என் மலர்
நீங்கள் தேடியது "Ajith"
- புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பானதாக அமைய வேண்டும் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- நடிகர் அஜித் குமார் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
சென்னை:
தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு உள்ளன.
புதிதாக பிறக்கும் புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பானதாகவும், ஏற்றமிகு வாழ்க்கையை அளிப்பதாகவும் அமைய வேண்டும் என அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் அஜித்குமார் திருப்பூர் அருகிலுள்ள வெள்ளகோயில் அருகே கொங்குநாடு ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், அஜித் குமார் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், புத்தாண்டு அனைவருக்கும் வளமான ஆண்டாகவும், உங்கள் வாழ்க்கை அழகானதாகவும் அமைய வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
- ஏற்கனவே ஜனநாயகன் உடன் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் மோதுகிறது.
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'ஜன நாயகன்' தான் விஜயின் கடைசி படம் என்று கூறப்படுவதால் இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
அண்மையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்து முடிந்தது. ஏற்கனவே ஜனநாயகன் உடன் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்த பராசக்தி படம் மோதுகிறது.
இந்த சூழலில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மங்காத்தா படத்தை ஜனநாயகனுக்கு போட்டியாக ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்தின் 50வது படமான மங்காத்தா 2011 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் வீடியோவை வெளியிட்டுள்ள சன் பிக்சர்ஸ் stay tuned என தெரிவித்துள்ளது. இதனால் மங்காத்தா ஜனநாயகனுக்கு போட்டியாக ரீரிலீஸ் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். எனவே குட் பேட் அக்லிக்கு பின் வறட்சியில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு இது விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே அஜித்தின் அட்டகாசம் படம் அண்மையில் ரீ ரிலீஸ் ஆனது. அதேபோல அமர்க்களம் படமும் பிப்ரவரியில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
- அரசன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- படப்பிடிப்பு தளத்தில் சிம்புவுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
வெற்றி மாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் 'அரசன்'. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வடசென்னை கதைகளத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சமுத்திரகனி , கிஷோர் , விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
கோவில்பட்டியில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் சிம்புவுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது, ரேஸிங் களத்தில் அஜித்குமாருடன் சிம்பு எடுத்த புகைப்படத்தை பிரேம் செய்து சிம்புவிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் வாங்கினர்.
அண்மையில் மலேசியா சென்ற சிம்பு அங்கு ரேஸிங் களத்தில் அஜித்குமாரை சந்தித்து பேசி புகைப்படம் எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- விநாயக் மகாதேவ் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் அஜித் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.
- இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார்.
2011 ஆம் ஆண்டு அஜித், திரிஷா, அர்ஜூன் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
இன்ஸ்பக்டர் விநாயக் மகாதேவ் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் அஜித் மிகவும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்திருப்பார். ஒரு கடத்தல்காரனை தப்பிக்க விட்டதற்காக அவரை ச்ஸ்பண்ட் செய்து விடுவார்கள். அப்பொழுது அவர் ஒரு கும்பலை சந்திக்கிறார். அவர்கள் 500 கோடி ரூபாய் பணத்தொகையை கடத்த திட்டம் போடுகிறார்கள். அதற்கு அஜித் உதவுவதாக கூறுவார் அதற்கு அடுத்து என்ன நடந்தது என்பதே கதைக்களம்.
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். படத்தின் பின்னணி இசை மிரட்டலாக இருக்கும். படத்தில் இடம் பெற்றுள்ள ஸ்டண்ட் காட்சிகளும், அஜித் ஒற்றை வீலில் பைக் ஓட்டும் காட்சிகள் மக்களை பிரமிக்க வைத்தது.
இந்நிலையில், மங்காத்தா படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய பட்க்குழு திட்டமிட்டுள்ளனர். ஜனவரி மாதம் 23 ஆம் தேதி படம் ரீரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதுமாக இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் கிங்மேக்கர் என்று பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- அடுத்த ஆண்டில் அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்கிறது.
- கார் ரேஸில் அஜித் பங்கேற்ற கார் பாதியில் பழுதாகி நின்றது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் அஜித் குமார். சினிமா தாண்டி கார் பந்தயத்திலும் கலக்கி வரும் நடிகர் அஜித் குமார், சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்தார். இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டில் (2026) அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்கிறது.

இதற்கு முன்னதாக மலேசியாவில் நடைபெற்று வரும் கார் பந்தய போட்டியில் அஜித்குமார் ரேசிங் அணி பங்கேற்றுள்ளது. இந்த நிலையில், கார் ரேஸில் அஜித் பங்கேற்ற கார் பாதியில் பழுதாகி நின்றது. அதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து கார் பழுதாகி நின்றது தொடர்பாக நடிகர் அஜித்திடம் கேட்கப்பட்டதற்கு, கவலைப்பட ஒன்றுமில்லை. பந்தயம் என்றால் அதுதான். ஆம், அது சோர்வடையச் செய்கிறது. ஆனால் எப்போதும் இன்னொரு போட்டி இருக்கும் என்றார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார்.
