search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "elderly"

  • நிஷா திவாரி என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
  • இந்த சம்பவம் மே 15 மாலை 5:30 மணியளவில் நடந்துள்ளது.

  உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் சாரதா நகர் பகுதியில் வசிக்கும் முதியவர் 2 நாய்க்குட்டியை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

  இந்த மனிதாபிமானமற்ற செயல் முதியவரின் பக்கத்து வீட்டிற்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

  நிஷா திவாரி என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

  அதில், "லக்னோ, சாரதா நகர் பகுதியில் வசிக்கும் ஸ்ரீவஸ்தவா என்ற முதியவர், மதியம் 2 நாய்க்குட்டிகளை அக்கம் பக்கத்தில் இருந்து எடுத்தார். பின்னர் அவர் அவற்றை வீட்டிற்குள் கொண்டு சென்றார். அங்கு நாய்குட்டிகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து, அவர் அவற்றை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து அப்புறப்படுத்தினார்" என்று பதிவிட்டுள்ளார்.

  இந்த சம்பவம் மே 15 மாலை 5:30 மணியளவில் நடந்துள்ளது. லக்னோ போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

  • 85 வயது கடந்த முதியவர்கள் தங்கள் வீட்டிலேயே இருந்து வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
  • பணிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  நெல்லை:

  நெல்லை பாராளுமன்ற தொகுதியில் 85 வயது முதல் 99 வயது வரையிலான முதியவர்கள் 23 ஆயிரத்து 100 பேரும், 100 வயதை கடந்தவர்கள் 795 பேரும் உள்ளனர்.

  இதில் 85 வயது கடந்த முதியவர்கள் தங்கள் வீட்டிலேயே இருந்து வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

  அதனடிப்படையில் நெல்லை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் முதியவர்கள் வீடுகளிலேயே இருந்தவாறு வாக்களிக்கும் வகையிலான 12டி விண்ணப்பம் வாக்குச்சாவடி அலுவலர்களால் முதியவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  இந்நிலையில் மேலப் பாளையம் சிவராஜபுரம் பகுதியில் வசிக்கும் 90 வயது மூதாட்டியான வள்ளியம்மாளிடம் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அனந்த ராமகிருஷ்ணன், வீட்டில் இருந்து வாக்களிக்கும் வகையிலான விண்ணப்பத்தை வழங்கி உள்ளார்.

  அப்போது ஓட்டு கேட்டு வேட்பாளர்கள் தான் யாரோ வந்திருக்கிறார்கள் என்று நினைத்த மூதாட்டி வள்ளியம்மாள், அந்த விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டு என் ஓட்டு உனக்குதான் பா, உனக்குத்தான் என் ஓட்டு என்று கூறியுள்ளார். உடனே கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் கலகலவென சிரித்து விட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • மூதாட்டி மீதிருந்த சகதியை தண்ணீரை ஊற்றி கழுவினர்.
  • மூதாட்டியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

  திருவனந்தபுரம்:

  கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள மாரட் பகுதியை சேர்ந்த மூதாட்டி கமலா ஷியம்மா(வயது79). இவர் தனது மனவளர்ச்சி குன்றிய மகனுடன் தனியாக வசித்து வருகிறார். அந்த மகனின் மருத்துவ சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டதால், வயதான காலத்திலும் வேலைக்கு சென்று வந்தார்.

  கமலாஷியம்மா வீட்டுக்கு வரும் வழியில் சில நாட்களுக்கு முன்பு யாரோ மர்ம நபர்கள் குப்பைகளை அதிகளவில் கொட்டிவிட்டனர். அதில் புற்கள் அதிகளவில் வளர்ந்திருந்ததால், அது தான் வழி என்று குறுக்கு வழியில் நடந்துசெனறார். இதனால் அவர் அங்கிருந்த சகதியில் சிக்கிக்கொண்டார்.

  அதிலிருந்து வெளியேற போராடியிருக்கிறார். ஆனால் அந்த சகதியிலேயே தவறி விழுந்துவிட்டார். இதனால் அவரால் எழுந்து வர முடியவில்லை. தன்னை காப்பாற்றுமாறு கூக்குரலிட்டிருக்கிறார். ஆனால் அவரது சத்தம் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்தவர்களுக்கு கேட்கவில்லை.

  இதனால் பல மணி நேரமாக சகதியில் சிக்கிய நிலையில் போராடியபடி இருந்திருக்கிறார். இந்த நிலையில் கமலாஷியம்மாவின் பக்கத்து வீட்டு பெண் ஒருவர், துவைத்து காயப்போட்டிருந்த துணிகளை எடுப்பதற்காக தனது வீட்டின் மாடிக்கு வந்திருக்கிறார்.

