search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "differently abled"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பள்ளியில் "லிப் ரீடிங்" முறையில் விடாமுயற்சியுடன் கல்வியை பயின்றார்
    • 2021ல் பார் தேர்வில் வெற்றி பெற்று வழக்கறிஞர் ஆனார்

    கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரூவை சேர்ந்தவர் 27 வயதான சாரா சன்னி (Sarah Sunny).

    இவருக்கு மரியா சன்னி எனும் சகோதரியும் பிரதிக் குருவில்லா எனும் சகோதரனும் உள்ளனர். பிரதிக் அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். மரியா பட்டய கணக்காளராக பணிபுரிகிறார்.

    இவர்கள் மூவருக்கும் சிறு வயது முதலே இரண்டு செவிகளிலும் கேட்டல் குறைபாடு உண்டு. இருந்தும்  அதனை பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியால் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை இவர்கள் அடைந்தனர்.

    இவர்களது பெற்றோர், கேட்டல் குறைபாடு உள்ளவர்களுக்கான பிரத்யேக பள்ளிகளில் இவர்களை படிக்க வைக்காமல், இத்தகைய குறைபாடுகள் உள்ளவர்களையும் பிற குழந்தைகளுடன் படிக்க அனுமதிக்கும் பள்ளிகளிலேயே இவர்களை சேர்த்தனர்.

    பள்ளியில் சாரா "லிப் ரீடிங்" (lip reading) எனும் உதடுகளின் அசைவை உணரும் வழிமுறை மூலமாக கல்வி கற்று கொண்டார். பெங்களூரூவில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் சட்ட கல்வியில் சேர்ந்தார். அங்கும் அதே முறையில் பயின்றார்.

    2021ல் பார் தேர்வில் வெற்றி பெற்று வழக்கறிஞர் ஆனார்.

    இந்நிலையில், சில நாட்களுக்கு முன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் முன்பாக தனது கட்சிக்காரருக்காக வாதாடினார்.

    சாராவிற்காக ஒரு சைகை மொழி மொழிபெயர்ப்பாளரை (sign language interpreter) வைத்து கொள்ள உச்ச நீதிமன்றம் உதவியது. சைகை மொழி மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் இவர் தனது வாத பிரதிவாதங்களை வைக்க, அதனை தலைமை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.

    இந்திய சட்ட வரலாற்றில் உச்ச நீதிமன்றத்தில் இத்தகைய குறைபாடு உள்ள ஒருவர் வாதாடியது இதுவே முதல் முறை.

    சன்னிக்கு கிடைத்த இந்த வாய்ப்பின் மூலம் இந்தியாவில் எதிர்காலத்தில் சட்டத்துறையில் கல்வி பெறவும், வழக்கறிஞராக பணியாற்றவும் இவரை போன்ற பலர் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள் என பிரபல உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

    • தேர்தல் பிரசாரத்தின் போது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மீண்டும் ஈரோட்டுக்கு வருவேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
    • நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்து உள்ளனர்.

    ஈரோடு:

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஈரோட்டுக்கு வருகை தருகிறார்.

    இன்று மாலை 4 மணி அளவில் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மாற்று திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார். இந்த தேர்தலில் இளங்கோவன் அபார வெற்றி பெற்றார்.

    தேர்தல் பிரசாரத்தின் போது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மீண்டும் ஈரோட்டுக்கு வருவேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அதன்படி இன்று மாலை 5 மணிக்கு ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அக்ரஹாரம் பகுதியிலும், 5.30 மணிக்கு கருங்கல்பாளையம் காந்தி சிலை பகுதியிலும், 6 மணிக்கு மரப்பாலம், அண்ணா டெக்ஸ் மேடு பகுதிகளிலும் வாக்காளர்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவிக்கிறார்.

    முன்னதாக ஈரோடு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்து உள்ளனர்.

    • மாற்றுத்திறனாளிகள் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
    • போராட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.

    முதுகுளத்தூர்

    அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச்சங்கம் சார்பில் மத்திய பட்ஜெட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதியை பாதியாக குறைத்ததை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

    யூனியன் ஆணையாளர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் தேவ பிரியதர்ஷினி ஆகிேயார் நேரில் வந்து, நீங்கள் அளித்த கோரிக்கை சரியானது. இதை விரைவில் சரி செய்து தருவதாக உறுதி அளித்ததின் பெயரில் இந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. போராட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.

