என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தவெக கட்சி"

    • பள்ளி, கல்லூரிகளில் சமூகநீதியைக் குறித்து அவர்கள் கேட்கவில்லை
    • பிற்படுத்தப்பட்ட, பட்டியலின இளைஞர்கள் திமுக பக்கம் வராமல் தடுக்க இதை செய்கிறார்கள்.

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிபதில் இருந்து திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    அதே சமயம் த.வெ.க. கூட்டங்களில் விஜயை பார்க்க அவரது ரசிகர்கள் மரம் மற்றும் டிரான்ஸ்பார்மர்களில் மீது ஏறியதை கிண்டலடிக்கும் விதமாக விஜய் ரசிகர்களை தற்குறிகள் என்று திமுக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டல் அடித்தனர்.

    இந்நிலையில், விஜய் ரசிகர்களை தற்குறிகள் என்று கூறவேண்டாம் என திமுக எம்.எல்.ஏ. எழிலன் தெரிவித்துள்ளார்.

    வள்ளுவர் கோட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக எம்.எல்.ஏ. எழிலன், "தற்குறி என்று பிற்படுத்தப்பட்ட, பட்டியலின இளைஞர்களை விமர்சிப்பது தவறானது. நாம் அவர்களுடன் உரையாடவில்லை என்பது நமது தவறு. பள்ளி, கல்லூரிகளில் சமூகநீதியைக் குறித்து அவர்கள் கேட்கவில்லை. நாம் அவர்களுடன் உரையாட தொடங்கினால், அவர்கள் தெளிவடைவார்கள்.

    சமூக வலைத்தளங்களில் தவெக தொண்டர்களை 'தற்குறி' என அவமானப்படுத்துவது சங்கிகளின் சதி. சோசியல் மீடியாவில் அவர்களை தற்குறி என அழைப்பது தேவையில்லை. அது சங்கிகளின் திட்டம். பிற்படுத்தப்பட்ட, பட்டியலின இளைஞர்கள் திமுக பக்கம் வராமல் தடுக்க இதை செய்கிறார்கள்.நாம் அந்த சதியை உணர வேண்டும்.

    தவெக தலைமை சுயநலமாக இருக்கலாம். ஆனால், அந்தக் கட்சியில் இருக்கும் இளைஞர்கள் ரசிகர்கள் கூட்டம்தான். அவர்களை விமர்சிக்காமல், அவர்களுடன் உரையாட தொடங்க வேண்டும். அவர்கள் சங்கிகள் அல்ல, நம்ம பசங்கதான். அவர்களை நாம் நெருக்கமாகப் பேச வேண்டும்" என்று தெரிவித்தார். 

    • நாம், அவர்கள் மீது வைக்கின்ற மிக லேசான விமர்சனங்களுக்கே மக்கள் மிக பலமான வரவேற்பை அளிக்கத் தொடங்கி உள்ளனர்.
    • எல்லா வகையிலும் கபட நாடகம் ஆடும் அவர்களது அவல ஆட்சியின் லட்சணங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்.

    தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சமீப காலமாக, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அதிவிரைவில் மக்களால் தூக்கி எறியப்படப் போகும் அதிகார மமதை கொண்ட கட்சி ஒன்று, அவசர கதியில் தனக்குப் பழக்கமான அவதூறு அரசியல் ஆட்டத்தைத் தொடங்கி உள்ளது. எந்தக் கட்சியைச் சொல்கிறோம் என்று தெரிகிறதா? அவதூறு ஒன்றையே அடிப்படை அரசியல் கோட்பாடாகக் கொண்ட கட்சி வேறு எந்தக் கட்சியாக இருக்கும் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

    இப்போதெல்லாம் அந்தக் கட்சியின் ஒரே இலக்கு, நம்மைத் தூற்றுவதே. தமிழக வெற்றிக் கழகத்தை மட்டும் மூளையில் தேக்கி யோசிப்பதே அதன் முழுநேர வேலை என்றாகிவிட்டது.

