search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Election Commision"

    • கரும்பு விவசாயி சின்னம் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
    • நாம் தமிழர் கட்சி தாக்கல் செய்த மனு டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்யக்கோரி தலைமை தேர்தல் அதிகாரியிடம் அக்கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் நாம் தமிழர் கட்சி மனுதாக்கல் செய்தது.

    இந்நிலையில், இந்த மனு டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி மன்மோகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    தமிழ்நாட்டில் 3வது பெரிய கட்சி, 5.7 சதவீத வாக்குகளைக் கொண்டுள்ளது. விதிப்படி பாராளுமன்ற தேர்தலுக்கு 3 மாதத்துக்கு முன் கரும்பு விவசாயி சின்னம் கேட்டு விண்ணப்பித்தோம் என நாம் தமிழர் கட்சி சார்பில் வாதிடப்பட்டது.

    முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வேறு நபருக்கு அந்த சின்னத்தை ஒதுக்கிவிட்டோம். பொது சின்னங்களை யாரும் உரிமை கொண்டாட முடியாது. இதுபோன்ற சின்னத்தை ஒதுக்க உத்தரவிட்டால் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யும் நிலை உருவாகும். கரும்பு விவசாயி சின்னம் வேண்டும் என்றால் கூடுதலான வாக்குகளைப் பெற்று அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறட்டும் என தேர்தல் ஆணையம் பதிலளித்தது.

    இதையடுத்து, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் டெல்லி ஐகோர்ட் ஒத்திவைத்தது.

    • தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடந்த 17-ம் தேதி உடுப்பிக்கு ஹெலிகாப்டரில் சென்றார்.
    • அப்போது, ஹெலிகாப்டரில் பணம் எடுத்துச் செல்லப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

    பெங்களூரு:

    தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, கர்நாடக சட்டசபை தேர்தல் பா.ஜ.க. இணை பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். அவர் கர்நாடகத்தில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

    அவர் கடந்த 17-ம் தேதி காலை ஹெலிகாப்டரில் உடுப்பிக்குச் சென்றார். அதில் அவர் மூட்டை மூட்டையாக பணம் கொண்டு வந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

    இந்நிலையில், காங்கிரஸ் குற்றச்சாட்டிற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்து ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:

    தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடந்த 17-ம் தேதி காலை ஹெலிகாப்டரில் உடுப்பிக்கு வந்தார். அவரது ஹெலிகாப்டரில் சோதனை நடத்தப்பட்டது. எந்த விதமான விதிமீறல்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் அங்கிருந்து ஆசியன் ஓட்டலுக்கு காரில் சென்றார். அந்தக் காரில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் ஜி.எஸ்.டி. குழுவினர் கூட்டாக சோதனை நடத்தினர். அதில் ஒரு பை இருந்தது. அதில் சோதனை நடத்தியதில் 2 ஜோடி உடைகள், குடிநீர் பாட்டில்கள் இருந்தது. அங்கும் எந்த விதிமீறலும் இருக்கவில்லை.

    அதைத்தொடர்ந்து அண்ணாமலை காரில் காபு தொகுதிக்குச் சென்றார். அவரது கார் உதயவாரா சோதனைச்சாவடியில் நிறுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிலும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக எதுவும் கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து காபு தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை கலந்துகொண்டார். அங்கும் அவரது கார் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போதும் ஒன்றும் கிடைக்கவில்லை. அதை முடித்துக்கொண்டு அவர் மீண்டும் உடுப்பி ஆசியன் பியர்ஸ் ஓட்டலுக்கு வந்தார். அங்கு அவர் தங்கிய அறையில் சோதனை நடத்தப்பட்டது. அங்கும் எந்த விதிமீறலும் கண்டறியப்படவில்லை. பின்னர் அவர் அந்த ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு சிக்கமகளூருவுக்கு புறப்பட்டுச் சென்றார். அதனால் அண்ணாமலை தங்கிய அறை மற்றும் பயணித்த ஹெலிகாப்டர், காரில் நடத்தப்பட்ட சோதனையிலும் எங்கும் விதிமீறல் இருக்கவில்லை என தெரிவித்துள்ளது.

    தேர்தல் கமிஷன் பட்டியலில் இருந்து செயல்பாட்டில் இல்லாத 87 கட்சிகள் நீக்கம் செய்யப்பட்டது.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் 2,100-க்கும் மேற்பட்ட கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை மீறியிருப்பதாக தேர்தல் கமிஷன் சமீபத்தில் அறிவித்தது. குறிப்பாக நிதி பங்களிப்புகள், முகவரி, பொறுப்பாளர் விவரங்கள் போன்றவற்றை மேம்படுத்த தவறியது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தன. எனவே அந்தந்த மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் மூலம் இந்த கட்சிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    இந்நிலையில், 87 கட்சிகள் செயல்பாட்டில் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த 87 கட்சிகளையும் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.

