என் மலர்
நீங்கள் தேடியது "தவெக தலைவர்"
- கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து பிரசார பயணத்தை வஜய் ஒத்திவைத்திருந்தார்.
- ஒரு மாத காலத்திற்கு பிறகு, விஜய் காஞ்சிபுரம் மக்களை உள்ளரங்கத்தில் அழைத்து வந்து சந்தித்தார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் பிரசாரம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது.
ஆனால், கரூரில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து அரசியல் பிரசாரம் மேற்கொள்ள விஜய் தொடர்ந்து பல சவால்களை சந்தித்து வருகிறார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து பிரசார பயணத்தை வஜய் ஒத்திவைத்திருந்தார். பின்னர், ஒரு மாத காலத்திற்கு பிறகு, விஜய் காஞ்சிபுரம் மக்களை உள்ளரங்கத்தில் அழைத்து வந்து சந்தித்தார்.
இந்நிலையில், புதுச்சேரியில் வரும் டிச.5ம் தேதி விஜயின் ரோடு ஷோ நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், புதுச்சேரியில் விஜயின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து மக்கள் அதிகளவில் திரண்டால் கரூர் போன்ற அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதி, தவெகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
- பள்ளி, கல்லூரிகளில் சமூகநீதியைக் குறித்து அவர்கள் கேட்கவில்லை
- பிற்படுத்தப்பட்ட, பட்டியலின இளைஞர்கள் திமுக பக்கம் வராமல் தடுக்க இதை செய்கிறார்கள்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிபதில் இருந்து திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அதே சமயம் த.வெ.க. கூட்டங்களில் விஜயை பார்க்க அவரது ரசிகர்கள் மரம் மற்றும் டிரான்ஸ்பார்மர்களில் மீது ஏறியதை கிண்டலடிக்கும் விதமாக விஜய் ரசிகர்களை தற்குறிகள் என்று திமுக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டல் அடித்தனர்.
இந்நிலையில், விஜய் ரசிகர்களை தற்குறிகள் என்று கூறவேண்டாம் என திமுக எம்.எல்.ஏ. எழிலன் தெரிவித்துள்ளார்.
வள்ளுவர் கோட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக எம்.எல்.ஏ. எழிலன், "தற்குறி என்று பிற்படுத்தப்பட்ட, பட்டியலின இளைஞர்களை விமர்சிப்பது தவறானது. நாம் அவர்களுடன் உரையாடவில்லை என்பது நமது தவறு. பள்ளி, கல்லூரிகளில் சமூகநீதியைக் குறித்து அவர்கள் கேட்கவில்லை. நாம் அவர்களுடன் உரையாட தொடங்கினால், அவர்கள் தெளிவடைவார்கள்.
சமூக வலைத்தளங்களில் தவெக தொண்டர்களை 'தற்குறி' என அவமானப்படுத்துவது சங்கிகளின் சதி. சோசியல் மீடியாவில் அவர்களை தற்குறி என அழைப்பது தேவையில்லை. அது சங்கிகளின் திட்டம். பிற்படுத்தப்பட்ட, பட்டியலின இளைஞர்கள் திமுக பக்கம் வராமல் தடுக்க இதை செய்கிறார்கள்.நாம் அந்த சதியை உணர வேண்டும்.
தவெக தலைமை சுயநலமாக இருக்கலாம். ஆனால், அந்தக் கட்சியில் இருக்கும் இளைஞர்கள் ரசிகர்கள் கூட்டம்தான். அவர்களை விமர்சிக்காமல், அவர்களுடன் உரையாட தொடங்க வேண்டும். அவர்கள் சங்கிகள் அல்ல, நம்ம பசங்கதான். அவர்களை நாம் நெருக்கமாகப் பேச வேண்டும்" என்று தெரிவித்தார்.
- நாம், அவர்கள் மீது வைக்கின்ற மிக லேசான விமர்சனங்களுக்கே மக்கள் மிக பலமான வரவேற்பை அளிக்கத் தொடங்கி உள்ளனர்.
- எல்லா வகையிலும் கபட நாடகம் ஆடும் அவர்களது அவல ஆட்சியின் லட்சணங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்.