    தாலுகா தலைவர் முனியசாமி, துணைத் தலைவர் முத்து கண்ணன், இணை செயலாளர் மயில்சாமி, உறுப்பினர்கள் வில்வதுரை, ராமர் விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி முருகன், அங்குதன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    • பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழை பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
    • மாற்றுத்திறனாளியாயின் அதற்கான சான்று நகல் இணைக்கப்பட வேண்டும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் நடப்பு நிதியாண்டிற்கான சத்தியவாணி முத்து அல்மையார் நினைவு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 20 முதல் 40 வயதிற்கு உட்பட்ட விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழை பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த இலவச தையல் எந்திரங்களை பெற விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள் விவரம் வருமாறு :-

    வருமானச் சான்று நகல் ரூ.72,000-த்திற்குள் இருத்தல் வேண்டும். (தாசில்தாரிட மிருந்து பெறப்பட வேண்டும்). பிறந்த தேதிக்கான வயது சான்று நகல் அல்லது கல்வி சான்று நகல் வேண்டும் (வயது 20 முதல் 40 வரை இருத்தல் வேண்டும்) .

    விதவையாயின் அதற்கான சான்று நகல் (தாசில்தாரிடமிருந்து) பெறப்பட வேண்டும். சாதிச் சான்று நகல் (தாசில்தாரிடமிருந்து) பெற வேண்டும். கணவரால் கைவிடப்பட்டவராயின் அதற்கான சான்று நகல் (தாசில்தாரிடமிருந்து) பெற வேண்டும்.

    மாற்றுத் திறனாளியாயின் அதற்கான சான்று நகல் இணைக்கப்பட வேண்டும். தையல் தெரியும் என்பதற்கான சான்று நகல் (இணைக்கப்பட்ட வேண்டும்).

    குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல். பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம் 2.மேற்கண்ட ஆவணங்க ளுடன் அவரவர் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக த்தில் பணிபுரியும் சமூக நல விரிவாக்க அலுவலர்/ ஊர்நல அலுவலர் ஆகியோர்களை அணுகி, இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    மேலும் விவரங்களுக்கு அறை எண்.303, 3-வது தளம், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தஞ்சாவூர் என்ற முகவரியில் நேரில் வந்து விண்ணப்பித்து பயன் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • இன்று முதல் 28-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • குடும்ப அட்டை நகல் ஆகிய ஆவணங்களை கொண்டுவர வேண்டும்.

    கோவை

    கோவையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று முதல் 28-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், தேசிய அடை யாள அட்டை புதுப்பித்தல், தனித்து வமான அடையாள அட்டை பதிவு, மருத்துவ உபகரணங்கள் வழங்கல், அறுவை சிகிச்சைக்கு பயனாளிகள் தோ்வு உள்ளி ட்டவை மேற்கொ ள்ளப்படுகிறது.

    எனவே மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் இம்முகாமை பயன்படுத்திகொள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

    முகாம்கள் பேரூா் வட்டாரத்தில் குனியமுத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்றும், கோவை மாநகா் வட்டாரத்தில் டாடாபாத் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 3-ந் தேதியும், கிணத்துக்கடவு வட்டாரத்தில், கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 -ந் தேதியும்,

    பெரிய நாயக்கன்பாளையம் வட்டாரத்தில், நரசிம்ம நாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 8-ந் தேதியும், அன்னூா் வட்டாரத்தில், அன்னூா் அமரா் எ.முத்துக்கவுண்டா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ந் தேதியும், காரமடை வட்டாரத்தில் மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ந் தேதியும் முகாம்கள் நடைபெற உள்ளன.

    சுல்தான்பேட்டை வட்டாரத்தில், சுல்தான்பேட்டை அரசு உயா்நிலைப் பள்ளியில் 13 -ந் தேதியும், பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 15 -ந் தேதியும் எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில், எஸ்.எஸ்.குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 17-ந் தேதியும், பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 20-ந் தேதியும் ஆனைமலை வட்டாரத்தில், ஆனைமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 22-ந் தேதியும் நடைபெறுகிறது.

    சூலூா் வட்டாரத்தில் சூலூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 23-ந் தேதியும், தொண்டாமுத்தூா் வட்டாரத்தில், தொண்டாமுத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 24-ந் தேதியும், மதுக்கரை வட்டாரத்தில், மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பிப்ரவரி 27-ந் தேதியும், வால்பாறை வட்டாரத்தில், வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 28 -ந் தேதியும் நடைபெறுகிறது.

