என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amarkkalam"

    அஜித்தின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான 25-வது திரைப்படமாகும்.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'நாயகன்', 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜய்யின் 'கில்லி', 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி', சேரனின் 'ஆட்டோகிராஃப்', படையப்பா உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    மேலும், தெறி மற்றும் மங்காத்தா ஆகிய படங்கள் வரும் 23ம் தேதி ஒரே நாளில் வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில், நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'அமர்க்களம்' திரைப்படம், வெளியாகி 25 ஆண்டுகளைக் கடந்ததைக் கொண்டாடும் வகையில், வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது.

    1999-ஆம் ஆண்டு வெளியான 'அமர்க்களம்', அஜித்தின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான 25-வது திரைப்படமாகும். இத்திரைப்படம் அவரை ஒரு 'மாஸ்' ஆக்ஷன் ஹீரோவாக நிலைநிறுத்தியது.

    இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போதுதான் அஜித்தும், நடிகை ஷாலினியும் காதலிக்கத் தொடங்கினர். பின்னாளில் இவர்கள் இருவரும் திருமணமும் செய்துகொண்டனர். எனவே, ரசிகர்களுக்கு இது வெறும் படம் மட்டுமல்ல, ஒரு உணர்ச்சிகரமான காவியமாகவும் பார்க்கப்படுகிறது.

    இயக்குனர் சரண் மற்றும் அஜித் கூட்டணியில் உருவான இரண்டாவது வெற்றிப் படம் இது. பரத்வாஜ் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் இன்றும் ரசிகர்களின் ஃபேவரிட்.

    இந்நிலையில், காதலர் தின வாரத்தை முன்னிட்டு, வரும் பிப்ரவரி 12ம் தேதி அன்று அமர்க்களம் வெளியாகிறது.

    இத்திரைப்படம் தற்போதைய காலத்திற்கு ஏற்ப 4K தரத்தில் புதுப்பிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட ஒலி அமைப்புடன் வெளியாகவுள்ளது.

    கடந்த ஆண்டு நவம்பர் 20ம் தேதி அன்று நடிகை ஷாலினியின் பிறந்தநாளை முன்னிட்டு அமர்க்களம் படத்தின் டீசர் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    • நடிகை ஷாலினி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • போஸ்டரை வெளியிட்டு நடிகை ஷாலினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'நாயகன்', 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜய்யின் 'கில்லி', 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி', சேரனின் 'ஆட்டோகிராஃப்' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    இந்த வரிசையில் சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், பூஜா நடிப்பில் 2004-இல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் 'அட்டகாசம்'. இந்த படத்தில் அஜித் இரண்டு கேரக்டர்களில் நடித்திருந்தார். இப்படத்தை மீண்டும் வெளியிடுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், விஜய், சூர்யா இணைந்து நடித்த 'ப்ரண்ட்ஸ்' படமும் மீண்டும் வெளியாக உள்ளது.

    இதனிடையே, நடிகை ஷாலினி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அஜித்- ஷாலினி இணைந்து நடித்த 'அமர்க்களம்' மீண்டும் வெளியாக உள்ளதாக இயக்குநர் சரண் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான போஸ்டரை வெளியிட்டு நடிகை ஷாலினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.



    மேலும் 'அமர்க்களம்' மீண்டும் வெளியாவது குறித்த டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 'அமர்க்களம்' அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் திரையரங்குகளில் அஜித்- ஷாலினி இருவருக்குமான காதல் படத்தை காண அஜித் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 



    ×