என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை- த.வெ.க. மீண்டும் திட்டவட்டம்
    X

    தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை- த.வெ.க. மீண்டும் திட்டவட்டம்

    • தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
    • பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என விஜய் இதுவரை கூறவில்லை.

    வரும் 2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுடன் நிச்சயம் கூட்டணி கிடையாது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் கூறி இருந்தார்.

    இந்த நிலையில் சென்னையில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர்," பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என விஜய் இதுவரை கூறவில்லை. பிறர் கூறுவதற்கு பதில் சொல்ல முடியாது" என்றார்.

    இந்நிலையில், திமுகவுடனும், பாஜகவுடனும் கூட்டணி இல்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் கூறிய அவர்," கூட்டணி தொடர்பாக எங்கள் வாயில் வரும் வார்த்தை, தகெவ தலைவர் விஜய் தெரிவித்த வார்த்தையே.

    பாஜகவுடனும், திமுகவுடனும் தவெக கூட்டணி கிடையாது என்று தவெக முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் தலைவர் விஜய் ஏற்கனவே தெளிவாக அறிவித்துவிட்டார்.

    கூட்டணி குறித்து விஜய் தெரிவித்த நிலைப்பாட்டையே நாங்களும் தெரிவிக்கிறோம். இதில் எந்த மாற்றமும் இல்லை.

    கூட்டணி குறித்த கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டிய தேவை இல்லை.

    Next Story
    ×