என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    குவைத் தீ விபத்து: உடல்களை கொண்டுவர துரித நடவடிக்கை தேவை- ஈ.பி.எஸ் வலியுறுத்தல்
    X

    குவைத் தீ விபத்து: உடல்களை கொண்டுவர துரித நடவடிக்கை தேவை- ஈ.பி.எஸ் வலியுறுத்தல்

    • 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன்.
    • உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் தனது எக்ஸ் தள பதிவில் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

    குவைத் நாட்டின் மங்காப் நகரத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் நடந்த தீ விபத்தில் சிக்கி 7 தமிழர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன்.

    உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், உயிரிழந்தோர் உடல்களை அவர்தம் சொந்த ஊர்களுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை தூதரக உதவியுடன் துரிதமாக மேற்கொள்ள மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.


    Next Story
    ×