என் மலர்
நீங்கள் தேடியது "Tamizhaga Vetri kazhagam"
- தவெக சார்பில் இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.
- தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிராரத்தை நடத்தினார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அதன்படி, திருச்சி, அரியலூரை தொடர்ந்து இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.
இதில், தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிராரத்தை தொடங்கினார்.
அப்போது அவர், சனிக்கிழமைகளில் மட்டும் பிரசார பயணம் நடந்துவது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், விஜய் விளக்கம் அளித்துள்ளார்.
பிரசாரத்தில் விஜய் கூறியதாவது:-
உங்கள் எல்லாரையும் வந்து பார்க்கும்போது யாருக்கும் எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்ற காரணத்தினால்தான் வார இறுதி நாட்கள், ஓய்வு நாட்களில் பயணத்தை திட்டமிட்டுள்ளோம்.
அரசியலில் சிலருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் ஓய்வு நாளில் உங்களை சந்திக்க வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் தவெக தலைவர் விஜய் ஆறுதல்.
- தவெக தலைவர் விஜய் 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள், பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் சந்தித்தார்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காவல் நிலைய விசாரணையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை தவெக தலைவர் விஜய் இன்று சந்தித்தார்.
தவெக தலைவர் விஜய் 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள், பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகம் வந்தனர். அங்கு, விஜய் அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், அவர் நிதியுதவியும் வழங்கியுள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளில் விசாரணையின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் தவெக தலைவர் விஜய் சந்தித்துள்ளார்.
அப்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நீதி பெற்றுத் தருவதாக விஜய் உறுதி அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்," லாக் அப் மரணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமும், தீர்ப்பும் வாங்கி தர வேண்டியது என் கடமை.
மனித உரிமைகள் ஆணையத்தில் தவெக சார்பில் சட்ட போராட்டம் நடத்தி நீதியை பெற்றுத் தருவோம்.
வழக்குக்கான செலவை தமிழக வெற்றிக் கழகம் முழுமையாக ஏற்றுக்கொள்ளும்" என விஜய் உறுதி அளித்துள்ளார்.
- கோவில் காவலாளி அஜித்குமாரை 27-ந்தேதி மாலை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
- பொதுமக்கள் போலீஸ் நிலையம் முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக இருந்த அஜித்குமார் கடந்த 27-ந்தேதி கோவிலுக்கு சாமி கும்பிட வந்த நிகித்தா என்பவர் காரில் இருந்து 9½ பவுன் நகைகள் களவு போனது. அந்த நகைகளை கண்டுபிடிப்பதற்காக மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரத்தின் தனிப்படை போலீசார், கோவில் காவலாளி அஜித்குமாரை 27-ந்தேதி மாலை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இதில் தனிப்படை போலீசார் கடுமையாக தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் போலீஸ் நிலையம் முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
இதன் தொடர்ச்சியாக சங்கரமணிகண்டன், ராஜா, பிரபு, ஆனந்த், கண்ணன், ராமச்சந்திரன் ஆகிய 6 போலீஸ்காரர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
அஜித்குமாரின் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி, திருமாவளவன், ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மறைந்த காவலாளி அஜித்குமார் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.
மேலும், அஜித்குமாரின் தாய் மற்றும் சகோதரரிடம் விஜய் சம்பவம் குறித்து கேட்டறிந்து தனது ஆழ்ந்த இரங்கலையும், வறுத்தத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.
- கட்சியில் இருந்து தொடர்ந்து நிராகரிக்கப்படுவதாக கூறி த.வெ.க.வில் இருந்து விலகுவதாக அறிக்கை.
- வைஷ்ணவியுடன், மேலும் சில இளைஞர்களும் திமுகவில் இணைந்தனர்.
கோவை கவுண்டப்பாளையத்தைச் சேர்ந்தவர் வைஷ்ணவி. நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகத்தில் தீவிரமாக பணியாற்றி வந்தார் வைஷ்ணவி.
இவரை கட்சியில் இருந்து தொடர்ந்து நிராகரிக்கப்படுவதாக கூறி த.வெ.க.வில் இருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில், வைஷ்ணவி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.
ரசியல் கட்சியில் இணைந்து மக்கள் சேவையாற்ற விரும்பினால் பாஜகவில் இணையலாம் என வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார். மதிமுக தரப்பிலும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். அவருடன் மேலும் சில இளைஞர்களும் திமுகவில் இணைந்தனர்.
- மதுரை மக்களின் அன்பிற்கு கோடான கோடி நன்றிகள்.
- ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் செல்வதற்காக மதுரை வருகிறேன்.
நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் கொடைக்கானல் செல்வதற்காக இன்று மதுரை வருவதாக கூறப்பட்டது. இந்த தகவல் பரவியதை தொடர்ந்து, விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் மதுரை விமான நிலையத்தில் திரண்டனர்.
விஜயை பார்க்காமல் செல்லமாட்டோம் என்று வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்துக் கொண்டிருந்தனர்.
தவெகவினருக்கு நேற்று கடிதம் மூலம் விஜய் அறிவுரை வழங்கியதையும் ஏற்காமல் தொண்டர்கள் குவிந்தனர்.
மேலும், மதுரை விமான நிலைய வாயிலில் போலீசாருடன் விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து, மதுரைக்கு புறப்படுவதற்கு முன்பு,
சென்னை விமான நிலையத்தில் தவெக தலைவர் விஜய் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர்," மதுரை விமான நிலையத்தில் நம் நண்பர்கள், நண்பிகள், தோழர்கள், தோழிகள் அனைவரும் வந்திருக்கிறார்கள். மதுரை மக்கள் அனைவருக்குமே என்னுடைய வணக்கம். உங்களுடைய அன்பிற்கு கோடான கோடி நன்றிகள்.
நான் இன்று ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் செல்வதற்காக மதுரை வருகிறேன்.
கூடிய விரைவில் மதுரை மண்ணிற்கு நம் கட்சி சார்பில் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவரையும் சந்தித்து பேசிகிறேன்.
ஒரு மணி நேரத்தில் உங்களை சந்தித்து என் வேலையை பார்க்க சென்றுவிடுவேன். நீங்களும் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லுங்கள். யாரும் வாகனத்தை பின் தொடர வேண்டாம்" என்றார்.
விஜய் கட்சி தொடங்கியப் பிறகு, முதல் முறையாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
இதனை தொடர்ந்து மாலை 4 மணியளவில் மதுரை விமான நிலையத்திற்கு விஜய் வந்து சேர்ந்தார். அங்கு அவரை வரவேற்பதற்காக ஏராளமான ரசிகர்களும், த.வெ.க. தொண்டர்களும் குவிந்தனர்.
மதுரை விமான நிலையத்தில் விஜய்யை கண்டதும் த.வெ.க. தொண்டர்கள் உற்சாகமாக கோஷங்களை அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
விஜய்யை காண அதிக அளவில் கூட்டம் கூடியதால் மதுரை விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து பிரசார வாகனத்தில் ஏறி நின்று தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி விமான நிலையத்தில் இருந்து விஜய் புறப்பட்டுச் சென்றார்.
மதுரை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக ஜனநாயகன் படப்பிடிப்புக்காக கொடைக்கானல் செல்கிறார். விஜய்யை காண்பதற்காக சில தொண்டர்கள் மரக்கிளைகள் மீதும், வாகனங்கள் மீதும் ஏறி நின்றனர். தொண்டர்களின் கூட்டத்திற்கு நடுவே விஜய்யின் வாகனம் மெதுவாக நகர்ந்து சென்றது.
தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு வாகனத்தின் மீது நின்று கையசைத்தபடி விஜய் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
- தமிழக வெற்றிக்கழகத்தில் ஏற்கனவே 95 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- மாவட்ட பொறுப்பாளர்கள் நாளை நேரில் வரும்படி கட்சியின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 6ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், மாவட்ட செயலாளர்கள் நேர்காணல் நாளை நடைபெற உள்ளது.
அதன்படி, மாவட்ட பொறுப்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை சந்திக்க உள்ளார்.
தமிழக வெற்றிக்கழகத்தில் ஏற்கனவே 95 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதனால், ஏற்கனவே சந்தித்தவர்களை தவிர்த்து, மீதமுள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் நாளை நேரில் வரும்படி கட்சியின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை காலை 11 மணியளவில் மாவட்ட பொறுப்பாளர்களை விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- புரட்சித் தலைவர் ஆரம்பித்த கட்சி என்பது தி.மு.க.-வை எதிர்த்து தொடங்கப்பட்டது.
- அ.தி.மு.க.-வை எந்த இயக்கத்துடனும் ஒப்பிடமுடியாது.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியிருப்பதாவது:-
நடிகர் விஜய் கட்சி தொடங்கி இருப்பதை நான் சிறுமைப்படுத்த விரும்பவில்லை. அதாவது புரட்சித் தலைவர் மாதிரி இனியாரும் பிறக்க முடியாது. அவர் தெய்வப் பிறவி. அந்த தெய்வப் பிறவி மாதிரி விஜயை சித்தரித்து விட்டார்கள்.

