search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Type-2 Diabetes"

  • டைப் 2 நீரழிவு நோய் வயதானவர்களிடம் தான் அதிகம் காணப்படுகிறது.
  • டைப் 2 நீரழிவுநோயை ஒருவரின் மூச்சிலிருந்து கண்டறிய முடியும்.

  இந்தியாவில் வயது வித்தியாசமின்றி அதிகரித்து வரும் நீரழிவு நோய் பற்றிய போதுமான புரிதல் இல்லாதது நோயை முன்கூட்டியே கண்டறிவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எனவே நோயின் அறிகுறிகுறிகள் குறித்து முதலில் விழிப்புணர்வடைவது அவசியம்.

  உடலில் அதிக குளுக்கோஸ் இருந்தால், அது ரத்தத்தில் காலத்து சர்க்கரை அளவை அதிகரிக்கும். உடலால் அதிக குளுக்கோஸை பயன்படுத்த முடியும் அளவுக்கு இன்சுலின் சுரக்க முடியாது. இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்படும் போது, டைப் 2 நீரிழிவு நோய் உண்டாகிறது.

   

  டைப் 2 நீரழிவு நோய் வயதானவர்களிடம் தான் அதிகம் காணப்படுகிறது. சமீப காலமாக, உடல் பருமன் பிரச்சனை உள்ள குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடமும் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. டைப் 1 நோய் மரபணு ரீதியாக அடுத்த தலைமுறைக்கு பரவும் நிலையில் டைப் 2 வாழ்க்கை முறைகளாலும் உணவுப் பழக்கத்தாலும் ஏற்படுகிறது.

  டைப் 2 நோயை ஒருவரின் மூச்சிலிருந்து கண்டறிய முடியும். உங்களது. உங்களது மூச்சில் பழத்த்தின் வாசனையை அடிக்கடி நேரிட்டால் அது டைப் 2 நீரழிவு நோய் இருப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

   

   ஆரம்பத்தில் கூறியபடி ரத்தத்தில் உள்ள அதிக குளுக்கோஸை சமன் செய்ய கெடோஆசிடோசிஸ் (ketoacidosis) என்ற செயல்பாடு உடலில் நடப்பதால் மூச்சில் இந்த பழ வாசனை உருவாகிறது. இந்த டைப் 2 சர்க்கரை வியாதி இதயம் மற்றும் கல்லீரல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

  • அதிக உடல் எடை உள்ளவர்களுக்கு ஏற்படும்.
  • செல்கள் கிளர்வூட்டப்பட்டு தோல் கருமை ஏற்படுகிறது.

  உங்கள் உடம்பு கருத்து போவதற்கு காரணம் அகாந்தோசிஸ் நைக்ரிகன்ஸ்' எனப்படும் நோயாகும். இந்நோயில், ஒரு சில நீரிழிவு நோயாளிகளுக்கு குறிப்பாக முகம், நெற்றி, கழுத்து, முழங்கை, இடுப்பு, அக்குள், உடல் மடிப்புகள், முட்டி போன்ற இடங்களில் கருமையான தடிமனான தன்மையுடையதாக தோல் மாறும். இது பெரும்பாலும் 40 வயதை கடந்த டைப் 2 நீரிழிவு நோயாளிகள் மற்றும் அதிக உடல் எடை உள்ளவர்களுக்கு ஏற்படும்.

  இது ஏற்படக் காரணம் ஒரு சில நீரிழிவு நோயாளிகளிடம் காணப்படும் இன்சுலின் எதிர்மறை நிலையால், இன்சுலின் அளவு மற்றும் இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணிகள் அதிகரிப்பதால், கெரட்டினோசைட் மற்றும் பைபிரோபிலாஸ்ட் போன்ற செல்கள் கிளர்வூட்டப்பட்டு இது போன்ற தோல் கருமை ஏற்படுகிறது.

   சர்க்கரை நோயாளிகளுக்கு உடல் கருமையாவதற்கு மற்றொரு காரணம் 'டயாபட்டிக் டெர்மோபதி ஆகும். இது பெரும்பாலும் கால்கள் மற்றும் பாதங்களில் குறைந்த குருதியோட்டத்தால் ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக தோல் நோய் மருத்துவரை கலந்தாலோசித்து தோலில் கருமை நிறம் ஆவதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்று கண்டறியப்பட வேண்டும்.