    அவர்களுக்கு, 1969க்குப் பிறகு, அவதூறுதான் அரசியல் கொள்கை. லஞ்ச லாவண்யம், ஊழல்தான் லட்சியக் கோட்பாடு. இந்நிலையில், மக்களுடன் மக்களாக இதயப்பூர்வமாக இரண்டறக் கலந்த பிறகே மாபெரும் மக்கள் சக்தியுடன் அரசியலுக்கு வருகிற நம் போன்ற ஓர் இயக்கத்தைக் கண்டால், அவர்களின் மூளை மழுங்கி முனகத்தானே செய்யும்?

    ஆம். அவர்களை நாம் விமர்சிப்பதாக எண்ணித்தான் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிக் கொக்கரிக்கின்றனர். உண்மையில் நாம், அவர்கள் மீது இன்னும் முழுமையான விமர்சனத்தைத் தொடங்கவே இல்லை. மாறாக, மிக லேசான விமர்சனங்களைத்தான் வைத்தோம். அதுவும் நசுங்காத நாகரிகத்துடன் வைத்தோம்.

    நாம், அவர்கள் மீது வைக்கின்ற மிக லேசான விமர்சனங்களுக்கே மக்கள் மிக பலமான வரவேற்பை அளிக்கத் தொடங்கி உள்ளனர். அதைக் கண்டு அஞ்சி நடுங்கியதால்தான், தங்கள் எண்பேராயம் மற்றும் ஐம்பெருங்குழுக்களைக் கொண்டு அதிரி புதிரியாக ஆலோசித்தும் நம் மீது மக்கள் ஏற்றுக்கொள்ளும் எந்த ஒரு விமர்சனத்தையும் வைக்கவே இயலவில்லை. அத்தகைய இயலாமையில், அந்தக் கட்சியின் தலைவர் கைக்கொண்டதுதான் 'எந்தக் கொம்பனாலும் எங்களை, எங்கள் ஆட்சியை வீழ்த்த முடியாது' என்கிற அதிகார மயக்க முழக்கம்.

    தங்களைக் கொள்கைவாதிகளாக அடிக்கடி காட்டிக்கொள்வதற்காக, எல்லோரையும் ஏமாற்றுவதற்காக, தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழினம்தான் தங்கள் உயிர் என்றும் மண், மொழி, மானம்தான் தங்கள் தலையாய கொள்கை என்று ஒரு சம்பிரதாயச் சங்கை முழங்கத் தொடங்கி உள்ளார், அக்கட்சியின் தலைவர்.

    போதாதென்று, அறிவுத் திருவிழா என்ற பெயரில் பரண்களில் கிடக்கும் பழைய ஓலைகளைத் தூசு தட்டித் தோரணம் கட்டப் பார்க்கும் அவர்களின் பழைய மற்றும் புதிய கொள்கை உறுதி பற்றிக் கொஞ்சமே கொஞ்சம் பார்க்கலாமா?

    யாரை ஏளனமாகப் பரிகாசம் செய்தார்களோ அவர்களிடமே பதவிக்காகப் பம்மினரே, அப்போது எங்கே போயிற்று மானம்?

    ஆட்சியில் இல்லாதபோது 'தமிழ் தமிழ்' என்பதும், 'தமிழர் தமிழர்' என்பதும், ஆட்சிக்கு வந்ததும் அதிகாரப் பதவிகளுக்குள் அடக்கமாக அமர்ந்துகொண்டு, அரசியல் சாசனக் கட்டுப்பாடுகள் மீது பழி போட்டுப் பதவி சுகம் காணும்போது எங்கே போனது மண், மானம் மற்றும் மொழி மீதான கொள்கைப் பாசம்?

    சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அர்த்தமற்ற வாதத்தை வைத்துத் தப்பிக்கும்போது, எங்கே போனது அவர்களின் சமூக நீதிக் கொள்கை?

    அறிவுத் திருவிழா என்று பெயர் வைத்துவிட்டு, முழுக்க முழுக்க, தமிழக வெற்றிக் கழகத்தை மட்டுமே மறைமுகமாகத் திட்டும் திருவிழாவாக அதை மாற்றியதிலேயே அது அறிவுத் திருவிழாவாக இல்லாமல் அவதூறுத் திருவிழாவாகத்தானே மாறியது?