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சமீப காலமாக, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அதிவிரைவில் மக்களால் தூக்கி எறியப்படப் போகும் அதிகார மமதை கொண்ட கட்சி ஒன்று, அவசர கதியில் தனக்குப் பழக்கமான அவதூறு அரசியல் ஆட்டத்தைத் தொடங்கி உள்ளது. எந்தக் கட்சியைச் சொல்கிறோம் என்று தெரிகிறதா? அவதூறு ஒன்றையே அடிப்படை அரசியல் கோட்பாடாகக் கொண்ட கட்சி வேறு எந்தக் கட்சியாக இருக்கும் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
இப்போதெல்லாம் அந்தக் கட்சியின் ஒரே இலக்கு, நம்மைத் தூற்றுவதே. தமிழக வெற்றிக் கழகத்தை மட்டும் மூளையில் தேக்கி யோசிப்பதே அதன் முழுநேர வேலை என்றாகிவிட்டது.
அவர்களுக்கு, 1969க்குப் பிறகு, அவதூறுதான் அரசியல் கொள்கை. லஞ்ச லாவண்யம், ஊழல்தான் லட்சியக் கோட்பாடு. இந்நிலையில், மக்களுடன் மக்களாக இதயப்பூர்வமாக இரண்டறக் கலந்த பிறகே மாபெரும் மக்கள் சக்தியுடன் அரசியலுக்கு வருகிற நம் போன்ற ஓர் இயக்கத்தைக் கண்டால், அவர்களின் மூளை மழுங்கி முனகத்தானே செய்யும்?
ஆம். அவர்களை நாம் விமர்சிப்பதாக எண்ணித்தான் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிக் கொக்கரிக்கின்றனர். உண்மையில் நாம், அவர்கள் மீது இன்னும் முழுமையான விமர்சனத்தைத் தொடங்கவே இல்லை. மாறாக, மிக லேசான விமர்சனங்களைத்தான் வைத்தோம். அதுவும் நசுங்காத நாகரிகத்துடன் வைத்தோம்.
நாம், அவர்கள் மீது வைக்கின்ற மிக லேசான விமர்சனங்களுக்கே மக்கள் மிக பலமான வரவேற்பை அளிக்கத் தொடங்கி உள்ளனர். அதைக் கண்டு அஞ்சி நடுங்கியதால்தான், தங்கள் எண்பேராயம் மற்றும் ஐம்பெருங்குழுக்களைக் கொண்டு அதிரி புதிரியாக ஆலோசித்தும் நம் மீது மக்கள் ஏற்றுக்கொள்ளும் எந்த ஒரு விமர்சனத்தையும் வைக்கவே இயலவில்லை. அத்தகைய இயலாமையில், அந்தக் கட்சியின் தலைவர் கைக்கொண்டதுதான் 'எந்தக் கொம்பனாலும் எங்களை, எங்கள் ஆட்சியை வீழ்த்த முடியாது' என்கிற அதிகார மயக்க முழக்கம்.
தங்களைக் கொள்கைவாதிகளாக அடிக்கடி காட்டிக்கொள்வதற்காக, எல்லோரையும் ஏமாற்றுவதற்காக, தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழினம்தான் தங்கள் உயிர் என்றும் மண், மொழி, மானம்தான் தங்கள் தலையாய கொள்கை என்று ஒரு சம்பிரதாயச் சங்கை முழங்கத் தொடங்கி உள்ளார், அக்கட்சியின் தலைவர்.
போதாதென்று, அறிவுத் திருவிழா என்ற பெயரில் பரண்களில் கிடக்கும் பழைய ஓலைகளைத் தூசு தட்டித் தோரணம் கட்டப் பார்க்கும் அவர்களின் பழைய மற்றும் புதிய கொள்கை உறுதி பற்றிக் கொஞ்சமே கொஞ்சம் பார்க்கலாமா?
யாரை ஏளனமாகப் பரிகாசம் செய்தார்களோ அவர்களிடமே பதவிக்காகப் பம்மினரே, அப்போது எங்கே போயிற்று மானம்?
ஆட்சியில் இல்லாதபோது 'தமிழ் தமிழ்' என்பதும், 'தமிழர் தமிழர்' என்பதும், ஆட்சிக்கு வந்ததும் அதிகாரப் பதவிகளுக்குள் அடக்கமாக அமர்ந்துகொண்டு, அரசியல் சாசனக் கட்டுப்பாடுகள் மீது பழி போட்டுப் பதவி சுகம் காணும்போது எங்கே போனது மண், மானம் மற்றும் மொழி மீதான கொள்கைப் பாசம்?
சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அர்த்தமற்ற வாதத்தை வைத்துத் தப்பிக்கும்போது, எங்கே போனது அவர்களின் சமூக நீதிக் கொள்கை?
அறிவுத் திருவிழா என்று பெயர் வைத்துவிட்டு, முழுக்க முழுக்க, தமிழக வெற்றிக் கழகத்தை மட்டுமே மறைமுகமாகத் திட்டும் திருவிழாவாக அதை மாற்றியதிலேயே அது அறிவுத் திருவிழாவாக இல்லாமல் அவதூறுத் திருவிழாவாகத்தானே மாறியது?
பெரியார், அண்ணா கொள்கைகளை மறந்துவிட்ட அவர்கள், மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகளோடு களம் இறங்கி, யாருக்கும் எதற்கும் வளையாமல் வலம் வரும் தமிழக வெற்றிக் கழகத்தைப் பார்த்து, கொள்கையற்றவர்கள் என்று கூறுவதற்கான காரணம் அவர்களுக்கு ஏற்பட்ட உளைச்சலும் குமைச்சலுமன்றி வேறென்ன?
53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும், ஆட்சி அதிகாரத்தைப் பகல் கனவாக்கப் போகும் ஒரு 'பக்கா மாஸ்' கட்சி வந்திருப்பதைக் கண்டு நாள்தோறும் நாக்குழறி, உளறும் அவர்களுக்கு நாம் சொல்வதெல்லாம் என்ன தெரியுமா?
பவளவிழா பாப்பா - நீ
பாசாங்கு காட்டல் ஆகாது பாப்பா
நீ நல்லவர்போல நடிப்பதைப் பார்த்து
நாடே சிரிக்கிறது பாப்பா.
நேற்று நடந்த சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில்கூட யாரை விமர்சிக்க வேண்டுமோ அவர்களை விமர்சிப்பதைவிட, நம்மைத் திட்டவைத்து அகமகிழ்ந்ததே நடந்தது.
எல்லா வகையிலும் கபட நாடகம் ஆடும் அவர்களது அவல ஆட்சியின் லட்சணங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். மேலும், மக்கள் சக்தியின் மதிப்பை, வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களுடன் மக்களாக இணைந்து நின்று, இந்த அவதூறு மன்னர்கள் உணரச் செய்வோம்.
- நாமக்கல்லில் இன்று பிற்பகலில் தேர்தல் பரப்புரை நடத்தினார்.
- கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் விஜய் தனது பரப்புரையை தொடங்கினார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
நாமக்கல்லில் இன்று பிற்பகலில் தேர்தல் பரப்புரை நடத்தினார்.
இந்நிலையில், தொண்டர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் கரூரில் தனது பிரசார உரையை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உரையை தொடங்கினார்.
விஜய் வருகைக்காக மதியம் முதல் காத்திருந்த பெருங்கூட்டம் கொஞ்சம் கூட கலையாமல் அதே உற்சாகத்துடன் காத்திருந்தது.
இந்த நிலையில், கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் விஜய் தனது பரப்புரையை தொடங்கினார்.
அப்போது, காவல்துறைக்கு மனமார்ந்த நன்றிகள், அவர்கள் இல்லை என்றால் இந்த இடத்திற்கு வந்து இருக்க முடியாது என்று விஜய் தெரிவித்துள்ளார்.
- திருச்சியில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் விஜய் அடுத்ததாக பெரம்பலூர் செல்ல திட்டமிட்டுள்ளார்.
- விஜய் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி கேட்ட இடத்திற்கு பதிலாக வேறொரு இடத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்கிற நோக்கத்தில் த.வெ.க. தலைவர் விஜயும், அவரது கட்சி நிர்வாகிகளும் மும்முரமாக பணியாற்றி வருகிறார்கள்.
விஜய் வருகிற 13-ந்தேதி திருச்சியில் இருந்து தனது அரசியல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கி மக்களை சந்திக்க உள்ளார்.
திருச்சி மரக்கடை பகுதி எம்.ஜி.ஆர். சிலை அருகே வருகிற 13-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பேசுவதற்கு 23 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
திருச்சியில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் விஜய் அடுத்ததாக பெரம்பலூர் செல்ல திட்டமிட்டுள்ளார். பெரம்பலூரில் விஜய் சுற்றுப்பயணம் செய்ய அனுமதி அளிக்கவில்லை. இதற்கு த.வெ.க. நிர்வாகிகளின் அலட்சியமே காரணம் என தகவல் வெளியானது.
