என் மலர்

  நீங்கள் தேடியது "Minister Senthil Balaji"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • கடும் எதிர்ப்பால் மின்சார திருத்த சட்ட மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
  • மசோதா விவகாரத்தில் பா.ஜ.க.வுடன் இணக்கமாக இருக்கும் அ.தி.மு.க. எந்த முடிவும் எடுக்கவில்லை.

  சென்னை:

  மத்திய அரசின் மின்சார திருத்த மசோதாவால், இலவச மின்சார திட்டத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

  சென்னை அண்ணா அறிவாலயத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

  மின்சார திருத்த சட்ட மசோதா ஏழை, எளிய மக்கள், நெசவாளர்கள் என ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கும். அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத வகையில் உருவாக்கப்பட்டு உள்ளதால், அந்த மசோதாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

  பாராளுமன்றத்தில் இந்த மசோதா விவாதத்துக்கு வந்தபோது, பாராளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு மிக கடுமையாக எதிர்ப்பு குரலை பதிவு செய்து, தி.மு.க.வின் நிலைப்பாட்டை எடுத்து சொன்னார். பாதிப்பை தெரிந்தே, மத்திய அரசு அதனை கொண்டுவந்திருக்கிறது.

  மின்சார வாரிய கட்டமைப்புகள் ஏறத்தாழ ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் ஏற்பட்டு, அதன் மூலம் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை எல்லாம் தனியார் துறைகள் பயன்படுத்தி மின் வினியோகம் செய்வதற்கான வழிவகைகள் மசோதாவில் உருவாக்கப்பட்டுள்ளது. அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்தக்கூடிய இடங்களில், தனியார் துறையினர் மின் வினியோகத்தை செய்வதற்கான முயற்சிகளை செய்வார்கள். இதனால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், ஏழைகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம், விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம், குடிசை வீடுகளுக்கான இலவச மின்சாரம் பெறும் நுகர்வோர்களுக்கு மின்சார திருத்த சட்ட மசோதாவால் பாதிப்புகள் ஏற்படக்கூடிய சூழல் உள்ளது.

  மாநிலங்கள் உருவாக்கியுள்ள ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரங்களை மத்தியில் இருக்கும் ஒழுங்குமுறை ஆணையம் முழுவதுமாக பறித்துகொள்கிறது. மேலும் மத்திய அரசு பிறப்பிக்கும் உத்தரவை மாநில அரசுகள் செயல்படுத்தவில்லை என்றால், அதற்கான அபராத தொகை 100 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

  கடும் எதிர்ப்பால் மின்சார திருத்த சட்ட மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மசோதாவை எதிர்த்து, 8-12-2021 அன்று முதல்-அமைச்சர், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

  இந்த மசோதா விவகாரத்தில் பா.ஜ.க.வுடன் இணக்கமாக இருக்கும் அ.தி.மு.க. எந்த முடிவும் எடுக்கவில்லை. இலவச மின்சார திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியாத நிலை இந்த மசோதாவில் இருக்கிறது. எனவே அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.

  இந்த மசோதா பாராளுமன்றத்திலோ, நிலைக்குழுவிலோ விவாதத்துக்கு வரும்போது தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு குரலை பதிவு செய்ய வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மின்சார வாரியத்திற்கு ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் சுமை உயர்ந்தது.
  • தமிழகத்தில் 20 ஆண்டுகளாக 4 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் மின் இணைப்புக்காக காத்திருந்தனர்.

  கோவை:

  மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

  தமிழகத்தில் மின்சார வாரிய நிதிநிலை மிகவும் மோசமாக உள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியினால் ஏற்படுத்தப்பட்ட நிர்வாக சீர்கேடே இதற்கு காரணம். இதன் காரணமாக மின்சார வாரியத்திற்கு ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் சுமை உயர்ந்தது.

  ஆண்டுக்கு 16 ஆயிரத்து 500 கோடி வட்டி செலுத்தும் நிலைமைக்கு தமிழக மின்சார வாரியம் தள்ளப்பட்டது. அப்போது மொத்த மின் தேவையில் மூன்றில் ஒரு பங்கை மட்டும் மின்சார வாரியம் உற்பத்தி செய்தது.