    விதிமீறல் உள்ளிட்டவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த கட்சிகளுக்கு தேர்தலில் சின்னம் பெறுவது உள்பட பல்வேறு நடவடிக்கைகளுக்கு சிக்கல் ஏற்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    பஞ்சாப், கோவா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது.
    புதுடெல்லி:

    கோவா, மணிப்பூர் சட்டப்பேர்வையின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு மார்ச் 14-ம் தேதியுடனும், பஞ்சாப்பின் பதவிக் காலம் மார்ச் 15-ம் தேதியுடனும் முடிவடைகிறது. உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநில சட்டப்பேரவைகளின் பதவிக் காலமும் விரைவில் நிறைவடைய உள்ளது.

    இதற்கிடையே, தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா நேற்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆலோசனை நடத்தினார். 

    இந்நிலையில், உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக அந்தந்த மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

    சமாஜ்வாடி கட்சி தலைவர் அசம் கான் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் இன்று மீண்டும் தடை விதித்துள்ளது. #LokSabhaElections2019 #EC #AzamKhan
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் ராம்பூர் பாராளுமன்ற தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் அசம் கான் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் ஜெயப்பிரதா போட்டியிடுகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய சமாஜ்வாடி வேட்பாளர் அசம் கான், ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதற்கு பாஜக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் அசம் கான் 72 மணி நேரத்துக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.



    இந்நிலையில், தேர்தல் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளால் பேசியதாகவும், இனவாதத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் கூறி சமாஜ்வாடி வேட்பாளரான அசம் கான், நாளை காலை 6 மணியில் இருந்து 48 மணி நேரத்துக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதித்து தேர்தல் ஆணையம் இன்று மீண்டும் உத்தரவிட்டது.

    சமாஜ்வாடி வேட்பாளர் அசம் கான் மீது இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #EC #AzamKhan
    பாராளுமன்றத்துக்கு இரண்டாவது கட்டமாக 12 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் இன்று 66 சதவீதம் வாக்குகள் பதிவாகின என அதிகாரிகள் தெரிவித்தனர். #LokSabhaElections2019 #ParliamentElections
    முதல்கட்ட பாராளுமன்ற தேர்தல் கடந்த 11-ஆம் தேதி 91 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் 96 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 

    தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் நடந்தது.

    அதேபோல், கர்நாடகா 14, மகாராஷ்டிரா 10, உத்தரபிரதேசம் 8, பீகார் 5, அசாம் 5, ஒடிசா 5, சத்தீஸ்கர் 3, காஷ்மீர் 2, மணிப்பூர் 1 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. 

    சரியாக காலை 7 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவுசெய்தனர்.

    இந்நிலையில், இரண்டாம் கட்டமாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சுமார் 66 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதில், அசாம் 76.22%, பீகார் 62.38%, ஜம்மு காஷ்மீர் 45.5%, கர்நாடகம் 67.67%, மகாராஷ்டிரா 61.22%, மணிப்பூர் 67.15%, ஒடிசா 57.97%, தமிழ்நாடு 66.36%, உத்தரப்பிரதேசம் 66.06%, மேற்கு வங்காளம் 76.42%, சத்தீஸ்கர் 71.40%, புதுச்சேரி 76.19% வாக்குகள் பதிவாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் நிலையில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. #LokSabhaElections2019 #ParliamentElections
    பாராளுமன்ற தேர்தலில் 845 பேரும், 18 சட்டசபை இடைத்தேர்தலில் 269 பேரும் போட்டியிடுகின்றனர் என தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். #LSpolls #ElectionCommision #FinalCandidateList
    சென்னை:

    தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுவை தொகுதிக்கும் ஏப்ரல் 18- ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதே நாளில் தமிழகம், புதுவையில் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி முடிந்தது.

    வேட்பு மனுக்கள் பரிசீலனையில் மொத்தம் 932 மனுக்கள் ஏறுக்கொள்ளப்பட்டன. வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு இன்று கடைசி நாளாகும்.

    இதேபோல, தமிழகத்தில் உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளிலும் தாக்கல் செய்யப்பட்ட 518 மனுக்களில் 305 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதற்கிடையே, மாலை 3 மணிக்கு மேல் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.
     
    இந்நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியானது. இதில் பாராளுமன்ற தேர்தலில் 845 பேர் போட்டியிடுகின்றனர்.

    இதேபோல், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளில் 269 பேர் போட்டியிடுகின்றனர் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் அதிகபட்சமாக கரூரில் 42 பேரும், தென்சென்னையில் 40 பேரும் போட்டியிடுகின்றனர். குறைந்தபட்சமாக நீலகிரி தொகுதியில் 10 பேரும் போட்டியிடுகின்றனர். #LSpolls #ElectionCommision #FinalCandidateList
    அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தஞ்சாவூர் தொகுதியில் ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. #NRNatarajan #ThanjavurLSseat #TMCcandidate #Thanjavurcandidate #Auto
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சந்திக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக எஸ்.எஸ். பழனிமாணிக்கம் நிறுத்தப்பட்டுள்ளார். 

