என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kenisha Francis"

    • பராசக்தி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது
    • சென்னை காசி தியேட்டரில் ரவி மோகன், கெனிஷா பராசக்தி படம் பார்த்தனர்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'பராசக்தி'. இந்த படத்திற்கு தணிக்கை சான்று வழங்க தாமதம் ஆனதால் திட்டமிட்டபடி இப்படம் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது உலகம் முழுவதும் 'பராசக்தி' வெளியாகி உள்ளது. இதனால் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனிடையே நடிகர் ரவி மோகன், கெனிஷா ஆகியோர் சென்னை காசி தியேட்டரில் பராசக்தி பார்த்தனர். படம் பார்த்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேனிஷா, "ரவிக்காக மட்டும் தான் பராசக்தி ஓடும். என் கண்ணுக்கு வேற யாரும் தெரியல. அவருக்காகவே இந்த படம் பண்ண மாதிரி இருக்கு. ஹீரோவா பண்ணா என்ன வில்லனா பண்ணா என்ன.. அவர் தான் நம்பர் 1 இந்த படத்துல.. Second Half-ல அவர தாண்டி படமே இல்ல. அவர் எப்பவுமே Evergreen.. Ever Best" என்று தெரிவித்தார்.

    மேலும், பேசிய கெனிஷா, "ஜனநாயகன் ரிலீஸ் அன்று தான் உண்மையான பொங்கல்" என்று தெரிவித்தார்.

    • பராசக்தி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.
    • திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதனால் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    முன்னதாக 'பராசக்தி' படத்திற்கு தணிக்கை சான்று வழங்க தாமதம் ஆனதால் திட்டமிட்டபடி இப்படம் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது உலகம் முழுவதும் 'பராசக்தி' வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், நடிகர் ரவி மோகன், கெனீஷா ஆகியோர் சென்னை காசி தியேட்டரில் பராசக்தி படம் பார்க்க ஒன்றாக வந்தனர். 

    • ரவி மோகன் - கெனிஷா ஜோடி நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக ஊர் சுற்றி வருகிறார்கள்.
    • புத்தாண்டை ஒட்டி ரவி மோகன் இன்ஸ்டா ஸ்டோரி வைத்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கில் இருவரும் கருத்துகளையோ, அறிக்கைகளையோ வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இரு தரப்பினரும் பரஸ்பரம் எந்த அவதூறு கருத்துக்களையும் தெரிவிக்க மாட்டோம் என்று தெரிவித்தனர். ஒருவரையொருவர் விமர்சித்து பேசிய பதிவுகளையும் சமூக வலைதளங்களில் நீக்கினார்கள்.

    இந்த சர்ச்சைக்கு நடுவுல ரவி மோகன் - கெனிஷா ஜோடி நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக ஊர் சுற்றி வருகிறார்கள்.

    இந்நிலையில், புத்தாண்டை ஒட்டி ரவி மோகன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் கெனிஷாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

    • பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    ஆசிய கோப்பை தொடரின் 6வது லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், பும்ரா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா 13 பந்தில் 31 ரன்கள் குவித்தார். திலக் வர்மா 31 ரன்னில் வெளியேறினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் ஆடி 47 ரன்கள் குவித்தார்.

    இப்போட்டியை நடிகர் ரவி மோகன் - கெனீஷா ஆகியோர் நேரில் கண்டு களித்தனர். இது தொடர்பான புகைப்படத்தை ரவி மோகன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்துள்ளார்.

    • ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
    • ரவிமோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் முதலில் தயாரிக்கப்போகும் இரண்டு படங்களின் பூஜையை இந்த விழாவில் தொடங்கினர்.

    நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

    தொடக்க விழா இன்று மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.

    விழாவிற்கு பல திரைப்பிரபலங்கள் தமிழ் மட்டுமல்லாது பிற மொழி நட்சத்திர நடிகர்களும் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் இந்த விழாவில் கலந்துக் கொண்டார். இவர்களுடன் கார்த்தி, சிவகார்த்திகேயன், ஜெனிலியா, மணிகண்டன், ஷ்ரத்தா ஸ்ரீனாத், மோகன் ராஜா, அதர்வா மற்றும் பலர் கலந்து கொண்டு ரவி மோகனை வாழ்த்தினர்.

    ரவிமோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் முதலில் தயாரிக்கப்போகும் இரண்டு படங்களின் பூஜையை இந்த விழாவில் தொடங்கினர்.