இந்நிலையில், பெரம்பலூரில் விஜய் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி கேட்ட இடத்திற்கு பதிலாக வேறொரு இடத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் கேட்ட காமராஜர் வளைவுப் பகுதியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
காமராஜர் வளைவுப் பகுதிக்கும் பதில் மேற்கு வானொலித்திடல் பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- திருச்சியில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக விஜய் அறிவித்துள்ளார்.
- ஆனால் காவல்துறை அதற்கு அனுமதி இல்லை என மறுப்பு தெரிவித்தது.
தமிழகம் முழுவதும் வரும் 13-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
திருச்சியில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி சத்திரம் பேருந்து நிலையத்தில் விஜய் உரையாற்ற தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை அதற்கு அனுமதி இல்லை என மறுப்பு தெரிவித்தது.
இதனையடுத்து மரக்கடை பகுதியில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்க மீண்டும் மனு அளிக்கப்பட்டது. அதனையும் காவல்துறை நிராகரித்தது. 2-வது முறையாக அனுமதி மறுக்கப்பட்டதால் மாற்று இடம் குறித்து தவெகவினர் ஆலோசனை நடத்தினர்.
அந்த வகையில் காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
3-வது முறையும் காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றத்தை அணுகவும் தவெகவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்க அனுமதி மறுத்ததால் சென்னையில் டிஜிபியை நேரில் சந்தித்து தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- வரும் 13-ந் தேதி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவிப்பு
- திருச்சியில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் வரும் 13-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
திருச்சியில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி சத்திரம் பேருந்து நிலையத்தில் விஜய் உரையாற்ற தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை அதற்கு அனுமதி இல்லை என மறுப்பு தெரிவித்தது.
இதனையடுத்து மரக்கடை பகுதியில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்க மீண்டும் மனு அளிக்கப்பட்டது. அதனையும் காவல்துறை நிராகரித்தது. 2-வது முறையாக அனுமதி மறுக்கப்பட்டதால் மாற்று இடம் குறித்து தவெகவினர் ஆலோசனை நடத்தினர்.
அந்த வகையில் காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
3-வது முறையும் காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றத்தை அணுகவும் தவெகவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- மதுரை மாநாட்டில் நடிகர் விஜய் பிரதமரை பார்த்து சொடக்கு போட்டு விஜய் பேசுகிறார்.
- இஸ்லாமிய மக்களுக்கு துரோகம் விளைவித்தார் பிரதமர் மோடி என்று விஜய் கூறுகிறார்.
இந்து முன்னணி சார்பில் கோவை துடியலூர் சந்திப்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் பா.ஜ.கவை சேர்ந்த நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாம் சொந்த நாட்டிலேயே அகதிகளாக உள்ளோம். பொட்டு வைப்பது, சாமி கும்பிடுவதில் கூட பிரச்னை. 100 முறை என்னை சங்கி என்று அழைக்கிறார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. அதை நான் மார் தட்டி ஏற்றுக்கொள்வேன். இங்கு எல்லா கடவுளும் ஒன்றுதான், வழிபடும் விதம் தான் வேறு வேறு.
சமீபத்துல மதுரை மாநாட்டுல தம்பி விஜய், நான் உச்சத்தில் இருக்கும் போது வந்தவன். பிழைப்பு தேடி வரவில்லைனு பேசியிருக்கிறார். அப்படியென்றால் அவர் யாரை பார்த்து அதனை சொல்கிறார். எம்.ஜி.ஆரையா, ஜெயலலிதாவையா? இல்ல அன்பு அண்ணன் விஜயகாந்தையா, இல்ல கமல் ஹாசனையா?.
மதுரை மாநாட்டில் நடிகர் விஜய் பிரதமரை பார்த்து சொடக்கு போட்டு பேசுகிறார். இஸ்லாமிய மக்களுக்கு துரோகம் விளைவித்தார் பிரதமர் மோடி என்று கூறுகிறார். ஆனால் இதே விஜய், கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 16-ந் தேதி கோவையில் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக பூனை குட்டியை போன்று கையை கட்டி அமர்ந்திருந்தார்.
