என் மலர்

  நீங்கள் தேடியது "erode by election"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு குறித்து அலுவலர் சிவக்குமார் விளக்கம்.
  • வாக்குச்சாவடிகளில் வரிசையில் நிற்கும் 138 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை 74.69 சதவீத வாக்குகள் பதிவாகயுள்ளதாக ஈரோடு இடைத்தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

  இதில், ஆண்கள் - 82,021, பெண்கள் - 87,907, மூன்றாம் பாலினத்தவர்கள் - 17 பேர் என மொத்தம் 1.69 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

  மேலும், வாக்குச்சாவடிகளில் வரிசையில் நிற்கும் 138 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இடைத்தேர்தலில் 3 மணி நிலவரப்படி 59.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
  • வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் கூட்டம் அலைமோதுவதால் மேலும் கூடுதல் வாக்குகள் பதிவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

  ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வந்தனர்.

  இடைத்தேர்தலில் 3 மணி நிலவரப்படி 59.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

  இந்நிலையில், காலை 7 மணி முதல் 5 மணி வரை பதிவான வாக்கு சதவீதம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைய இன்னும் ஒரு மணி நேரம் உள்ள நிலையில்மாலை 5 மணிக்கு 70.58 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

  ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே 2021 சட்டசபை பொதுத்தேர்தலை விட தற்போது வாக்குகள் பதிவாகி உள்ளது. வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் கூட்டம் அலைமோதுவதால் மேலும் கூடுதல் வாக்குகள் பதிவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

  இதில், ஆண்கள்- 77,183, பெண்கள்- 83,407, மூன்றாம் பாலினத்தவர்கள் 13 பேர் என மொத்தம் 1,60,603 பேர் வாக்களித்துள்ளனர்.

  ஈரோடு கிழக்கு தொகுதியில் 2021 சட்டசபை பொதுத்தேர்தலில் பதிவான மொத்த வாக்கு சதவீதம் 66.56 என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரம் இன்று ஓய்கிறது.
  • நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் மகளின் இலவச பேருந்து திட்டம் நடைமுறையில் உள்ளது.

  ஈரோடு:

  காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா. மறைவால் காலியான ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

  இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கி விட்டது. கடந்த பொதுத் தேர்தலைப் போலவே, இடைத்தேர்தலிலும் இந்தத் தொகுதி தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அந்தக் கட்சியின் சார்பில், மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவின் தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.

  அவரை எதிர்த்து அ.தி.மு.க. தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு நிறுத்தப்பட்டு உள்ளார். தே.மு.தி.க.வின் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதன், சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டி போடுகிறார்கள்.

  ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

  காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு சம்பத் நகரில் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:

  * திராவிட இயக்கத்தின் சொல்லின் செல்வராக திகழ்ந்தவர் ஈ.வி.கே. சம்பத்.

  * ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வந்ததற்கான சூழல் உங்களுக்கு நன்றாக தெரியும்.

  * ஈவிகேஎஸ். இளங்கோவனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

  * புதுச்சேரியில் அடிபட்டு கிடந்த கருணாநிதியை பெரியார் அரவணைத்தார்.

  * ஈ.வி.கே. சம்பத் மகனுக்காக கருணாநிதியின் மகன் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்.

  * மறைந்த திருமகன் ஈ.வெ.ரா தொகுதி வளர்ச்சி, மக்கள் பிரச்சினைக்கு பேரவையில் குரல் கொடுத்தார்.

  * திமுகவின் அடித்தளமே ஈரோடுதான். மகனின் கடமையை செய்து முடிக்க தந்தை வந்துள்ளார்.

  * சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம்.

  * நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் மகளிர் இலவச பேருந்து திட்டம் நடைமுறையில் உள்ளது.

  * தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குக்காக காலை சிற்றுண்டி திட்டம் நிறைவேற்றி உள்ளோம்.

  * தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

  * திமுக அரசு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகின்றது.

  * குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்.

  * உறுதி அளித்த வாக்குறுதிகளை இந்தாண்டுக்குள் நிறைவேற்றி காட்டுவோம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது.
  • நடைபெறும் முறைகேடுகள், ஆளும் கட்சியின் அராஜகங்கள் பற்றி எந்த புகார் கொடுத்தாலும் ஏற்க அதிகாரிகள் தயாராக இல்லை.

