என் மலர்
நீங்கள் தேடியது "Suriya"
- ஆஸ்கர் தேர்வு குழுவில் உறுப்பினர்களாக இணைவதற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைச்சிறந்த கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு அழைப்பு விடுக்கப்படுகிறது.
- 2023 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வோரு ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் அழைக்கப்படுவார்கள். அந்த வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான பட்டியலை ஆஸ்கர் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023ம் ஆண்டு 'ஆஸ்கர் விருதுகள்' தேர்வுக்குழுவுக்கு இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், தயாரிப்பாளர் கரண் ஜோகர் ஆகியோரும் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆஸ்கர் விருது குழுவில் தேர்வாகியுள்ளவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் ராஜமவுலி பதிவிட்டுள்ளார். அதில், ஆர்.ஆர்.ஆர் படக்குழுவிலிருந்து 6 நபர்கள் ஆஸ்கர் தேர்வு குழுவில் இணைந்திருப்பது மிகவும் பெருமையாகவுள்ளது. இந்திய சினிமாவில் இருந்து இடம்பெற்றிருக்கும் அனைவருக்கும் வாழ்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே தமிழகத்தில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் சூர்யா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்கர் தேர்வு குழுவில் உறுப்பினர்களாக இணைவதற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைச்சிறந்த கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு அழைப்பு விடுக்கப்படுகிறது.
- 2023 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆஸ்கர் தேர்வு குழுவில் உறுப்பினர்களாக இணைவதற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைச்சிறந்த கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு அழைப்பு விடுக்கப்படுகிறது. இதற்கு முன்பு தமிழகத்தில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் சூர்யா ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், தயாரிப்பாளர் கரண் ஜோகர் ஆகியோரும் உறுப்பினர்களாக தேர்வாகியுள்ளனர்.
- சென்னையில் நடைபெற்ற தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விழாவில் வெற்றிமாறன் கலந்து கொண்டார்.
- வெற்றிமாறன், விஜய்யுடன் இணைவது குறித்து பேசியுள்ளார்.
தனுஷ் நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன்பின்னர் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசூரன், விடுதலை உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது சூரியின் விடுதலை-2 படத்திலும் சூர்யாவின் வாடிவாசல் பட பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விழாவில் வெற்றிமாறன் கலந்து கொண்டார். அப்போது விஜய்யுடன் இணைவது குறித்து வெற்றிமாறன் பேசினார். அவர் பேசியதாவது, மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் விஜய், அசூரன் பட வசனத்தை பேசியது எனக்கு சந்தோஷம். விஜய்யுடன் பேசிக் கொண்டு தான் இருக்கிறேன். தற்போது விஜய் இரண்டு படங்களில் பிசியாக இருக்கிறார், நானும் விடுதலை-2 மற்றும் வாடிவாசல் படங்களில் பிசியாக இருக்கிறேன். இப்படங்களின் பணிகள் முடிந்த பிறகு கண்டிப்பாக விஜய்யுடன் விரைவில் இணைவேன் என்றார்.
- இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’.
- கொடைக்கானலில் நடைபெற்ற இதன் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக கூறப்படுகிறது.
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கங்குவா படக்குழு
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

கங்குவா
பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கோவா மற்றும் பிஜூ தீவுகளில் நடைபெற்று வந்ததையடுத்து தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் 3 வாரங்கள் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் படத்தின் முக்கியமான வரலாற்று பகுதிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

கங்குவா
இந்நிலையில் கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த கங்குவா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. முழுவீச்சில் நடைபெற்று இதன் படப்பிடிப்பு மழையிலும் இடைவிடாமல் நடந்துள்ளதாகவும், படப்பிடிப்பு நிறைவடைந்த பின்னர் சூர்யா அனைவருக்கும் பிரியாணி வழங்கி மகிழ்ந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- சில தினங்களுக்கு முன்பு கீழடி அருங்காட்சியகத்தை சிவக்குமார், சூர்யா-ஜோதிகா பார்வையிட்டனர்.
- அப்பொழுது மாணவ-மாணவிகளை நீண்ட நேரம் வெளியே காத்திருக்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தில் தமிழர்கள் நாகரீகத்தை விளக்கும் பல்வேறு பொருட்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளது. இதனை தினமும் ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர். கீழடி அருங்காட்சியகத்தை ஏராளமான திரைபிரபலங்களும், சமூக ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும், வெளிநாட்டு தூதுவர்களும் பார்த்து செல்கின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா தனது மனைவி ஜோதிகா, தந்தை சிவக்குமார் மற்றும் உறவினர்களுடன் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அப்போது சூர்யாவின் குடும்பத்தினர் அருங்காட்சியத்தின் உள்ளே இருந்ததால் அங்கு வரக்கூடிய மொதுமக்களையும், மாணவர்களையும் வெளியே நீண்ட நேரம் காத்திருக்க வைத்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோக்களும் வைரலானது.