  ஏனெனில் ஹைப்போதைராய்டிசம், அக்ரோமெகாலி, குஷ்ஷிங் சிண்ட்ரோம் போன்ற நோய்களாலும் தோலில் கருமை நிறம் ஏற்படலாம். ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருத்தல் மற்றும் மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்துகள்' மற்றும் மேல் பூச்சு களிம்பு மூலமாக இந்தக் கருமை நிறத்தை நாம் சரி செய்யலாம்.

  • அச்சுறுத்தும் நோய்களில் ஒன்றாக நீரிழிவு நோய் காணப்படுகிறது.
  • வயது வித்தியாசமின்றி இந்த நோய் தாக்கும் ஆபத்து உள்ளது.

  சர்வதேச அளவில் மக்களை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்றாக நீரிழிவு நோய் காணப்படுகிறது. வயது வித்தியாசமின்றி இந்த நோய் தாக்குதல் ஆபத்து உள்ளது. வரும்முன் காப்போம் என்பதை கருத்தில் கொண்டு உணவுப்பழக்கம், வாழ்வியல் முறைகளில் கட்டுப்பாடு போன்றவற்றை முறையாக கடைப்பிடிப்பதன் மூலம் இந்த நோய் வராமல் பாதுகாக்க இயலும். ஒரு வேளை நோய் தாக்குதல் இருந்தாலும் அதை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

  நீரிழிவு நோய் குறித்த பல்வேறு சந்தேகங்களும், நம்பிக்கைகளும் மக்களிடம் உள்ளது. அவற்றுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் உதவும் மருத்துவ தகவல்களை காண்போம்.

  டைப்-1, டைப்-2 நீரிழிவு நோய்

  டைப் 1 நீரிழிவு நோய் சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினரிடையே காணப்படும் நோயாகும். இதில் கணையத்தில் உள்ள பீட்டா செல்களை உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்கள் அழிக்கிறது. இது ஒரு தன்னியக்க நோய் எதிர்ப்பு நிலையாகும். இது மரபணு காரணங்கள் மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களால் ஏற்படலாம். டைப் 1 நீரிழிவு நோயில், இன்சுலின் உற்பத்தி முற்றிலும் நடைபெற முடியாமல் போகிறது. தாய்க்கு டைப் 1 நீரிழிவு நோய் இருக்கும்போது குழந்தைக்கு மூன்று சதவிகிதமும் தந்தைக்கு டைப்1 நீரிழிவு நோய் இருக்கும் போது குழந்தைக்கு ஐந்து சதவிகிதமும் இந்நோய் ஏற்பட அபாயம் உள்ளது.

  டைப் 2 நீரிழிவு நோய்

  அனைத்து வயதினரையும், குறிப்பாக 30 வயதை கடந்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது ஒரு வளர்சிதை மாற்ற நோயாகும். இந்நோயில், உடலில் இன்சுலின் உற்பத்தி குறைவாக இருப்பதாலும், அப்படி சுரக்கப்படும் இன்சுலின் உடலில் உள்ள இன்சுலின் எதிர்ப்பு நிலையால் (இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்) திறம்பட செயல்பட முடியாமல் போகிறது. இதனால் ரத்த சர்க்கரை அதிகமாகிறது. உடல் பருமன், தவறான உணவு பழக்கங்கள் மற்றும் தவறான வாழ்க்கை முறை பழக்க வழக்கங்கள் இதை ஏற்படுத்துகிறது.

  பரிசோதனைகள்

  டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயினை உறுதிப்படுத்த ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதிக்கப்படுகிறது. இதில் உணவுக்கு முன் ரத்த சர்க்கரை அளவு, உணவு உண்ட பின் இரண்டு மணி நேரம் கழித்து எடுக்கப்படும் ரத்த சர்க்கரை அளவு, குளுக்கோஸ் சகிப்புத்தன்மை சோதனை (ஜி.டி.டி), எச்.பி.ஏ1சி, இன்சுலின் அளவு, சீ-பெப்டைட் டெஸ்ட் போன்ற பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

  டைப் 1 நீரிழிவு நோயை டைப் 2 நீரிழிவு நோயிலிருந்து வேறுபடுத்துவதற்கு சில குறிப்பிட்ட பரிசோதனைகள் இருக்கிறது. இதற்கு ஆன்ட்டிபாடி டெஸ்ட் என்று (பிற பொருள் எதிரி) பெயர். இந்த பரிசோதனையில் ஜி. ஏ.டி ஆன்டிபாடீஸ் (குளுடாமிக் ஆசிட்டிகார்பாக்சிலேஸ்), இன்சுலினோமா அசோசியேட்டடு 2ஆட்டோ ஆன்ட்டிபாடிஸ் IA-2A, இன்சுலின் ஆட்டோ ஆன்ட்டிபாடிஸ் (IAA), ஐலட் செல் சைடோபிலாஸ்மிக் ஆட்டோ ஆன்டிபாடிஸ் (ICA) போன்ற பிறப்பொருள் எதிரி பரிசோதனைகள் செய்து டைப் 1 நீரிழிவு நோயை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

   ஆரம்பகட்டத்திலேயே எப்படி கண்டறிவது?

  நீரிழிவு நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதற்கு ஓரல் குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட் (ஓ.ஜி. டி.டி) பரிசோதனை செய்ய வேண்டும். இப்பரிசோதனையில் முதலில் வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரை பரிசோதனை (பாஸ்டிங் பிளட் சுகர்) செய்யப்படுகிறது. பின்னர் தண்ணீரில் 75 கிராம் குளுக்கோஸ் கலந்து குடித்துவிட்டு, இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் ஒருமுறை ரத்தச் சர்க்கரை அளவு பரிசோதனை செய்து பார்க்கப்படுகிறது.

  வெறும் வயிற்றில் 100 மி.கி/டெசி லிட்டருக்கு குறைவாகவும், சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து எடுக்கப்படும் ரத்த சர்க்கரை அளவு 140 மி.கி/டெசி லிட்டருக்கு குறைவாகவும் இருந்தால் அவர்களுக்கு நீரிழிவு நோய் இல்லை என்று அர்த்தம்.

  வெறும் வயிற்றில் 101 மி.கி/டெசி லிட்டர் முதல் 125 மி.கி/டெசி லிட்டர் வரை ரத்தச் சர்க்கரை இருந்தால், அது இம்பேர்டு பாஸ்டிங் குளுக்கோஸ் ஆகும். இது சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையாகும். இதை ப்ரீடயாபட்டீஸ் என்றும் அழைப்பார்கள். சாப்பிட்ட பின் ரத்தச் சர்க்கரை அளவு 141 மி.கி/டெசிலிட்டர் முதல் 199 மி.கி/டெசிலிட்டர் வரை இருந்தால் இம்பேர்டு குளுக்கோஸ் டாலரன்ஸ் என்று பெயர். இதுவும் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையாகும்.

  வெறும் வயிற்றில் 126 மி.கி/டெசிலிட்டருக்கு மேல் இருந்தாலும், சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து ரத்த சர்க்கரை அளவு ௨௦௦ மி.கி/டெசிலிட்டருக்கு மேலிருந்தாலும் அவர்களுக்கு நீரிழிவு நோய் உள்ளது என்று அர்த்தம்.

  நீரிழிவு நோய் அறிகுறி இல்லாதவர்களுக்கும் இந்த ஓரல் குளுக்கோஸ் டெஸ்ட் செய்து பார்க்க வேண்டும். இந்த ஓரல் குளுக்கோஸ் டெஸ்ட்டை, 40 வயதை கடந்தவர்கள், நீரிழிவு நோய் உள்ள குடும்ப பாரம்பரியத்தில் பிறந்தவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், உயர் ரத்த கொலஸ்ட்ரால் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், உடல் உழைப்பு இல்லாமல் வேலை செய்பவர்கள், கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள், அதிக எடை உள்ள குழந்தை பெற்றெடுத்தவர்கள் கண்டிப்பாக செய்து பார்க்க வேண்டும்.

  அதிகமாக வியர்ப்பது ஏன்?

  நீரிழிவு நோயாளிகளில் ஒரு சில பேருக்கு அதிகமான அளவு வியர்ப்பதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுவது...

  ஹைபர்ஹைட்ரோசிஸ்:

  இதில் காரணம் இல்லாமல் அதிகமாக வியர்க்கும் நிலையை பிரைமரி ஹைபர்ஹைட்ரோசிஸ் எனவும், ஏதேனும் காரணத்தோடு ஏற்படும் அதிகமான வியர்வையை செகண்டரி ஹைப்ரோ ஹைட்ராசிஸ் அல்லது டயாப்ரோசிஸ் என்றும் கூறுவார்கள்.

  கஸ்டேட்டரி ஸ்வெட்டிங்:

  இது காரமான உணவை உண்ணும்போதோ அல்லது நுகரும்போதோ முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் அதிகமான வியர்வை ஏற்படும். இது பெரும்பாலும் அட்டானமிக் நரம்புகள் (தன்னிச்சை நரம்புகள்) பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும்.

  இரவு நேர வியர்த்தல்:

  இது பெரும்பாலும் ரத்த சர்க்கரை தாழ்நிலையால் ஏற்படலாம்.

  நீரிழிவு நோயாளிகளுக்கு இதுபோன்று அதிகமான வியர்க்கும் நிலையான ஹைப்ரோஹைட்ராசிஸ்க்கு முக்கிய காரணம், டயாபட்டிக் அட்டானமிக் நரம்பியல் பாதிப்பு, உடல் பருமன் அல்லது மாத்திரைகளின் பக்கவிளைவுகளால் ஏற்படலாம். இதை தவிர்ப்பதற்கு உடல் எடையை குறைக்க வேண்டும்.

  மதுப்பழக்கம், புகைப் பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். ரத்த சர்க்கரை அளவை அடிக்கடி சரிபார்த்து மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து இன்சுலின் மற்றும் சர்க்கரை மாத்திரைகளின் டோசை மாற்றி அமைத்து சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதிகமான வியர்வை ஏற்படுதல் தொற்றுக்கும், உடலில் இருந்து துர்நாற்றம் வீசவும் வழி வகுக்கும்.

  மாத்திரை உட்கொள்ள மறந்து விட்டால்?

  நீரிழிவு நோயாளிகள் பொதுவாக மாத்திரைகளை ஞாபகமறதி காரணமாக சில நேரம் உட்கொள்ள மறந்து விடுகிறார்கள். சில சமயம் மறந்து போனதற்கும் சேர்த்து நிறைய மாத்திரைகளை ஒரே நேரத்தில் உட்கொள்கிறார்கள். சிலர் மாத்திரைகள் வாங்க முடியாத சூழ்நிலையில் மாத்திரைகளை உட்கொள்ள தவறலாம்.

  எப்போதாவது ஒருமுறை மாத்திரையை தவறுவது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் அடிக்கடி நீரிழிவு மாத்திரைகளை உட்கொள்ள தவறும்போது ரத்த சர்க்கரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. நீங்கள் மாத்திரையை தவறவிட்ட ஒரு சில மணி நேரத்திற்குள் அதை உணரும் போது உடனே மாத்திரையை உட்கொள்ளுங்கள்.

  ஆனால் மாத்திரை உட்கொள்ள தவறியதை மிகத்தாமதமாக அடுத்த டோஸ் மாத்திரையை போட வேண்டிய நேரத்தில் உணர நேர்ந்தால், நீங்கள் தவற விட்ட மாத்திரை டோசை தவிர்த்து வழக்கமாக போட வேண்டிய மாத்திரை டோசை உட்கொள்ளுங்கள்.

  எக்காரணம் கொண்டும் தவறவிட்ட மாத்திரையையும் வழக்கமாக உட்கொள்ள வேண்டிய மாத்திரையையும் சேர்த்து இரண்டு மாத்திரைகளாக போடக்கூடாது.

  ×