அவ்வகையில் மலேசியாவில் நடைபெறும் 24H சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள அஜித்குமார் மலேசியா சென்றுள்ளார்.
இதற்கிடையே, அரசன் படத்தில் பயங்கர பிசியாக நடித்து வரும் சிம்பு நகை கடை திறப்பு விழாவிற்காக இன்று மலேசியா சென்றுருந்தார்.
அந்நிகழ்ச்சியை முடித்துக் கொண்ட கையோடு, ஒரு தல ரசிகனாக அஜித்தை பார்க்க சென்றுவிட்டார்.
அதுவும் எப்படி தெரியுமா..? அஜித்தின் ரேஸிங் அணியின் ஜெர்சியை அணிந்து அவரை நேரில் சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்தார் சிம்பு. இவர்களின் சந்திப்பினால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
இதுதொடர்பாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார்.
- மலேசியாவில் நடைபெறவுள்ள 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித்குமார் கலந்துகொள்ளவுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார்.
அவ்வகையில் மலேசியாவில் நடைபெறவுள்ள 24H சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள அஜித்குமார் மலேசியா சென்றுள்ளார்.
இந்நிலையில் மலேசியாவில் அஜித்துடன் செல்பி எடுத்துக்கொண்ட ரசிகை ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், முதல்ல நான் போட்டோ எடுக்க முயற்சி பண்ணப்போ அஜித் சார் என்ன திட்டிட்டாரு. ஆனா அதுக்கு அப்புறம் அவரே கூப்பிட்டு ஒரு செல்பி எடுத்து கொடுத்தாரு. என் வாழ்நாள் கனவு நனவாகிடுச்சி. அந்த ஒரு நொடி எனக்கு உலகத்தையே மறக்க வச்சிருச்சு'' என்று ஆனந்த கண்ணீருடன் மலேசிய ரசிகை பேசியுள்ளார்.
- மலேசியாவில் நடைபெறவுள்ள 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித்குமார் கலந்துகொள்கிறார்.
- இதே கோவிலில் அவர் நடித்த "பில்லா" படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார்.
அவ்வகையில் மலேசியாவில் நடைபெறவுள்ள 24H சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள அஜித்குமார் மலேசியா சென்றுள்ளார்.
இந்நிலையில், 24H சீரிஸ் கார் பந்தயத்திற்கு முன்பாக, பத்து மலை முருகன் கோயிலில் அஜித்குமார் சாமி தரிசனம் செய்தார். இதே கோவிலில் அவர் நடித்த "பில்லா" படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
- அக்.31ஆம் தேதி ரீரிலீஸ் ஆக இருந்த நிலையில் வெளியீடு தள்ளிப்போனது.
சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், பூஜா நடிப்பில் 2004-இல் வெளியான திரைப்படம் அட்டகாசம்.
இந்தப் படத்தை விஜய்ம் சினி கம்பைன்ஸ் தயாரித்திருந்தது. தல போல வருமா உள்ளிட்ட பாடல்கள், ஆக்ஷன் காட்சிகள், காமெடி என கமெர்சியல் ரீதியாக அட்டகாசம் ரசிகர்களை கவர்ந்தது.
இந்தப் படம் வரும் அக்.31ஆம் தேதி ரீரிலீஸ் ஆக இருந்த நிலையில் வெளியீடு தள்ளிப்போனது.
இந்நிலையில் அட்டகாசம்' திரைப்படம் வரும் 28ம் தேதி(வெள்ளிக்கிழமை) ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்ட படத்தின் புதிய டிரெய்லரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரலில் திரையில் வெளியானது.
சமீபமாக கார் ரெஸிங்கில் அஜித் பிஸியாக உள்ளார். அடுத்ததாக மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் மீண்டும் அஜித் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே அட்டகாசம் ரீரிலீஸ் ரிலீஸ் அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு அஜித்குமார் கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .
- அஜித்குமார் ரேஸிங் என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை அவர் உருவாக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .
கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
இந்நிலையில், SRO மோட்டார் ஸ்போர்ட் குழுமம், அஜித்குமாருக்கு 'GENTLEMAN DRIVER OF THE YEAR 2025' விருது வழங்கி கௌரவித்துள்ளது.
இத்தாலியின் வெனிஸ் நகரில் நடந்த விருது விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற அஜித்குமார் விருதினை பெற்றுக்கொண்டார்.
- நடிகை ஷாலினி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- போஸ்டரை வெளியிட்டு நடிகை ஷாலினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'நாயகன்', 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜய்யின் 'கில்லி', 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி', சேரனின் 'ஆட்டோகிராஃப்' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.
இந்த வரிசையில் சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், பூஜா நடிப்பில் 2004-இல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் 'அட்டகாசம்'. இந்த படத்தில் அஜித் இரண்டு கேரக்டர்களில் நடித்திருந்தார். இப்படத்தை மீண்டும் வெளியிடுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், விஜய், சூர்யா இணைந்து நடித்த 'ப்ரண்ட்ஸ்' படமும் மீண்டும் வெளியாக உள்ளது.