  அப்போது மூதாட்டி கமலாஷியம்மா சகதியில் சிக்கி கிடப்பதை பார்த்தார். அதுபற்றி திருப்புவண்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் வினு ராஜ், உதவி அலுவலர் சந்தோஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

  அவர்கள் கயிறு மற்றும் பிற உபகரணங்களை பயன்படுத்தி மூதாட்டி கமலாஷியம்மாவை போராடி மீட்டனர். பின்பு அவரை அந்த பகுதியில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் தூக்கி வந்தனர். பின்பு மூதாட்டி மீதிருந்த சகதியை தண்ணீரை ஊற்றி கழுவினர்.

  பின்பு மூதாட்டியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சகதியில் சிக்கிய மூதாட்டியை மீட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினரை பொதுமக்கள் பாராட்டினர்.

  • புதிய வகை கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் கூட்டத்தை நடத்தியுள்ளேன்.
  • 2, 3 நாட்களில் கொரோனாவின் தீவிரம் என்ன? என்பது தெரியவரும்.

  பெங்களூரு:

  இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் உருமாறிய ஜே.என்-1 வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் அந்த மாநில அரசு புதிய வைரஸ் பாதிப்பை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

  இந்நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளதால் கர்நாடகத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும்படி கர்நாடக சுகாதாரத்துறைக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

  இதையடுத்து மாநிலம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் சுகாதார நிலையங்களில் கொரோனா பரவலை எதிர்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் எல்லை மாவட்டங்களான குடகு, மங்களூரு, சாம்ராஜ்நகர் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளாவை ஒட்டியுள்ள எல்லை மாவட்டங்களில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

  இது குறித்து சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

  கர்நாடகத்தில் புதிய வகை கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் கூட்டத்தை நடத்தியுள்ளேன். இதில் கொரோனாவை தடுக்க எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து விவாதித்தோம். சில ஆலோசனைகளை அந்த குழு வழங்கியுள்ளது.

  60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட இணை நோய்கள் உள்ளவர்கள், சளி, காய்ச்சல் உள்ளவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வலியுறுத்தப்பட்டது. இன்னும் 2, 3 நாட்களில் கொரோனாவின் தீவிரம் என்ன? என்பது தெரியவரும். தற்போதைக்கு கர்நாடகம் சகஜ நிலையில் உள்ளது. பாதிப்பு அதிகரித்தால் மட்டும் பல்வேறு தடைகள் விதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். தற்போது அத்தகைய சூழ்நிலை எழவில்லை. அதனால் யாரும் கவலைப்பட தேவை இல்லை.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • தொடர்ந்து ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் அளித்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  • ஆதரவின்றி கிடந்த முதியவருக்கு செங்கிப்பட்டி போலீசார் முதலுதவி அளித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

  வல்லம்:

  தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் தனியார் கம்பெனி அருகே பாலத்தின் அடியில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஆதரவின்றி மிகவும் மோசமான நிலையில் கோழி கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் அனாதையாக கிடந்துள்ளார்.

  அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற செங்கிப்பட்டி போலீஸ் ஏட்டு ராஜகோபால் மற்றும் போலீசார் சிவலிங்கம், மோகன்ராஜ் ஆகியோர் கோழி கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கிடந்த அந்த முதியவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அந்த முதியவரை மீட்டு அவரை குளிக்க வைத்து, ஆடைகள் அணிவித்தனர். பின்னர் அந்த முதியவருக்கு உணவு வழங்கி தேவையான மருத்துவ முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் அளித்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  ஆதரவின்றி கிடந்த முதியவருக்கு செங்கிப்பட்டி போலீசார் முதலுதவி அளித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

  மனிதாபிமானம் இன்னும் மரித்து போகவில்லை என்பதற்கு சாட்சியாகவும், போலீசார் பொதுமக்களின் நண்பன் என்பதை உணர்த்தும் விதமாகவும் நடந்து கொண்ட செங்கிப்பட்டி போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். 

  காலில் அடிப்பட்டு, வீட்டில் இருந்தபடி தொடர் சிகிச்சை பெற்று வந்தார். வலிதாங்க முடியாமல் அடிக்கடி துடித்து வந்தார்.

  விழுப்புரம்: 

  விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அடுத்த ஓமந்தூரை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 60). இவரது காலில் அடிப்பட்டு, வீட்டில் இருந்தபடி தொடர் சிகிச்சை பெற்று வந்தார். வலிதாங்க முடியாமல் அடிக்கடி துடித்து வந்தார்.

  இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் தோட்டத்திற்கு சென்ற நாராயணசாமி, அங்கிருந்த வேப்பமரத்தில் வேட்டி யால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த கிளியனூர் போலீசார், நாராயணசாமி உடலை கைப்பற்றினர். பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  3 மாதங்களாக அடிக்கடி தனிமையில் இருப்பதும், தானாக பேசுவதுமாக இருந்துள்ளார்.

