என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாமியார்"

    • விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
    • உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கரூரில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

    நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் விஜய் அறிவித்தார். அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்நிலையில், விஜய் கொடுத்த ரூ. 20 லட்சத்தை தனது மருமகன் வீணாக்கி வருவதாக மாமியார் புகார் அளித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய அவர், "3 ஆண்டுகளுக்கு முன்பு எனது மக்களுக்கு திருமணம் நடைபெற்றது. அவளுக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணமான ஒரு வருடத்திலேயே எனது மகள் கணவனுடன் வாழாமல் என வீட்டிற்கு வந்துவிட்டாள். இப்போது விஜய் கூட்டத்தில் என் மகள் உயிரிழந்தார். அப்போது கூட என் மகளின் சடலத்தை பார்க்க வராத என் மருமகன், இழப்பீடு பணம் அறிவித்தவுடன் மருத்துவமனையில் வந்து சண்டையிட்டு சடலத்தை வாங்கி அடக்கம் செய்ததோடு மகளையும் தன்னோடு அழைத்து சென்றார்.

    இப்போது ரூ.20 லட்சம் பணம் வாங்கியவுடன் வேறு மாதிரி நடந்து கொள்கிரார். ஆகையால் என் மகளின் இறப்பிற்கு கிடைத்த இழப்பீட்டு பணத்தை என் மகளின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்யவேண்டும். அதற்கு அவரையும் என்னையும் நாமினியாக நியமிக்க வேண்டும். அப்போது தான் என் பேத்தியின் எதிர்காலம் பாதுகாக்கப்படும். அனால் அந்த பணத்தை என் விருப்பப்படி தான் செலவு செய்வேன் என்று எகத்தாளமாக பேசுகிறார்" என்று அழுதபடியே தெரிவித்தார்.

    • மருமகள் ஸ்ரீதேவி கிராம மக்கள் உதவியுடன் இறுதி சடங்குகளை செய்தார்.
    • ஆதிலட்சுமியின் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர்.

    ஆந்திர மாநிலம் கோன சீமா மாவட்டம் சி.எச்.குன்னே பள்ளியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி. இவரது கணவர், மகன் ஏற்கனவே இறந்து விட்டனர். இவரது மருமகள் ஸ்ரீதேவி மற்றும் பேரன், பேத்திளுடன் வசித்து வந்தார்.

    ஆதிலட்சுமியை அவருடைய மருமகள் ஸ்ரீதேவி கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார். இந்த நிலையில் ஆதிலட்சுமி நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். அவருக்கு இறுதி சடங்குகள் செய்ய யாரும் இல்லை. இதனால் மருமகள் ஸ்ரீதேவி கிராம மக்கள் உதவியுடன் இறுதி சடங்குகளை செய்தார்.

    ஆதிலட்சுமியின் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர். அங்கு கொள்ளிக்குடம் உடைத்து ஸ்ரீதேவி கொள்ளிவைத்தார். இதனைக் கண்ட கிராம மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

    மாமியாரும் மருமகளும் கீரியும், பாம்புமாக உள்ள காலத்தில் மாமியாருக்கு மருமகள் இறுதி சடங்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

    • 18 வயது வாலிபர் 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • மாமியாருக்கும் மருமகனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது

    ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கே.வி.பி.புரம் மண்டலத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 18 வயது வாலிபர்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் அதே பகுதியில் வசித்து வந்தனர் இவர்களுடன் கணவனை இழந்த சிறுமியின் 40 வயது தாயாரும் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் மாமியாருக்கும் மருமகனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது சிறுமி வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் தனிமையில் இருந்தனர்.

    இதனை அறிந்த சிறுமி தனது கணவர் மற்றும் தாயாரை கண்டித்தார் ஆனாலும் அவர்கள் கள்ளக்காதலை கைவிடவில்லை. மேலும் மாமியார் தனது மருமகனை திருமணம் செய்ய முடிவு செய்தார்.

    நேற்று முன்தினம் இரவு வீட்டிலேயே வாலிபர் தனது மாமியாருக்கு தாலி கட்ட முயன்றார். இதனை கண்ட அவருடைய மனைவி தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தார்.