    இந்த விழாவில் ரவி மோகன் கூறியதாவது "என்னுடைய குடும்பம், ரசிகர்கள், நண்பர்கள் என அனைவரும் இங்கு வந்துள்ளீர்கள் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. மேலும் சமீபத்தில் என் மீது பல எதிர்மறை விமர்சனங்கள் எழும்பியது. என் சொத்துக்கள் முடக்கப்பட்டது. ஆனால் உண்மையில் அந்த பணம் , சொத்து எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாக இல்லை. என் உண்மையான சொத்து என்றும் நீங்கள் தான், குடும்பம், நண்பர்கள் மட்டுமே. இந்த சொத்தை யார் சம்பாதிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். என்ன வாழ்த்த வேண்டாம்-ன்னு சில பேர் இருக்காங்க. அவங்களுக்கு நான் சொல்றது ஒன்னே ஒன்னுதான், இங்கதான் இருப்பேன் வளர்ந்துட்டே இருப்பேன். நன்றி" என கூறினார்.

    • மிகப்பெரிய நாளுக்கான ஆயத்தம் என இந்த படங்கள் பகிரப்பட்டன.
    • ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று தரிசனம் செய்தனர்.

    நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருக்கிறார்.

    அதற்கான பணிகளில் தற்போது ஈடுப்பட்டு வருகிறார். இந்த நிறுவனம் இன்று (ஆகஸ்ட் 26) தொடங்கப்பட உள்ளது.

    இந்நிலையில் இந்த  தொடக்க விழா பணிகளை ரவி மோகன் உடன் இருந்து மேற்பார்வையிட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

    மிகப்பெரிய நாளுக்கான ஆயத்தம் என இந்த படங்களை ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த விழாவுக்கு நடிகர் கார்த்தியை நேரில் சென்று ரவி மோகன் அழைத்த வீடியோவும் வெளியாகி உள்ளது. 

    இதற்கிடையே ரவி மோகன் மற்றும் காதலி கெனிஷா இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று தரிசனம் செய்தனர்.

    இவர் ஈஞ்சம்பாக்கத்தில் முன்னாள் மனைவி ஆர்த்தியுடன் வாழந்த சொகுசு பங்களாவுக்கு கடந்த 10 மாதமாக EMI கட்டாமல் உள்ளார் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருக்கிறார்.

    நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருக்கிறார். அதற்கான பணிகளில் தற்போது ஈடுப்பட்டு வருகிறார்.

    மேலும் தற்போது ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள சொகுசு பன்க்களாவுக்கு கடந்த 10 மாதமாக EMI கட்டாமல் உள்ளார் என்ற செய்தி வந்தது. இந்நிலையில் ரவி மோகன் மற்றும் கெனிஷா அவர்கள் இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிப்பட்டனட். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • ரவி மோகன் தற்பொழுது சுதா கொங்கரா இயக்கும் சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
    • ரவி மோகன் தன்னுடைய 22 வருட திரையுலக பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

    நடிகர் ரவி மோகன் தற்பொழுது சுதா கொங்கரா இயக்கும் சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையே ரவி மோகன் அவரது 34-வது படமாக கராத்தே பாபு என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்குகிறார். ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

    ரவி மோகன் தன்னுடைய 22 வருட திரையுலக பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இதனை கராத்தே பாபு படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடினார்.

    சமீபத்தில் ரவி மோகனுக்கும் அவரது மனைவியான ஆர்த்திக்கும் இடையே கருத்து முரண்பாடு மற்றும் மன கசப்பு ஏற்பட்டு தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    ரவி மோகன்  அவரது காதலியான கெனிஷா உடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவரது மூத்த மகன் ஆரவின் பிறந்தநாளை முன்னிட்டு தன் மகன்களை சந்தித்தார். அப்புகைப்படம் இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

    • ஒருவரையொருவர் விமர்சித்து பேசிய பதிவுகளையும் சமூக வலைதளங்களில் நீக்கினார்கள்.
    • மற்ற கேள்விகளையும் தவிர்த்துவிட்டார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கில் இருவரும் கருத்துகளையோ, அறிக்கைகளையோ வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இரு தரப்பினரும் பரஸ்பரம் எந்த அவதூறு கருத்துக்களையும் தெரிவிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். ஒருவரையொருவர் விமர்சித்து பேசிய பதிவுகளையும் சமூக வலைதளங்களில் நீக்கினார்கள்.

    பல்வேறு சர்ச்சைக்கு நடுவிலும் ரவி மோகன் - கெனிஷா ஜோடி நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக சென்று வருகிறார்கள். சமீபத்தில் கூட சென்னையில் நடந்த ரூ.3 கோடி பரிசுக்கான சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி தொடர்பான நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்டனர்.

    தனித்தனி காரில் வந்து இறங்கினாலும், நிகழ்ச்சியில் ஒன்றாகவே பேசி சிரித்து கொண்டிருந்தனர். அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்த பின்னர் அங்கிருந்து தனித்தனி காரில் புறப்பட்டு சென்றனர். முன்னதாக ரவி மோகன் பேசும்போது, கிரிக்கெட் தொடர்பான தகவல்களை மட்டும் குறிப்பிட்டார். மற்ற கேள்விகளையும் தவிர்த்துவிட்டார்.