  புதுடெல்லி:

  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது.

  அந்த கட்சியின் சட்டப்பிரிவு நிர்வாகி ஜெகதீஸ்வரன் நேரில் சென்று புகார் அளித்தார். அந்த புகாரில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு சேகரிக்க முடியாத நிலை உள்ளது. அங்கு நடைபெறும் முறைகேடுகள், ஆளும் கட்சியின் அராஜகங்கள் பற்றி எந்த புகார் கொடுத்தாலும் ஏற்க அதிகாரிகள் தயாராக இல்லை. இது தொடர்பாக ஏற்கனவே மாநில தேர்தல் அலுவலகத்தில் புகார் தெரிவித்து இருக்கிறோம். இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காததால் தங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம்.

  இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலையில் கமல்ஹாசன் பிரசாரத்தை தொடங்கினார்.
  • கொள்கையை ஒதுக்கிவிட்டு மக்களின் நலனுக்காக வரும்போது எல்லாம் நியாயம் என்றார் கமல்ஹாசன்.

  ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளதால் பிரசாரம் அனல் பறக்கிறது. தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 24, 25ம் தேதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார். கனிமொழி எம்.பி. ஏற்கனவே பிரசாரம் செய்துள்ளார்.

  இவர்களைத் தவிர தி.மு.க அமைச்சர்கள் எம்.எல்.ஏக்.கள், தேர்தல் பணி குழுவினர் வீதி, வீதியாக சென்று தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். இதே போல் காங்கிரஸ் தலைவர் அழகிரி, ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் ஆகியோர் ஆதரவு திரட்டினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தனர்.

  இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இன்று மாலை 5 மணி அளவில் கருங்கல்பாளையம் காந்தி சிலையில் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து சூரம்பட்டி நால்ரோடு, சம்பத் நகர், வீரப்பன்சத்திரம், அக்ரஹாரம் போன்ற பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

  இந்நிலையில், பிரச்சாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:-

  என் பயணத்தை பாருங்கள் எனது பாதை புரியும். பல விமர்சனங்களை கடந்து, சரியான பாதை என்று தான் வந்துள்ளேன். நான் அரசியலுக்கு வந்தது லாபத்துக்கோ, ஆதாயத்திற்காகவோ அல்ல. நல்லது நடக்க வேண்டும் என அறம் நோக்கி கூட்டணிக்காக வந்துள்ளேன்.

  என் பயணத்தைப் பாருங்கள், எனது பாதை புரியும். கொள்கையை ஒதுக்கிவிட்டு மக்களின் நலனுக்காக வரும்போது எல்லாம் நியாயம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • செய்யாறு பொதுக்கூட்டத்தில் கி.வீரமணி பேச்சு
  • தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது

  செய்யாறு:

  செய்யாறில் நேற்று சமூக நீதி பாதுகாப்பு மற்றும் திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட திக தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். வேல்.சோ.நெடுமாறன், காமராசன், வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  திராவிட கழக தலைவர் கி. வீரமணி கலந்து கொண்டு பேசியதாவது:-

  1929 ஆம் ஆண்டு பெரியார் செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் சுய மரியாதை மாநாடு நடத்திய போது பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். தற்பொழுது பெண்கள் சொத்துரிமை, படிப்புரிமை, வேலை வாய்ப்பு உரிமை எனஅனைத்து துறைகளிலும் பெண்கள் பணி செய்வது பெரியார் எனும் மாபெரும் மனிதரின் புரட்சியால்தான், கலைஞர் ஆட்சியில் தான் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டது.செயல்படுத்துவதற்கு திராவிட மாடல் ஆட்சி வழிகாட்டுவது திராவிடர் கழகம்.

  பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்பதற்காக மந்திரி பதவியை ராஜினாமா செய்தவர் புரட்சியாளர் அம்பேத்கர்.தற்பொழுது உள்ள கவர்னர் நம் வரிப்பணத்தில் சனாதன தர்மம் பரப்ப சத்சங்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

  ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கலைஞரின் முயற்சியால் பாராளுமன்றத்தில் பெண்களுக்கான சொத்துரிமை கொண்டுவரப்பட்டது.

  திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் கல்லூரி சென்றால் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. கல்வி வள்ளல் பச்சைத்தமிழர் காமராஜர் பகல் உணவு திட்டத்தை சிறப்பாக செய்தார்.

