என் மலர்
நீங்கள் தேடியது "நீரழிவு நோய்"
- அமெரிக்க விசா வழங்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
- டிரம்ப் நிர்வாகம் புதிய வழிகாட்டு நெறி முறையை வெளியிட்டு உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன. இதில் விசா வழங்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
இந்நிலையில் அமெரிக்கா விசாவிற்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டினருக்கு இதய நோய், நீரிழிவு அல்லது உடல் பருமன் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால் அவர்களின் விண்ணப்பத்தை நிராகரிக்கலாம் என்று டிரம்ப் நிர்வாகம் புதிய வழிகாட்டு நெறி முறையை வெளியிட்டு உள்ளது.
அமெரிக்க விசாவுக்காக விண்ணப்பிக்கும் நபருக்கு தொற்று நோய் இருக்கிறதா, என்னென்ன தடுப்பூசிகளை இதுவரை அவர்கள் செலுத்தி இருக்கிறார்கள், அவர்களின் மனநிலை ஆரோக்கியமாக இருக்கிறதா ஆகிய ஆய்வு செய்யப்படுவது வழக்கம்.
இதில் தற்போது கூடுதலாக நீரிழிவு, இதய நோய் மற்றும் உடல் பருமன் ஆகியவற்றையும் டிரம்ப் நிர்வாகம் சேர்த்துள்ளது. இந்த வழிகாட்டுதல்களை அமெரிக்க தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களுக்கு டிரம்ப் நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது.
அதில் விண்ணப்பதாரரின் உடல் நலன் எப்படி இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், குறிப்பாக இதய நோய் , சுவாச நோய், புற்றுநோய், நீரிழிவு, வளர்சிதை மாற்ற நோய்கள், நரம்பியல் நோய்கள் மற்றும் மனநல நிலைமைகள் உள்ளிட்ட சில மருத்துவ நிலைமைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த நோய்கள் பராமரிப்புக்கு லட்சக்கணக்கான டாலர் தேவைப்படலாம் அந்த செலவுகளை ஏற்கக் கூடிய வகையில் விண்ணப்பதாரர் இருக்கிறாரா என்பதையும் விசா அதிகாரிகள் மதிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் விண்ணப்பதாரரின் குழந்தைகள் அல்லது வயதான பெற்றோர் போன்ற குடும்ப உறுப்பினர்களின் உடல் நிலையை மதிப்பிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நகர்ப்புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களில் 2 மடங்கு பாதிப்பு இருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது.
- 46 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதே தெரியவில்லை.
இந்தியாவில் 45 வயதுக்கு மேற்பட்ட ஐந்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது என லான்செட் ஆய்விதழ் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 2019 இல் நடத்தப்பட்ட ஆய்வின் தரவுகள் இதில் வழங்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், உலகளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஏழு பேரில் ஒருவர் இந்தியாவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. நகர்ப்புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களில் 2 மடங்கு பாதிப்பு இருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது.
லான்செட் அறிக்கை 19.6 சதவீத ஆண்களும் 20.1 சதவீத பெண்களும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது.
இதில் 46 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதே தெரியவில்லை. இதன் விளைவாக, அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மீதம் உள்ளவர்களில் 59 சதவீதம் பேர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 சதவீதம் பேர் இதய நோய் ஆபத்தும் கொலஸ்டிரால் பாதிப்பை கொண்டுள்ளனர்.
எனவே இந்தியர்களிடையே நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அறிக்கை கூறியுள்ளது.
40 வயதைக் கடந்துவிட்டாலே 3 மாதங்களுக்கு ஒருமுறை HbA1c ரத்தப் பரிசோதனை செய்து 3 மாத ரத்த சர்க்கரை அளவின் சராசரியை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்து வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
- அதிக நார்ச்சத்து இருப்பதால் எடை குறைக்க உதவுகிறது.
- இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் அதே வேளையில் ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.
வெண்டைக்காய் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகப்பெரிய பயனுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வெண்டைக்காய் ஏ பிரிவு ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துகிறது
இது டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிறந்தது. செரிமானம், நீரேற்றம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கிறது.
இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால் எடை குறைக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் அதே வேளையில் ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. இது வயிற்றுப் புண்களைக் குணப்படுத்துகிறது.
நீரழிவு நோயாளிகள் 8 வாரங்களுக்கு ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் 1000 மைக்ரோகிராம் வெண்டைக்காயை உட்கொள்வது சர்க்கரை குறைப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வெண்டைக்காயை காய்கறி உணவாகச் சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல், வெண்டைக்காய் தண்ணீரைக் குடிக்கலாம்.
2அல்லது 3 வெண்டைக்காய்களை எடுத்து, அவற்றை நன்கு கழுவி, முனைகளை வெட்டி, சிறிய பிளவுகளை உருவாக்குங்கள்.
அவற்றை தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, தண்ணீரை வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
நார்ச்சத்து நிறைந்த இந்த பானம் செரிமானத்தை மெதுவாக்குகிறது. சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்கிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், அதிகப்படியான நார்ச்சத்து வீக்கம் அல்லது லேசான வயிற்று அசவுகரியத்தை ஏற்படுத்தக்கூடும்,
வெண்டைக்காய் நீர் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது. மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் தீரும், அதே நேரத்தில் வலிமை இயற்கையாகவே அதிகரிக்கும்," என்று இருதயநோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
- டைப் 2 நீரழிவு நோய் வயதானவர்களிடம் தான் அதிகம் காணப்படுகிறது.
- டைப் 2 நீரழிவுநோயை ஒருவரின் மூச்சிலிருந்து கண்டறிய முடியும்.
இந்தியாவில் வயது வித்தியாசமின்றி அதிகரித்து வரும் நீரழிவு நோய் பற்றிய போதுமான புரிதல் இல்லாதது நோயை முன்கூட்டியே கண்டறிவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எனவே நோயின் அறிகுறிகுறிகள் குறித்து முதலில் விழிப்புணர்வடைவது அவசியம்.
உடலில் அதிக குளுக்கோஸ் இருந்தால், அது ரத்தத்தில் காலத்து சர்க்கரை அளவை அதிகரிக்கும். உடலால் அதிக குளுக்கோஸை பயன்படுத்த முடியும் அளவுக்கு இன்சுலின் சுரக்க முடியாது. இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்படும் போது, டைப் 2 நீரிழிவு நோய் உண்டாகிறது.

டைப் 2 நீரழிவு நோய் வயதானவர்களிடம் தான் அதிகம் காணப்படுகிறது. சமீப காலமாக, உடல் பருமன் பிரச்சனை உள்ள குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடமும் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. டைப் 1 நோய் மரபணு ரீதியாக அடுத்த தலைமுறைக்கு பரவும் நிலையில் டைப் 2 வாழ்க்கை முறைகளாலும் உணவுப் பழக்கத்தாலும் ஏற்படுகிறது.
டைப் 2 நோயை ஒருவரின் மூச்சிலிருந்து கண்டறிய முடியும். உங்களது. உங்களது மூச்சில் பழத்த்தின் வாசனையை அடிக்கடி நேரிட்டால் அது டைப் 2 நீரழிவு நோய் இருப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

ஆரம்பத்தில் கூறியபடி ரத்தத்தில் உள்ள அதிக குளுக்கோஸை சமன் செய்ய கெடோஆசிடோசிஸ் (ketoacidosis) என்ற செயல்பாடு உடலில் நடப்பதால் மூச்சில் இந்த பழ வாசனை உருவாகிறது. இந்த டைப் 2 சர்க்கரை வியாதி இதயம் மற்றும் கல்லீரல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.






