என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகுல்காந்தி"

    • காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூனக கார்கே வீட்டில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • ராகுல்காந்தி உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

    பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகவும் மோசமான தோல்வியை தழுவியது. 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. கடந்த தேர்தலில் 19 தொகுதிகளை கைப்பற்றியது. தற்போது 13 இடங்களை இழந்தது.

    பீகாரில் ஏற்பட்ட தோல்வி குறித்து காங்கிரஸ் கட்சி இன்று அவசர ஆலோசனை நடத்தியது. டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூனக கார்கே வீட்டில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில், ராகுல்காந்தி உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் பங்கேற்றனர். பீகாரில் ஏற்பட்ட மோசமான தோல்வி குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    • தொகுதி பங்கீடு தொடர்பாக இந்தியா கூட்டணியில் பிரச்சனை ஏற்பட்டது.
    • முதலில் ராகுல் காந்தி முசாபர்பூரில் உள்ள சகரா தொகுதியில் பிரசாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கிறார்.

    243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக அடுத்த மாதம் (நவம்பர்) 6 மற்றும் 11-ந்தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அரியணையில் அமரப்போவது யார்? என்பது நவம்பர் 14-ந் தேதி தெரியும்.

    பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு)- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிர களப் பணியாற்றி வருகிறது.

    நிதிஷ் குமாரிடம் இருந்து ஆட்சியை இந்த முறை கைப்பற்றி விடவேண்டும் என்ற வேட்கையில் எதிர்கட்சியான தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி (ராஷ்டிரிய ஜனதா தளம்)-காங்கிரசின் மகா பந்தன் கூட்டணி இருக்கிறது.

    பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டனர். ஆனால் பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி பிரசாரத்தை இன்னும் தொடங்கவில்லை.

    தொகுதி பங்கீடு தொடர்பாக இந்தியா கூட்டணியில் பிரச்சனை ஏற்பட்டது. கூட்டணி கட்சியினரே 12 தொகுதிகளில் மோதும் நிலை உருவாகியுள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக ராகுல் காந்திக்கும், ராஷ்டீரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக தகவல் வெளியானது. முதல்-மந்திரி வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவில்லை.

    இந்த நிலையில் ராகுல் காந்தி பீகாரில் நாளை தேர்தல் பிரசாரம் செய்கிறார். முசாபர்பூர், தர்பங்கா ஆகிய 2 இடங்களில் அவர் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டுகிறார்.

    முதலில் ராகுல் காந்தி முசாபர்பூரில் உள்ள சகரா தொகுதியில் பிரசாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கிறார்.

    ராகுல் காந்தி பங்கேற்கும் இந்த பொதுக்கூட்டத்தில் தேஜஸ்வி யாதவ் கலந்து கொள்கிறார் என்று மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் ரத்தோர் தெரிவித்தார்.

    பின்னர் ராகுல் காந்தி தர்பாங்காவில் பிரசாரம் செய்து இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    • பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 17-ந் தேதி சாசாராம் பகுதியில் யாத்திரை தொடங்கினார்.
    • ராகுல் காந்தியின் 16 நாட்கள் யாத்திரை நாளையுடன் முடிவடைகிறது.

    பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்யும் வகையில், 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 17-ந் தேதி சாசாராம் பகுதியில் யாத்திரை தொடங்கினார்.

    ராகுல் காந்தியுடன் ராஷ்டீரிய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் உடன் சென்றார்.

    வாகனங்கள், மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்று விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் ராகுல் காந்தி சந்தித்து பேசினார். யாத்திரையின்போது வாக்கு திருட்டு தொடர்பாக மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தையும் அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.

    ராகுல் காந்தியின் பேரணியில் பிரியங்கா, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக் குமார், உத்தரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் இணைந்து இருந்தனர்.

    இதற்கிடையே ராகுல் காந்தியின் 16 நாட்கள் யாத்திரை நாளையுடன் முடிவடைகிறது.