    ஆத்திரமடைந்த அவரது தாயும் கணவரும் அவரை கடுமையாக தாக்கி கொலை செய்ய முயன்றனர்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து சிறுமியை மீட்டனர் . மேலும் மாமியார் மற்றும் மருமகனை சரமாரியாக தாக்கினார் அவர்கள் இருவரையும் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் இது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றித்தரக்கோரி அவரது மருமகள் ஹர்ஜீத்கவுர் கேட்டு வந்துள்ளார்.
    • அந்த சிறுவன் அம்மா, பாட்டியை அடிப்பதை நிறுத்துங்கள் என கெஞ்சுகிறான்.

    பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கோத்தே கிராமத்தை சேர்ந்தவர் குர்பஜன்கவுர். இவரது கணவர் தொடக்க கல்வி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அவர் இறந்து விட்டார்.

    இதனால் குர்பஜன்கவுர் தனது மகன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றித்தரக்கோரி அவரது மருமகள் ஹர்ஜீத்கவுர் கேட்டு வந்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர்களுக்கிடையே கடந்த சில நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று ஹர்ஜீத்கவுர் தனது மாமியார் குர்பஜன்கவுரை கொடூரமாக தாக்கியுள்ளார். மாமியாரின் தலைமுடியை பிடித்து இழுத்து மீண்டும் மீண்டும் கடுமையாக அவர் தாக்கி உள்ளார்.

    இதை ஹர்ஜீத்கவுரின் மகன் பார்த்து அதிர்ச்சி அடைந்தான். உடனே அந்த சிறுவன் அம்மா பாட்டியை அடிப்பதை நிறுத்துங்கள் என கெஞ்சுகிறான்.

    ஆனால் ஹர்ஜீத்கவுர் கேட்காமல் தொடர்ந்து மாமியாரை தாக்குகிறார். இதனால் வேதனையடைந்த சிறுவன் தனது தாயார் பாட்டியை தாக்குவதை செல்போனில் வீடியோ எடுத்த அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த பலரும் சம்பந்தபட்ட பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டனர்.

    இதற்கிடையே பஞ்சாப் மகளிர் ஆணையம் இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.

    மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு குர்தாஸ்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கடிதம் அனுப்பியது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • வீட்டில் மாமியார் வள்ளியம்மாளும், மருமகள் அபிதாவும் மட்டும் இருந்தனர்.
    • போலீசாரின் விசாரணையால் அபிதாவின் கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

    பூந்தமல்லி:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், மணிகண்டன் நகர், காந்தி சாலையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி அபிதா(59), ராஜேந்திரனின் தாய் வள்ளியம்மாள்(88). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு ராஜேந்திரன் வேலை பார்த்த இடத்தில் தங்கி விட்டார்.

    வீட்டில் மாமியார் வள்ளியம்மாளும், மருமகள் அபிதாவும் மட்டும் இருந்தனர். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், அபிதாவையும் மாமியார் வள்ளியம்மாளையும் கட்டிப்போட்டு 11 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டார்.

    இதுகுறித்து குன்றத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் அபிதாவே தனது கள்ளக்காதலனை வரவழைத்து இந்த நகை பறிப்பில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து அபிதாவிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியானது.

    அபிதாவிற்கு குழந்தைகள் இல்லை. இதனால் அவர் அடிக்கடி அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வந்தபோது அங்கு வந்த திருநெல்வேலியை சேர்ந்த 35 வயதுடைய வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

    வயது வித்தியாசம் அதிகம் இருந்தாலும் கள்ளக்காதலர்கள் தங்களது நட்பை வளர்த்து அடிக்கடி தனியாக சந்தித்து வந்து உள்ளார். அந்த வாலிபர் அபிதாவிடம் பணம் கேட்கும் போதெல்லாம் தன்னிடம் பணம் இல்லை. ஆனால் வீட்டில் நகைகள் உள்ளது. அதுவும் தனது மாமியாரிடம் உள்ளது என்று கூறி உள்ளார். செலவுக்கு பணம் இல்லாததால் அந்த நகையை திருடி இருவரும் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று திட்டமிட்டனர்.

