search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "TNEB"

  • தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளங்கள், ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டது.
  • மின்வினியோகம் மற்றும் தொலைதொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டன.

  தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கடந்த 16, 17 மற்றும் 18-ம் தேதிகளில் வரலாறு காணாத வகையில் கனமழை கொட்டி தீர்த்தது. மிக குறைந்த நேரத்தில் அதீத கனமழை பெய்ததால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளங்கள், ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டது.

  இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தால் தத்தளித்தன. தூத்துக்குடி நகரம் மட்டுமின்றி திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஏரல், தென்திருப்பேரை, ஆறுமுகனேரி, காயல்பட்டினம், ஆழ்வார்திருநகரி, நாசரேத் சுற்றுவட்டார பகுதிகள் உள்பட மாவட்டம் முழுக்க ஆயிரத்திற்கும் அதிக கிராமங்களை வெள்ளம் சூழந்தது.

   


  இரண்டு மாவட்டங்களிலும் ஏராளமான இடங்களில் பாலங்கள் உடைந்தும், சாலைகள் துண்டிக்கப்பட்டும் போக்குவரத்து தடைப்பட்டது. மேலும் மின்வினியோகம், தொலைதொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டது. மழை நின்று ஒரு வாரத்திற்கும் மேலாகி விட்ட நிலையில், தூத்துக்குடியில் முழுமையாக மின்சேவை வழங்கப்படாமல் இருந்தது.

  இந்த நிலையில், தூத்துக்குடியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் முழுமையாக மின் வினியோகம் வழங்கப்பட்டு விட்டதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. 

  • டிசம்பர் மாதம் பெரும்பாலான பகுதியில் மின் கணக்கீடு செய்ய முடியாத நிலை.
  • கடந்த முறை செலுத்திய தொகையை இநத் முறையும் கட்ட அறிவுறுத்தல்.

  மிச்சாங் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. நகரப்பகுதிகளில் வெள்ளம் வடிந்து உடனடியாக சகஜ நிலை ஏற்பட்டது. ஆனால் புறநகர்ப் பகுதிகளில் மழை நீர் வடிவ காலதாமதம் ஏற்பட்டது.

  இதனால் பெரும்பாலான வீடுகளில் டிசம்பர் மாதம் மின் கணக்கீடு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது. இதன் காரணமாக டிசம்பர் மாதம் மின் கணக்கீடு செய்யாத நுகர்வோர்கள் அக்டோபர் மாதம் கணக்கீடு செய்யப்பட்டு செலுத்தப்பட்ட அதே தொகையை செலுத்தலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • பிளக் சுவிட்சை அணைத்தபிறகே மின் விசிறி, அயர்ன்பாக்ஸ், செல்போன் சார்ஜர் போன்றவற்றை பிளக்கில் இணைக்க வேண்டும்.
  • மின்சார மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்ற மின்துறை அலுவலர்களை அணுக வேண்டும்.

  சென்னை:

  மழைக்காலங்களில் பின்பற்ற வேண்டிய மின் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விளக்கத்தை அரசு தலைமை மின் ஆய்வாளர் வெளியிட்டுள்ளார்.

  வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் மழைக்காலங்களில் பின்பற்ற வேண்டிய மின் பாதுகாப்பு வழிமுறைகளை அரசு தலைமை மின் ஆய்வாளர் ஞா.ஜோசப் ஆரோக்கியதாஸ் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

  * மின்கம்பங்களில் ஆடு, மாடு போன்ற வீட்டு விலங்குகளை கட்டக்கூடாது. மின் கம்பங்களில் பந்தல், கொடிக்கம்பி மற்றும் கயிறு போன்றவற்றை கட்டக்கூடாது. எக்சாஸ்ட் மின்விசிறிகள் மற்றும் வீட்டு உபயோக மின் சாதனங்களை தவறாமல் சுத்தம் செய்வது தீ மற்றும் மின் அதிர்ச்சி அபாயங்களை தடுக்க உதவும்.

  * மின்சார மேல்நிலை கம்பிகளின் அருகில் பட்டங்கள் பறக்கவிடவேண்டாம். பவர் பிளக்குகளுக்குள் குச்சி, கம்பி போன்றவற்றை நுழைக்க வேண்டாம். எந்த திரவத்தையும் பயன்படுத்தி சுவிட்சுகளை சுத்தம் செய்யவேண்டாம். ஈரமான நிலையில் மின்சாதனங்களை இயக்க வேண்டாம்.