    பெரியார், அண்ணா கொள்கைகளை மறந்துவிட்ட அவர்கள், மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகளோடு களம் இறங்கி, யாருக்கும் எதற்கும் வளையாமல் வலம் வரும் தமிழக வெற்றிக் கழகத்தைப் பார்த்து, கொள்கையற்றவர்கள் என்று கூறுவதற்கான காரணம் அவர்களுக்கு ஏற்பட்ட உளைச்சலும் குமைச்சலுமன்றி வேறென்ன?

    53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும், ஆட்சி அதிகாரத்தைப் பகல் கனவாக்கப் போகும் ஒரு 'பக்கா மாஸ்' கட்சி வந்திருப்பதைக் கண்டு நாள்தோறும் நாக்குழறி, உளறும் அவர்களுக்கு நாம் சொல்வதெல்லாம் என்ன தெரியுமா?

    பவளவிழா பாப்பா - நீ

    பாசாங்கு காட்டல் ஆகாது பாப்பா

    நீ நல்லவர்போல நடிப்பதைப் பார்த்து

    நாடே சிரிக்கிறது பாப்பா.

    நேற்று நடந்த சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில்கூட யாரை விமர்சிக்க வேண்டுமோ அவர்களை விமர்சிப்பதைவிட, நம்மைத் திட்டவைத்து அகமகிழ்ந்ததே நடந்தது.

    எல்லா வகையிலும் கபட நாடகம் ஆடும் அவர்களது அவல ஆட்சியின் லட்சணங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். மேலும், மக்கள் சக்தியின் மதிப்பை, வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களுடன் மக்களாக இணைந்து நின்று, இந்த அவதூறு மன்னர்கள் உணரச் செய்வோம்.

    • விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
    • உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கரூரில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

    நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் விஜய் அறிவித்தார். அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்நிலையில், விஜய் கொடுத்த ரூ. 20 லட்சத்தை தனது மருமகன் வீணாக்கி வருவதாக மாமியார் புகார் அளித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய அவர், "3 ஆண்டுகளுக்கு முன்பு எனது மக்களுக்கு திருமணம் நடைபெற்றது. அவளுக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணமான ஒரு வருடத்திலேயே எனது மகள் கணவனுடன் வாழாமல் என வீட்டிற்கு வந்துவிட்டாள். இப்போது விஜய் கூட்டத்தில் என் மகள் உயிரிழந்தார். அப்போது கூட என் மகளின் சடலத்தை பார்க்க வராத என் மருமகன், இழப்பீடு பணம் அறிவித்தவுடன் மருத்துவமனையில் வந்து சண்டையிட்டு சடலத்தை வாங்கி அடக்கம் செய்ததோடு மகளையும் தன்னோடு அழைத்து சென்றார்.

    இப்போது ரூ.20 லட்சம் பணம் வாங்கியவுடன் வேறு மாதிரி நடந்து கொள்கிரார். ஆகையால் என் மகளின் இறப்பிற்கு கிடைத்த இழப்பீட்டு பணத்தை என் மகளின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்யவேண்டும். அதற்கு அவரையும் என்னையும் நாமினியாக நியமிக்க வேண்டும். அப்போது தான் என் பேத்தியின் எதிர்காலம் பாதுகாக்கப்படும். அனால் அந்த பணத்தை என் விருப்பப்படி தான் செலவு செய்வேன் என்று எகத்தாளமாக பேசுகிறார்" என்று அழுதபடியே தெரிவித்தார்.

    • உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • வாழ்நாள் வரை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன் என கூறியுள்ளார்.

    கரூரில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

    நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் விஜய் அறிவித்தார். அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அனுமதி உள்பட பல்வேறு காரணமாக பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்தித்து பேசுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் சென்னைக்கு வரவழைத்து நேரில் சந்திக்க விஜய் முடிவு செய்தார்.