    அதன்படி சம்பவத்தன்று கணவர் வீட்டில் இல்லாததை அபிதா தனது கள்ளக்காதலனிடம் தெரிவித்தார். திட்டமிட்டபடி அந்த கள்ளக்காதலன் வந்து அபிதாவையும், மாமியார் வள்ளியம்மாளையும் கட்டிப்போட்டு நகையை கொள்ளையடித்து சென்று விட்டார். ஆனால் இதில் கள்ளக்காதலர்களின் திட்டம் சொதப்பியதால் அபிதா சிக்கிக் கொண்டார். முதலில் மாமியார் வள்ளியம்மாளை மட்டும் தாக்கி நகையை பறித்து உள்ளார். பின்னர் போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக தன்னையும் கட்டிப்போட்டு விட்டு செல்லுமாறு அபிதா கூறி இருக்கிறார். இதன் பின்னர் அபிதாவையும், வள்ளியம்மாளையும் கட்டிப் போட்டு கள்ளக்காதலன் தப்பி இருக்கிறார்.

    போலீசார் வந்து விசாரணை செய்தபோது மாமியார் வள்ளியம்மாள் உட லில் மட்டும் காயங்கள் இருந்தன. ஆனால் அபிதாவின் உடலில் சிறிய காயங்கள் கூட இல்லை. விசாரணையின்போது அபிதா முன்னுக்குபின் முரணான பதில்களை கூறி உள்ளார். மேலும் வள்ளியம்மாள் அணிந்து இருந்த நகையை மட்டுமே கள்ளக்காதலன் பறித்து சென்று இருந்ததால் போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது.

    பின்னர் போலீசார் தங்களது பாணியில் விசாரித்தபோது அபிதா கள்ளக்காதலனை வரவழைத்து மாமியாரை கட்டிப்போட்டு நகை பறித்து இருப்பது தெரிய வந்தது.

    ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு இதே போல் நகை பறிப்பு சம்பவம் நடந்து உள்ளது. இதனை சமாளித்து போலீசில் புகார் கொடுக்காமல் கள்ளக்காதலனை அபிதா காப்பாற்றி உள்ளார். அதேபோல் தற்போதும் நகை பறித்து போலீசில் சிக்காமல் உல்லாசமாக செலவு செய்யலாம் என்று நினைத்து நகை கொள்ளையில் ஈடுபட்டபோது போலீசாரின் விசாரணையால் அபிதாவின் கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

    இதேபோல் கொள்ளை நடந்த நேரத்தில் அப்பகுதியில் அபிதா, கள்ளக்காதலனிடம் நின்று பேசிக் கொண்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சியும் போலீசாருக்கு கிடைத்து உள்ளது. அபிதா போலீசில் சிக்கியது பற்றி அறிந்ததும் தற்போது அவரது கள்ளக்காதலன் தலைமறைவாகி விட்டார். அவர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஒரு ஆண்டு ஆகியும் கணவர் வீட்டிற்கு வரவில்லை.
    • வாலிபரை கம்பத்தில் கட்டி தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரப்பரப்பை ஏற்படுத்தியது.

    ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜலந்தர் பாலியர் சிங். இவரது மனைவி சுபத்ரா மல்பிசோ. கடந்த ஆண்டு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    அப்போது பாலியர் சிங் தனது மனைவியை கடுமையாக தாக்கினார். இதுகுறித்து சுபத்ரா தனது தாயாரிடம் தெரிவித்தார். அவர் தனது உறவினர்களுடன் வந்து பஞ்சாயத்தை கூட்டினார்.

    அப்போது ஊர் பெரியவர்கள் சுபத்ராவை அவரது தாய் வீட்டிற்கு சென்று சில மாதங்கள் தங்கி இருக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    அதன்படி சுபத்ரா தாய் வீட்டிற்கு சென்றார். ஒரு ஆண்டு ஆகியும் கணவர் வீட்டிற்கு வரவில்லை. அவரது கணவர் மனைவி மனமிறங்கி தனது வீட்டிற்கு வருவார் என ஆவலுடன் காத்திருந்தார். மனைவி வராததால் அவரை அழைத்து வர நேற்று முன்தினம் பாலியர் சிங் மாமியார் வீட்டிற்கு சென்றார்.

    மருமகன் மீது கடும் கோபத்தில் இருந்த மாமியார் அவரை சரமாரியாக தாக்கினார். பாலியர் சிங் அலறி துடித்தார். இவரது அலறல் சத்தம் கேட்ட சுபத்ராவின் உறவினர்கள் திரண்டு வந்தனர். அவர்களும் பாலியர் சிங்கை கண்மூடித்தனமாக தாக்கினார்.

