என் மலர்
நீங்கள் தேடியது "அஜித்குமார்"
- ஆவணப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார்.
- சமீபத்தில் அஜித் "GENTLEMAN DRIVER OF THE YEAR 2025" விருது வாங்கினார்.
நடிப்பு, கார் ரேஸ், குடும்பம் என தன்னை ஒரு பிஸியான வாழ்க்கைக்குள்ளேயே வைத்திருப்பவர் நடிகர் அஜித்குமார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் குட் பேட் அக்லி. இப்படம் ரூ.300 கோடி வசூலித்தது. அதனைத்தொடர்ந்து கார் ரேஸில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய குழுமூலம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் பந்தயங்களில் பங்கேற்று இந்தியாவை பெருமைப்படுத்தி வருகிறார். அதில் கொஞ்சம் இடைவெளி கிடைக்கும்போதெல்லாம் குடும்பத்தினருடனும் நேரம் செலவிட்டு வருகிறார். இந்நிலையில் அஜித்தின் இந்த கார் ரேஸிங் பயணம், ஆவணப்படமாக வெளிவர உள்ளது. இதனை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார்.
'Racing Isn't Acting' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அஜித் "GENTLEMAN DRIVER OF THE YEAR 2025" விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது.
- அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார்.
- மலேசியாவில் நடைபெறவுள்ள 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித்குமார் கலந்துகொள்ளவுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார்.
அவ்வகையில் மலேசியாவில் நடைபெறவுள்ள 24H சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள அஜித்குமார் மலேசியா சென்றுள்ளார்.
இந்நிலையில் மலேசியாவில் அஜித்துடன் செல்பி எடுத்துக்கொண்ட ரசிகை ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், முதல்ல நான் போட்டோ எடுக்க முயற்சி பண்ணப்போ அஜித் சார் என்ன திட்டிட்டாரு. ஆனா அதுக்கு அப்புறம் அவரே கூப்பிட்டு ஒரு செல்பி எடுத்து கொடுத்தாரு. என் வாழ்நாள் கனவு நனவாகிடுச்சி. அந்த ஒரு நொடி எனக்கு உலகத்தையே மறக்க வச்சிருச்சு'' என்று ஆனந்த கண்ணீருடன் மலேசிய ரசிகை பேசியுள்ளார்.
- மலேசியாவில் நடைபெறவுள்ள 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித்குமார் கலந்துகொள்கிறார்.
- இதே கோவிலில் அவர் நடித்த "பில்லா" படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார்.
அவ்வகையில் மலேசியாவில் நடைபெறவுள்ள 24H சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள அஜித்குமார் மலேசியா சென்றுள்ளார்.
இந்நிலையில், 24H சீரிஸ் கார் பந்தயத்திற்கு முன்பாக, பத்து மலை முருகன் கோயிலில் அஜித்குமார் சாமி தரிசனம் செய்தார். இதே கோவிலில் அவர் நடித்த "பில்லா" படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
- சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
- ரம்யா கிருஷ்ணன், எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் வீட்டிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
சென்னை:
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், பள்ளிகள், விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில் சென்னையில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர் எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் வீட்டிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது.
அதன்பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அஜித்குமாரின் கருத்து வைரலாகி பெரும் கவனம் பெற்றது.
- ஒரு தரப்பு விஜய்க்கு ஆதரவாக உள்ளது என்றும் இன்னொரு தரப்பு விஜய்க்கு எதிராக உள்ளது என்றனர்.
சென்னை:
நடிகர் அஜித்குமார் சமீபத்தில் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,''கரூர் சம்பவத்துக்குத் தனிநபர் மட்டுமே காரணமில்லை. நாம் அனைவருமே காரணம்தான். ஒரு சமூகமாகக் கூட்டத்தைக் கூட்டிக் காட்டுவதில் நாம் ஈடுபாடு காட்டுகிறோம். இது உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கவும் அதிக கூட்டம் வருகிறது. ஆனால் அங்கு இப்படி எதுவும் நடப்பதில்லை. சினிமா பிரபலங்களுக்கு மட்டும் இப்படி நடக்கிறது. முதல் நாள் முதல் காட்சி கலாசாரத்தை ஊடகங்கள் ஆதரிக்கக் கூடாது என தெரிவித்திருந்தார்.
அஜித்குமாரின் இந்தக் கருத்து வைரலாகி பெரும் கவனம் பெற்றது. ஒரு தரப்பினர் விஜய்க்கு ஆதரவாக பேசினார் என்றும், இன்னொரு தரப்பினர் விஜய்க்கு எதிராக இந்தக் கருத்து உள்ளது என விமர்சனங்களும், விவாதங்களும் எழுந்தன.
இந்நிலையில், நடிகர் அஜித்குமாரே இன்று விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக தனியார் யூடியூப் சேனலுக்கு அஜித்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:
கரூர் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது கரூரில் நடந்தது துரதிர்ஷ்டவசமானது.
இதற்கு முன்பு ஆந்திரா சினிமா தியேட்டரில் நடந்துள்ளது. பெங்களூரு கிரிக்கெட் மைதானத்தில் நடந்துள்ளது. பல நாடுகளில் நடந்துள்ளது.
