என் மலர்
நீங்கள் தேடியது "death"
- வனப்பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க மக்னா யானை இறந்து கிடப்பதை கண்டு பிடித்தனர்.
- யானையின் உடலை வனத்துறை கால்நடை மருத்துவர் சதாசிவம் உடற் கூறு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட எக்கத்தூர் வனப்பகுதி கச்சப்பள்ளம் என்ற இடத்தில் வனக்காப்பாளர் அர்த்த நாரீஸ்வரன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வனப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியதை அறிந்த வனத்துறை ஊழியர்கள் ஏதாவது வனவிலங்குகள் இறந்து கிடக்கிறதா என தேடி பார்த்தனர். அப்போது வனப்பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க மக்னா யானை இறந்து கிடப்பதை கண்டு பிடித்தனர்.
இது குறித்து உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பெயரில் கடம்பூர் வனச்சரக அலுவலர் (பொறுப்பு) மாரியப்பன், வன குழு மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் முன்னிலையில் யானையின் உடலை வனத்துறை கால்நடை மருத்துவர் சதாசிவம் உடற் கூறு ஆய்வு மேற்கொண்டார்.
இதன் முடிவில் தான் யானை எவ்வாறு இறந்தது தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
- கண்டிகையில் நடைபெற்ற உறவினர் சீமந்த விழாவில் கணபதி குடும்பத்துடன் பங்கேற்றார்.
- விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
வண்டலூர்:
படப்பை அடுத்த ஆரம்பாக்கம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கணபதி. இவரது மனைவி வனிதா. இவர்களது 6 வயது மகள் அவந்திகா. பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று இரவு வண்டலூர் அருகே உள்ள கண்டிகையில் நடைபெற்ற உறவினர் சீமந்த விழாவில் கணபதி குடும்பத்துடன் பங்கேற்றார்.
பின்னர் கணபதி தனது மனைவி மற்றும் மற்றொரு மகளுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். அவரது உறவினர்களான பிரசாந்த், அஜித் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிளில் கணபதியின் மகள் அவந்திகா உடன் பயணம் செய்தார்.
இதில் வண்டலூர் பூங்கா அருகே வந்தபோது பின்னால் அதிவேகமாக வந்த டாரஸ் லாரி திடீரென சிறுமி அவந்திகா பயணம் செய்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் வண்டலூர் உயிரியல் பூங்காவின் சுற்றுச்சுவரில் மோதி நொறுங்கியது. படுகாயம் அடைந்த அவந்திகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். உறவினர்களான பிரசாந்த் மற்றும் அஜித் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உயிருக்கு போராடிய பிரசாந்த், அஜித்தை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
விபத்து ஏற்படுத்திய லாரி சுமார் ஒரு மீட்டர் தூரத்திற்கு வண்டலூர் உயிரியல் பூங்காவின் சுற்றுச்சுவரை உரசியபடி மோதி நின்றது குறிப்பிடத்தக்கது.
- நாகபூஷணா அவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்.
- நடிகர் நாகபூஷணாவை போலீசார் கைது செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு:
பிரபல கன்னட நடிகர் நாகபூஷணா நேற்று இரவு தனது காரில் உத்தரஹள்ளியில் இருந்து சோணனகுண்டே பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.
பெங்களூரு வசந்தபரா மெயின் ரோட்டில் சென்ற போது வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர நடை பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த கிருஷ்ணா (வயது 58) அவரது மனைவி பிரேமா (48) ஆகியோர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
உடனே நடிகர் நாகபூஷணா அவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் வழியிலேயே பிரேமா இறந்து விட்டார். கிருஷ்ணா இரு கால்கள் மற்றும் தலையில் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக குமாரசாமி போக்குவரத்து காவல் நிலைய போலீசார் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் காரை ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக நடிகர் நாகபூஷணாவை போலீசார் கைது செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செம்மனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திரவேல் கூலி தொழிலாளி.
- லாரியில் கோழிகளை ஏற்றுவதற்காக வந்துள்ளார்.
விழுப்புரம்:
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திரவேல் (வயது 40) கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் புதுக்கேணி பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் லாரியில் கோழிகளை ஏற்றுவதற்காக வந்துள்ளார்.