    பாலியர் சிங் வலி தாங்க முடியாமல் கதறினாலும் ஒருவர் பின் ஒருவராக தாக்கிக் கொண்டே இருந்தனர்.

    பின்னர் அவரை அங்குள்ள மின் கம்பத்தில் கட்டி வைத்து அடி வெளுத்து வாங்கினர். விடிய விடிய பாலியர் சிங்கை மின்கம்பத்திலேயே கட்டி வைத்திருந்தனர்.

    கிராம மக்கள் வேடிக்கை பார்த்தனர். யாரும் மீட்கவில்லை. சினிமா காட்சியை மிஞ்சும் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாலியர் சிங்கை மீட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து பாலியர் சிங்கின் மனைவி, மாமியார் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலிபரை கம்பத்தில் கட்டி தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரப்பரப்பை ஏற்படுத்தியது. 

    • தன் வீட்டிற்கு வந்து வாழுமாறு பூனம் தேவியிடம் கணவர் ஜக்தீப் சிங் வற்புறுத்தியுள்ளார்.
    • அக்கம்பக்கத்தினர் ஜக்தீப் சிங்கை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    தனது மனைவி தனது வீட்டிற்கு வர மறுத்ததால் ஆத்திரமடைந்த கணவன், தனது மாமனார் மற்றும் மாமியாரை கொலை செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஜக்தீப் சிங் (42) மற்றும் அவரது மனைவி பூனம் தேவி ஆகியோர் 2 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பூனம் தேவி அவரது தாய், தனத்தையுடன் வசித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், மீண்டும் தன் வீட்டிற்கு வந்து வாழுமாறு பூனம் தேவியிடம் கணவர் ஜக்தீப் சிங் வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு பூனம் தேவி மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஜக்தீப் சிங் தனது மாமனார் அனந்த்ராம் (80) மற்றும் மாமியார் ஆஷா தேவி (75) ஆகியோரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். அப்போது தனது கணவரை தடுக்க பூனம் தேவி முயன்றுள்ளார். கோவத்தில் இருந்து ஜக்தீப் சிங் மனைவியையும் தாக்கியுள்ளார். இதனால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

    பூனம் தேவியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஜக்தீப் சிங்கை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    • கணவருடன் மறுவீட்டிற்காக தாய் வீட்டிற்கு வந்த லோகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை
    • கணவரின் குடும்பம் கூடுதல் நகை கேட்டு தொல்லை கொடுத்ததாக லோகேஸ்வரி குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே திருமணமான 4 நாட்களில் லோகேஸ்வரி (24) என்ற புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    முஸ்லீம் நகரைச் சேர்ந்த இளம்பெண் லோகேஸ்வரி கடந்த 27-ந்தேதி பன்னீர் (37) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கணவருடன் மறுவீட்டிற்காக தனது தாய் வீட்டிற்கு நேற்று வந்த லோகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இதையடுத்து லோகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 3 நாட்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.

    இருசக்கர வாகனம், ஏசி, கூடுதல் நகை கேட்டு தொல்லை கொடுத்ததாக லோகேஸ்வரி குடும்பத்தினர் பன்னீர், அவரது தாய், தந்தை மீது குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில், கணவர் பன்னீர் (37), மாமியார் பூங்கோதை (60) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மாமனார் மற்றும் நாத்தனாரை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் திருமணம் ஆன 78 நாட்களில் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து பொன்னேரியில் லோகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    • அனைத்தையும் இழந்தபோது என்னோடு உடன் இருந்தவர் கெனிஷா என்று ரவி மோகன் தெரிவித்தார்.
    • என் மாப்பிள்ளை ஜெயம் ரவி அவர்கள் நீங்கள் திரைப்படமும் தயாரிக்க வேண்டும் என்ற யோசனையை வழங்கினார்.

    பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் நடிகர் ரவி மோகனுடன் பாடகி கெனிஷா பிரான்சிஸ் ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்தது இணையத்தில் வைரலானது. இதற்கு ரவி மோகனின் மனைவியான ஆர்த்தி ரவி ஆதங்கம் தெரிவிக்கும் வகையில் அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.