  * பிளக் சுவிட்சை அணைத்தபிறகே மின் விசிறி, அயர்ன்பாக்ஸ், செல்போன் சார்ஜர் போன்றவற்றை பிளக்கில் இணைக்க வேண்டும். மின்சார சார்ஜரில் இணைப்பில் இருக்கும்போது செல்போனை பயன்படுத்தக்கூடாது. சுவிட்ச் போர்டு, மின்மோட்டார், தண்ணீர் பம்பு மோட்டார் போன்றவற்றின் மீது தண்ணீர், மழைநீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

  * இடி அல்லது மின்னலின்போது கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டிடம், வீடு போன்ற பெரிய கட்டிடங்களிலோ, உலோகத்தால் மேலே மூடப்பட்ட பஸ், கார், வேன் போன்ற வாகனங்களிலோ தஞ்சம் அடையுங்கள். திறந்த வெளியிலோ, மரத்தின் அடியிலோ, பஸ் நிறுத்தங்களின் கீழோ, நீச்சல் குளத்தின் அருகிலோ தஞ்சம் அடையவேண்டாம். டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி, செல்போன், மின், மின்னணு சாதனங்கள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.

  * மின் மாற்றிகள், மின்பெட்டிகள், மின் கம்பிகள் ஆகியவற்றை தொடவும், அதற்கு அருகில் செல்லவும் கூடாது. மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் தொட முயற்சிக்க வேண்டாம். கீழே விழுந்த மின்கம்பியில் இருந்து குறைந்தபட்சம் 30 அடி தூரத்தில் நிற்கவும், மின்கம்பத்தின் அருகில் அல்லது லைனை தொடும் எதனையும் நெருங்க வேண்டாம். மின்சார மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்ற மின்துறை அலுவலர்களை அணுக வேண்டும்.

  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • சென்னையில் நாளை தாம்பரம், அண்ணாநகர் பகுதிகளில் மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
  • அண்ணாநகர் பகுதியில் எம்.ஜி.சக்கரபாணி நகர், ஓம் சக்தி நகர், அஷ்டலட்சுமி நகர் மற்றும் தாசரி பத்மா நகர் பகுதியில் மின்சாரம் இருக்காது.

  சென்னை:

  தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

  சென்னையில் நாளை (30-ந் தேதி) தாம்பரம், அண்ணாநகர் பகுதிகளில் மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

  எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம் பகுதியில் ராஜகீழ்ப்பாக்கம், வேளச்சேரி மெயின் ரோடு, சிட்லப்பாக்கம் மெயின் ரோடு, செல்லி நகர், சுந்தரம் காலனி, எழில் நகர், கம்பர் தெரு, 100 அடி ரோடு, அண்ணா தெரு, ராஜேஸ்வரி நகர், தனலட்சுமி நகர், சந்தான லட்சுமி தெரு, ஆதி லட்சுமி தெரு, விஜயலட்சுமி தெரு, அன்னை நகர் மற்றும் சவுபாக்கிய லட்சுமி தெரு, ராதாநகர், ஓம் சக்தி நகர், முத்துசாமி நகர், பாத்திமா நகர் மற்றும் கண்ணம்மாள் நகர்.

  அண்ணாநகர் பகுதியில் மதுரவாயல், கிருஷ்ணாநகர், ருக்மணி நகர், பாரதி நகர், எம்.ஜி.சக்கரபாணி நகர், ஓம் சக்தி நகர், அஷ்டலட்சுமி நகர் மற்றும் தாசரி பத்மா நகர் பகுதியில் மின்சாரம் இருக்காது.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • குப்புராணி கோவை மண்டல தலைமை மின் பொறியாளராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
  • புதிய நெல்லை மண்டல தலைமை மின் பொறியாளராக டேவிட் ஜெபசிங் இன்று பொறுப்பேற்று கொண்டார்.

