என் மலர்
நீங்கள் தேடியது "பட்டாசு குடோன் தீ விபத்து"
- குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறின.
- குடோனில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முத்தாண்டிபுரத்தில் பட்டசு குடோனில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குடோன் முற்றிலும் எரிந்து சேதமானது.
குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறின. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு பலமணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள இந்த குடோனில் அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டதால் மக்களிடையே அச்சம் நிலவியது. மேலும் குடோன் உரிமையாளர் குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
குடோனில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எதிர்பாராத விதமாக நேரிட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்த செய்தி வருத்தம் அளிக்கிறது.
- ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நேரிட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்த செய்தி வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
இந்த விபத்தில் காயமடைந்தோருக்கு உயர் மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதையும், அவர்கள் மீண்டும் வாழ்வாதாரத்தை தொடங்க போதுமான நிவாரண உதவிகளையும் பெற்றிட அரசு வழிவகை செய்ய வேண்டும்.
மேலும், தீபாவளி பண்டிகை வரவிருப்பதால் பட்டாசு தயாரிப்பு பணிகள் அனைத்து தொழிற்சாலைகளிலும் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும், தொழிற்சாலைகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பதையும் தமிழக அரசு உறுதிப்படுத்தி, இதுபோன்ற விபத்துகள் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவிப்பு.
- இறந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு அமித் ஷா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் இன்று பட்டாசு குடோனில் உள்ள பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தால் குடோன் அருகில் இருந்த ஓட்டல் உள்பட 3 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் மத்திய அரசு சார்பில் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து குறித்து அறிந்து ஆழ்ந்த வருத்தமடைந்ததாக உள்துறை மந்திரி அமித் ஷா கூறியுள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.