  மீதி 2 பங்கு மின்சாரத்தை வெளியில் தனியாரிடம் அதிக விலை கொடுத்து வாங்கி விட்டு தமிழகம் மின்மிகை மாநிலம் என்று கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தவறான பிரசாரம் மக்கள் மத்தியில் வைக்கப்பட்டது.

  தமிழகத்தில் 20 ஆண்டுகளாக 4 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் மின் இணைப்புக்காக காத்திருந்தனர். தமிழகம் மின்மிகை மாநிலம் என்றால் பதிவு செய்திருந்த அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பை வழங்கி இருக்கலாம். ஆனால் அப்படி கொடுக்கவில்லை. கிடப்பில் போடப்பட்டது.

  இந்த நிலையில் நாளை மற்றும் மறுநாள் சில அரசியல் கட்சியினர் மின்சார கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவார்களா?.

  மேலும் மின் கட்டண உயர்வால் ஏழை, எளிய மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கடன் கொடுக்க கூடாது என ரிசர்வ் வங்கிக்கே மத்திய அரசு தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.

  தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கி உள்ளோம். அடுத்த கட்டமாக 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது.

  தற்போது மின் கட்டணம் மாற்றத்தின் மூலமாக 2 கோடியே 28 லட்சம் பேருக்கு நிலை கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

  மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் வகையில் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. டிரான்ஸ்பார்மரில் மீட்டர் பொருத்தும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு டெண்டர் வரை சென்று உள்ளது.

  எனவே மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் முறை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியத்தை நிறுத்துவோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படாத வகையில் மின்கட்டணத்தை உயர்த்த முடிவு.

  தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

  கடந்த 10 வருடங்களில் மின்சார துறையில் கடன் ரூ.12,647 கோடி உயர்ந்துள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியத்தை நிறுத்துவோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படாத வகையில் மின்கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 100 யூனிட் வரை மின்சாரம் கட்டணம் இல்லை. 42 சதவீத மின் இணைப்பாளர்களுக்கு கட்டணங்களில் மாற்றம் இல்லை.

  2 மாதங்களில் 200 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு மின் கட்டணங்களை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2 மாதங்களில் 200 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.27.50 உயர்த்தப்படும்.

  201 யூனிட் முதல் 300 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

  2 மாதங்களில் 301 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50 வரை கட்டணம் உயர்த்த பரிசீலனை செய்யப் படுகிறது. இரண்டு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்கள் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு ரூ.297.50 பைசா கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

  2 மாதங்களில் 501 யூனிட் முதல் 600 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.155 வரை உயரும். 2 மாதங்களில் 601 யூனிட் முதல் 700 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.275 கட்டணம் உயரும்.

  விசைத்தறிகளுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். மின்கட்டண ஒழுங்கு முறை ஆணையத்திடம் கட்டண உயர்வு விபரம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதன்பின் மின் கட்டணம் உயர்த்தப்படும்.

  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வெளிநாடுகளில் கடலில் காற்றாலை அமைத்து மின் உற்பத்தி பெறப்படுவதால் அதே போல் தமிழ்நாட்டில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
  • ஸ்காட்லாந்து நாட்டில் கடலில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யப்படுவதால் அந்த நாட்டுக்கு சென்று மின் உற்பத்தி செய்யப்படுவதை ஆய்வு செய்து வருமாறு உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.

  சென்னை:

  தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறை நிலவி வருவதால் மின் உற்பத்தியை அதிகரிக்க மின்வாரியம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம் மூலம் கிடைக்கும் மின் உற்பத்தியுடன் காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரமும் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

  அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, நெல்லை மாவட்டம் கயத்தார் உள்பட பல இடங்களில் காற்றாலை மூலம் மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட்டு மாதங்களில் காற்றாலை மூலம் அதிகமாக மின்சாரம் கிடைத்து வருகிறது.

  தற்போது ராமேஸ்வரம் உள்ளிட்ட கடல் பகுதியிலும் காற்றாலை நிறுவ அரசு ஆலோசித்து வருகிறது.