    • ரவி மோகன் மற்றும் அவரது மனைவியான ஆர்த்தி இடையே உள்ள பிரச்சனையே நெட்டிசன்கள் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.
    • மத்தியஸ்தம் முன்னிலையில் மூன்று முறை பேச்சு வார்த்தை நடந்தது.

    கடந்த சில வாரங்களாக நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவியான ஆர்த்தி இடையே உள்ள பிரச்சனையே நெட்டிசன்கள் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.

    நடிகர் ரவி மோகன், மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்கக்கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவரும் சமரச பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து மத்தியஸ்தம் முன்னிலையில் மூன்று முறை பேச்சு வார்த்தை நடந்தது.

    நடிகர் ரவி மோகன்- ஆர்த்தி இருவரும் நேரில் ஆஜராகினர். அப்போது ஆர்த்தியிடம் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை, அவரிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என வழக்கை தொடர்ந்தார். அதை தொடர்ந்து ரவி மற்றும் ஆர்த்தி தரப்பில் இருந்து அவர்களது தரப்பு நியாயங்களை அறிக்கையாக வெளியிட்டு வந்தனர்.

    இதுதொடர்பான அறிக்கையை இனிமேல் விடக்கூடாது என உயர் நீதிமன்றம் கூறியது. இந்நிலையில் ரவி மோகன் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளிவந்துள்ளது. அதில் ரவி மோகனின் திருமண சர்சையை குறித்த அவதூறு செய்திகள் இடம் பெற்றுள்ள அனைத்து போஸ்டுகளையும் 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என கூறியுள்ளார். அது ஃபேஸ்புக், எக்ஸ், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், வாட்ஸாப் என அனைத்து தளங்களுக்கும் இது பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி நீக்கவில்லை என்றால் அவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.

    • கெனிஷா தனது வாழ்க்கை துணை என நடிகர் ரவி மோகன் தெரிவித்தார்.
    • இது தொடர்பான நோட்டீசை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கெனீஷா பகிர்ந்துள்ளார்

    பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் நடிகர் ரவி மோகனுடன் பாடகி கெனிஷா பிரான்சிஸ் ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்தது இணையத்தில் வைரலானது. இதற்கு ரவி மோகனின் மனைவியான ஆர்த்தி ரவி ஆதங்கம் தெரிவிக்கும் வகையில் அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.

    இதையடுத்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தது. இதனை தொடர்ந்து, கெனிஷா தனது வாழ்க்கை துணை என நடிகர் ரவி மோகன் தெரிவித்தார். மேலும், தனது மனைவி ஆர்த்தி குறித்தும், மாமியார் சுஜாதா விஜயகுமார் குறித்தும் பல விமர்சனங்களை அவர் முன்வைத்திருந்தார்.

    இதற்கு பதில் அளிக்கும் விதமாக ரவி மோகனின் மாமியாரும், பட தயாரிப்பாளருமான சுஜாதா தெரிவித்து இருந்தார்.

    இப்படி இருதரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டு முன்வைத்து வரும் நிலையில், ரவி மோகன் - ஆர்த்தி இருவரும் இனி எந்த அறிக்கையும் விடக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், ரவிமோகன் விவகாரத்தில் தன்மீது அவதூறு பரப்பும் வகையிலும், ஆபாசமாகவும் பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாடகி கெனிஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பான நோட்டீசை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கெனிஷா பகிர்ந்துள்ளார்

    • ரவி மோகன் மற்றும் அவரது மனைவியான ஆர்த்தி இடையே உள்ள பிரச்சனையே நெட்டிசன்கள் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.
    • ரவி மோகன் மற்றும் அவரது மனைவியான ஆர்த்தி இடையே உள்ள பிரச்சனையே நெட்டிசன்கள் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.

    கடந்த சில வாரங்களாக நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவியான ஆர்த்தி இடையே உள்ள பிரச்சனையே நெட்டிசன்கள் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.

    நடிகர் ரவி மோகன், மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்கக்கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவரும் சமரச பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து மத்தியஸ்தம் முன்னிலையில் மூன்று முறை பேச்சு வார்த்தை நடந்தது.

    நடிகர் ரவி மோகன்- ஆர்த்தி இருவரும் நேரில் ஆஜராகினர். அப்போது ஆர்த்தியிடம் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை, அவரிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும்.

    இதனிடையே, நடிகர் ரவி மோகனை பிரிவதற்கு மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை அடுத்த மாதம் ஒத்திவைத்துள்ளது.

    இந்நிலையில் ரவி மோகன் - ஆர்த்தி இருவரும் இனி எந்த அறிக்கையும் விடக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்களுக்கிடையேயான பிரச்சனை குறித்து எந்த அறிக்கையும் வெளியிடக் கூடாது என உத்தரவு விடுத்துள்ளது. மனு மீதான விசாரணையின் போது இருதரப்பும் அமைதியாக இருக்க ஒப்புதல் அளித்துள்ளனர்.

    ×