என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "condolence"

    • எர்ணாகுளத்தில் கந்தநாட்டில் உள்ள அவரது வீட்டில் முழு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது.
    • ரஜினிகாந்தும் ஸ்ரீவிவாசனுடன் வகுப்புத் தோழனாக இருந்ததை குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்திருந்தார்.

    மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 69.

    கடந்த சிலநாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீனிவாசன் நேற்று மரணமடைந்தார்.

    ஸ்ரீனிவாசனின் இறுதிச் சடங்கு இன்று காலை எர்ணாகுளத்தில் கந்தநாட்டில் உள்ள அவரது வீட்டில் முழு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது.

    இந்நிலையில் படப்பிடிப்பு தொடர்பாக எர்ணாகுளம் சென்றிருந்த நடிகர் சூர்யா, ஸ்ரீனிவாசன் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்த வந்தார்.

    செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா, நான் சினிமாவில் நுழைவதற்கு முன்பில் இருந்தே அவரது படங்களைப் பார்க்கிறேன். ஸ்ரீனிவாசனின் மரணச் செய்தியைக் கேட்டதும் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

    நேரில் வந்து அவரைப் பார்க்க வேண்டும் என்ற தோன்றியது. சினிமாவுக்கு அவரது பங்களிப்புகள், அவர் கற்றுக்கொடுத்த விஷயங்கள் மற்றும் அவரது எழுத்துக்கள் எப்போதும் அனைவரின் மனதிலும் இருக்கும்" என்று தெரிவித்தார். முன்னதாக நகுடிகர் ரஜினிகாந்தும் ஸ்ரீவிவாசனுடன் வகுப்புத் தோழனாக இருந்ததை குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்திருந்தார். 

    நடிகரும், இயக்குநருமான ஸ்ரீனிவாசன் மலையாளம், தமிழ் உள்ளிட்ட 225-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார். தேசிய திரைப்பட விருதுகள், கேரள மாநில திரைப்பட விருதுகள், தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் எழுத்தாளர்.

    நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளராக அவரது பங்களிப்புகளுக்காக பல வாழ்நாள் சாதனையாளர் அங்கீகாரங்கள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

    ஸ்ரீனிவாசனுக்கு விமலா என்ற மனைவியும், வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் என்ற மகன்களும் உள்ளனர். இருவரும் மலையாள சினிமாவில் முக்கிய நபர்களாக உள்ளனர்.   

    • எதிர்பாராத விதமாக நேரிட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்த செய்தி வருத்தம் அளிக்கிறது.
    • ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நேரிட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்த செய்தி வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

    இந்த விபத்தில் காயமடைந்தோருக்கு உயர் மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதையும், அவர்கள் மீண்டும் வாழ்வாதாரத்தை தொடங்க போதுமான நிவாரண உதவிகளையும் பெற்றிட அரசு வழிவகை செய்ய வேண்டும்.

    மேலும், தீபாவளி பண்டிகை வரவிருப்பதால் பட்டாசு தயாரிப்பு பணிகள் அனைத்து தொழிற்சாலைகளிலும் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும், தொழிற்சாலைகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பதையும் தமிழக அரசு உறுதிப்படுத்தி, இதுபோன்ற விபத்துகள் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. இரங்கல் தெரிவித்தார்.
    • அவர் ஆற்றிச் சென்ற பணிகளின் பலன் உலகம் இருக்கும்‌ வரை அவருடைய‌ பெயர்‌ சொல்லும்.

    விருதுநகர்

    விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம்தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேளாண் விஞ்ஞானி,பசுமை புரட்சியாளர் டாக்டர்.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் வயது முதிர்வு காரணமாக மறைந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

    இந்தியா இன்று உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது என்றால் அதற்கு முழு முதற் காரணம் வேளாண் அறிஞர் தமிழ்த்தாயின் தலைமகன்களில் ஒருவரான டாக்டர்.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களே.

    அவருடைய மறைவு இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே பேரிழப்பாகும். அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மறைந்தாலும் அவர் ஆற்றிச் சென்ற பணிகளின் பலன் உலகம் இருக்கும் வரை அவருடைய பெயர் சொல்லும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • ராஜமாணிக்கம் (வயது 45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள்.

    சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், கடம்பூர் கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழிந்துள்ளார்.