அப்போது விஜய், பிரதமரை சந்தித்தது எதற்காக, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைக்காகவா? மீனவர் பிரச்சினை குறித்து பேசவா? அல்லது கல்வியை சமத்துவமாக்க வேண்டும் என்று பேசுவதற்காகவா? அல்லது கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவா? எதுவும் இல்லை தன்னுடைய தலைவா என்ற படம் ஓடுவதற்காக பிரதமரை பார்த்துவிட்டு, இப்போது பிரதமரை பார்த்து கையை சொடக்கு போட்டு பேசுகிறார்.
இப்போ கையை சொடக்கு போட்டு பேசுற விஜய்க்கு பழையது எல்லாம் மறந்துட்டாரு. தம்பிக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் மாறி மறந்துட்டாருனு நினைக்கிறேன்.
மிஸ்டர், மிஸ்டர்னு சொடக்கு போட்டு சொல்லும்போதெல்லாம், ஒரு வாக்காளனா, ஒரு குடிமகனா எனக்கு அப்பா யாரென்றால் அதுமோடி தான். அவர்தான் என்ன காப்பாத்துறாரு. அமெரிக்காவே வியந்து பார்க்கும் ஒரே பிரதமர் மோடி. அவரை போய் கைநீட்டி சொடக்கு போட்டு பேச அருகதை இல்லை.
முதல்வரை அங்கிள் என்றும், பிரதமரை மிஸ்டர் என்றும் குறிப்பிடுகிறார். இதுதான் அரசியல் நாகரீகமா. நீயே இப்படி இருந்தால், உன்ன நம்பி இருக்க இளைஞர்கள் என்ன ஆவார்கள். எனக்கு வர கோவத்துக்கு ஒங்கி குத்த வேண்டும் என தோன்றுகிறது. அதனை நாம் ஓங்கி ஓட்டாக குத்துவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மாநாட்டில் சுமார் 2 லட்சம் தொண்டர்கள் திரண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- மேளதாள வாத்தியங்கள் முழங்க தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு தொடங்கியது.
த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று நடைபெற்று வருகிறது.
மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று நள்ளிரவு முதல் அலை அலையாக குவிந்த லட்சக்கணக்கான தொண்டர்களால் மாநாடு நடைபெறுவது காலையா, மாலையா? என்று கேட்கும் அளவிற்கு இருந்தது.
தற்போது வரை, மாநாட்டில் சுமார் 2 லட்சம் தொண்டர்கள் திரண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, மாநாட்டு விழா மேடைக்கு தவெக தலைவர் விஜயின் தந்தை சந்திரசேகர், தாயார் ஷோபா வருகை தந்தனர். சந்திரசேகர் தவெக நிர்வாகிகளை அறிமுகம் செய்தனர்.
தொடர்ந்து, த.வெ.க. மாநாடு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், மாநாடு இசை நிகழ்ச்சியுடன் சுமார் 3.30 மணியளவில் தொடங்கியது. மேளதாள வாத்தியங்கள் முழங்க தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு தொடங்கியது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் மாநாட்டின் மேடைக்கு வருகை தந்தார். தொடர்ந்து, மதுரை மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள ரேம்ப் வாக் மேடையில் தொண்டர்களை பார்த்து கை அசைத்தவாறு சென்றார்.
அப்போது, தொண்டர்கள் தூக்கி வீசிய கட்சி துண்டுகளை அணிந்தவாறும், தலையில் கட்டியபடியும் விஜய் சென்றார். அவருக்கு தொண்டர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.
- நம் நாடு முழு வளர்ச்சியை அடைய வேண்டும் என்றால் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்.
- அப்படி ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றால் அரசியலமைப்புச் சட்டம் காக்கப்பட வேண்டும்.
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தலைமையில் ஊர்வலமாகச் சென்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" புத்தக வெளியீட்டு விழாவில் பேசியபோது, "நம் நாடு முழு வளர்ச்சியை அடைய வேண்டும் என்றால் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அப்படி ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றால் அரசியலமைப்புச் சட்டம் காக்கப்பட வேண்டும். அதற்கான பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தல்" (Free and Fair Election) என்று அப்பொழுதே ஆணித்தரமாகத் தெரிவித்திருந்தோம். அத்தோடு, தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்தோடு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தோம்.