வேலைக்கு சென்ற இடத்தில் திடீரென உத்தரவேலுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு உளுந்தூர் பேட்டை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோ தித்த டாக்டர்கள் உத்தரவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இந்த சம்பவம் குறித்து எடைக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கந்தர்வகோட்டை அருகேபோலீஸ்காரர் மாரடைப்பால் மரணம்
- விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தபோது பரிதாபம்
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் பழைய கந்தர்வகோட்டையை சேர்ந்தவர் அறிவுக்கரசு (வயது 42). இவர் மதுரை பட்டாலியன் போலீசாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று விடுமுறைக்கு பழைய கந்தர்வகோட்டையையில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அப்போது அறிவுக்கரசுக்கு காலையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் கந்தர்வகோட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே போலீஸ் அறிவுக்கரசு இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாரடைப்பால் மரணம் அடைந்த காவலர் அறிவுக்கரசுக்கு ஜான்சிராணி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.
- விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பஸ் சரியாக பராமரிக்கப்பட்டு உள்ளதா, அதற்கான சான்றுகள் உள்ளதா என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்து பற்றிய உருக்கமான தகவல்கள் வருமாறு:-
தென்காசி மாவட்டம் கடையம், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 59 பேர் கேரளா, நீலகிரி, கோவை மருதமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.
அதன்படி, கடந்த 28-ந் தேதி கடையத்தில் இருந்து 59 பேரும் சுற்றுலா பஸ்சில் சுற்றுலாவுக்கு புறப்பட்டனர். டிரைவர்கள் 2 பேருடன் சேர்த்து மொத்தம் 61 பேர் இந்த பஸ்சில் பயணித்தனர்.
முதலில் இவர்கள் கேரள மாநிலம் சோட்டானிக்கரை, குருவாயூர் பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்தனர். பின்னர் நேற்று அதிகாலை, கேரளா வழியாக நீலகிரி மாவட்டத்திற்குள் வந்தனர்.
இங்குள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் சுற்றி பார்த்தனர். பின்னர் இரவில் கோவை செல்வதற்காக பஸ்சில் புறப்பட்டனர்.
பஸ் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில், குன்னூர் மரப்பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பை இடித்து கொண்டு அங்கிருந்த 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் பஸ்சில் இருந்த முப்புடாதி (67), முருகேசன்(63 ), இளங்கோ(64 ), தேவிகா(42), கவுசல்யா( 29), நிதின்(15), ஜெயா(50), தங்கம்(40) ஆகிய 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர்.
மற்றவர்கள் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டு அபயகுரல் எழுப்பினர். இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து கயிறு கட்டி கீழே இறங்கி பஸ்சில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்து நடந்த பகுதி மிகவும் இருளாக இருந்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இருந்தபோதிலும் டார்ச் ஒளி வெளிச்சத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
இதற்கிடையே தகவல் அறிந்ததும் கோவை சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பணிகளை துரிதப்படுத்தினர்.
இறந்த 8 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு குன்னூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். காயம் அடைந்தவர்கள் குன்னூர், மேட்டுப்பாளையம், ஊட்டி, கோவை அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
செல்லம்மா என்ற மூதாட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர்ந்து வேறு யாராவது பஸ்சில் சிக்கி இருக்கிறார்களா என்பதை அறிய இன்று காலையும் மீட்பு பணி தொடர்ந்தது.
அப்போது பஸ்சின் அடிப்பகுதியில் இருந்து பெண் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். அவரது பெயர் பத்மராணி (57) என்பது தெரியவந்தது. அவரது உடலையும் மீட்டுபிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதனால் விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.
தொடர்ந்து பள்ளத்தில் சிக்கிய பஸ்சை வெளியே கொண்டு வரும் பணியை தொடங்கி உள்ளனர். கிரேன் உதவியுடன் பஸ்சை மீட்கும் பணி நடந்தது.
சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து, 9 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் நீலகிரிக்கு விரைந்து வந்துள்ளனர். அவர்கள் இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர்(வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை) பிரபாகர், கலெக்டர் அருணா, டி.ஐ.ஜி.சரவணசுந்தர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். மேலும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதலும் கூறினர். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தனர்.
