வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தம்

பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டதால் நீர்வரத்து தொடர்ந்து சரிந்தது.முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.90 அடியாக உள்ளது. வரத்து 24 கன அடி. திறப்பு 700 கன அடி.
வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தம்
Published on

ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை முற்றிலும் நின்ற நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மட்டுமே நீர்வரத்தாக இருந்து வந்தது. ஆனால் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டதால் நீர்வரத்து தொடர்ந்து சரிந்தது.

இதனால் அணையின் நீர்மட்டம் 45 அடியாக குறைந்தது. வைகை அணையில் இருந்து முறைநீர் பாசனம் மூலம் தண்ணீர் 300 கன அடி வெளியேற்றப்பட்டது. இன்று காலை முதல் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு முற்றிலும் நிறுத்தப்பட்டு மதுரை, திருமங்கலம், சேடப்பட்டி குடிநீர் தேவைக்காக மட்டும் 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 45.80 அடியாக உள்ளது. வரத்து 442 கன அடி. இருப்பு 1489 மி.கன அடி.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.90 அடியாக உள்ளது. வரத்து 24 கன அடி. திறப்பு 700 கன அடி. இருப்பு 3004 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.10 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 121.36 அடியாகவும், சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 26.25 அடியாகவும் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com