எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. இரங்கல்

எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. இரங்கல் தெரிவித்தார். அவர் ஆற்றிச் சென்ற பணிகளின் பலன் உலகம் இருக்கும்‌ வரை அவருடைய‌ பெயர்‌ சொல்லும்.
எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. இரங்கல்
Published on

விருதுநகர்

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம்தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேளாண் விஞ்ஞானி,பசுமை புரட்சியாளர் டாக்டர்.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் வயது முதிர்வு காரணமாக மறைந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

இந்தியா இன்று உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது என்றால் அதற்கு முழு முதற் காரணம் வேளாண் அறிஞர் தமிழ்த்தாயின் தலைமகன்களில் ஒருவரான டாக்டர்.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களே.

அவருடைய மறைவு இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே பேரிழப்பாகும். அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மறைந்தாலும் அவர் ஆற்றிச் சென்ற பணிகளின் பலன் உலகம் இருக்கும் வரை அவருடைய பெயர் சொல்லும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com