  தற்பொழுது பகல் உணவு திட்டத்தை தாண்டி காலை உணவு சிற்றுண்டி குழந்தைகள் சாப்பிடுகிறார்களா என சொல்லும் அளவிற்கு இந்தியாவிலேயே திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

  இல்லம் தேடி கல்வி, வீடு தேடி மருத்துவம் என்ன எண்ணற்ற திட்டங்களை நமக்காக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். ஈரோடு இடைத்தேர்தல் பெரிய திருப்பமாக இருக்கும் அங்கு எதிரிகள் யார் என்றே புரியவில்லை அங்கு உள்ளவர்கள் பொம்மலாட்ட பொம்மைகள் காவிகாரர்கள் கால் கையை இழுத்து ஒரு கட்சியை நான்கு கட்சியாக ஆக்கினார்கள்.

  நான்கு கட்சியினரும் சுதந்திரமாக இல்லை நல்ல அடமானப் பொருட்களாக இருக்கிறார்கள் அடமானத்தை மீட்க வேண்டும் என்பதற்காக தன்மானத்தை பற்றி கவலை இல்லாமல் வருமானத்தைப் பற்றி தான் கவலைப்படுகிறார்கள். மோடி வந்தவுடன் ஒரு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்றார் அவர் வந்து ஒன்பது வருடம் ஆச்சு 18 ஆயிரம் கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதா, அதேபோல உங்கள் வங்கிக் கணக்கில் 15 லட்சம் வரும் என்று சொன்னார் எத்தனை பேருக்கு வந்தது, திராவிட மாடல் ஆட்சியில் அப்படியல்ல சொன்னதைத்தான் செய்வோம் செய்வதைத்தான் சொல்லுவோம் 86 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றி உள்ளனர். எல்லோரும் மனிதநேயத்தோடு இருக்க வேண்டும் அன்பு காட்ட வேண்டும்.

  சேது சமுத்திர கால்வாய் திட்டம் நிறைவேறினால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் இவ்வாறு பேசினார். இறுதியில் பெருமாள் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், விசிகேவை சேர்ந்த குப்பன், கம்யூனிஸ்ட் சேர்ந்த சோலைப் பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஈரோடு இடைத்தேர்தல் அனைத்து அமைச்சர்களும் தொகுதியில் முகாமிட்டிருப்பது தவறான நடைமுறை என்று மாநில செயலாளர் கூறினார்.
  • அதானி குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பொதுக் கூட்டத்தில் பேசுவதுபோல் பேசி உள்ளார்.

  விருதுநகர்

  விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பால கிருஷ்ணன் இன்று நிருபர்க ளிடம் கூறியதாவது:-

  மத்தியில் அதானி ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் வெளிநாடுகளுக்கு செல்லும்போது அதானியை அழைத்து செல்கிறார். மோடி அரசு அதானிக்கு சலுகைகளை வாரி வழங்குகிறது. பாராளு மன்றத்தில் மோடி அதானி குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பொதுக் கூட்டத்தில் பேசுவதுபோல் பேசி உள்ளார்.

  ஈரோடு இடைத்தேர்தலில் பிரசாரத்திற்காக அனைத்து அமைச்சர்களும் அங்கு முகாமிட்டுள்ளனர். இந்த நடைமுறையை கொண்டு வந்தது அ.தி.மு.க.தான். இதை தவிர்க்க வேண்டும்.

  தமிழகத்தில் பெண்கள் காப்பகத்தில் விதிமுறைகள் மீறப்படுகின்றன. மேலும் அங்கு பாலியல் தொல்லை களும் கொடுக்கப்படுகிறது. எனவே தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  காப்பகங்களை அரசே பொறுப்பேற்று நடத்த வேண்டும். ஈரோடு இடைத்தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெறுவார்.