    இதற்கிடையே, தஞ்சாவூர் தொகுதியில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார். தமாகா கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.



    இந்நிலையில், தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள என் ஆர் நடராஜனுக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இரண்டு இடங்களில் போட்டியிட்டால் மட்டுமே சைக்கிள் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டதில் மகிழ்ச்சிதான் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். #NRNatarajan #ThanjavurLSseat  #TMCcandidate #Thanjavurcandidate #Auto
    பாராளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. #LokSabhaElections2019 #ElectionCommission
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 11-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மே 19-ம் தேதி வரை வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ள நிலையில், மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய புதிய விதிமுறைகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. 

    இதுதொடர்பாக, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்குப் பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன் அரசியல் கட்சிகள் தாங்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் எந்தவித மாற்றமும் செய்யக்கூடாது என தெரிவித்துள்ளது. #LokSabhaElections2019 #ElectionCommission
    சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மதுரையில் பாராளுமன்ற தேர்தல் தேதியை மாற்ற முடியாது என ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதிபட தெரிவித்துள்ளது. #LSPolls #MaduraiHCBench #EC
    மதுரை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது. அந்த நாளில் மதுரையில் பிரசித்திப் பெற்ற சித்திரை திருவிழா தேரோட்டம், மறுநாள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளதால், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் பார்த்தசாரதி முறையீடு செய்தார்.
     
    இதனை மனுவாக தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் தெரிவித்ததை தொடர்ந்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

    மனுதாரர் தரப்பு வக்கீல் ஆஜராகி, தமிழகத்தில் மிக முக்கியமான சித்திரை திருவிழாவையொட்டி நடைபெறும் தேரோட்டம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகியவற்றை காண 15 லட்சம் பேர் வரை மதுரையில் கூடுவார்கள். அன்றைய தினம் தேர்தல் நடத்தப்பட்டால் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்படும். வாக்குப் பதிவு கடுமையாக பாதிக்கப்படும். எனவே அன்றைய தினம் நடைபெறவுள்ள தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும் என்றார்.

    இதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல், நாடு முழுவதும் பாதுகாப்பு காரணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு ஆராய்ந்து திட்டமிட்டு தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே சித்திரை திருவிழாவை காரணம் காட்டி தேர்தலை தள்ளிவைக்க இயலாது என்றார்.



    அப்போது நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் குறுக்கிட்டு, மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் நடக்க இருக்கிறது என்பதை தமிழக அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு ஏன் கொண்டு செல்லவில்லை. இந்த விழாவின் காரணமாக மதுரை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் வாக்குகள் குறையாதா? 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற தேர்தல் ஆணையம் ஆர்வம் காட்டவில்லையா? என்றனர்.

    மாற்றுத் தேதியில் தேர்தல் நடத்தலாமா? என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் உரிய விளக்கம் பெற்று நாளை மறுநாள் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 14-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    இந்நிலையில், இந்த மனு மதுரை ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, தேர்தல் ஆணைய வழக்கறிஞர் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை பாராளுமன்ற தேர்தலை தள்ளிவைக்க முடியாது.

    கோயிலை சுற்றியுள்ள 18 வாக்குச்சாவடிகளை பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்க வேண்டும். வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. துணை ராணுவ படையுடன் தேர்தல் நடத்த முடியும் என தெரிவித்தார்.

    இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வெறும் கடமைக்காக தேர்தலை நடத்த வேண்டாம். வாக்காளர்களை பற்றியும் சிந்திக்க வேண்டும். 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையத்துக்கு அக்கறை இல்லையா?

    இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நாளை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் நேரில் ஆஜராக நேரிடும் என உத்தரவிட்டனர். #LSPolls #MaduraiHCBench #EC
    தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24-க்குள் முடிவு செய்யப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. #ECI #Bypoll #MaduraiHighCourt
    மதுரை:

    எம்.எல்.ஏ.க்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள், 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இடைத்தேர்தல் எப்போது நடத்தப்படும்? என்பதை இந்த கோர்ட்டு அறிய விரும்புகிறது. இந்த வழக்கு குறித்து இந்திய தலைமை தேர்தல் கமிஷன், தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோர் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள பதிலில், தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24-ம் தேதிக்குள் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #ECI #Bypoll #MaduraiHighCourt
    திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் ஜனவரி 7-ம் தேதி விசாரிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் இன்று அறிவித்துள்ளது #SC #ThiruvarurByElection
    புதுடெல்லி:

    திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

    ஆனால், கஜா புயல் பாதிப்பு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க கோரி கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த டி.ராஜா மற்றும் மாரிமுத்து, ரத்தினகுமார் ஆகியோர் தனித்தனியாக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தனர்.



    இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை 7-ம் தேதி நடைபெறும் என சுப்ரீம் கோர்ட் இன்று அறிவித்துள்ளது.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூரில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் நேற்று அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது. #SC #ThiruvarurByElection
    ×