    இதையடுத்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் கெனிஷா தனது வாழ்க்கை துணை என நடிகர் ரவி மோகன் தெரிவித்தார். மேலும், தனது மனைவி ஆர்த்தி குறித்தும், மாமியார் சுஜாதா விஜயகுமார் குறித்தும் பல விமர்சனங்களை அவர் முன்வைத்திருந்தார்.

    இந்நிலையில், ரவி மோகனின் மாமியாரும், பட தயாரிப்பாளருமான சுஜாதா விளக்கம் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வணக்கம், கடந்த 25 வருடங்களாக திரைப்படத்துறையில் ஒரு தயாரிப்பாளராக இருந்து வருகிறேன். ஒரு பெண்ணாக இத்தனை காலம் இத்துறையில் நீடித்திருப்பது எவ்வளவு சவாலான விஷயம் என்பது உங்களுக்குத் தெரியும்.

    இத்தனை ஆண்டுகளில் பட வெளியீட்டின் போது அந்தப் படம் சம்பந்தமில்லாமல் வேறு எதற்காகவும் நான் மீடியா முன்பு வந்தது இல்லை. இப்பொழுது முதல்முறையாக என்னைப் பற்றி எழுந்துள்ள அவதூறுகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன்.

    கடந்த சில காலமாகவே கொடுமைக்காரி. குடும்பத்தை பிரித்தவள், பணப் பேய், சொத்தை அபகரித்தவள் என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் என்னைப் பற்றி உலவி வருகின்றன. அப்பொழுதே இதற்கு விளக்கம் தர வேண்டும் என விரும்பினேன். ஆனால் என் குழந்தைகளின் எதிர்காலம் கருதி மௌனமாய் இருந்து விட்டேன். இப்பொழுதும் நான் பதில் சொல்லவில்லை என்றால் என்னைப் பற்றி திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு வரும் பொய்கள் உண்மையாகிவிடும் என்பதனால் இந்த விளக்கம்.

    கடந்த 2007 ஆம் ஆண்டு வீராப்பு என்ற திரைப்படத்தை முதலில் தயாரித்தேன். சுந்தர் சி அவர்கள் கதாநாயகனாக நடித்த அப்படம் எனக்கு வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து சின்னத்திரை தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த எனக்கு, 2017 ஆம் ஆண்டு என் மாப்பிள்ளை ஜெயம் ரவி அவர்கள் நீங்கள் திரைப்படமும் தயாரிக்க வேண்டும் என்ற யோசனையை வழங்கினார். அதனால் மீண்டும் திரைப்படம் தயாரிக்க துவங்கினேன் ஆனாலும் உறவு ரீதியாக நெருங்கிய ஒருவரை தொழில் ரீதியாக அணுகும் பொழுது அது குடும்பம் மற்றும் தொழில் இரண்டையும் பாதித்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

    அந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட அடங்க மறு என்ற திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றிப்படமாக அமையவில்லை. இருந்த போதிலும் தொடர்ந்து திரைப்படங்கள் தயாரிக்க வேண்டும் என்கிற ஆலோசனையை என் மாப்பிள்ளை ஜெயம் ரவி அவர்கள் கூறினார். அந்த ஆலோசனையின் பெயரில் தான் நான் அடுத்தடுத்து படங்களை தயாரிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்.

    இந்த காலத்தில் ஒரு திரைப்பட தயாரிப்பாளரின் பணி அந்தத் திரைப்படத்தின் துவக்கத்தின் போது கேமராக்களுக்கு முன் கை கூப்பி நிற்பதும், பட வெளியீட்டின் போது பைனான்சியர்களின் முன் கைகட்டி நிற்பது என்று ஆகிவிட்டது. இதற்கு நானும் விதிவிலக்கு அல்ல.

    அடங்க மறு, பூமி மற்றும் சைரன் என மூன்று திரைப்படங்களை தொடர்ந்து என் மாப்பிள்ளை ஜெயம் ரவி அவர்களை கதாநாயகனாக வைத்து எடுத்தேன். இந்த படங்களுக்காக கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்கும் மேலாக பைனான்சியர்களிடமிருந்து கடன் வாங்கி இருக்கிறேன். அந்தப் பணத்தில் 25 சதவிகிதத்தை ஜெயம் ரவி அவர்களுக்கு ஊதியமாக வழங்கி உள்ளேன். இதற்கு என்னிடத்தில் அவருடன் செய்து கொண்ட ஒப்பந்தம், அவர் வங்கி கணக்குக்கு செலுத்திய பரிமாற்றம், அவருக்காக நான் செலுத்திய வரி என அனைத்து ஆதாரங்களும் உள்ளது.