  நெல்லை:

  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நெல்லை மண்டலத்திற்கு உட்பட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை மண்டல தலைமை மின் பொறியாளராக பணியாற்றி வந்த குப்புராணி கோவை மண்டல தலைமை மின் பொறியாளராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

  இதனால் புதிய நெல்லை மண்டல தலைமை மின் பொறியாளராக டேவிட் ஜெபசிங் இன்று பொறுப்பேற்று கொண்டார். அவரிடம் மாறுதலாகி செல்லும் தலைமை மின் பொறியாளர் குப்புராணி பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட மேற்பார்வை மின் பொறியாளர்கள், மின் பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

  • நாளை சாத்தான்குளம், நாசரேத் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
  • அதன் காரணமாக முதலூர், நாசரேத், கச்சனாவிளை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.

  உடன்குடி:

  உடன்குடி, நவ. 20-

  திருச்செந்துர் மின்சார வினியோக பொறியாளர் விஜய சங்கரபாண்டியன் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

  மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சாத்தான்குளம், முதலூர், கடாச்சபுரம் கருங்கடல், வெங்கடேசபுரம், சுப்புராய புரம், தருமபுரி, போலயார் புரம், சுப்புராயபுரம், பொத்தகாலன்விளை, சிறப்பூர், ஆலங்கிணறு, கொம்பன்குளம், நெடுங் குளம், கருவேலம்பாடு, கண்டுகொண்டான் மாணிக்கம்.

  நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ள மடம், எழுவரை முக்கி, தேரிப்ப னை, சொக்கனுர், செம்பூர், மானா ட்டூர், பத்தவாசல், பிள்ளை மடையூர், மணல் குண்டு, ஆதிநாதபுரம், வேலன் காலனி, மளவராய நத்தம், மெஞ்ஞானபுரம், அனைத்தலை, ராமசாமி புரம், லெட்சுமிபுரம், வாகை விளை, மானாடு, செட்டி விளை, நடுவக்குறிச்சி, பூச்சிக்காடு, அதிசயபுரம், சொக்கன்குடியிருப்பு, தட்டார்மடம், கொம்மடிக் கோட்டை, புத்தன்தருவை, மணிநகர், படுக்கப்பத்து, உடைபிறப்பு, சுண்டன் கோட்டை, பெரியதாழை, செட்டிவிளை, தோப்பு விளை, உதிரமாடன் குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம், பழனியப்ப புரம், அம்பலச்சேரி, அறிவான்மொழி, கட்டாரி மங்களம், மீரான்குளம், தேர்க்கன்குளம், ஆசிர்வாத புரம், கருங்கடல், கோம னேரி ஆகிய பகுதிகளில் நாளை(செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.

  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

  • வள்ளியூர் மின் கோட்டத்திற்குட்பட்ட களக்காடு, பணகுடி மற்றும் சங்கனான்குளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
  • களக்காடு துணை மின்நிலையத்திற்குட்பட்ட கோதைச்சேரி, சிங்கிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் தடைபடும் .

  வள்ளியூர்:

  தமிழ்நாடு மின் வினியோக வள்ளியூர் பிரிவு செயற்பொறியாளர் வளன் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

  வள்ளியூர் மின் கோட்டத்திற்குட்பட்ட களக்காடு, பணகுடி மற்றும் சங்கனான்குளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் தடைபடும் . மேலும் மின்விநியோகத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் போன்ற வற்றை அகற்றி மின்பாதை யினை பராமரிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

  களக்காடு துணை மின்நிலையத்திற்குட்பட்ட கோதைச்சேரி, சிங்கிகுளம், களக்காடு,காடுவெட்டி, வடமலை சமுத்திரம், கள்ளிகுளம், மீனவன்குளம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம் மற்றும் பக்கத்து கிராமங்கள்.

  பணகுடி துணைமின் நிலையத்திற்குட்பட்ட பணகுடி, லெப்பை குடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன்குளம் மற்றும் பக்கத்து கிராமங்கள்.சங்கனான்குளம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட மன்னார்புரம், வடக்கு விஜயநாராயணம், தெற்கு விஜயநாராயணம், இட்டமொழி, நம்பிகுறிச்சி, தெற்குஏறாந்தை, சிவந்தியாபுரம், பரப்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நாளை மின்தடை ஏற்படும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • சிதம்பராபுரம் பகுதியில் பொதுமக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு ரூ.3 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
  • இந்த மின் மாற்றியின் மூலம் அப்பகுதி மக்களுக்கு சீரான மின் விநியோகம் கிடைப்பதோடு விவசாயம் சிறு குறு தொழில் வளர்ச்சியடையும்.