பொதுவெளியில் எப்படி நடக்க வேண்டும் என்ற விதிமுறைகள் நான் உள்பட அனைவருக்கும் பொருந்தும்.
எனது இந்த கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்படாது என்று நம்புகிறேன். ஒரு சிலர் ரசிகர்கள் மீது பழியை சுமத்துகிறார்கள்.
எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்கும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது.
என்றுமே நான் விஜய்க்கு நல்லதே நினைத்து இருக்கிறேன். வாழ்த்தி இருக்கிறேன்.
எல்லாருமே அவரவர் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
- பொருளாதார ரீதியில் நாம் முன்னேறும்போது தான் சில திட்டமிடல்கள் சாத்தியமாகும்.
- வெற்றி என்பது காட்டுக்குதிரை. யாரும் அதில் ஏறலாம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், கார் பந்தய வீரரும் கூட. தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டிருக்கும் அஜித்குமார் தனது திரைப்பயணம் குறித்து மனம் திறந்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
''நான் சினிமாவுக்கு வந்த புதிதில் தமிழ் பேச தெரியாது. தமிழை கற்றுக்கொண்டு பேச கடுமையாக உழைத்தேன். அந்த போராட்டம் பெரியது. வந்த புதிதில் உன் பெயர் பிரபலமான பெயர் போல இல்லையே... பெயரை மாற்றுப்பா... என்றார்கள். ஆனால் சினிமாவுக்காக என் பெயர் உள்ளிட்ட அடையாளத்தை மாற்ற விரும்பவில்லை. எனவே வேறு பெயரை சூட்டவில்லை.
நான் அடைந்த வெற்றிகள் எளிதாக கிடைத்தது அல்ல. கடின உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும் பின்னரே அவை சாத்தியமானது. சவால்களைத் தாண்டி பயணிக்கும் நான், இன்றைக்கும் கார் ரேசிங்கில் 19 வயது வாலிபராக உழைக்கிறேன். கவனம் செலுத்துகிறேன்.
ஹாலிவுட் நடிகர் பிராட்பிட் நடித்த 'எப்.1' படம் போல இந்தியாவில் புதிய படமோ அல்லது அதன் ரீமேக்கோ உருவாக்கப்பட்டால் நடிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். எந்த வகையிலாவது இந்த விளையாட்டை பிரபலப்படுத்த முடிந்தால் அது எனக்கு மகிழ்ச்சி தானே...
அறிவும், விழிப்புணர்வும் தான் கார் ரேசின் அடிப்படை. கார் ரேசில் சில விபத்துகளைச் சந்தித்தேன். காயங்கள் இருந்தாலும் ரேசை நல்லபடியாக முடிக்கவே என் மனம் நாடும். அந்தவகையில் பந்தயத்தில் இருந்து விலகும் அளவுக்கு எனக்கு காயங்கள் ஏற்பட்டதில்லை. அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். கார் பந்தய வீரர்கள் காயங்களையும், விபத்துகளையும் எதிர்கொள்வது வழக்கம்தான். நான் 29 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறேன். நான் நடிகன் என்பதால் அது பெரியளவில் பேசப்படுகிறது.
பொருளாதார ரீதியில் நாம் முன்னேறும்போது தான் சில திட்டமிடல்கள் சாத்தியமாகும். தருபவரா, பெறுபவரா? என்பதை நாம்தான் முடிவு செய்யவேண்டும். ஏனெனில் செல்வம் சில நேரங்களில் நம்மை ராட்சசனாக மாற்றிவிடும். வெற்றி என்பது காட்டுக்குதிரை. யாரும் அதில் ஏறலாம். ஆனால் அந்த குதிரையை அடக்க முடியாவிட்டால், அது உன்னை கீழே தள்ளிவிடும்.

இப்போதில் இருந்து வருகிற மார்ச் மாதம் வரை கார் ரேசில் பிசியாக இருக்கிறேன். எனவே இந்த காலகட்டத்தில் படப்பிடிப்பில் நான் கலந்துகொள்ள முடியாது என்றாலும், எனது புதிய படத்தின் அறிவிப்பு அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகும்.
எனது இத்தனை ஆண்டு பயணத்தில் எனக்கு பக்கபலமாக இருக்கும் என் மனைவி ஷாலினி, என் பிள்ளைகள் மற்றும் திரையுலகினர், ரசிகர்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.''
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
'குட் பேட் அக்லி' படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் அஜித்குமார் புதிய படம் நடிக்கவுள்ளார். இது அவரது 64-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
- திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
சினிமா தாண்டி கார் பந்தயத்திலும் கலக்கி வரும் நடிகர் அஜித் குமார், சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்தார். மேலும், இந்தாண்டு இறுதியில் மலேசியாவிலும், அடுத்த ஆண்டில் (2026) அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்கிறது.
இதற்கிடையே, அஜித் குமாரின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தப் படம் ஜனரஞ்சகமான கமர்ஷியல் படமாக அமையும் என ஆதிக் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். புதிய படத்தின் ப்ரீ புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது.