    இந்நிலையில், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல மற்றும் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், கடம்பூர் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (16.5.2024) மாலை சுமார் 5.00 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், கூலமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (வயது 45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

    இவ்விபத்தில் காயமடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முதலமைச்சர் மு.கஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    • உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும்.

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, வானதிராயன்பட்டி கிராமம், அத்திப்பள்ளம் என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டது.

    இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.கஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், வானதிராயன்பட்டி கிராமம், அத்திப்பள்ளம் என்ற இடத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு கிடங்கில் இன்று (20.5.2024) பிற்பகல் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், அத்திப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த திரு.கார்த்திக்ராஜா (வயது 27) த/பெ.சுப்ரமணியன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

    மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திரு.சிவநேசன் (வயது 27) த/பெ.பால்ராஜ் என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், காயமடைந்து பாதிக்கப்பட்டவருக்கும் தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது.
    • காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில் கூறிஇருப்பதாவது:-

    "குவைத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன்.
    • உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் தனது எக்ஸ் தள பதிவில் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

    குவைத் நாட்டின் மங்காப் நகரத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் நடந்த தீ விபத்தில் சிக்கி 7 தமிழர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன்.

    உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், உயிரிழந்தோர் உடல்களை அவர்தம் சொந்த ஊர்களுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை தூதரக உதவியுடன் துரிதமாக மேற்கொள்ள மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.


    • பட்டாச்சார்யா 2000 முதல் 2011-ம் ஆண்டு வரை 11 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்துள்ளார்.
    • புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.

    மேற்கு வங்காளத்தின் முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை காலமானார்.

    80 வயதாகும் புத்ததேவ் பட்டாச்சார்யா கடந்தாண்டு உடல்நல பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் பாதிப்புகள் இருந்ததால் சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வீடு திரும்பினார்.

    நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் அவதிப்பட்டு வந்த புத்ததேவ் பட்டாச்சார்யா அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்தார். தற்போது வயதுமூப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.

    மேற்கு வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புத்ததேவ் பட்டாச்சார்யா 2000 முதல் 2011-ம் ஆண்டு வரை 11 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்துள்ளார்.

    இந்நிலையில், பட்டாச்சார்யா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இடதுசாரி இயக்கத்தின் தலைவரும் மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வருமான தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.

    மாநிலத்திற்கும், தேசத்திற்கும் அவரது உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் சேவை என்றென்றும் நினைவுகூரப்படும்.

    ஒரு உறுதியான மார்க்சிஸ்ட், அவர் தனது வாழ்க்கையை சமத்துவ சமூகத்தை வளர்ப்பதற்கும், ஒதுக்கப்பட்டவர்களின் காரணத்திற்காகவும், சமூக நீதிக்காக வாதிடுவதற்கும் அர்ப்பணித்தார்.

    அவரது சாதனைகள் மற்றும் அவரது இலக்கிய பங்களிப்புகள் ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளன.

    அவரது தலைமைத்துவமும், மக்களுக்கான அர்ப்பணிப்பும் வருங்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிவப்பு வணக்கம், தோழர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • டெல்லி கணேஷ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
    • நாடகத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்து தன்னுடைய அடையாளத்தை அழுத்தமாகப் பதித்தவர் திரு. டெல்லி கணேஷ்.

    வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ் (80) இன்று காலமானார். சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது.

    டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது மறைவிற்கு தமிழக முதலமைச்சர் முகஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளது.

    அதில், மூத்த திரைக்கலைஞர் திரு. டெல்லி கணேஷ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். நாடகத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்து தன்னுடைய அடையாளத்தை அழுத்தமாகப் பதித்தவர் திரு. டெல்லி கணேஷ் அவர்கள் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவரது நகைச்சுவைக் காட்சிகள் இன்றளவும் மக்களால் மீண்டும் மீண்டும் பார்க்கப்படும் அளவுக்குச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவராக அவர் திகழ்ந்தார்.

    வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் திரு. டெல்லி கணேஷ் அவர்கள் பல தொடர்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் எழுத்தில் உருவான இளைஞன் திரைப்படத்திலும் டெல்லி கணேஷ் அவர்கள் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழ்த் திரைத்துறை வரலாற்றில் நீண்டகாலம் நிலைத்து நிற்கும் பல நகைச்சுவை, குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்தவரான அவரது மறைவு திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கும். திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    முன்னாள் எம்.பி.யும், தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான கோவை மு.ராமநாதன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். #MKStalin #Ramanathan
    சென்னை:

    திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கழக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான “கோவைத் தென்றல்” மு. ராமநாதன் உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு துடிதுடித்துப் போனேன்.

    அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



    திராவிட இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான மு.ராமநாதன் 70 ஆண்டு காலம் கழகத்திற்காக உழைத்தவர். கோவை மாநகர செயலாளராகவும், தணிக்கைக்குழு உறுப்பினராகவும், சட்டத்திட்ட திருத்தக்குழு உறுப்பினராகவும், உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினராகவும் கழகப் பணியாற்றியவர். கோவை பாராளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் மக்களுக்கு அரும் பணியாற்றியவர்.

    பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோர் மீது அளவு கடந்த பற்றும் பாசமும் வைத்திருந்தவர் அவர். அவர்களின் மனமுவந்த பாராட்டுகளைப் பெற்றவர் அவர்.

    இந்த இயக்கத்தின் என்றும் தளர்ச்சியடையாத உயிரோட்டம் மிக்க ரத்த நாளமாகத் திகழ்ந்து எண்ணற்ற கொள்கை வீரர்களையும் லட்சிய வேங்கைகளையும் கொங்கு மண்டலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அசையாச் சொத்துக்களாக உருவாக்கியவர். 1992-ல் கழகத்தின் சார்பில் “அண்ணா விருது” வழங்கி பெருமை சேர்க்கப்பட்டது.

    திராவிட இயக்கத்தின் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த அவரது மறைவு அவரது உறவினர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் இந்த இயக்கத்தின் கோடானு கோடி தொண்டர்களுக்கும், கொங்கு மண்டல மக்களுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #MKStalin #Ramanathan

    டாக்டர் ஜெயச்சந்திரன், எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். #Prapanchan #DrJayachandran
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-



    5 ரூபாய் டாக்டர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட டாக்டர் ஜெயச்சந்திரன் உடல்நல குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை-எளிய மக்களுக்கு குறைந்த விலையில் சிறந்த மருத்துவ சேவையை வழங்கியுள்ளார். டாக்டர் ஜெயச்சந்திரனை இழந்துவாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், அவருடைய தன்னலமற்ற சேவையை பல ஆண்டுகளாக பெற்று வந்த ராயபுரம் பகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    அதேபோல், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு இரங்கல் செய்தியில், ‘பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் உடல்நல குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவருடைய மறைவு தமிழ் இலக்கிய உலகிறகு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். பிரபஞ்சனை இழந்துவாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், எழுத்துலக நண்பர்களுக்கும், அவருடைய எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

    சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #Prapanchan
    சென்னை:

    சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  
    இது தொடர்பாக அவர்கள் கூறியுள்ளதாவது:-

    புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி:-


    எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கிரண்பேடி, அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று கூறியுள்ளார்.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின்:-

    தனித்துவமான தமிழ் நடையால் பல படைப்புகளை வழங்கி வாசிப்பு நிலையை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றவர் எழுத்தாளர் பிரபஞ்சன்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் :-

    தமிழ் இலக்கிய உலகில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிய எழுத்தாளர் தோழர் பிரபஞ்சன் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரை அனைத்திலும் தடம் பதித்தவர். வானம் வசப்படும் எனும் நாவலுக்கு சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்:-

    புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரும், தமிழ் இலக்கிய ஆளுமையுமான பிரபஞ்சன் அவர்கள் காலமான செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன். அவரது இழப்பு தமிழ் எழுத்துலகிற்கும், தமிழ் இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்:-

    தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி தனித்துவமாகத் திகழ்ந்த எழுத்தாளர்-நாடக ஆசிரியர் பிரபஞ்சன்  உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

    சாகித்ய அகாடமி உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்று எழுத்துப்பணியை திறம்பட செய்து வந்த பிரபஞ்சனின் மறைவு எழுத்துலகுக்கு பேரிழப்பாகும். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்!

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.  #Prapanchan
    ×