பஸ்சில் சரியாக பிரேக் பிடிக்காததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த பஸ் சரியாக பராமரிக்கப்பட்டு உள்ளதா, அதற்கான சான்றுகள் உள்ளதா என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- பூட்டை பகுதியைச் சேர்ந்த தஸ்தகீர் பாஷித் மகன் ஷேக் வாகித்
- மோட்டார் சைக்கி ளை ஷேக்வாகித் ஓட்டினார், அணைதீன் பின்னால் அமர்ந்து வந்தார்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பூட்டை ரோடு பகுதியைச் சேர்ந்த தஸ்தகீர் பாஷித் மகன் ஷேக் வாகித் (வயது 19) .இவர் சென்னை தரமணி யில் உள்ள அரசு பாலி டெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவரும் அதே கல்லூரியில் பயிலும் இவரது நண்பரான சங்கரா புரம் அருகே வடகீரனூர் பகுதியைச் சேர்ந்த அணை தீன் (19) இருவரும் நேற்று இரவு சென்னையிலிருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டி ருந்தனர். மோட்டார் சைக்கி ளை ஷேக்வாகித் ஓட்டினார், அணைதீன் பின்னால் அமர்ந்து வந்தார். இவர்கள் கள்ளக்குறிச்சி- துருகம் சாலையில் தனியார் மருத்து வமனை அருகே சென்று கொண்டிருந்தபோது. எதிரே கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ்ம மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த ஷேக் வாகித் சம்பவ இடத்தி லேயே பலியானார். அணை தீன் படுகாயம் அடைந்தார்.அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அணைதீன் மேல் சிகிச்சைக் காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து சேலம் மாவட்டம் ஆறகளூர் பகுதியைச் சேர்ந்த அரசு பஸ் டிவைர் சுந்தரம் (45) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- மரைக்காயர் இன்று அதிகாலை தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு நடந்து சென்றுள்ளார்.
- வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மரைக்காயர் துடிதுடித்து இறந்தார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள தென்கலம் புதூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் மரைக்காயர்(வயது 45). தொழிலாளி.
இவர் இன்று அதிகாலை கங்கைகொண்டான் சிப்காட் நான்கு வழிச்சாலை அருகே உள்ள பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக நடந்து சென்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மரைக்காயர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட மரைக்காயர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கங்கைகொண்டான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரைக்காயர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.
- தூத்துக்குடி- நெல்லை பிரதான சாலையை கடந்து செல்லும் போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் வேதநாயகம் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
- இதில் பலத்த காயம் அடைந்த வேதநாயகம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்ய னடைப்பு இந்திராநகரை சேர்ந்தவர் வேதநாயகம் (வயது 78). இவர் நேற்று மாலை அந்தோணி யார்புரத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பி உள்ளார்.
அப்போது தூத்துக்குடி- நெல்லை பிரதான சாலையை கடந்து செல்லும் போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த வேதநாயகம் தூத்துக்குடி அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் தூத்துக்குடி கே.டி.சி.நகர், ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் சீனிராஜா. (44). என்பவர் கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் ஒர்க் ஷாப் நடத்தி வந்தார். இவர் நேற்று மாலை வேலை முடித்து எட்டையாபுரம் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சீனிராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கண் இமைக்கும் நேரத்தில் சந்திரகாந்த் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
- விபத்துக்கு காரணமான வேகத்தடை மீது வெள்ளை நிறத்தில் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் இரவோடு இரவாக பெயிண்ட் அடித்தனர்.
கோவை:
கோவை பீளமேடு கொடிசியா அருகே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளி முன்பு உள்ள ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இந்த நிலையில் பள்ளி நிர்வாகத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வேகத்தடை அமைத்தனர்.
ஆனால் அவர்கள், சாலையில் வரும் வாகன ஓட்டிகள் தூரத்தில் இருந்து வரும்போது வேகத்தடை உள்ளது என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் அதன் மீது வெள்ளை பெயிண்ட் அடிக்கவில்லை. மேலும் வேகத்தடை உள்ளது என்ற அறிவிப்பு பலகையும் வைக்கவில்லை.
இந்த நிலையில் சூலூரை சேர்ந்த சந்திரகாந்த்(வயது 26) என்பவர் நேற்றிரவு வேலை விசயமாக கோவைக்கு வந்தார். பின்னர் வேலை முடிந்ததும் நள்ளிரவு 12 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார்.
பள்ளி அருகே வந்தபோது இவருக்கு வேகத்தடை இருப்பது தெரியவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் சந்திரகாந்த் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று சந்திரகாந்தை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த தகவல் கிடைத்ததும் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்துக்கு காரணமான வேகத்தடை மீது வெள்ளை நிறத்தில் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் இரவோடு இரவாக பெயிண்ட் அடித்தனர்.
இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.