இதற்கிடையே, அஜித் குமார் தனது குடும்பத்தினருடன் பாலக்காட்டில் உள்ள பகவதியம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். மேலாடை அணியாத நிலையில் அஜித் தனது மார்பின் வலது பக்கத்தில் பச்சைக் குத்திக் கொண்டு இருந்தது இணையத்தில் கவனம் பெற்றது. அந்த டாட்டூ அஜித்தின் குலதெய்வமான பகவதியம்மன் என கூறப்பட்டது.
இந்த நிலையில், நடிகர் அஜித் குமார் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இன்று காலை நடைபெற்ற சுப்ரபாத சேவையின் போது வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவரைக் கண்ட ரசிர்கள் தல, தல என்று கூச்சலிட்டனர். அப்போது கோவிலில் அமைதியாக இருக்குமாறு சைகை காட்டினார்.
மேலும் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- பாலக்காடு பகவதியம்மன் கோவிலில் அஜித்குமார் சாமி தரிசனம் செய்தார்.
- இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து, நடிகர் அஜித்குமார் தற்போது கார் ரேஸ்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். சொந்தமாக ரேஸிங் பந்தய நிறுவனத்தையும் உருவாக்கி உள்ளார். இவரது கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடந்த பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
இதற்கிடையே, அஜித்குமாரின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. இந்தப் படம் ஜனரஞ்சகமான கமர்ஷியல் படமாக அமையும் என ஆதிக் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். புதிய படத்தின் ப்ரீ புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், அஜித் குமார் தனது குடும்பத்தினருடன் பாலக்காட்டில் உள்ள பகவதியம்மன் கோவிலில் தரிசனம் செய்துள்ளார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலாடை அணியாத நிலையில் அஜித் தனது மார்பின் வலது பக்கத்தில் பச்சைக் குத்திக் கொண்டுள்ள போட்டோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அந்த டாட்டூ அஜித்தின் குலதெய்வமான பகவதியம்மன் என தகவல்கள் கூறுகின்றன.
- 3 ஆம் இடம் பிடித்து, நம் தேசத்துக்கு பெருமை சேர்த்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது!
- இந்த வெற்றியின் மூலம், நம் பாரத நாடு மட்டுமன்றி, நம் தமிழ்நாட்டின் பெருமையையும் உலகறியச் செய்திருக்கிறார் அஜித் குமார் அவர்கள்!
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சர்வதேச அளவிலான கார் பந்தயங்களில் களமிறங்கி, பல வெற்றிகளை குவித்து வரும் நடிகர் அஜித் குமாரின் 'Ajith Kumar Racing Team' அணி, 2025 ஆம் ஆண்டிற்கான Creventic 24H European Endurance Championship தொடரில் ஒட்டுமொத்தமாக 3 ஆம் இடம் பிடித்து, நம் தேசத்துக்கு பெருமை சேர்த்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது!
இந்த வெற்றியின் மூலம், நம் பாரத நாடு மட்டுமன்றி, நம் தமிழ்நாட்டின் பெருமையையும் உலகறியச் செய்திருக்கிறார் அஜித் குமார் அவர்கள்!
மென்மேலும் அவரது அணி பல வெற்றிகளை குவிக்க எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! என கூறியுள்ளார்.
- அஜித்குமார் ரேஸிங் அணி ஆசிய லீ மான்ஸ் தொடரில் கலந்து கொள்ளவுள்ளது.
- இந்த தொடரில் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயன் கலந்துகொள்கிறார்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .
கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
அஜித்குமார் ரேஸிங் அணி ஆசிய லீ மான்ஸ் தொடரில் கலந்து கொள்ளவுள்ளது. இந்த தொடரில் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயன் கலந்துகொள்கிறார்
இந்திய சினிமாவை பிரபலப்படுத்தும் வகையில் அதன் லோகோவை அஜித்குமார் தனது கார் மற்றும் ரேஸிங் உடையில் பொறித்ததுள்ளார்.
முன்னதாக தனது ரேஸ் கார் மற்றும் ரேஸ் உடைகளில் Indian Film Industry என்ற லோகோவை அச்சிடவுள்ளதாக அஜித்குமார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.
- அஜித்குமார் ரேஸிங் அணி பல கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .
கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
நடிகர் அஜித்குமார் ரேஸிங் அணி ஸ்பெயினில் நடைபெற்ற க்ரெவென்டிக் 24H பந்தயத்தில் கலந்து கொண்டது.
இந்நிலையில், க்ரெவென்டிக் 24H பந்தயத்தில் அஜித்குமார் ரேஸிங் அணி 3ம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
- 'அஜித்குமார் ரேஸிங்' என்ற பந்தய நிறுவனத்தை அஜித் உருவாக்கியுள்ளார்
- நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .
கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார். அவ்வகையில் இன்றும் நாளையும் க்ரெவென்டிக் 24H பந்தயத்தில் அஜித்குமார் கலந்து கொள்கிறார்.
இந்நிலையில், ரேஸுக்கு முன்னதாக தனது மனைவி மற்றும் மகளுடன் அஜித்குமார் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.