மேலும், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியானதும், அந்த நடைமுறையானது ஜனநாயக உரிமைகளைக் கேள்விக்குறியாக்கும் என்று, தமிழ்நாட்டில் இருந்து தமிழக வெற்றிக் கழகம்தான் முதன்முதலாகக் குரல் எழுப்பியது.
ஏற்கெனவே நாம் கூறியது போல, அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் விதமாக, ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் (Free and Fair Election) நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
- தமிழகத்தை அடகு வைத்தது போலவே இப்போது தமிழர்களின் பெருமையையும் அடகு வைத்துள்ளது தி.மு.க. அரசு.
- மறைமுகமாகப் பா.ஜ.க.வும் தி.மு.க.வும் ஓரணியில் இருக்கும் கபடதாரிகளாக இணைந்து நடத்தும் அரசியல் ஆதாய நாடகத்தை இனியும் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்.
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-
கங்கை கொண்டான், கடாரம் வென்றான் என்று பெயர் பெற்ற, கடல் கடந்து படை நடத்தி, இலங்கை முதல் இந்தோனேசியா வரை தெற்காசியா முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி புரிந்த ஒப்பற்ற பேரரசன், மாபெரும் வெற்றிச் சரித்திரத்தைத் தன் மார்பினில் தாங்கியவன் சோழப் பேரரசின் வெற்றிப் பேரொளியாகத் திகழ்ந்த ராஜேந்திர சோழன். ராஜராஜ சோழனின் மகனாகப் பிறந்தாலும் தந்தையையும் தாண்டி வெற்றித் தடம் பதித்த தமிழ்ப் பேரரசன், தன் வெற்றியின் அடையாளமாக இருப்பதற்காக அமைத்த நகரம்தான் கங்கைகொண்ட சோழபுரம். ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழர்களின் பெருமைக்குரிய அடையாளமாக நிமிர்ந்து நிற்கிற ஒரு நகரம். கங்கைகொண்ட சோழபுரம் கோவில், யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட பெருஞ்சிறப்பு கொண்டது.
மாபெரும் யானைப் படை, கடற்படையைக் கட்டமைத்திருந்த வீறு மிகுந்த சோழப் பேரரசால் அமைக்கப்பட்டு, இன்றளவும் தமிழ் மண்ணுக்கும் தமிழகத்திற்கும் தனிப்பெரும் அடையாளமாக இருக்கும் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு, தமிழையும் தமிழ்நாட்டையும் ஓரவஞ்சனையுடன் ஒதுக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் பிரதமர் வந்து, ராஜராஜ சோழனுக்கும் ராஜேந்திர சோழனுக்கும் சிலைகள் அமைக்கப்படும் என்று அறிவித்ததோடு சோழர்களின் பெருமை குறித்து நமக்குப் பாடம் எடுப்பது போலவும் பேசிச் சென்றுள்ளார்.
75 ஆண்டுகளைக் கடந்த கட்சி என்றும் தமிழ், தமிழர் அடையாளம் என்றாலே அது தங்களுக்கு மட்டுமே உரியது என்பது போலவும் பொய்யாக மார் தட்டிக்கொள்ளும் தற்போதைய ஆளும் கட்சியான தி.மு.க., தமிழர் பெருமையான சோழப் பேரரசர்களுக்கு உரிய மரியாதையை முன்பே முழுமையாக அளித்திருந்தால் இப்போது தமிழர்களுக்கு எதிராக இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு இதைக் கையில் எடுத்திருக்காது. இதையெல்லாம் செய்யாமல், ஒன்றியப் பிரதமர் வருகை தமிழ்நாட்டுக்குப் பெருமை என்று வாஞ்சையாகச் சொல்லிச் சிலாகித்தது இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு.
சோழப் பேரரசின் பெருமையைக் கொண்டாட வேண்டியது தங்கள் கடமை என்பதை மறந்து, ஒன்றிய பா.ஜ.க. கையில் அடைக்கலம் புகுந்து தமிழகத்தை அடகு வைத்தது போலவே இப்போது தமிழர்களின் பெருமையையும் அடகு வைத்துள்ளது தி.மு.க. அரசு.