அவர்கள் தலைவர் மாதிரி சித்தரித்து கொள்ளட்டும் அல்லது சிவாஜி கணேசன் மாதிரி சித்தரித்து கொள்ளட்டும் அல்லது தியாகராஜ பாகவதர் மாதிரி சித்தரித்து கொள்ளட்டும் அல்லது பி.யூ. சின்னப்பா மாதிரி சித்தரித்து கொள்ளட்டும்.
எங்களுக்கு அதுபற்றி கவலை இல்லை. அதனால் புரட்சித் தலைவர் ஆரம்பித்த கட்சி என்பது தி.மு.க.-வை எதிர்த்து தொடங்கப்பட்டது.
அ.தி.மு.க. ஒரு மாபெரும் இயக்கம். 50 ஆண்டுகள் கடந்தும் எழுச்சியாக உள்ளது. அதற்கு எம்.ஜி.ஆர். போட்ட விதை. அது இன்று ஆலமரமாக வளர்ந்து பலபேருக்கு நிழல் தந்து கொண்டிருக்கிறது.
அதனால் அ.தி.மு.க.-வை எந்த இயக்கத்துடனும் ஒப்பிடமுடியாது. ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க. நிலைத்து நிற்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேர்தலை சந்திக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.
- தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபல நடிகராக இருப்பவர் விஜய். இவர் தனது ரசிகர் மன்றத்தை 2009 ஜூலை மாதம் மக்கள் இயக்கமாக மாற்றினார். அதன் மூலம், பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
படப்பிடிப்பில் பிஸியாக இருந்த போதும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்து மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி வந்தார். இதனால் நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாக தகவல் கசிந்தது.