    இப்பொழுது ஜெயம் ரவி அவர்கள் இந்தப் படங்களின் வெளியீட்டின் போது அவரை நான் பல கோடி ரூபாய் என்னுடைய கடன்களுக்காக பொறுப்பேற்க வைத்ததாக பொய்யான ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. அவரை வெறும் கதாநாயகனாக மட்டுமே நான் பார்த்திருந்தால் கூட அப்படி நிர்பந்தப்படுத்தியிருக்க மாட்டேன். ஆனால் அவரை என் மாப்பிள்ளை என்பதைத் தாண்டி என் சொந்த மகனாகவே கருதினேன்.

    அதனால் அவருக்கு எந்த ஒரு கஷ்டமும் வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஒரு பெண் என்ற நிலையையும் கடந்து ஒவ்வொரு படம் வெளியிடும் போதும் விடியற்காலை ஐந்து மணி வரை வாங்கிய கடனுக்காக கிட்டத்தட்ட ஒரு வெள்ளை கவரை தவிர பைனான்சியர்கள் நீட்டும் எல்லா இடங்களிலும் கையெழுத்து போட்டு பல கோடி ரூபாய் நஷ்டத்தையும், மன உளைச்சலையும் நான் மட்டுமே ஏற்றுக் கொண்டேன் இன்று வரை அந்தக் கடன்களுக்கான வட்டியை நான் மட்டுமே கட்டி வருகிறேன்.

    சைரன் பட வெளியீட்டின் போது கூட ஜெயம் ரவி அவர்கள் நஷ்டத்தை ஈடுகட்ட எனக்கு அடுத்த படம் நடித்துக் கொடுப்பதாகத்தான் கடிதம் கொடுத்தாரே தவிர எங்கேயும் எப்பொழுதும் கடனுக்கு பொறுப்பேற்று தான் கட்டுவதாக யாருக்கும் கையெழுத்து போடவில்லை. மேலும் ஜெயம் ரவி அவர்கள் எனக்கு நடித்துக் கொடுப்பதாக சொன்ன அடுத்த படத்திற்கு அவரே ஒரு இயக்குனரை தேர்வு செய்து அவருக்கு முன் பணம் கொடுக்கச் சொன்னார் எந்தவித மறுப்பும் இல்லாமல் அதையும் நான் செய்தேன்.

    ஒரு வருடமாக நான் பலமுறை முயற்சி செய்தும் எங்களை சந்திப்பதை தவிர்த்து வந்த ஜெயம் ரவி அவர்களை இதை சாக்காக வைத்து சந்தித்து பேசி குடும்பத்திற்குள் சமாதானத்தை எட்டலாம் என்பதற்காக மட்டுமே ஒரு தயாரிப்பாளராக அல்ல தாயாக பத்து நாட்களுக்கு முன்பு அவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் மாறாக அவர் சொன்னது போல் அவரை நிர்பந்தப்படுத்துவதற்காக அல்ல.

    ஜெயம் ரவி அவர்கள் சொன்னது போல் அவரை கோடிக்கணக்கான ரூபாய்க்கு நான் பொறுப்பு ஏற்க வைத்ததற்கான, வேண்டாம் ஒரே ஒரு ரூபாய்க்கு அவரை நான் பொறுப்பேற்க வைத்ததற்கான ஆதாரத்தை அப்படி ஒன்று இருந்தால் அதை அவர் எங்கு வேண்டுமானாலும் வெளியிட வேண்டும் என இதன்மூலம் கேட்டுக்கொள்கிறேன்.