  புதுச்சேரி:

  காரைக்காலை அடுத்த நிரவியில் வசித்து வந்தவர் ஜெய கோபி (வயது55). இவருக்கு கடந்த ஆண்டு மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சையில் இருந்துவந்தார். மேலும் சர்க்கரை நோய்க்கும் மருந்துகள் சாப்பிட்டு வந்தார். கடந்த 3 மாதங்களாக அடிக்கடி தனிமையில் இருப்பதும், தானாக பேசுவதுமாக இருந்துள்ளார்.

  இந்நிலையில், சம்பவத்தன்று மதிய உணவுக்காக மகள் யோகேஸ்வரி, தந்தை இருந்த அறை கதவை தட்டியபோது, திறக்கவில்லை. ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது, ஜெயகோபி மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இது குறித்து, பிருத்திவிராஜ், நிரவி போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் உடலை கைபற்றி, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைகான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மதுரை

  மதுரை வைத்தியநாதபுரம் கொன்னவாயன் சாலை இந்திரா நகர் மெயின் ரோட் டை சேர்ந்தவர் பிச்சை. இவரது மகன் இன்பக் கொடி(வயது 37). இவருக்கு குடி பழக்கம் இருந்தது.

  இதனால் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட் டது. இதனால் மன உடைந்த அவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி செல்வராணி செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இன்பக் கொடியின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பொன்மேனி ரோடு நேதாஜி தெருவை சேர்ந்த வர் சிவராமகிருஷ்ணன் (70). இவர் காளிமுத்து நகர் பொன்மேனி மெயின் ரோட்டில் சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அவர் கீழே விழுந்தார்.

  இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மகன் கணபதி ராஜா எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் செய்தார்.

  போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவர் சிவராம கிருஷ்ணனின் சாவுக்கான காரணம் குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

  மேளவாசல் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஷாஜகான். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. கடந்த சில நாட்களாக இவர் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி ஆயிஷா மரியம் திடீர்நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலை கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

  • இளம்பெண்-முதியவர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  மதுரை

  மதுரை புதூர் அழகர்நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் தெய்வேந்திரன். இவரது மனைவி ஷீலாராணி(வயது35). இவர் குடும்ப தேவைக்காக பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி செய்துள்ளனர். இதனால் வாழ்க்கையில் விரக்திய டைந்த ஷீலாராணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  சிந்தாமணி அழகர்நகரை சேர்ந்தவர் மகாலிங்கம்(60). இவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்தார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் விரக்தியடைந்த மகாலிங்கம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி சரோஜா கொடுத்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  இதேபோல் காமரா ஜர்புரம் வ.உ.சி. தெருவை சேர்ந்த கணேசன்(30) என்பவரும் குடிப்பழக்கத் தால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  50 வயதை கடந்ததுமே சில பழக்கவழக்கங்களை பின்பற்ற தொடங்கினாலே முதுமை காலத்தை ஆனந்தமயமாக கழிப்பதற்கு அடித்தளமிட்டுவிடலாம்.
  முதுமை, வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது. ஆனால் முதுமை பருவத்தை நோய் நொடியின்றி மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக எதிர்கொள்வதற்கு சில நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது அவசியமானது. 50 வயதை கடந்ததுமே சில பழக்கவழக்கங்களை பின்பற்ற தொடங்கினாலே முதுமை காலத்தை ஆனந்தமயமாக கழிப்பதற்கு அடித்தளமிட்டுவிடலாம்.

  1. சுறுசுறுப்பு: உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது அவசியம். அது கவலை, மனச்சோர்வை குறைக்க உதவும். உடல் சம நிலையையும், மன நிலையையும் மேம்படுத்துவதற்கு சில பயிற்சிகள் கைகொடுக்கும். இதுநாள் வரை உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்திருந்தாலும் கூட 50 வயதை கடந்த பிறகு உடற்பயிற்சியை நாட வேண்டியது அவசியம். அது ரத்த அழுத்தம், இதய நோய்கள், புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவும். தினமும் உடற்பயிற்சி செய்வதற்கு 30 நிமிடங்கள் ஒதுக்கினாலே போதுமானது. பயிற்சியின்போது தசை வலிமையை அதிகரிப்பதற்கும் கவனம் செலுத்த வேண்டும்.

