுத்த வரையில் அ.தி.மு.க., பா.ஜ.க கட்சிகள் கூட்டணியை தோற்கடிக்க முடிவெடுத்துள்ளனர்.

  ஆகவே நான் தேனி தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை பெறுவேன், காங்கிரஸ், தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் உற்சாகமாக இருக்கிறார்கள்.

  நான் ஈரோடு, திருப்பூரில் வேட்பாளராக நிற்க விரும்பினேன். ஆனால் தோழமைக் கட்சிகளுக்கு அந்த தொகுதிகளை வழங்க வேண்டிய சூழல் அமைந்ததால் காங்கிரஸ் தலைமை என்னை தேனி தொகுதியில் போட்டியிட கேட்டுக் கொண்டது.

  எனக்கும், எங்கள் குடும்பத்துக்கும் தமிழக மக்களுக்கும் உள்ள தொடர்பானது இறுக்கமானது.

  அதனால் தமிழ்நாட்டில் எந்தத் தொகுதியில் நின்றாலும் எனக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

  தேனி தொகுதி என்பது அ.தி.மு.க.வின் கோட்டை என்று கருதுபவர்களுக்கு அதைப்பற்றி எந்தக் கருத்தும் இல்லை.

  ஜெயலலிதாவை நான் மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளேன், ஆனால் அரசியல் ரீதியாக மட்டும் தான் விமர்சித்துள்ளேன்.

  தனிப்பட்ட முறையில் ஒருமையில் அவரை விமர்சித்ததே கிடையாது. அரசியலில் ஜெயலலிதாவை நான் பல இடங்களில் பல நேரங்களில் விமர்சித்து இருந்தாலும் ஒரு பெண் சாதனையாளர் என்ற முறையில் எனக்கு ஜெயலலிதாவைப் பற்றி மிகுந்த மரியாதை உள்ளது.


  கூட்டணி தலைவர்களை சந்தித்து அவர்களிடம் நேரம் கேட்டு நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்.

  என் அருமை தம்பி ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் தேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக உள்ள ரவீந்திரநாத்குமார் எனக்கு தேனி மக்களையும், அங்கு நடக்கும் பஞ்சாயத்துக்களும் தெரியாது என்று விமர்சித்துள்ளார்.

  எனக்கு பஞ்சாயத்து தெரியாமல் இருக்கலாம். ஆனால் கட்டப்பஞ்சாயத்துக்கு நான் வரமாட்டேன். தொகுதியில் பல பிரச்சினைகள் உள்ளன, வைகை அணை தூர்வாறும் பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை உள்ளது.

  அது மட்டுமில்லாமல் தேனி மாவட்டத்தை சிறந்த சுற்றுலா மையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது, இது போன்ற காரியங்களில் தான் என்னை ஈடுபடுத்திக் கொள்வேனே தவிர மற்ற எந்த வித பஞ்சாயத்திலும் ஈடுபடமாட்டேன்.

  தேனி தொகுதி மக்களுக்கு அவர்கள் எதிர்பார்ப்பதை விட மிகச்சிறப்பாக செய்வேன். நியூட்ரினோ திட்டமாக இருந்தாலும் சரி, வேறு பல மத்திய அரசு திட்டங்கள் ஆக இருந்தாலும் சரி மக்களுக்கு பாதிப்பாக இருக்கும், விவசாய நிலங்கள் பாதிப்படையும் திட்டமாக இருந்தால் அவற்றை தடுப்பேன்.

  இவ்வாறு அவர் கூறினார். #evkselangovan #congress #parliamentelection

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  துணை முதல்வரை கண்டு பயப்பட போவதில்லை என்றும் அவருடைய மகனை அவர்களின் இடத்திலேயே தோற்கடிப்பேன் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார். #LSPolls #Congress #EVKSElangovan
  சென்னை:

  தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும் தேனி தொகுதி வேட்பாளருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியதாவது:-

  கேள்வி:- ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் உங்களை எதிர்த்து போட்டியிடுகிறார்களே?

  பதில்:- என்னை எதிர்த்து போட்டியிடுபவர்களை நான் போட்டியாகவே கருதவில்லை. என்னை பொறுத்தவரையில் நான் சுடுகாட்டில் தியானம் செய்து அரசியல் செய்பவன் அல்ல. அல்லது கிளிஜோசியம் பார்த்து அரசியல் செய்பவன் அல்ல.

  மக்களின் குறைகளை அறிந்து அதை தீர்ப்பதற்காக பாடுபடுகின்ற ஒரு அரசியல்வாதியாக இருக்கின்றேன். 50 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரனாக இருக்கின்றேன்.

  தேனியில் நான் போட்டியிட வேண்டும் என்று ராகுல்காந்தி உத்தரவிட்டு இருக்கிறார். கண்டிப்பாக போட்டியிடுவதோடு மட்டுமல்ல. மிகப்பெரிய வெற்றியை நான் பெறுவேன். காரணம் மக்கள் இன்றைக்கு மதவாத சக்திகளுக்கும், ஊழல்வாதிகளுக்கும் ஆதரவு அளிப்பதில்லை என்று முடிவு எடுத்திருக்கிற காரணத்தால் மிகப்பெரிய வெற்றியை நான் பெறுவேன்.

  கேள்வி:- தேனியில் வரும் 6 தொகுதிகளில் பெரியகுளம், ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதியில், இடைத்தேர்தல் வருகிறது. அது ஏற்கனவே அ.தி.மு.க. வெற்றிபெற்ற தொகுதி. ஓ.பி.எஸ். தொகுதியாக போடி நாயக்கனூர் உள்ளது. நீங்கள் எப்படி சவாலை எதிர்கொள்வீர்கள்?  என்னைப் பொறுத்தவரையில் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவையே சந்தித்தவன் நான். எனவே துணை முதல்வரை கண்டு நான் பயப்பட போவதில்லை. அவர்களை அவர்களுடைய இடத்திலேயே தோற்கடிப்பேன்.

  கேள்வி:- பிரசாரத்தை எப்போது தொடங்குவீர்கள்?

  பதில்:- கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து விட்டு என்னுடைய பிரசாரத்தை தொடங்குவேன்.

  இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #Congress #EVKSElangovan
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print