search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Car race"

    • மக்கள் மீது அடுத்தடுத்து வந்த கார்கள் மோதியதால் பெரும் விபத்து.
    • சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்.

    இலங்கையின் பதுளை மாவட்டத்தில் கார் பந்தய திடலில் இன்று கார் பந்தயப் போட்டி நடைபெற்றது.

    ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 21 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    காயம் அடைந்தவர்கள் தியத்தலாவ, பண்டாரவளை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கார் பந்தயத்தின்போது, கார் செல்வதற்கான பாதையைவிட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதியுள்ளது. விபத்துக்குள்ளான காரை சூழ்ந்த மக்கள் மீது அடுத்தடுத்து வந்த கார்கள் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.

    இதனால், உயிரிழப்புகளும், படுகாயங்களும் அதிகளவில் பதிவாகியுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் விபத்து நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    • அம்மா உணவகத்திற்கு நிதி ஒதுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது
    • மழை பாதிப்புகளை சரி செய்ய அரசு பணம் செலவிடப்பட்டால் அதை வரவேற்கலாம்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * ஒருநாள் மழைக்கேசென்னை தத்தளிக்கும் சூழலை பார்த்தோம். மழையால் பல்வேறு பகுதிகளில் மக்கள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். முறையாக வடிகால் பணிகளை மேற்கொண்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

    * கார் பந்தயத்திற்காக 42 கோடி ரூபாய் அரசு செலவு செய்வது கண்டித்தக்கது. சென்னை தீவுத்திடலை சுற்றி கார் பந்தயம் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வேடிக்கையாக உள்ளது. இருங்காட்டுக்கோட்டையில் கார் பந்தயம் நடத்த இடம் இருக்கும் போது சென்னையில் நடத்துவதா?

    * மழை பாதிப்புகளுக்கு இடையே சென்னையில் கார் பந்தயம் நடத்துவது ஏன்? சென்னையில் கார் பந்தயம் நடத்துவதால் யாருக்கு லாபம்?

    * கார் பந்தயம் நடத்துவதால் மக்களுக்கு எந்த பயனும் கிடையாது.

    * அம்மா உணவகத்திற்கு நிதி ஒதுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது

    * மழை பாதிப்புகளை சரி செய்ய அரசு பணம் செலவிடப்பட்டால் அதை வரவேற்கலாம்.

    * கவர்னர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பே இறுதியானது.

    * தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு என்ன மெச்சூரிட்டி உள்ளது?

    * சபாநாயகர் ஜனநாயக முறைப்படி செயல்படுகிறாரா? சபை தலைவர் பொதுவாக பேசாமல் கட்சி தலைவர் போல் பேசுகிறார்.

    * பாராளுமன்ற தேர்தலுக்கான 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    • தெற்காசியாவில் முதல் முறையாக சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுகிறது.
    • அடுத்த மாதம் 9 மற்றும் 10-ம் தேதிகளில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ரேஸிங் புரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை இணைந்து ரேசிங் சர்க்யூட் பார்முலா 4 கார் பந்தயம் போட்டியை நடத்துகிறது.

    சென்னையில் டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுகிறது. சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கிலோ மீட்டர் சுற்றளவில் இரவு போட்டியாக நடத்தப்பட உள்ளது.

    தெற்காசியாவில் முதல் முறையாக ஸ்ட்ரீட் சர்க்யூட் பார்முலா 4 பந்தயம் சென்னையில் நடைபெறுகிறது. பார்முலா 4 கார்பந்தயம் நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது.

    இந்நிலையில், பார்முலா 4 கார் பந்தயத்துக்காக தீவுத்திடலில் சாலை அமைக்கும் பணிகளை இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.

    அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், திட்டமிட்டபடி இப்போட்டிக்கான பணிகள் 10 நாட்களில் நிறைவடையும். 3 வருடம் இப்போட்டியை நடத்துவதற்கு கையெழுத்திட்டுள்ளோம். அடுத்த 2 வருடமும் தொடர்ந்து போட்டிகள் நடத்தப்படும். விளையாட்டு மற்றும் சுற்றுலா ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து சென்னை தீவுத்திடலில் இப்போட்டியை நடத்துகிறோம் என தெரிவித்தார்.

    ×