    பீகாரில் உள்ள 20 மாவட்டங்களில் 1,300 கிலோ மீட் டர் தூரம் பயணம் மேற்கொண்ட அவரது யாத்திரை பாட்னாவில் நிறைவடைகிறது. இறுதி நாள் யாத்திரையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    நாளைய பேரணி நிறைவில் மேற்கு வங்காள முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    அவரும் அபிஷேக் பானர்ஜியும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கிரிக்கெட் வீரரும், எம்.பி.யுமான யூசுப் பதான், உத்தரபிரதேச தலைவர் லலிதேஷ் திரிபாதி ஆகியோர் பாட்னா நிறைவு பேரணியில் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ராகுல் காந்தி கடந்த 17- ந் தேதி சாசாராம் பகுதியில் யாத்திரையை தொடங்கினார்.
    • இந்த யாத்திரையில் தேஜஸ்வி யாதவும் இந்த யாத்திரையில் ராகுல்காந்தியுடன் கலந்து கொண்டார்.

    பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை வலியுறுத்தி, வாக்கு திருட்டை கண்டித்து, 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த 17- ந் தேதி சாசாராம் பகுதியில் யாத்திரையை தொடங்கினார்.

    செப்டம்பர் 1-ல் தலைநகர் பாட்னாவில் யாத்திரையை முடிக்கிறார். இந்த யாத்திரையில் பீகார் முன்னாள் துணை முதல்- மந்திரியும், ராஷ்டீரிய ஜனதாதள தலைவருமான தேஜஸ்வி யாதவும் ராகுல்காந்தியுடன் கலந்து கொண்டார்.

    இந்நிலையில், பீகாரில் இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ் தன்னிச்சையாக தம்மை அறிவித்தார்.

    வாக்காளர் அதிகார யாத்திரையில் ராகுல்காந்தி மற்றும் அகிலேஷ் யாதவின் முன்னிலையில் தேஜஸ்வி யாதவ் இதனை அறிவித்தார்.

    • வாக்காளர் வாக்குரிமையை உறுதிசெய்ய வலியுறுத்தி ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வருகிறார்.
    • இந்த யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்க ஆகஸ்ட் 27-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பீகார் செல்கிறார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பீகாரில் வாக்காளர் வாக்குரிமையை உறுதி செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வருகிறார்.

    ராகுல் காந்தியின் யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட் 27-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பீகார் செல்கிறார்.

    இந்நிலையில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரும், பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:

    தமிழக முதல்வர் ஒருவேளை பீகார் வருகிறார் என்றால் அதனால் என்ன மாற்றம் இங்கு நிகழ்ந்துவிட போகிறது? அவரின் வருகையால் பீகார் முன்னேறிவிடுமா?

    பீகாரின் பிரச்சனைகளுக்கு பீகாரிலேயே தான் தீர்வு காணப்பட வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் இங்கு வருவதாக இருந்தாலும் சரி அல்லது கர்நாடகா முதல்வர் வருவதாக இருந்தாலும் சரி, அது எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

    பீகாருக்கு வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கவேண்டும் என்ற ஒரு யாத்திரை தான் தற்போது வேண்டும். பிரயோஜனம் இல்லாத மற்ற யாத்திரையால் என்ன ஆதாயம் கிடைத்துவிடப் போகிறது?

    காங்கிரசை குற்றம் சுமத்துகிறார் பிரதமர் மோடி. காங்கிரஸ் பிரதமர் மோடியை குற்றம் சுமத்துகிறது. ஆனால் பீகார் இளைஞர்கள் கேட்பது எல்லாம், இங்கு வேலைவாய்ப்புகள் எப்போது கிடைக்கும், புலம்பெயர்ந்து செல்வோரை எப்போது தடுப்பீர்கள் என்பதுதான் என தெரிவித்தார்.

    • கதிகாரில் உள்ள மக்கானா (அல்லி விதை) விவசாயிகளுடன் வயலில் இறங்கி உற்சாகமாக வேலை செய்தார்.
    • 27-ம் தேதியும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 29-ம் தேதி கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை  வலியுறுத்தி, வாக்கு திருட்டை கண்டித்து, 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த 17- ந் தேதி சாசாராம் பகுதியில் யாத்திரையை தொடங்கினார்.

    செப்டம்பர் 1-ல் தலைநகர் பாட்னாவில் யாத்திரையை முடிக்கிறார்.

    ராகுல்காந்தி நேற்று, யாத்திரையின் போது கதிகாரில் உள்ள மக்கானா (அல்லி விதை) விவசாயிகளுடன் வயலில் இறங்கி உற்சாகமாக வேலை செய்தார். அவர்களுடன் கலந்துரையாடினார். விவசாயிகள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். 

    இந்நிலையில்  ராகுல்காந்தி இன்றயை யாத்திரையின் போது புல்லெட்  பைக்கில் பேரணியாக சென்றார். பீகார் முன்னாள் துணை முதல்- மந்திரியும், ராஷ்டீரிய ஜனதாதள தலைவருமான தேஜஸ்வி யாதவ் உட்பட ஏராளமான கட்சித் தொண்டர்களும் அவருடன் புல்லெட்டில் ஊர்வலமாக சென்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கவனம் ஈர்த்து வருகிறது.

    இந்த யாத்திரையில் வரும் 26, 27-ம் தேதிகளில் பிரியங்காவும், 27-ம் தேதியும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 29-ம் தேதி கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    இதேபோல் உத்தர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், முதல் மந்திரிகள் ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட்), ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா), சுக்விந்தர் சுகு (இமாசலப் பிரதேசம்) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்

    • மக்களின் விருப்பத்தையும், ஜனநாயகத்தின் அடிப்படையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.
    • “நியாயம் – சமத்துவம் – சமூக நீதி” என்பதையே தங்கள் அரசியல் லட்சியமாகக் கொண்டுள்ளனர்.

    ராகுல்காந்தி ஒருபோதும் பிரதமராக முடியாது என்ற அமித்ஷாவின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நெல்லையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய "ராகுல் காந்தி ஒருபோதும் பிரதமராக முடியாது" என்ற கருத்து, உண்மையில் மக்களின் விருப்பத்தையும், ஜனநாயகத்தின் அடிப்படையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.

    இந்த நாடு ஜனநாயக நாடாகும். பிரதமர் யார் ஆக வேண்டும் என்பதை தீர்மானிப்பது மக்களின் வாக்குகள் தான். ஒன்றிய உள்துறை அமைச்சர் அல்லது ஏதேனும் ஒருவரின் வாய்மொழிக் கட்டளையோ, தாழ்வான அரசியல் கருத்தோ அதைக் குறிக்கவில்லை.

    இன்று முழு இந்தியாவிலும் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என கோடிக்கணக்கான மக்கள் "நியாயம் – சமத்துவம் – சமூக நீதி" என்பதையே தங்கள் அரசியல் இலட்சியமாகக் கொண்டுள்ளனர். அந்த இலட்சியங்களுக்காகத் தான் ராகுல் காந்தி அவர்கள் போராடுகிறார்.

    நீதி, அன்பு, சமத்துவம் ஆகியவற்றை குரலாக எடுத்துரைக்கும் ஒருவரை மக்கள் பிரதமராக கொண்டு வருவார்களா, இல்லையா என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள் . வரலாறு கூறுவது ஒரே உண்மை – மக்களின் விருப்பத்தை யாராலும் தடுக்க முடியாது.

    உண்மையில், இந்த மாதிரியான ஆளும் கட்சியின் தோல்விப் பயத்தை வெளிப்படுத்தும் கூற்றுகளே, ராகுல்காந்தி அவர்கள் நாளைய பிரதமர் என்ற உண்மையை உறுதியாக்குகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருமாவளவனுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • அனைவரும் கண்ணியம், சம உரிமைகளுக்காக நாம் தொடர்ந்து ஒன்றுபட்டு நிற்போம்

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இன்று தனது 63-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில்,விசிக தலைவர் திருமாவளவனுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ராகுல் காந்தி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திருமாவளவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அனைவரும் கண்ணியம், சம உரிமைகள் மற்றும் அதிகாரமளிப்புக்காக நாம் தொடர்ந்து ஒன்றுபட்டு நிற்போம்" என்று தெரிவித்துள்ளார். 

    • பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
    • தேர்தல் ஆணையத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

    பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளன ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று பேரணி நடத்தினர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சஞ்சய் ராவத் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்களை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்ததை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

    • தேர்தல் ஆணையம் நோக்கிச் சென்றவ எம்.பி.க்கள் இரும்பு தடுப்பு வேலிகள் கொண்டு தடுக்கப்பட்டனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தியை போலீசார் கைது செய்தனர்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், கர்நாடகாவில் உள்ள ஒரு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற முறைகேடுகளை வெளியிட்டு, அதற்கான ஆதாரங்களையும் குறிப்பிட்டார்.

    பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து இதுபோன்ற பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளன என தெரிவித்தார். இதையடுத்து, டெல்லியில் கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கர்நாடகத்தில் ஒரு பெண் வாக்காளர் 2 முறை வாக்கு செலுத்தியிருப்பதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    இந்நிலையில், வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி நடத்தினர். பாராளுமன்றம் to தேர்தல் ஆணையம்: பேரணி நடத்தி கைதான ராகுல் காந்தி விடுதலை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர்.

    பாராளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கிச் சென்றவர்களை இரும்பு தடுப்பு வேலிகள் கொண்டு போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சஞ்சய் ராவத் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்களை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாலை விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் பின்னர் நாடாளுமன்றத்திற்கும் சென்றனர்.

    முன்னதாக கைது செய்யப்பட்டபோது பேருந்தில் இருந்தபடி செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "யதார்த்தம் என்னவென்றால், அவர்களால் பேச முடியாது.

    உண்மை நாட்டின் முன்பு உள்ளது. இந்தப் போராட்டம் அரசியலுக்காக அல்ல, அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கானது. ஒரு நபர் ஒரு ஓட்டுக்கான போராட்டம் இது. எங்களுக்குத் தேவை முழுமையான சரியான வாக்காளர் பட்டியல்" என்று தெரிவித்தார். 

    இதற்கிடையே குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க கோரி கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். 

    • நம் நாடு முழு வளர்ச்சியை அடைய வேண்டும் என்றால் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்.
    • அப்படி ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றால் அரசியலமைப்புச் சட்டம் காக்கப்பட வேண்டும்.

    தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தலைமையில் ஊர்வலமாகச் சென்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது.

    கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" புத்தக வெளியீட்டு விழாவில் பேசியபோது, "நம் நாடு முழு வளர்ச்சியை அடைய வேண்டும் என்றால் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அப்படி ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றால் அரசியலமைப்புச் சட்டம் காக்கப்பட வேண்டும். அதற்கான பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தல்" (Free and Fair Election) என்று அப்பொழுதே ஆணித்தரமாகத் தெரிவித்திருந்தோம். அத்தோடு, தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்தோடு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தோம்.

    மேலும், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியானதும், அந்த நடைமுறையானது ஜனநாயக உரிமைகளைக் கேள்விக்குறியாக்கும் என்று, தமிழ்நாட்டில் இருந்து தமிழக வெற்றிக் கழகம்தான் முதன்முதலாகக் குரல் எழுப்பியது.

    ஏற்கெனவே நாம் கூறியது போல, அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் விதமாக, ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் (Free and Fair Election) நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    • தேர்தல் ஆணையம் நோக்கிச் சென்றவ எம்.பி.க்கள் இரும்பு தடுப்பு வேலிகள் கொண்டு தடுக்கப்பட்டனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தியை போலீசார் கைது செய்தனர்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், கர்நாடகாவில் உள்ள ஒரு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற முறைகேடுகளை வெளியிட்டு, அதற்கான ஆதாரங்களையும் குறிப்பிட்டார்.

    பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து இதுபோன்ற பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளன என தெரிவித்தார். இதையடுத்து, டெல்லியில் கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கர்நாடகத்தில் ஒரு பெண் வாக்காளர் 2 முறை வாக்கு செலுத்தியிருப்பதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    இந்நிலையில், வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி. நடத்தினர். பாராளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர்.

    பாராளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கிச் சென்றவர்களை இரும்பு தடுப்பு வேலிகள் கொண்டு போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சஞ்சய் ராவத் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்களை போலீசார் கைது செய்தனர்.

    அதன் பின்னர் பேருந்தில் இருந்தபடி செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "யதார்த்தம் என்னவென்றால், அவர்களால் பேச முடியாது. உண்மை நாட்டின் முன்பு உள்ளது. இந்தப் போராட்டம் அரசியலுக்காக அல்ல, அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கானது. ஒரு நபர் ஒரு ஓட்டுக்கான போராட்டம் இது. எங்களுக்குத் தேவை முழுமையான சரியான வாக்காளர் பட்டியல்" என்று தெரிவித்தார்.

    ×