  வள்ளியூர்:

  வள்ளியூர் கோட்டத்தில் நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் உத்தரவின் படியும், வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வழிகாட்டுதலின் படியும் களக்காடு நகர்புற பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட சிதம்பரா புரம் பகுதியில் பொதுமக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு ரூ.3 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

  இந்த மின் மாற்றியின் மூலம் அப்பகுதி மக்களுக்கு சீரான மின் விநியோகம் கிடைப்பதோடு விவசாயம் சிறு குறு தொழில் வளர்ச்சியடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் உதவி செயற் பொறியாளர் ஏர்வாடி உபகோட்டம் செல்வகார்த்திக், உதவி மின் பொறியாளர் களக்காடு நகர்புற பிரிவு நலீம் மீரான் மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

  • அனைத்து பணியாளர்களும் விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
  • பணியாளர்கள் பணியின்போது எர்த்ரோட் பயன்படுத்துவதை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

  சென்னை:

  மின்வாரிய முதன்மை என்ஜினீயர் அனைத்து மின்வாரிய அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  மின்சார வாரியத்தில் பாதுகாப்பு விதிகளை பின்பற்றாதது, தேவையான பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாமல் பணிகளை மேற்கொள்வது, முறையான கண்காணிப்பு இல்லாமல் வேலை செய்வது, ஏபி சுவிட்சுகளில் திறந்திருக்கும் பிளேடுகளை சரிபார்க்காமல் இருப்பது உள்ளிட்டவற்றால் விபத்துகள் ஏற்படுகிறது.

  இதனால் அனைத்து பணியாளர்களும் விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பணியாளர்களால் பணிகளை மேற்கொள்வதற்கு முன்பு, தளத்தில் உள்ள மேற்பார்வை ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்களின் பயன்பாட்டை சரி பார்த்து, பணியாற்ற வேண்டும்.

  பணியாளர்கள் பணியின்போது எர்த்ரோட் பயன்படுத்துவதை பதிவு செய்து கொள்ள வேண்டும். பணியாளர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமல் பணியாற்றும்போது விபத்து ஏற்பட்டால் பணியாளர்களே பொறுப்பு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • விவசாய நிலங்களில் மின் வேலி அமைக்கப்பட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மின் தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக மின் வினியோகம் வழங்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

  நெல்லை:

  நெல்லை மின் பகிர்மான வட்டத்தின் மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் தியாகராஜநகரில் உள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

  நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் கலந்துகொண்டு பொது மக்கள் அளித்த மனுக்கள் மற்றும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க நெல்லை கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.

  கூட்டத்தில் மேற்பார்வை மின் பொறியாளர் சந்திர சேகரன் பேசியதாவது:-

  நெல்லை கோட்டத்தில் விவசாய நிலங்களில் தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு மின் வேலி அமைக்கப்பட்டு இருந்தால் உடனடியாக மின் இணைப்பை துண்டித்து போலீஸ் மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் அனைத்து மின் பொறியாளர்களும் விழிப்புடன் தொடர் கண்காணிப்பில் பணிபுரிந்து மின் தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக மின் வினியோகம் வழங்குவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

  இயற்கை இடர்பாடுகள் காரணமாக மின் தடங்கல் ஏற்பட்டால் பாதுகாப்பு நெறிமுறைகளை முழுமை யாக கடைபிடித்து மின் வினியோகம் வழங்க ேவண்டும்.

  நெல்லை கிராமப்புற கோட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க ேவண்டும்.

  பொதுமக்கள் குறைந்த மின்னழுத்தம் சம்பந்தமாக ஏதேனும் புகார் அளித்தால் உடனடியாக அந்தப் பகுதியை ஆய்வு செய்து தேவைப்படும் பட்சத்தில் புதிய மின்மாற்றி அமைப்பதற்கு மதிப்பீடு தயார் செய்து உடனடியாக பணிகளை மேற்கொண்டு சீரான மின் வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  சுயநிதி அடிப்படையில் விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பித்திருக்கும் விண்ணப்பங்களை முறையாக ஆய்வு செய்து உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும்.

  மின் நுகர்வோர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு உரிய பதிலை கனி வுடன் தெரிவிக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் பேசினார்.