இந்நிலையில் பாடலாசிரியர் சினேகன் கீழடி அருங்காட்சியத்தை பார்வையிட்ட பின்னர் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, கீழடி அருங்காட்சியத்தை பார்ப்பதற்காக வந்தேன். நம் பெருமைகளையும் தரவுகளையும் மிகவும் அழகாக பராமரித்துள்ளனர். இந்த இடத்தை விட்டு வெளியே செல்வதற்கு எனக்கு மனமில்லை. வரலாற்று புகைப்படங்கள், அதன் வழிமுறைகள் கேட்கும்பொழுது இன்னும் சற்று தமிழ் திமிரு தலைக்கேறி நிற்கிறது, பெருமையாக இருக்கிறது.
இந்த மண்ணுக்கு துரோகமான செயலை இந்த மண்ணுக்குறியவர்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். இந்த மண்ணுக்கு எந்த கெடுதல் நடந்தாலும் அதற்கு எதிராகதான் நாங்கள் நிற்போம். அதை எதிர்க்க வேண்டிய பொறுப்பு மக்கள் நீதிமையத்திற்கு இருக்கிறது. மக்கள் நீதி மைய்யத்தின் உறுப்பினராகவும் ஒரு கவிஞனாகவும் எனக்கு அதிகமான பொறுப்பு இருக்கிறது என்றார்.

மேலும் கீழடியில் சூர்யா குடும்பத்தினர் வந்திருந்த பொழுது மாணவர்களை வெளியே நிற்க வைத்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அங்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. வெறும் தகவல்களின் அடிப்படையில் வைத்து பேசுவது சரியாக இருக்காது. அவர் வேண்டும் என்று செய்திருக்கமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எதோ தெரியாமல் இது நடந்திருக்கும் என்று நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். அவர் அப்படி செய்கிறார் ஆள் இல்லை, அப்படி கண்டிப்பாக அவர் செய்திருக்க மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
எனவே இதனை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அன்றைக்கு எனக்கும் அந்த காணொலியை பார்க்கும் பொழுது சின்ன குழந்தைகள் வெளியே நிற்கிறார்களே என்று நானும் வருத்தப்பட்டேன். ஆனால் காட்சியில் பார்த்ததற்கும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்பதற்கும் வேறு மாதிரியாக இருக்கிறது. எனவே நான் தெரியாமல் தீர்ப்பு சொல்லிவிடகூடாது. இது எல்லோருக்கும் பொதுவானது எனவே அனைவரும் பார்த்து நம் பெருமைகளை தெரிந்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் கடந்த 24ம் தேதி அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.
- நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி நேரில் சந்தித்து அஜித்துக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் கடந்த மார்ச் 24ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தந்தையின் மறைவுக்கு பிறகு அஜித்தை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார். இந்நிலையில் அஜித்தை நேரில் சந்தித்து நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆறுதல் கூறினர். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
- நடிகர் சூர்யா தற்போது ‘சூர்யா 42’ படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா, தற்போது 'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சூர்யா 42
இந்நிலையில் சூர்யா 42 படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ வருகிற 14.03.2023 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஒரு மாபெரும் நிகழ்வில் ஒரு பிரமாண்ட திட்டம். காத்திருப்பு முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளனர். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
A Grand Project in a Grand event !?
— @Studio Green (@studiogreen22) March 12, 2023
The wait is over?@Suriya_offl @DishPatani @directorsiva @StudioGreen2 @UV_Creations #Vamsi #Pramod @kegvraja @ThisIsDSP @vetrivisuals @directorsiva #editornishadyusuf @supremesundar @PeterHeinOffl @WetaWorkshop #penstudios pic.twitter.com/CMsNnQnv6M
- சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார்.
- சூர்யா ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா, தற்போது 'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கடுமையான உடற்பயிற்சியில் சூர்யா
இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வாரணம் ஆயிரம் படத்திற்காக கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்ட சூர்யா தற்போது அதேபோன்று ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சியில் இறங்கி இருக்கும் வீடியோவை படக்குழு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
The Man of Hardwork and Dedication ❤️❤️❤️❤️ @Suriya_offl Anna ❤️❤️❤️#Suriya42 ????? pic.twitter.com/p6ZtEv1A6N
— Studio Green (@StudioGreen2) February 11, 2023
- 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
- இப்படம் குறித்து திரைபிரபலங்கள் பலரும் அவர்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
காயத்ரி ரகுராம்நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

காயத்ரி ரகுராம் - சூர்யா
இப்படம் குறித்து சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து கூறி சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். பல திரைபிரபலங்களும் படம் குறித்து வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் ராக்கெட்ரி படத்தை பார்த்த காயத்ரி ரகுராம் தனது சமுக வலைத்தளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "ராக்கெட்டரி படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.. அதேபோன்று மற்ற மொழிகளிலும் அதே வேடத்தில் பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். மற்ற மொழியில் டைலாக்கின் முடிவில் அனைவரும் ஜெய் ஹிந்த் என்று கூறுகிறார்கள். சூர்யா மட்டும் ஜெய்ஹிந்த் சொல்ல மறுத்தது ஏன்? அவர் இந்தியர் இல்லையா? இந்தியா வாழ்க என்று சொல்வதில் பெருமையாக இல்லையா? என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். இவரின் இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் பல விவாதங்களை கிளப்பி உள்ளது.
ராக்கெட்டரி படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.. அதேபோன்று மற்ற மொழிகளிலும் அதே வேடத்தில் பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். மற்ற மொழியில் டைலாக்கின் முடிவில் அனைவரும் ஜெய் ஹிந்த் என்று கூறுகிறார்கள். சூர்யா மட்டும் ஜெய்ஹிந்த் சொல்ல மறுத்தது ஏன்? அவர் இந்தியன் இல்லையா? pic.twitter.com/7FBw0urTMO
— Gayathri Raguramm 🇮🇳🚩 (@BJP_Gayathri_R) July 5, 2022

Thank you soo much @Suriya_offl sir ✨for this 🔥#VikramFromJune3pic.twitter.com/brKJBe5n3G
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 1, 2022