    இன்றும் நான் மகனாகவே நினைக்கும் ஜெயம் ரவி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் எப்பொழுதும் உங்களை ஒரு கதாநாயக பிம்பத்திலேயே நாங்கள் பார்க்கிறோம்,ரசிக்கிறோம். நடந்து வருகின்ற பிரச்சனையில் உங்கள் மீது அனுதாபம் ஏற்பட வேண்டும் என்பதற்காக அறிக்கைகளில் நீங்கள் சொல்கின்ற பொய்கள் அந்த கதாநாயக பிம்பத்திலிருந்து உங்களை தரம் தாழ்த்தி விடுகிறது. என்றும் நீங்கள் ஹீரோவாகவே இருக்க வேண்டும் இது வார்த்தைக்கு வார்த்தை நீங்கள் அம்மா அம்மா என்று அழைப்பீர்களே அந்த அம்மாவின் ஆசை,

    இன்று வரை என் பேர குழந்தைகளுக்காக அந்த குழந்தைகளின் சந்தோஷத்திற்காக என் மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்புகிறேன். அழகாக வாழ்ந்து வந்த ஒரு மகளை வாழாவெட்டியாக பார்க்கும் துயரம் ஒரு தாயின் மனதிற்கு தான் தெரியும். அந்த துர்பாக்கியம் எந்தப் பெற்றோருக்கும் வரக்கூடாது. ஊடக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஏற்கனவே நான் அனுபவித்து வரும் வேதனைகளோடு மகளின் குடும்பத்தை பிரித்தவள், சித்திரவதை செய்த மாமியார் என்று புதிய வேதனையையும் என் மீது சுமத்தாதீர்கள் அதை தாங்கும் சக்தி என் மனதிற்கு இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

    • வழக்கமாக திருமணம் நிச்சயம் நடந்த பின்னர் மணமக்கள் ஜோடிதான் செல்போனில் மணிக்கணக்காக பேசுவார்கள்.
    • என்ன நடந்தாலும் நான் ராகுல்குமாருடன்தான் வாழ்வேன்.

    உத்தரபிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்த ஒரு பெண் தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்த வாலிபருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    ஒரு வாரத்திற்கு பின் அந்த ஜோடி போலீசில் சரணடைந்தனர். அப்போது நான் எனது மருமகனையே திருமணம் செய்து கொள்வேன் என்று அந்த பெண் போலீசாரிடம் பிடிவாதமாக கூறி வருகிறார்.

    உத்தர பிரதேச மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்தவர் சப்னா. இவரது கணவர் ஜிஜேந்திரகுமார். இந்த தம்பதியின் மகள் ஷிவானி. இவருக்கு திருமணம் செய்ய ராகுல் குமார் என்ற வாலிபருடன் திருமணம் நிச்சயம் செய்தனர்.

    வழக்கமாக திருமணம் நிச்சயம் நடந்த பின்னர் மணமக்கள் ஜோடிதான் செல்போனில் மணிக்கணக்காக பேசுவார்கள். ஆனால் இங்கு வினோதமாக பெண்ணின் தாய் சப்னா மருமகன் ராகுல்குமாரிடம் மணிக்கணக்கில் பேசி வந்தார்.

    அப்போது குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டு ஏன் மருமகனிடம் போனில் அதிக நேரம் பேசுகிறாய் என்று கணவர் கேட்டுள்ளார். திருமண ஏற்பாடு சம்பந்தமாக பேசுவதாக அவர் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கடந்த வாரம் மருமகன் ராகுல்குமாருடன் மாமியார் சப்னா திடீரென ஓட்டம் பிடித்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் அவர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சப்னா-ராகுல்குமார் ஜோடி டாடன் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். போலீசாரிடம் சப்னா நான் ராகுல் குமாரையே திருமணம் செய்து கொள்வேன். நான் வீட்டில் இருந்து செல்லும் போது ஒரு செல்போனும், ரூ.200 மட்டுமே என்னிடம் இருந்தது.

    லட்சக்கணக்கான ரூபாய் மற்றும் நகைகளுடன் நான் ஓடி விட்டதாக எனது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். நான் எதையும் எடுத்து செல்லவில்லை. எனது கணவரும், மாமியார்களும் என்னை சித்ரவதை செய்தனர். எனது கணவர் குடித்து விட்டு வந்து என்னை அடித்து உதைப்பார். எனது மகளும் என்னிடம் அடிக்கடி சண்டையிடுவார் என குற்றம்சாட்டினார். இதனால்தான் இவ்வாறு செய்தேன் என்றார்.

    என்ன நடந்தாலும் நான் ராகுல்குமாருடன்தான் வாழ்வேன். அவரை திருமணம் செய்து கொண்டு நாங்கள் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்துவோம் என்று அவர் பிடிவாதமாக போலீசாரிடம் கூறினார்.

