ஒழுங்கா நடந்துக்கங்க... இது தியேட்டர் கிடையாது - ரசிகர்களை கடிந்து கொண்ட அஜித்

கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளார். அஜித் பங்கேற்கும் கார் ரேசிங் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.
ஒழுங்கா நடந்துக்கங்க... இது தியேட்டர் கிடையாது -  ரசிகர்களை கடிந்து கொண்ட அஜித்
Published on

நடிகரும், ரேசருமான அஜித் குமார் கடந்த சில மாதங்களாகவே அபுதாபியில் தங்கி கார் ரேசில் பங்கேற்று வருகிறார். இவர் 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கி துபாய், பெல்ஜியம், போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளார்.

வெளிநாட்டில் தங்கியுள்ள அஜித்தை நடிகர்கள் மாதவன், சிம்பு, பிரசன்னா, சிவகார்த்திகேயன், இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். இதனிடையே நடிகர் அஜித் முதன் முதலாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நேர்காணல் ஒன்றும் அளித்திருந்தார். மேலும், அஜித் பங்கேற்கும் கார் ரேசிங் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், அபுதாபியில் உள்ள யாஸ் மெரினா சர்க்யூட்டில் நடைபெற்ற கார் ரேசில் அஜித் பங்கேற்ற போது, ரசிகர்களிடம் கடிந்துகொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், 'ப்ளீஸ்... ஒழுங்கா நடந்துக்கங்க... இது தியேட்டர் கிடையாதுங்க..' என்று கடிந்து கொள்கிறார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com