  நிலக்கரி ஆலைகளால் கடுமையாக மாசு ஏற்படுகி றது. ஆனால் அதைபற்றி எதுவும் சொல்லாமல் பட்டாசு ஆலைகளை குறைகூறுவது தவறான நடைமுறை. விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  பேட்டியின்போது மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், மாநிலக்குழு உறுப்பினர் பாலசுப்பிர மணியன், சி.ஐ.டி.யூ. செயலாளர் தேவா ஆகி யோர் உடன் இருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் பெயர் இல்லாததால் அறிக்கை மூலம் இரட்டை இலைக்கு வாக்கு கேட்க ஓ.பி.எஸ் திட்டமிட்டுள்ளார்.
  • ஈரோடு இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் ஏன் என்பதற்கு விரிவான விளக்கம் தரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

  ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு அறிக்கை வெளியிட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  இதுதொடர்பாக மாவட்ட செயலாளர்களின் கருத்துக்களை நேரில் கேட்கவும், இடைத்தேர்தல் தொடர்பாக எடுக்க வேண்டிய முக்கிய முடிவு குறித்து விவாதிக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

  நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் பெயர் இல்லாததால் அறிக்கை மூலம் இரட்டை இலைக்கு வாக்கு கேட்க ஓ.பி.எஸ் திட்டமிட்டுள்ளார்.

  ஈரோடு கிழக்கு வாக்காளர்களுக்கு அலைபேசி குரல் பதிவின் மூலம் இரட்டை இலைக்கு வாக்கு கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

  ஈரோடு இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் ஏன் என்பதற்கு விரிவான விளக்கம் தரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

  மேலும், வரும் 20ம் தேதி சென்னையில் ஓ.பி.எஸ். தரப்பு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் களைகட்டியுள்ளது.
  • அனைத்து அரசியல் கட்சியினருமே இந்த பிரசாரத்தில் கிழக்கு தொகுதியில் ஓட்டு இருப்பவர்களை மட்டுமே அழைத்து செல்கிறார்கள்.

  ஈரோடு:

  ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் களைகட்டியுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சியினரின் பிரசாரம் நடந்து வருகிறது. கையில் கட்சி கொடி, சின்னத்துடன் வீதிவீதியாக மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

  ஒவ்வொரு பகுதிக்கும் முக்கிய பிரமுகர்கள் வருவதற்கு முன்பே உள்ளூர் கட்சிகாரர்கள் மூலம் பொதுமக்களுக்கு தகவல் தரப்படுகிறது. அவர்கள் முக்கிய பிரமுகர்களை வரவேற்க கையில் ஆரத்தி, கும்பம், பூக்களுடன் வரிசையாக காத்திருக்கிறார்கள்.

  ஓட்டு கேட்டு வரும் முக்கிய பிரமுகர்கள் வந்ததும் ஆரத்தி சுற்றும் பெண்களுக்கு தட்டில் ஒரு அரசியல் கட்சியினர் ரூ.100-ம் மற்றொரு அரசியல் கட்சியினர் ரூ.200-ம் கொடுக்கிறார்கள். இதே போல் பூ தூவி வரவேற்பு கொடுக்கும் பெண்களுக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை கொடுக்கப்படுகிறது.

  அதோடு இல்லாமல் பிரசாரத்துக்கு சென்றால் ரூ.500, தேர்தல் பணிமனையில் அமர்ந்தால் ரூ.500, கட்சி துண்டு பிரசுரம் வழங்கினால் ரூ.500, கொடி, சின்னத்துடன் சென்று ஆதரவு திரட்டினால் ரூ.500 என பண மழை கொட்டி வருகிறது.

  அனைத்து அரசியல் கட்சியினருமே இந்த பிரசாரத்தில் கிழக்கு தொகுதியில் ஓட்டு இருப்பவர்களை மட்டுமே அழைத்து செல்கிறார்கள். ஒரு வீட்டில் மனைவிக்கு மட்டும் ஓட்டு இருந்தால் அவர் பிரசாரத்துக்கு சென்று விட அவரது கணவர் வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்து கொள்கிறார். மொத்தத்தில் கிழக்கு தொகுதி முழுவதும் பண மழை பெய்து வருகிறது. ஆரத்தி எடுப்பது முதல் பிரசாரம் செல்வது வரை பொதுமக்கள் ஆர்வத்துடன் காத்து உள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது.
  • தேர்தல் பொறுப்பாளர்கள் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் தங்கி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  ஈரோடு:

  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 18-ந் தேதி வெளியானது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன.

  தேர்தலில் பொதுமக்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் பணியாற்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசியல் கட்சியினர் வருகை தந்து தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

  தேர்தல் பொறுப்பாளர்கள் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் தங்கி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ந்தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin