என் மலர்
தேனி
- கட்டுமான பணியின் போது பழமையான சுவர் இடிந்து தொழிலாளி பலியானார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகில் உள்ள ஆழந்தழிர்தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமர்(51). கட்டிட தொழி லாளி. இவர் சம்பவத்தன்று ரவி என்பவருடன் சேர்ந்து சோலைதேவன்பட்டியில் உள்ள ராகவன் என்பவரது வீட்டில் செப்டிக் டேங்க் கட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த பழமையான சுவர் இடிந்து ராமர் மீது விழுந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கிய ராமரை அங்கிருந்து தொழிலாளர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு ெகாண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ராமர் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் உடன் பணிபுரிந்து கொண்டிருந்த வேலுச்சாமி (60) என்பவரு க்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து கடமலை க்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் நீர்மட்டம் கனிசமாக உயர்ந்து வருகிறது.
- வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூடலூர்:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் நீர்மட்டம் கனிசமாக உயர்ந்து வருகிறது.
இேதபோல் வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.65 அடியாக உள்ளது. வரத்து 822 கன அடி. திறப்பு 400 கன அடி. இருப்பு 2565 மி.கன அடி.
வைைக அணையின் நீர்மட்டம் 48.62 அடியாக உள்ளது. வரத்து 102 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 1818 மி. கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.40 அடியாக உள்ளது. வரத்து 23 கன அடி. இருப்பு 403.25 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 89.87 அடி. வரத்து 5 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 49 மி.கன அடி.
பெரியாறு 30.6, தேக்கடி 24.2, கூடலூர் 3.2, உத்தமபாளையம் 2.8, சண்முகாநதி அணை 2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- உத்தமபாளையத்தை சேர்ந்த அஜித்குமார் தற்கொலை செய்து கொண்டார்.
- குடிபோதையில் இருந்த கீர்த்தி மற்றும் அருண்குமாரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது.
கூடலூர்:
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரம் 2-வது வார்டை சேர்ந்த பால்பாண்டி மகன் அருண்குமார் (வயது23). இவர் தேங்காய் வெட்டும் தொழில் செய்து வந்தார்.
கடந்த பல மாதங்களாக கருநாக்கமுத்தன்பட்டி இந்திரா காலனியை சேர்ந்த கீர்த்தி (25) என்பவருடன் மட்டுமே வேலைக்கு சென்று வந்தார். ஆனால் தற்போது அவரை விடுத்து வேறு நபருடன் வேலைக்கு சென்றார். இதனால் கீர்த்திக்கும், அருண்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் உத்தமபாளையத்தை சேர்ந்த அஜித்குமார் தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்புக்கு அருண்குமார் மற்றும் கீர்த்தி தரப்பினர் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதில் மீண்டும் தகராறு வெடித்தது.
இதனால் அருண்குமாரை தீர்த்து கட்ட கீர்த்தி முடிவு செய்தார். இதற்காக தனது நண்பர்களான கிரேன் (22), பாண்டியன் (24) ஆகியோரை அழைத்துக் கொண்டார். நேற்று இரவு அருண்குமாரை குள்ளப்பகவுண்டன்பட்டி ஈஸ்வரன் கோவில் அருகே அவர்கள் வரவழைத்தனர். குடிபோதையில் இருந்த கீர்த்தி மற்றும் அருண்குமாரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது.
இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து அருண்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே அருண்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அருண்குமார் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளிகள் 3 பேரை கைது செய்து அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போடியில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்றது ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது.
- புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீனிவாச பெருமாளுக்கு முத்தங்கி அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடியில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்றது ஸ்ரீனிவாச பெருமாள் கோவில். இந்து அறநிலையத்துறையினால் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த கோவில் ஜமீன்தார் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது.
இங்கு அனைத்து வைணவ சிறப்பு விசேஷ நாட்கள் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீனிவாச பெருமாளுக்கு முத்தங்கி அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.
மேலும் தனிப் பிரகாரத்தில் உள்ள பத்மாவதி தாயாருக்கும், ஆண்டாள் நாச்சியாருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் வருகிற 2ந் தேதி காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் கிராம ஊராட்சி மன்றத் தலைவரால் நடத்தப்பட உள்ளது.
- அனைத்து ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி:
தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் காந்திஜெயந்தியை முன்னிட்டு வருகிற 2ந் தேதி காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் கிராம ஊராட்சி மன்றத் தலைவரால் நடத்தப்பட உள்ளது.
இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்துதல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்,
காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல் ஆகியவை குறித்தும் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம், 2023-24 ஆம் ஆண்டுக்கான சமூகத் தணிக்கை செயல் திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் மற்றும் இதர தலைப்புகளிலும் விவாதங்கள் நடைபெற உள்ளது.
மேலும் 130 கிராம ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் வகையில் கிராம சபைக் கூட்டத்தை நடத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது.
எனவே அனைத்து ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
- சுருளி அருவியில் தென்றல் தவழும் சுருளி சாரல் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
- சுருளி அருவி பகுதியில் பிளாஸ்டிக் உபயோகிப்பதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தேனி:
தேனி அருகே உள்ள சுருளி அருவியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து கடந்த 27ந்தேதி முதல் தென்றல் தவழும் சுருளி சாரல் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி வருகிற 2ந் தேதி வரை நடைபெற உள்ளது.
தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான சுருளி அருவிக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். உலக சுற்றுலா தினம் மற்றும் சுருளி சாரல் திருவிழாவினை முன்னிட்டு, சுற்றுலாத்துறை சார்பில் சுருளி அருவி பகுதியில் கல்லூரி மாணவர்கள் தூய்மை விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
போடி ஏல விவசாய சங்க கல்லூரியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், சுருளி அருவி பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடம், உணவருந்தும் இடங்களில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து அதற்கு இணையான சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும். அதன்மூலம் ஏற்படும் நன்மைகள் மற்றும் பிளாஸ்டிக் உபயோகிப்பதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் வன சரக புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆனந்த், சுருளிப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் நாகமணி வெங்கடேசன், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர்கள் சித்ராதேவி, காயத்ரி, வன சரக அலுவலர் பிச்சைமணி, சுற்றுலா அலுவலர் (பொ) பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் மாதாந்திர முகாம் தேனியில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
- முகாமில் 156 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.15.26 கோடி வங்கி கடன், அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது.
தேனி:
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) கூட்டுறவுத்துறை, மத்திய கூட்டுறவு வங்கி, முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம் இணைந்து மாவட்ட அளவிலான மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் மாதாந்திர முகாம் தேனியில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் ஷஜீவனா தெரிவித்ததாவது:-
பெண்களின் கூட்டு முயற்சியில் லாபம் தரக்கூடிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி அதன் மூலம் அப்பெண்களின் குடும்ப வருமானத்தையும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காகவும் வறுமையிலிருந்து விடுபடச் செய்வதற்காகவும் மகளிர் திட்டத்தின் மூலம் சுழல்நிதி கடன், பொருளாதார கடன், தொழிற்கடன், வங்கிக் கடன்கள் போன்ற பல்வேறு கடனுதவிகள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இக்கடனுதவிகளை பெண்கள் பயன்படுத்தி தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
முகாமில் 156 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.15.26 கோடி வங்கி கடன், அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதற்கான ஆணைகளை அவர் வழங்கினார்.
கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் பயிற்சி பெற்ற 35 மாணவிகளுக்கு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
- 113 வயது வரை காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட எந்த பாதிப்பிற்கும் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றதில்லை.
- அனைவரிடமும் பாசமாக இருப்பார். யாரிடமும் கோபப்படமாட்டார்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி தெற்கு தெருவை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மனைவி முப்பிடாதி என்ற ஏசம்மாள் (வயது113). இவர்களுக்கு 8 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
மேலும் மருமகள்கள், மருமன்கள், பேரப்பிள்ளைகள், கொள்ளுபேரன், பேத்திகள் என இவர்களின் மொத்த குடும்ப உறுப்பினர்கள் 68 பேர் ஆகும். இதில் பல்வேறு காரணங்களால் 8 பேர் உயிரிழந்தனர். தற்போது 60 பேர் உள்ளனர்.
முப்பிடாதி கடந்த 1910-ம் ஆண்டு பிறந்தவர். இந்நிலையில் தனது 113-வது வயதில் மரணம் அடைந்தார். இது குறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், முப்பிடாதி தனது வாழ்நாளான 113 வயது வரை காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட எந்த பாதிப்பிற்கும் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றதில்லை. நோய்களுக்கு வென்னீர் குடிப்பது நெற்றியில் பத்து போடுவது என இயற்கை வைத்தியம் பார்த்துக்கொள்வார். அளவான நவதானிய உணவுகளை மட்டும் சாப்பிட்டு வந்தார். இவருக்கு ஆங்கில மருத்துவ முறையான அலோபதி என்றாலே என்ன வென்று தெரியாது.
அனைவரிடமும் பாசமாக இருப்பார். யாரிடமும் கோபப்பட மாட்டார். கணவரை இழந்தபிறகும் தனது குடும்பத்தினரால் மகிழ்ச்சியாக வாழ்ந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அவரது 113-வது பிறந்த நாளை நாங்கள் உற்சாகமாக கொண்டாடினோம். இந்த நிலையில் அவர் மரணம் அடைந்தது வேதனை அளிக்கிறது என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.
- குடும்ப பிரச்சினையில் மனமுடைந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- கம்பம் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்பம்:
கம்பம் சுப்பிரமணியர் கோவில் தெரு தாத்தப்பன்குளத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 25). டிரைவர் வேலை பார்த்து வருகிறார்.
இவர் தனது அத்தை மகளான சிவக்கனி (23) என்பவரை கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை.
இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுைடந்த சிவக்கனி தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டைவிட்டு வெளியே சென்ற மாணவி வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
- புகாரின்பேரில் போலீசார் மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே தாடிக்சேரியை சேர்ந்த ரவிக்குமார் மகள் மோகனஸ்ரீ (வயது15). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று வெளியே சென்ற இவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்ைல. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் வீரபாண்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வரு கின்றனர்.