    முகாம்கள் காலை 9.30 முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறுகிறது. முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள் 4, ஆதாா் அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகிய ஆவணங்களை கொண்டுவர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    • உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • பயனாளிகளுக்கு உதவித் தொகை பெறும் அங்கீகார அடையாள அட்டையை வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் தொகுதியை சேர்ந்த 17 புதிய பயனாளிகளுக்கு சமூக நலத்துறை மூலம் மாற்றுத்தி றனாளிகளுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    எதிர்க்கட்சித் தலைவரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான சிவா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உதவித் தொகை பெறும் அங்கீகார அடையாள அட்டையை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், ஆதிதிராவிடர் அணி கலிய மூர்த்தி, தொகுதி துணை செயலாளர் அங்காளன், தொகுதி இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், ராஜி, ரமணன், தர்மராஜ், சபரி, முத்துப்பாண்டி, தங்கராசு, ஜெகன்மோகன், ஜனா, கேவி.ஆர். ஏழுமலை, பழனிசாமி, கந்தன், தட்சிணாமூர்த்தி, ஏழுமலை, ஹரி கிருஷ்ணன், அன்பு, திலகர், மிலிட்டரி முருகன், கார்த்தி, ராஜா முகமது, நாதன் , அன்பு நிதி, முருகேசன், ரகு, பாலு, தனகொடி, சேகர் நடராசன், பார்த்திபன், மோகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி வீரர் அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் வாழ்த்து பெற்றார்.
    • இவருக்கு சிறந்த ஆட்டக்காரருக்கான விருது மற்றும் அதிக ரன்கள் எடுத்தமைக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கீழச்செல்வனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்பாபு. இவர் மாற்றுத்திறனாளிக்கான சக்கர நாற்காலி போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.

    இவர் கடந்த டிசம்பரில் பாகிஸ்தானில் நடந்த சக்கர நாற்காலி ஆசிய கோப்பை கிரிக்கெட் 20- 20 போட்டிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் இந்திய அணி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு கலந்து கொண்டார்.

    இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி ஆசிய கோப்பை கைப்பற்றியது. மாற்றுத்திறனாளிக்கான சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட வினோத் பாபுவுக்கு சிறந்த ஆட்டக்காரருக்கான விருது மற்றும் அதிக ரன்கள் எடுத்தமைக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று தமிழகத்திற்கு வந்தவுடன் பாகிஸ்தானில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வதற்கு தேவையான உதவிகளை செய்ததற்காக அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் வெற்றி கோப்பை, பதக்கங்கள், சான்றிதழ்களை காண்பித்து மாற்றுத்திறனாளி சக்கர நாற்காலி கிரிக்கெட் கேப்டன் வினோத்பாபு வாழ்த்து பெற்றார்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டது
    • நிறுவனர் சபரிமலைநாதன்,சமூக ஆர்வலர் வினோத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவில் முத்தமிழ் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. காக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் செந்தில்குமாரின் தாயார் புற்று நோயால் காலமானார். அவரது 60-வது நினைவு நாளை முன்னிட்டு இந்த அறக்கட்டளை மூலம் முதுகுளத்தூரில்

    30-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. இதில் அறக்கட்டளை நிறுவனர் சபரிமலைநாதன்,சமூக ஆர்வலர் வினோத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இயன்முறை சிகிச்சை கருவிகளோடு இருப்பிடத்திற்கே சென்று மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் நடமாடும் சிகிச்சை வாகனத்தை தொடங்கி வைத்தார்.
    • மாற்றுத்திறனாளி நலத்துறையின் வாயிலாக மறுவாழ்வு திட்டங்கள் குறித்து கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளுக்கான வாகனத்தை வழங்கி இருந்தார்.

    தென்காசி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனத்தின் மூலம் இயன்முறை சிகிச்சை கருவிகளோடு இருப்பிடத்திற்கே சென்று மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன்பெறும் வகையில் நடமாடும் சிகிச்சை வாகனத்தை தொடங்கி வைத்தார்.

    அதன்படி தசை பயிற்சி அளித்தல், செயல் திறன் பயிற்சி, பேச்சுப் பயிற்சி, உதவி உபகரணங்களுக்கான மதிப்பீடு,விளையாட்டு முறையில் சிகிச்சை அளித்தல் மற்றும் மாற்றுத்திறனாளி நலத்துறையின் வாயிலாக மறுவாழ்வு திட்டங்கள் குறித்து கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளுக்கான வாகனத்தை வழங்கி இருந்தார்.

    அந்த வகையில் தென்காசி மாவட்ட கலெக்டர் வளாகத்தில் கலெக்டர் ஆகாஷ் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன்பெறும் வகையில் மாற்றுத்திறனாளி களுக்கான நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனத்தை கலெக்டர் ஆகாஷ் பார்வையிட்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • உடன்குடி வட்டார வளமையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • வட்டார ஆளவில் 6 பள்ளிகளில் இருந்து 50 மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    உடன்குடி:

    தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் உடன்குடி வட்டார வளமையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    உடன்குடி யூனியன் துணைத்தலைவர் மீரா சிராஜூதீன் தலைமை தாங்கினார். உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவர் மால்ராஜேஷ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சாந்தி, பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் ஜான்பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உடன்குடி வட்டார ஆளவில் 6 பள்ளிகளில் இருந்து 50 மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நலத் திட்டங்கள், உதவித்தொகை, வேலைவாய்ப்புகள் குறித்து பேரூராட்சி துணைத் தலைவர் மால்ராஜேஷ் பேசினார்.

    சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்தை சிறப்பாக பாடிய இரு மாணவிகளுக்கு உடன்குடி பேரூராட்சி உறுப்பினர் மும்தாஜ் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் சலீம், தி.மு.க. ஓன்றிய பொருளாளர் ஷேக் முகம்மது, நகர பொருளாளர் திரவியம், நிர்வாகிகள் ஹீபர், கணேசன், சக்கரவர்த்தி, அன்வர்சலீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் சங்கரன்கோவில் ஒன்றியம் சார்பாக வட்டார வள மையத்தில் நடந்தது.
    • 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள 35 மாற்றுத்திறனாளி மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பள்ளிக் கல்வித்துறை - மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின் கீழ் விளையாட்டுப் போட்டிகள் சங்கரன்கோவில் ஒன்றியம் சார்பாக வட்டார வள மையத்தில் நடந்தது. போட்டிகளை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தனர். இதில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஓட்டப்பந்தயம், பந்தை வட்டத்திற்குள் வைத்தல், எறிபந்து விளையாட்டு முதலியவை நடைபெற்றன. 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள 35 மாற்றுத்திறனாளி மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். முடி வில் பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்ப ட்டது.


    இதில் மாவட்ட துணை செயலாளர் புனிதா, மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரிய துரை, நகர செயலாளர் பிரகாஷ், இளைஞரணி சரவணன், மாவட்ட பிரதிநிதி டைட்டஸ் ஆதித்தன், முத்துக்கு மார், அவைத் தலைவர் முப்புடாதி, நகர துணை செயலாளர்கள் கேஎஸ்எஸ் மாரியப்பன், சுப்புத்தாய், முத்துக்குமார் பொருளாளர் லாசர் மற்றும் ரமேஷ், வைரவேல், கிளைச் செயலாளர் முருகராஜ், சதீஷ் செல்வராஜ் ஆதி மாவட்ட நெசவாளர் அணி சோம செல்வ பாண்டியன், மாவட்ட வர்த்தக அணி பத்மநாபன், மாணவர் அணி கார்த்தி, அப்பாஸ் அலி, உதயகுமார், அஜய் மகேஷ் குமார் வார்டு செயலாளர்கள் தடிகாரன், விக்னேஷ், வீரமணி சுரேஷ், சரவணன் மற்றும் கார்த்தி, குட்டி, செல்வம், அன்சாரி, ஜான்சன், மாவட்ட சிறுபான்மை பிரிவு யோசேப்பு, முருகன், ஜெயக்குமார், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் முத்துச் செல்வி, வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் சண்முகவடிவு மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
    • முகாமில் 134 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்

    கடையம்:

    தென்காசி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மாற்றுத் திறனாளிக்கான சிறப்பு முகாம் கடையம் யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது.

    தெற்கு கடையம் கவுன்சிலர் மாரிகுமார் தலைமை தாங்கினார்.கடையம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும் கவுன்சிலருமான ஜெயக்குமார் முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஜெயபிர காஷ்,ஒன்றிய கவுன்சிலர்கள் மணிகண்டன், ரம்யா ராம்குமார், மடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்வி ரஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டு மனை பட்டா மற்றும் உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. முகாமில் 134 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    ×