    இதையடுத்து, சென்னை மாமல்லபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கும் வகையில் விஜயின் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்ததையடுத்து நேற்று இரவில் அவர்கள் மாமல்லபுரம் வந்தடைந்தனர்.

    இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கும் நிகழ்வு மாமல்லபுரத்தில் உள்ள பார் பாயிண்ட்ஸ் ஓட்டலில் நடைபெற்றது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தனித்தனியாக சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார்.

    அப்போது, 41 பேரின் குடும்பத்தாரை மாமல்லபுரம் அழைத்து வந்து சந்தித்த தவெக தலைவர் விஜய் உருக்கமாக பேசியுள்ளார்.

    தன்னை மன்னித்து விடுமாறு விஜய் கண்ணீர் மல்க பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும்,"உங்களை மாமல்லபுரம் அழைத்து வந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள், நிச்சயம் உங்களை கரூர் வந்து சந்திப்பேன்.

    வாழ்நாள் வரை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன், என்ன உதவிகள் தேவை என்றாலும் செய்து தருவேன்.

    வேலைவாய்ப்பு, திருமணம், கல்வி செலவு என அனைத்தையும் தான் ஏற்றுக்கொள்வதாக பாதிக்கப்பட்டவர்களிடம் விஜய் உறுதி அளித்தார்.

    மண்டபம் கிடைக்காததால் தான் தன்னால் கரூர் வர இயலவில்லை என விஜய் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • மாவட்ட செயலாளரை வீட்டிற்கே சென்று மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • இளங்கோ உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    சென்னை மேற்கு மாவட்ட தவெக மாவட்ட செயலாளர் பிரபுவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது.

    மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என மாவட்ட செயலாளரை வீட்டிற்கே சென்று மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதையடுத்து, மாவட்ட தவெக இணை செயலாளர் இளங்கோ உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மாவட்ட தவெக இணை செயலாளர் இளங்கோ சரித்திர பதிவேடு குற்றவாளி என தகவல் வெளியாகியுள்ளது.

    • கூட்டத்தில், 'நான் பேசுறது கேட்கிறதா?' என விஜய் சைகையில் கேள்வி எழுப்பினார்.
    • விஜயின் பரப்புரையை கேட்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    திருச்சி மார்க்கெட் பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பு பிரச்சார வாகனத்தில் நின்று தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.

    அப்போது மைக் சரியாக வேலை செய்யாததால் விஜய் என்ன பேசினார் என்றே தெரியவில்லை என அங்கு கூடியிருந்தவர்கள் தெரிவித்தனர்.

    கூட்டத்தில், 'நான் பேசுறது கேட்கிறதா?' என விஜய் சைகையில் கேட்க, 'இல்லை இல்லை' என கட்சித் தொண்டர்கள் முழக்கமிட்டனர். இதனால் விஜயின் பரப்புரையை கேட்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    மேலும், விஜய் பேச்சை கேட்க தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருந்த மக்களும் விஜய் கேட்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    திருச்சியில் தனது முதல் பரப்புரையிலேயே மைக் சொதப்பியதால் த.வெ.க. நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

    • இலவச பேருந்து பயணம் செல்லும் பெண்களை ஓசி பயணம் என அசிங்கப்படுத்துகிறார்கள்.
    • பெண்கள் ஓசியில் பயணம் செகிறார்கள் என்று பொன்முடி பேசியது சர்ச்சையானது

    திருச்சி மார்க்கெட் பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பு பிரச்சார வாகனத்தில் நின்று தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.

    அப்போது பேசிய விஜய், "இலவச பேருந்து பயணம் செல்லும் பெண்களை ஓசியில்தானே போகிறீர்கள், ஓசி பயணம் என அசிங்கப்படுத்துகிறார்கள். மகளிருக்கு ரூ.1,000 கொடுத்து விட்டு பணம் கொடுத்ததாக கூறி பெண்களை அசிங்கப்படுத்துகிறார்கள்" என்று திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

    திமுகவில் அமைச்சராக இருந்த பொன்முடி, "பெண்கள் ஓசியில் பயணம் செகிறார்கள்" என்று பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

    • நம்ம கேள்வி கேட்டுகிட்டே இருக்க வேண்டியதுதான்.
    • திமுகவினரிடம் இருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை.

