என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய தயாரிப்பு நிறுவனம்"

    • ‘கருப்பு’ படம் அடுத்தாண்டு வெளியாக உள்ளது.
    • ஏற்கனவே நடிகர் சூர்யா 2 டி எண்டர்டெயின்ட்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

    நடிகர் சூர்யா தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் 'கருப்பு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சூர்யா உடன் த்ரிஷா, நட்டி, சுவாஷிகா, யோகி பாபு, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடிக்கின்றனர்.

    சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக எஸ்.ஆர். பிரபு தயாரித்துள்ளார். 'கருப்பு' படம் அடுத்தாண்டு வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது, இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் சூர்யா தனது 46-வது படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

    இந்த நிலையில், நடிகர் சூர்யா புதியதாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    'ழகரம்' தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக ஜித்து மாதவனின் படமும், இரண்டாவது படமாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் படமும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    ஏற்கனவே நடிகர் சூர்யா 2 டி எண்டர்டெயின்ட்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

    • மிகப்பெரிய நாளுக்கான ஆயத்தம் என இந்த படங்கள் பகிரப்பட்டன.
    • ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று தரிசனம் செய்தனர்.

    நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருக்கிறார்.

    அதற்கான பணிகளில் தற்போது ஈடுப்பட்டு வருகிறார். இந்த நிறுவனம் இன்று (ஆகஸ்ட் 26) தொடங்கப்பட உள்ளது.

    இந்நிலையில் இந்த  தொடக்க விழா பணிகளை ரவி மோகன் உடன் இருந்து மேற்பார்வையிட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

    மிகப்பெரிய நாளுக்கான ஆயத்தம் என இந்த படங்களை ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த விழாவுக்கு நடிகர் கார்த்தியை நேரில் சென்று ரவி மோகன் அழைத்த வீடியோவும் வெளியாகி உள்ளது. 

    இதற்கிடையே ரவி மோகன் மற்றும் காதலி கெனிஷா இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று தரிசனம் செய்தனர்.

    இவர் ஈஞ்சம்பாக்கத்தில் முன்னாள் மனைவி ஆர்த்தியுடன் வாழந்த சொகுசு பங்களாவுக்கு கடந்த 10 மாதமாக EMI கட்டாமல் உள்ளார் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    • ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
    • நிறுவனத்தின் முதல் படம் குறித்த அப்டேட் மே 3ம் தேதி அறிவிக்கப்படும்.

    தமிழ் திரைத்துறையில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற ஹிட் படங்களை கொடுத்த பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார். இவர் கடைசியாக ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கினார்.

    அதிரடி சண்டை படமாக தயாரான இப்படம் வெளியாகி உலகளவில் ரூ.650 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனைப்படைத்தது.

    இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் Filament Pictures என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

    நிறுவனத்தின் முதல் படம் குறித்த அப்டேட் மே 3ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து இயக்குனர் நெல்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் எனது பயணம் 20 வயதில் தொடங்கியது. பல ஆண்டுகளாக, இந்தத் துறையில் எனது வளர்ச்சிக்கு பல ஏற்ற தாழ்வுகள் பங்களித்துள்ளன.

    எல்லாவற்றுக்கும் மத்தியில், ஒரு தயாரிப்பு நிறுவனத்தை சொந்தமாக வைத்திருப்பது எப்போதுமே எனது நிலையான விருப்பமாக இருந்து வருகிறது. இன்று எனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'ஃபிலமென்ட் பிக்சர்ஸ்' தொடங்குவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    Filament Pictures-ல், பரந்த பார்வையாளர்களை மகிழ்விக்கும் ஆக்கப்பூர்வமான மற்றும் சுவாரஸ்யமான உள்ளடக்கத்தை உருவாக்குவதே எங்களின் முதன்மையான குறிக்கோள்.

    எங்கள் பார்வையை மிகச்சரியாக உள்ளடக்கிய மற்றும் நகைச்சுவையாகவும், வேடிக்கையாகவும் இருக்கும் என்று உறுதியளிக்கும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நாங்கள் தொடங்குகிறோம்.

    மே 3ஆம் தேதி எங்களின் முதல் திட்ட அறிவிப்புக்காக காத்திருங்கள். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×