    ராகுல்குமார் கூறும் போது, சப்னா தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டியதால் அவருடன் ஓடிப்போக ஒப்புக் கொண்டேன். அலிகார் பஸ் நிலையத்தில் நான் அவரை சந்திக்கவில்லை என்றால் அவர் தற்கொலை செய்திருப்பார். அதனால்தான் நான் சென்றேன்.

    நாங்கள் முதலில் லக்னோவுக்கு சென்றோம். அங்கிருந்து முசாபர்பூருக்கு சென்றோம். போலீசார் தங்களை தேடுகிறார்கள் என்பதை அறிந்து சரணடைந்தோம் என்றார். சப்னாவை திருமணம் செய்து கொள்வீர்களா என்று போலீசார் கேட்டபோது, முதலில் அப்படி எதுவும் இல்லை என்று சொன்ன அவர் சிறிது நேர மவுனத்திற்கு பின்னர் அவரை திருமணம் செய்வேன் என்றார்.

    சப்னாவின் குடும்பத்தினர் எங்களுக்கு சப்னா திரும்ப வேண்டாம். அவர் வீட்டில் இருந்து எடுத்து சென்ற நகை, பணத்தை மட்டும் மீட்டு தாருங்கள் என்று போலீசாரிடம் கூறினர்.

    மகளுக்கு நிச்சயித்த மருமகனையே மாமியார் திருமணம் செய்து கொள்வேன் என்ற அடம்பிடித்த இந்த சம்பவம் போலீசார் மட்டும் அல்ல அங்கிருந்தவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 



    • விஷாலின் 70 வயது தாய் சரளா பத்ராவும் வசித்து வருகிறார்
    • சம்பவத்தன்று, வேலைக்கு சென்று வீடு திரும்பிய விஷாலை நீலிகாவின் தந்தையும் சகோதரனும் தாக்கியுள்ளனர்.

    மத்தியப் பிரதேசத்தில் ஒரு பெண் தனது மாமியாரை தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

    மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் ஆதர்ஷ் காலனியில் வசிப்பவர் விஷால் பத்ரா. இவரது மனைவி நீலிகா. இவர்களுடன் விஷாலின் 70 வயது தாய் சரளா பத்ராவும் வசித்து வருகிறார். இந்நிலையில் மாமியாரின் சொத்துக்களை தன்வசப்படுத்திக்கொண்டு அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்குமாறு தனது கணவனை நீலிகா நச்சரித்து வந்துள்ளார்.

    ஆனால் தாயின் உடல்நிலை கருதி விஷால் அதற்கு மறுத்துள்ளார். இதனால் விஷாலை மன ரீதியாகவும், உடல் ரீதியாவதும் நீலிகா துன்புறுத்தி வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி, வேலைக்கு சென்று வீடு திரும்பிய விஷாலை நீலிகாவின் தந்தையும் சகோதரனும் தாக்கியுள்ளனர்.

    தடுக்க வந்த விஷாலின் தாய் சரளாவின் தலை முடியை பிடித்து இழுத்து மருமகள் நீலிகா தாக்கியுள்ளார். இந்த சம்பவம் மொத்தமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதையடுத்து தாக்கப்பட்ட தாயும் மகனும் நீலிகா குடும்பத்தினர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    • லோக்நாத் சிங்கின் மனைவி மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
    • திருமணத்தை மீறிய உறவு காரணமாக கணவரை கொன்றதாக மனைவி வாக்குமூலம்

    கர்நாடகாவில் மாமியாருடன் சேர்ந்து கணவரின் கழுத்தை அறுத்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியாயி ஏற்படுத்தியுள்ளது.

    37 வயதான லோக்நாத் சிங் பெங்களூரு நகரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், பெங்களூரில் உள்ள சிக்கபனாவரா பகுதியில் இருந்த ஒரு காரில் லோக்நாத் சிங்கின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இந்த கொலை தொடர்பாக லோக்நாத் சிங்கின் மனைவி மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர். லோக்நாத் சிங்கின் மனைவி, மாமியார் ஆகியோர் அவரது உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து மயங்கிய பிறகு அவரது கழுத்தை அறுத்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    திருமணத்தை மீறிய உறவு, சட்டவிரோத வணிக நடவடிக்கைகளில் லோக்நாத் சிங் ஈடுபட்டு வந்ததால் அவரை கொன்றதாக மனைவி வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    ×