    திருச்சி மார்க்கெட் பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பு பிரச்சார வாகனத்தில் நின்று தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.

    அப்போது, திமுக அளித்த வாக்குறுதிகளில் நிறைவேற்றாததை ஒவ்வொன்றாக குறிப்பிட்டு செய்தீர்களா என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பினார்.

    அவர் மேலும் கூறியதாவது:-

    டீசல் விலை ரூ.3 குறைப்பு, மாணவர்கள் கல்விக்கடன் ரத்து, அரசு வேலையில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், அரசுப் பணியில் 2 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் போன்ற வாக்குறுதிகள் என்ன ஆனது? நம்ம கேள்வி கேட்டுகிட்டே இருக்க வேண்டியதுதான்; திமுகவினரிடம் இருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை.

    நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம். கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை தவெக செய்து கொடுக்கும். பெண்கள் பாதுகாப்பில் எந்த சமரசமும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜனநாயக போருக்கு முன்பாக மக்களை பார்க்க வந்துள்ளேன்- திருச்சி கூட்டத்தில் விஜய்.
    • மடதச்சார்பின்மைக்கு பெயர்பெற்ற திருச்சி கொள்கைக்கான மண்.

    திருச்சி மார்க்கெட் பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பு பிரச்சார வாகனத்தில் நின்று தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.

    அப்போது, திமுக அளித்த வாக்குறுதிகளில் நிறைவேற்றாததை ஒவ்வொன்றாக குறிப்பிட்டு செய்தீர்களா என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

    அவர் மேலும் கூறியதாவது:-

    2 அமைச்சர்கள் இருந்தும் திருச்சியில் எந்த முன்னேற்றமும் அடையவில்லை.

    இலவச பேருந்து பயணம் செல்லும் பெண்களை ஓசியில்தானே போகிறீர்கள், ஓசி பயணம் என அசிங்கப்படுத்துகிறார்கள்.

    மகளிருக்கு ரூ.1000 கொடுத்துவிட்டு பணம் கொடுத்ததாக கூறி பெண்களை அசிங்கப்படுகிறார்கள்.

    மாணவர்களின் கல்விக்கடன் ரத்து என்ற திமுக அரசு கொடுத்த வாக்குறுதி என்னவானது. நாம் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டியது தான். திமுகவினரிடம் இருந்து எந்த பதிலும் வராது.

    கிட்னி திருட்டை முறைகேடு என்று கூறுகிறார்கள். மோசமான கிட்னி திருட்டு விவகாரத்தை முறைகேடு என்கிறார்.

    தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

    காவரி நீர் பாயும் திருச்சி சுற்று வட்டார பகுதிகளில் கூட குடிநீர் பிரச்சனை நிலவுகிறது. குடிநீர் பிரச்சனையை தீர்க்க வழி கண்டறியாமல் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.

    அரசு வேலையில் பெண்களுக்கு 40 சதவீதம் இட ஒதுக்கீடு என்ற வாக்குறுதி என்னவானது.

    டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்னவானது?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜனநாயக போருக்கு முன்பாக மக்களை பார்க்க வந்துள்ளேன்- திருச்சி கூட்டத்தில் விஜய்.
    • மடதச்சார்பின்மைக்கு பெயர்பெற்ற திருச்சி கொள்கைக்கான மண்.

    திருச்சி மார்க்கெட் பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பு பிரச்சார வாகனத்தில் நின்று தவெக தலைவர் விஜய் உரையாற்றுகிறார்.

    தவெக விஜய் பரப்புரை வாகனத்தில் ஏறி நின்றி தொண்டர்களுக்கு கையசைத்து வணக்கம் தெரிவித்து உரையை தொடங்கினார்.