கீழடியில் கிடைத்த அசைக்க முடியாத ஆதாரங்களை மறைத்து, தமிழர் நாகரிகத்தையும் வரலாற்றையும் மூடி மறைக்க முயலும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, இப்போது இங்கு வந்து சோழர்களின் பெருமை பற்றிப் பேசி உள்ளது, முழுக்க முழுக்கக் கபட நாடகமன்றி வேறென்ன?. ஏற்கெனவே, அரசியலில் கபட நாடகம் போடுவதையே இயல்பாகக் கொண்ட தி.மு.க., இப்போது ஒன்றிய பா.ஜ.க. அரசின் கபட நாடகத்திற்குத் தாள் பணிந்து வணங்கி, தங்கள் மறைமுக உறவினருக்கு விசுவாசத்தைக் காட்டி உள்ளது. எதிர் எதிராக இருப்பது போல காட்டிக்கொண்டே, உள்ளுக்குள் மறைமுகமாக இணைந்து ஓர் அரசியல் நாடகத்தினை அரங்கேற்றும் தி.மு.க.வையும் பா.ஜ.க.வையும் ஓரணியில் கபடதாரிகள் என்றுதானே அழைக்க வேண்டும்?
நாம் இப்படிச் சொல்வது, மறைமுகமாக ஓரணியில் இணைந்து இருக்கும் இவ்விரு கபடதாரிகளுக்கும், மக்களுக்குத் த.வெ.க. உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறதே என்ற வகையில் எரிச்சல் ஏற்படலாம். அதற்கு என்ன செய்ய? உண்மை ஒருநாள் அம்பலமாகத்தானே செய்யும்.
அரசியலில் தன் இரண்டாம் ஆண்டில் பயணிக்கும் தமிழக வெற்றிக் கழகமே, தமிழக வரலாற்றுப் பெருமைகளின் மீது பெரும் அக்கறை கொண்ட பேரியக்கம். சேர, சோழ, பாண்டியர்கள் ஆட்சியின் தொன்மப் பெருமைகளைப் பறைசாற்றும் பிரமாண்டமான அருங்காட்சியகம் ஒன்று சென்னையில் அமைக்கப்பட வேண்டும் என்று சென்ற ஆண்டிலேயே த.வெ.க. தீர்மானம் இயற்றியது.
ஆனால், பவள விழாக் கண்ட இந்தத் தி.மு.க.வோ, பா.ஜ.க. முதுகிற்குப் பின்னால் பதுங்கிக்கொண்டு பம்முகிறது. கொள்கை, கோட்பாடுகளுடன் அறிஞர் அண்ணா ஆரம்பித்த இயக்கம், இன்று அனைத்திலும் சமரசம் செய்துகொண்டு, தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் எதிராக உள்ள பா.ஜ.க.விடம் சரணடைந்து கிடப்பதுதான் வேடிக்கை. இல்லை இல்லை, இதுதான் தி.மு.க. தலைமைக் குடும்பத்தின் வாடிக்கை.
மறைமுகமாகப் பா.ஜ.க.வும் தி.மு.க.வும் ஓரணியில் இருக்கும் கபடதாரிகளாக இணைந்து நடத்தும் அரசியல் ஆதாய நாடகத்தை இனியும் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். இவர்கள் இருவரின் மறைமுகமான கபட நாடக அரசியலுக்கான தக்க பதிலடியை 2026 தேர்தலில் தமிழக மக்கள் உறுதியாகத் தருவார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
- பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என விஜய் இதுவரை கூறவில்லை.
வரும் 2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுடன் நிச்சயம் கூட்டணி கிடையாது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் கூறி இருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர்," பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என விஜய் இதுவரை கூறவில்லை. பிறர் கூறுவதற்கு பதில் சொல்ல முடியாது" என்றார்.
இந்நிலையில், திமுகவுடனும், பாஜகவுடனும் கூட்டணி இல்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் கூறிய அவர்," கூட்டணி தொடர்பாக எங்கள் வாயில் வரும் வார்த்தை, தகெவ தலைவர் விஜய் தெரிவித்த வார்த்தையே.
பாஜகவுடனும், திமுகவுடனும் தவெக கூட்டணி கிடையாது என்று தவெக முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் தலைவர் விஜய் ஏற்கனவே தெளிவாக அறிவித்துவிட்டார்.
கூட்டணி குறித்து விஜய் தெரிவித்த நிலைப்பாட்டையே நாங்களும் தெரிவிக்கிறோம். இதில் எந்த மாற்றமும் இல்லை.
கூட்டணி குறித்த கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டிய தேவை இல்லை.






