என் மலர்
விளையாட்டு

'பார்முலா 1' உலக சாம்பியன் பட்டம் வென்றார் பிரிட்டன் வீரர் லாண்டோ நோரிஸ்!
- இந்த ஆண்டுக்கான 'பார்முலா 1' கார் பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்பட்டது.
- இதில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்றனர்.
கார் பந்தயத்தில் மிகவும் பிரபலமானது 'பார்முலா 1' பந்தயமாகும். இந்த ஆண்டுக்கான 'பார்முலா 1' கார் பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், அபுதாபியில் நடைபெற்ற 2025 பார்முலா ஒன் உலக சாம்பியன் இறுதி போட்டியில் பிரிட்டனைச் சேர்ந்த வீரர் லாண்டோ நோரிஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
நடப்பு சாம்பியனான நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பனை 2 புள்ளிகள் வித்தியாசத்தில் பின்னுக்குத் தள்ளி, 35வது பார்முலா ஒன் உலக சாம்பியனாக லாண்டோ நோரிஸ் உருவெடுத்தார்.
Next Story






