என் மலர்
நீங்கள் தேடியது "வயதானவர்கள்"
- ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
- 16,73,333 குடும்ப அட்டைகளுக்கு நேரடியாக பொருட்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அடைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் ரேசன் பொருட்களை தரும் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 12ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மக்கள் நலன்சார்ந்த இத்திட்டம் சிறப்புக் கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும். இத்திட்டத்தின் வாயிலாக 34,809 நியாயவிலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளர்களும், 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27.797 மாற்றுத்தினாளிகளும், ஆக மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள குடும்ப அட்டைகள் மற்றும் பயனாளர்களின் விவரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையிடமிருந்து பெறப்பட்டு. கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களைப் பாதுகாப்பாகத் தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்திற்கே சென்று நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் விநியோகிப்பர்.
70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்குவதால் அரசுக்கு ரூ.30.16 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள மக்கள் நலன் சார்ந்த இத்திட்டம். நலிவுற்ற பிரிவினரின் வாழ்வாதாரத்தை சிறப்புறச் செய்வதுடன் அவர்தம் உணவுப் பாதுகாப்பையும் உறுதிசெய்யும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 12.8.2025 அன்று இத்திட்டத்தை சென்னையில் தொடங்கிவைக்கும் வேளையில், மாவட்டங்களில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள். உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டைப் 2 நீரழிவு நோய் வயதானவர்களிடம் தான் அதிகம் காணப்படுகிறது.
- டைப் 2 நீரழிவுநோயை ஒருவரின் மூச்சிலிருந்து கண்டறிய முடியும்.
இந்தியாவில் வயது வித்தியாசமின்றி அதிகரித்து வரும் நீரழிவு நோய் பற்றிய போதுமான புரிதல் இல்லாதது நோயை முன்கூட்டியே கண்டறிவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எனவே நோயின் அறிகுறிகுறிகள் குறித்து முதலில் விழிப்புணர்வடைவது அவசியம்.
உடலில் அதிக குளுக்கோஸ் இருந்தால், அது ரத்தத்தில் காலத்து சர்க்கரை அளவை அதிகரிக்கும். உடலால் அதிக குளுக்கோஸை பயன்படுத்த முடியும் அளவுக்கு இன்சுலின் சுரக்க முடியாது. இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்படும் போது, டைப் 2 நீரிழிவு நோய் உண்டாகிறது.

டைப் 2 நீரழிவு நோய் வயதானவர்களிடம் தான் அதிகம் காணப்படுகிறது. சமீப காலமாக, உடல் பருமன் பிரச்சனை உள்ள குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடமும் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. டைப் 1 நோய் மரபணு ரீதியாக அடுத்த தலைமுறைக்கு பரவும் நிலையில் டைப் 2 வாழ்க்கை முறைகளாலும் உணவுப் பழக்கத்தாலும் ஏற்படுகிறது.
டைப் 2 நோயை ஒருவரின் மூச்சிலிருந்து கண்டறிய முடியும். உங்களது. உங்களது மூச்சில் பழத்த்தின் வாசனையை அடிக்கடி நேரிட்டால் அது டைப் 2 நீரழிவு நோய் இருப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

ஆரம்பத்தில் கூறியபடி ரத்தத்தில் உள்ள அதிக குளுக்கோஸை சமன் செய்ய கெடோஆசிடோசிஸ் (ketoacidosis) என்ற செயல்பாடு உடலில் நடப்பதால் மூச்சில் இந்த பழ வாசனை உருவாகிறது. இந்த டைப் 2 சர்க்கரை வியாதி இதயம் மற்றும் கல்லீரல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- மேல்மலையனூரில் ஜமாபந்தி நிறைவு விழா 260 பேருக்கு ரூ.19. 89 லட்சம் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களால் வழங்கப்பட்டது
- மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார்.மாவட்ட வருவாய்அலுவலர் ராஜசேகரன் வரவேற்றார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் ஜமாபந்தி நிறைவு விழா தாசில்தார் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய்அலுவலர் ராஜசேகரன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டுபயனா ளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
நிறைவு நாள் நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் 50 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளும் இலவச வீட்டுமனைப்பட்டா 31 பேருக்கும் ரேசன் கார்டு 20 பேருக்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 3பேருக்குஅரசு நலத்திட்ட உதவிகளும், தோட்டக்கலைத் துறையின் மூலம் 3 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 260 பேருக்கு ரூ.19 லட்சத்து 89 ஆயிரத்து290 ரூபாய் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் மேல்மலையனூர் யூனியன் தலைவர் தலைவர் கண்மணி நெடுஞ்செழியன், மேல்மலையனூர் தாசில்தார் கோவர்தனன், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், சுப்பிரமணியன், ஜமாபந்தி கண்காணிப்பு அலுவலர் உஷா, யூனியன் துணைத்தலைவர் விஜயலட்சுமி முருகன் மேல்மலையனூர் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன்,மாவட்ட கவுன்சிலர் சாந்தி சுப்பிரமணியன், செல்வி ராம சரவணன், ஒன்றிய கவுன்சிலர் யசோதை சந்திரகுப்தன்,மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