  வெளிநாடுகளில் கடலில் காற்றாலை அமைத்து மின் உற்பத்தி பெறப்படுவதால் அதே போல் தமிழ்நாட்டில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

  ஸ்காட்லாந்து நாட்டில் கடலில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யப்படுவதால் அந்த நாட்டுக்கு சென்று மின் உற்பத்தி செய்யப்படுவதை ஆய்வு செய்து வருமாறு உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.

  அதன்படி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உயர் அதிகாரிகளுடன் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் ஸ்காட்லாந்து புறப்பட்டு சென்றார்.

  எரிசக்தி துறை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் ராஜேஷ் லக்கானி, இயக்குனர் பகிர்மானம் மா.சிவலிங்கராஜன், மரபு சாரா எரிசக்தி தலைமை பொறியாளர் சுரேந்திரன் ஆகிய 5 பேர் குழுவினர் ஸ்காட்லாந்து சென்றுள்ளனர்.

  5 நாள் பயணமாக ஸ்காட்லாந்து சென்றுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி கடலில் காற்றாலை நிறுவுவது சம்பந்தமாக ஆய்வு செய்வதுடன் அதை தமிழ்நாட்டில் செயல்படுத்துவது சாத்தியமாகுமா? என்பதை அறிந்து முதல்-அமைச்சரிடம் எடுத்து கூறுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகம் முழுவதும் 4 ஆயிரம் மின்பொறியாளர்கள், 36 ஆயிரம் பணியாளர்கள் என மொத்தம் 40 ஆயிரம் ஊழியர்கள் மழைக்கால பாதிப்புகளை சரிசெய்யும் களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

  பொன்னேரி:

  பலத்த மழை காரணமாக மீஞ்சூரை அடுத்த வடசென்னை அனல் மின் நிலையத்தில் உள்ள நிலக்கரி சேமிப்பு கிடங்கில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.

  இதற்கிடையே வட சென்னை அனல் மின் நிலையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். அவர், அனல் மின் நிலையத்தில் உள்ள கிடங்கில் நிலக்கரி இருப்பு குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் நிலக்கரி இருப்பு, மின் உற்பத்தி குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

  வடகிழக்கு பருவமழையால் மின் உற்பத்தி பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தற்போது அனல் மின் நிலைய நிலக்கரி கிடங்கில் மழைநீர் தேங்கியுள்ளதால் 400 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அனல் மின் நிலைய நிலக்கரி கிடங்கில் தேங்கியுள்ள மழைநீரை போர்க்கால அடிப்படையில் வெளியேற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வடசென்னை அனல் மின் நிலையத்தில் பாதிக்கும் மின் உற்பத்தி அளவை தூத்துக்குடி, மேட்டூர் அனல் மின் நிலையங்களில் உற்பத்தி செய்து தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 4 ஆயிரம் மின்பொறியாளர்கள், 36 ஆயிரம் பணியாளர்கள் என மொத்தம் 40 ஆயிரம் ஊழியர்கள் மழைக்கால பாதிப்புகளை சரிசெய்யும் களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

  மழைக்காலங்களில் மின் கம்பங்கள் சேதம் அடைந்தால் அவற்றை உடனடியாக மாற்றும் வகையில் 1 லட்சத்து 32 ஆயிரம் மின்கம்பங்கள் தயார் நிலையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பருவமழைக்கு முன்னரே பழுதடைந்த 25 ஆயிரத்து 500 மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

  மின்கம்பம்

  அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேவையான வகையில் சூரிய மின்சக்தி, நீர், கேஸ் மின்உற்பத்தி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  கடந்த ஆட்சியில் மழை காலத்தில் மின் விநியோகம் பல நாட்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மழையால் ஏற்படும் பாதிப்பை ஒரே நாளில் சீரமைத்து மீண்டும் மின் விநியோகம் செய்து வருகிறோம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இதையும் படியுங்கள்...மழை சேதம்: மத்திய அரசிடம் நிவாரண நிதி கேட்க விபர அறிக்கை- அதிகாரிகளுக்கு ரங்கசாமி உத்தரவு

  ×