இதனிடையே, நடிகை ஷாலினி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அஜித்- ஷாலினி இணைந்து நடித்த 'அமர்க்களம்' மீண்டும் வெளியாக உள்ளதாக இயக்குநர் சரண் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான போஸ்டரை வெளியிட்டு நடிகை ஷாலினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 'அமர்க்களம்' மீண்டும் வெளியாவது குறித்த டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 'அமர்க்களம்' அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் திரையரங்குகளில் அஜித்- ஷாலினி இருவருக்குமான காதல் படத்தை காண அஜித் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
- ‘ப்ரண்ட்ஸ்’ படம் 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வருகிற 21-ந்தேதி 4 கே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் திரைக்கு வருகிறது.
- சினிமாவில் இருக்கிறவர்கள் யாரையும் ‘லவ்’ பண்ண வேண்டாம்’ என அஜித்திடம் கூறினேன்.
விஜய், சூர்யா நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான படம் 'ப்ரண்ட்ஸ்'. மறைந்த இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் வடிவேலு, தேவயானி, விஜயலட்சுமி, ராதாரவி, மதன்பாப், ரமேஷ்கண்ணா, சார்லி உள்பட பலர் நடித்துள்ளனர்.
நட்பை மையமாக கொண்டு உருவான இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் காமெடி காட்சிகளும் படம் திரைக்கு வந்து 24 ஆண்டுகளை கடந்தும் கொண்டாடப்பட்டு வருகின்றன. நீ ஒரு ஆணியையும் புடுங்க வேண்டாம் என்பது உள்பட படத்தில் இடம் பெற்ற அனைத்து காமெடி காட்சிகளும் இன்றும் ரசித்து சிரிக்க வைக்கின்றன.
இந்நிலையில் 'ப்ரண்ட்ஸ்' படம் 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வருகிற 21-ந்தேதி 4 கே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் திரைக்கு வருகிறது. இதையொட்டி சென்னையில் நடந்த விழாவில் இயக்குநர் பேரரசு, ரமேஷ்கண்ணா, இ.வி.கணேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் ரமேஷ்கண்ணா பேசியதாவது:-
படப்பிடிப்பில் சூர்யாவும், நானும் ரொம்பவும் சகஜமாக பழகிக் கொண்டிருப்போம். சந்தோசமான விசயம் என்னவென்றால் உடுமலை பேட்டையில் 'ப்ரண்ட்ஸ்' படப்பிடிப்பு, தெனாலி படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெறும். நான் அந்த படத்திலும் நடித்துக் கொண்டிருந்தேன்.
இரவு காரில் புறப்பட்டு 'ப்ரண்ட்ஸ்' படப்பிடிப்பில் இருந்து தெனாலி படப்பிடிப்புக்கு செல்வேன். அப்படி தெனாலி படப்பிடிப்புக்கு நான் போகும் போது சூர்யா, 'என்னிடம் ஜோதிகாவை கேட்டதாக சொல்லுங்க' என சொல்ல சொல்வார். நான் அங்கு போய் ஜோதிகாவிடம் 'சூர்யா உங்களை கேட்டதாக சொல்ல சொன்னார்' என சொல்வேன். அதுபோல் அங்கிருந்து புறப்படும் போது ஜோதிகா, 'என்னை பற்றி சூர்யாவிடம் சொல்லுங்கள் என சொல்வார்'. அதை நான் சூர்யாவிடம் சொல்வேன். அப்படி காதலை வளர்த்த ஒரு படம் 'ப்ரண்ட்ஸ்'.
அதுபோல் அமர்க்களம் படப்பிடிப்பில் அஜித்திடம், 'சினிமாவில் இருக்கிறவர்களை காதலித்து திருமணம் செய்ய வேண்டாம். குடும்ப பெண்ணை பார்த்து திருமணம் செய்யுங்கள்' என கூறினேன். நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை இயக்குனர் சரண் 'மானிட்டரில்' பார்த்துக் கொண்டிருந்தார். இதையடுத்து என்னை 'இங்க வாங்க' என கூப்பிட்டார். நானும் அவரிடம் சென்றேன். என்னிடம் 'சரண், இருவரும் என்ன பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க' என கேட்டார். அஜித்துக்கு சில அறிவுரைகள் சொன்னேன்' என அவரிடம் கூறினேன். என்ன அறிவுரை என கேட்டார். சினிமாவில் இருக்கிறவர்கள் யாரையும் 'லவ்' பண்ண வேண்டாம்' என அஜித்திடம் கூறினேன்.
இதை கேட்ட சரண், 'அடப்பாவி, அஜித்தும், ஷாலினியும் காதலித்து கொண்டிருக்கிறார்கள். அடுத்த மாதம் திருமணம்' என சொன்னார். உனக்கு இந்த படம் வேணுமா? வேண்டாமா? இதோடு விட்டுறு' என சொன்னார். அதோடு வாயை பொத்திக் கொண்டு வந்து விட்டேன் என சொல்லி சிரித்தார் ரமேஷ் கண்ணா.
அஜித், சூர்யா காதல் குறித்து ரமேஷ் கண்ணா பேசிய சுவாரஸ்ய கருத்துக்கள் விழாவை கலகலப்பாக்கியது.