    அதன் பிறகு அவர் பேசியதாவது:-

    போருக்கு செல்வதற்கு முன் பெற்றி பெறுவதற்காக குலதெய்வம் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவர்.

    அடுத்தாண்டு நடைபெற உள்ள ஜனநாயக போருக்கு முன்பாக மக்களை பார்த்துவிட்டு போகலாம் என்று வந்துள்ளேன்.

    திருச்சியில் இருந்து தொடங்கிய எல்லாம் திருப்புமுனையாக அமையும் என்று சொல்வார்கள்.

    மடதச்சார்பின்மைக்கு பெயர்பெற்ற திருச்சி கொள்கைக்கான மண்.

    1956-ல் அறிஞர் அண்ணா, 1974-ல் புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாநாடு என பல வரலாறுகளை கொண்டது திருச்சி.

    உங்களை பார்த்தவுடன் ஒரு எமோஷனல் கணெக்ட், மனதில் ஒரு பரவசம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விமான நிலையத்தில் இருந்து சுமார் 4 மணி நேரம் பயணித்து மரக்கடை பகுதிக்கு வந்தடைந்தார்.
    • வழிநெடுகிலும் தொண்டர்கள் பார்த்த கையசைத்தபடி வாகனத்தில் விஜய் வந்தார்.

    திருச்சியில் பரப்புரை நடைபெறும் மரக்கடை பகுதிக்கு தவெக தலைவர் விஜய் வந்தடைந்தார்.

    விமான நிலையத்தில் இருந்து சுமார் 4 மணி நேரம் பயணித்து மரக்கடை பகுதிக்கு வந்தடைந்தார்.

    வழிநெடுகிலும் தொண்டர்கள் பார்த்த கையசைத்தபடி வாகனத்தில் விஜய் வந்தார்.

    விஜய்யை காண்பதற்காக 3 மணி நேரத்திற்கும் மேலாக தொண்டர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். விஜய்யின் பரப்புரையை கேட்க திருச்சி சாலைகள் முழுவதும் மக்கள் குவிந்துள்ளனர்.

    இந்நிலையில், பிரச்சார வாகனத்தில் வந்த விஜய் தனது கையில் வேல் வைத்தபடி வந்திருந்தார். ரசிகர் ஒருவர் அன்பளிப்பாகத் தந்த வேலை விஜய் பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • தொண்டர்களின் வெள்ளத்தில் நீந்தி மெதுவாக வந்ததால் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
    • த.வெ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு அம்புலன்ஸில் முதலுதவி.

    திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகில் பரப்புரை மேற்கொண்ட த.வெ.க. தலைவர் விஜய்யை காண்பதற்காக பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மரக்கடை பகுதியில் குவிந்தனர்.

    காலை 9.40 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்த விஜய் 10.35 மணிக்கெல்லாம் தனது பரப்புரையை தொடங்கி விடுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தொண்டர்களின் வெள்ளத்தில் நீந்தி மெதுவாக வந்ததால் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    அப்போது, விஜய்யின் வருகைக்காக காத்திருந்த தொண்டர்களில் 50க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்துள்ளனர்.

    வெளியின் தாக்கம் மற்றும் உணவு, தண்ணீர் இன்றி தொண்டர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுகின்றனர்.

    மயக்கம் அடைந்தவர்களுக்கு த.வெ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு அம்புலன்ஸில் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    மேலும், தேர்தல் பரப்புரைக்காக திருச்சிக்கு வருகை தந்த த.வெ.க. தலைவர் விஜய்யை காண பெரும் கூட்டம் கூடியதால் திருச்சியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

    குறிப்பாக, விமானம் நிலையம் தொடங்கி டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் என திருச்சியின் முக்கிய சாலைகள் முழுவதும் பல கிலோ மீட்டருக்கு த.வெ.க. தொண்டர்களின் வாகனங்கள் அணிவகுத்து சென்றதால் விமான நிலையம், ரெயில் நிலையம் செல்வோர் உரிய நேரத்திற்கு செல்ல முடியமால் தவித்தனர்.

    ×