'லியோ' பட நிகழ்ச்சி மேடையில் நடிகர் விஜய் பேசியபோது தளபதி என்றால் என்ன அர்த்தம். நீங்கள் (ரசிகர்கள்) மன்னர்கள். நான் உங்கள் தளபதி. நீங்கள் ஆணையிடுங்கள் நான் செய்து முடிக்கிறேன் என அரசியல் பயணம் குறித்து சூசகமாக தெரிவித்தார்.
விஜய் அரசியலுக்கு வருவார் என்று பேசப்பட்ட நிலையில் 'விஜய் மக்கள் இயக்கம்' சார்பாக கடந்த சில மாதங்களாக ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் விஜய் நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது பூத் கமிட்டிகளை வலுப்படுத்த மக்கள் இயக்கத்தினருக்கு அறிவுறுத்தினார்.
இயக்கத்தின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். தேர்தலை சந்திக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பது குறித்தும் பேசினார்.

2026-ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திக்க முன்னோட்டமாக வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தே இயக்கத்தை வலுப்படுத்தும் பணிகளை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
விஜய் மக்கள் இயக்கத்தை ஒரு அரசியல் கட்சியாக விரைவில் மாற்றம் செய்ய நடிகர் விஜய் அப்போது மனதில் முடிவு செய்திருந்தார். அதைதொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய நிர்வாகிகள் டெல்லி செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்தநிலையில் விஜய் மக்கள் இயக்கத்துக்கு ' தமிழக வெற்றி கழகம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை நடிகர் விஜய் இன்று வெளியிட்டார். அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
- நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு.
- முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்.
நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இதனால் அவர் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், " நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

நடிகர் விஜய்யின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மற்றும் திரைத்துரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் பேரரசு கூறியதாவது:-
சினிமாவில் இருந்து விஜய் விலக வேண்டாம். எம்ஜிஆர் முதலமைச்சராக பதவி ஏற்கும் முதல் நாள் இரவு வரை திரைப்படத் துறையில் இருந்தார். எனவே நீங்களும் சினிமாவில் தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- விஜய்யின் கருத்து இன்றைய அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இதையடுத்து, விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கே.எஸ்.அழகிரி மேலும் கூறியிருப்பதாவது:-
மக்களை பிளவுபடுத்தும் அரசியலுக்கு எதிராகவும் மக்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் சக்திகளுக்கு எதிராகவும் விஜய் கருத்து கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என அவர் வலியுறுத்தியிருப்பது, இன்றைய அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நடிகர் விஜய் 'தி கோட்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கோட்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வந்தார். சமீபத்தில் நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார்.
தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், தனது 69-வது படத்திற்கு பிறகு இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு சென்ற நடிகர் ரஜினியிடம் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, 'வாழ்த்துகள்' என்று ஒரு வரியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவிட்டு சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
- நடிகர் விஜய் சமீபத்தில் தனது கட்சி பெயரை அறிவித்தார்.
- இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வந்தார். சமீபத்தில் நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார்.

தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், தனது 69-வது படத்திற்கு பிறகு இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஷாலும் கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றி அதற்கான பெயரை இன்று காலை விஷால் அறிவிக்கிறார் என கூறப்படுகிறது. மேலும், விஷாலும் விஜய்யை போன்று 2026- ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் விஷால் தனது ரசிகர் மன்றத்தை 'விஷால் மக்கள் நல இயக்கம்' என பெயர் மாற்றம் செய்துள்ளார். இவர் ஏற்கெனவே அரசியல் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். சென்னை ஆர்.கே. நகர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவரது வேட்புமனுவில் தவறு இருப்பதாக கூறி அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.