  2. இணைந்திருங்கள்: முதுமை காலகட்டத்தை நெருங்கிவிட்டாலே சிலர் தனிமையை விரும்ப தொடங்கிவிடுவார்கள். அது குடும்பத்தினரிடம் இருந்து விலகுவதற்கு தாமே அடித்தளமிட்டதாக அமைந்துவிடும். குடும்பத்தினர், நண்பர்களுடனான தொடர்பை இழப்பதற்கான சூழலை ஒருபோதும் உருவாகிவிடக்கூடாது. நகைச்சுவை உணர்வை தக்கவைத்துக்கொள்வதும் அவசியமானது. அன்புக்குரியவர்களுடன் பேசுவதும், தொடர்பில் இருப்பதும் மிகவும் முக்கியம். சமூக தொடர்புகளையும் உருவாக்கிக்கொள்ளலாம். சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றில் இணைந்து தன்னார்வ தொண்டுகளில் ஈடுபடலாம். இன்றைய கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வழியாக வீட்டில் இருந்தபடியே சமூக குழுக்களை ஒருங்கிணைத்து சேவையாற்றலாம்.

  3. சமச்சீர் உணவு: ஆயுளை அதிகரிப்பதற்கு சமச்சீர் உணவு வழக்கத்தை பின்பற்ற வேண்டும். 50 வயதை கடந்துவிட்டால் உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதும் அவசியமானது. கார்போஹைட்ரேட், கொழுப்பு உணவுகள் எளிதில் ஜீரணமாகாது. அவற்றை தவிர்த்து ஒமேகா 3 கொழுப்பு அமிலம், நார்ச்சத்து மற்றும் புரதங்கள் கொண்ட உணவுகளை தேர்வு செய்ய வேண்டும். முழு தானியங்கள், நட்ஸ் வகைகள், பழங்கள், காய்கறிகளை உட்கொள்வது முதுமை கால ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. இதய நோய் உள்ளவர்கள் கொழுப்பு நிறைந்த உணவுகளை ஒதுக்கி வைக்க வேண்டும். போதுமான அளவு கால்சியம் கொண்ட உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். கொழுப்பு அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

  4. பரிசோதனை: வயது அதிகரிக்கும்போது நோய் பாதிப்பும் வீரியமடையும். ஆரம்ப நிலையிலேயே நோய் பாதிப்புகளை கண்டறிவதற்கு குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை மேற்கொள்வது அவசியமானது. வழக்கமான பரிசோதனைகளை தவறாமல் செய்துவந்தால் பெரிய சிக்கல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். குறிப்பாக ஒன்றுக்கும் மேற்பட்ட இணை நோய்களை கொண்டிருப்பவர்கள் மருத்துவ பரிசோதனைகளை தவறாமல் மேற்கொள்ள வேண்டும். டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளையும் தவறாமல் உட்கொள்ள வேண்டும். எந்த சூழலிலும் மருந்துகளையும், பரிசோதனைகளையும் புறக்கணிக்கக்கூடாது.

  5. மதுப்பழக்கம்: வயது அதிகரிக்கும்போது உடல் நலம் குறைய தொடங்கும். ஆதலால் உடல் இயக்க செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மது பழக்கம் கொண்டவர்கள் 50 வயதுக்கு பிறகு அறவே தவிர்த்துவிட வேண்டும். வயதான காலத்தில் ஆல்கஹால் நுகர்வு, நோய் பாதிப்புகளை அதிகப்படுத்திவிடும்.

  6. புகைப்பழக்கம்: பொதுவாகவே புகைப்பழக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். வயதான காலத்தில் பாதிப்பை அதிகப்படுத்திவிடும். ஏற்கனவே வயது அதிகரிப்புக்கு ஏற்ப உடல் செயல்பாடுகள், செயல் திறன் குறைந்துவிடும். அதனை கருத்தில் கொள்ளாமல் புகையிலை பொருட்களை நுகர்வது, உயர் ரத்த அழுத்தம், இதய துடிப்பு அதிகரிப்பு, நீரிழிவு நோய், புற்றுநோய், கொழுப்பு அதிகரிப்பு போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடும். புகைப்பழக்கம் எலும்புகளையும் பலவீனப்படுத்திவிடும். ஆதலால் புகைப்பழக்கத்தை அறவே தவிர்த்துவிட வேண்டும்.

  7. தூக்கம்: வயதான காலத்தில் உடல் ஆரோக்கியமாக செயல்பட, சரியான ஓய்வு தேவை. 50 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்களுக்கு 6 முதல் 8 மணிநேர தூக்கம் அவசியம். தூங்கும் நேரம் எவ்வளவு குறைகிறதோ, அதற்கேற்ப ஆரோக்கியத்தில் கடுமையான விளைவை ஏற்படுத்தும். தாமதமாக தூங்க செல்வது, இரவில் இடை இடையே கண் விழிப்பது, சீக்கிரமாகவே எழுந்திருப்பது போன்றவை பல்வேறு உடல்நல கோளாறுகளுக்கு வழிவகுக்கும், தூங்குவதில் சிக்கல் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.