search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saran"

    • சண்முகம் மீது கொலை, கஞ்சா கடத்தல் உள்பட 15 வழக்குகள் உள்ளன.
    • எனக்கு எதுவும் ஆகாமல் இருக்கவே மக்கள் முன்னிலையில் கோர்ட்டில் சரண் அடைகிறேன் என சண்முகம் கூறியுள்ளார்.

    கோவை,

    கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் சண்முகம். இவர் மீது சரவணம்பட்டி உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கஞ்சா கடத்தல் உள்பட 15 வழக்குகள் உள்ளன.

    வழக்கு தொடர்பாக போலீசார் சண்முகத்தை கடந்த சில வாரங்களாக தேடி வந்தனர். அப்போது அவர் தலைமறைவாக இருந்தார்.

    இந்த நிலையில் ரவுடி சண்முகம் இன்று தனது வக்கீல்களுடன் கோவை கோர்ட்டிற்கு வந்தார்.

    பின்னர் அவர் நீதிபதி முன்பு கோர்ட்டில் சரண் அடைந்தார். முன்னதாக சண்முகம், நிருபர்களிடம் கூறியதாவது:-

    என் மீது 15 வழக்குகள் இருப்பதால் போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இதற்கிடையே போலீசார் என்னை சுட்டு விடுவேன் எனவும், என் குடும்பத்தினர் மீது கஞ்சா விற்பதாக பொய் வழக்கு போட்டு விடுவதாகவும் மிரட்டி வருகிறார்கள்.

    என் குடும்பத்தினருக்கு எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்பதற்காகவே நான் தானாக முன்வந்து இன்று வக்கீல்களுடன் வந்து கோர்ட்டில் சரண் அடைந்துள்ளேன்.

    நான் ஜெயிலில் இருந்து வெளியில் வந்து 2 மாதங்கள்தான் ஆகின்றது. திருந்தி வாழ்ந்து வரும் என்னை போலீசார் தொடர்ந்து தேடி வந்ததால் சரண் அடைந்தேன்.

    எனது சகோதரர் மீதும் 5 வழக்குகள் உள்ளன.சமீபத்தில் அவரை பிடித்த போலீசார் கை, கால்களை உடைத்து விட்டனர். எனக்கு எதுவும் ஆகாமல் இருக்கவே மக்கள் முன்னிலையில் கோர்ட்டில் சரண் அடைகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    • சரண் இயக்கத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜெமினி’.
    • இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது.

    இயக்குனர் சரண் இயக்கத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஜெமினி'. விக்ரம் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் கிரண் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், கலாபவன் மணி, வினு சக்ரவர்த்தி, மனோரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.


    ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் இன்று வரை முணுமுணுக்கும் பாடல்களாக அமைந்துள்ளது. அதிலும், 'ஓ போடு' பாடல் இடம்பெறாத இசை நிகழ்ச்சிகளே கிடையாது. அந்த அளவிற்கு கவனம் ஈர்த்தது.


    இந்நிலையில், ஜெமினி திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகளாகியுள்ளதை நடிகர் விக்ரம் தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.


    • அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் பரத்வாஜ்.
    • இப்படம் குறித்து பரத்வாஜ் சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.

    அஜித் நடிப்பில் 1998ம் ஆண்டு வெளியான காதல் மன்னன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் பரத்வாஜ். இயக்குனர் சரண் இயக்கியிருந்த இப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் ஆனது. மேலும் அஜித்தின் திரைப்பயணத்தில் காதல் மன்னன் திரைப்படம் ஒரு மையில் கல்லாக அமைந்தது. இதனை தொடர்ந்து சரணின் பல படங்களுக்கு பரத்வாஜ் இசையமைத்திருக்கிறார். அதன்பின்னர் சரண்-அஜித்-பரத்வாஜ் கூட்டணியில் வெளியான அமர்களம், அட்டகாசம், அசல் உள்ளிட்ட படங்கள் வெளியாகி திரையுலகில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று தவிர்க்க முடியாத கூட்டணியாக மாறியது.

     

    காதல் மன்னன்

    காதல் மன்னன்


    இந்நிலையில் காதல் மன்னன் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதை இசையமைப்பாளர் பரத்வாஜ் சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார். அதில், 25 வருடங்கள் ஆகிவிட்டன என்பதை என்னால் நம்ப முடியவில்லை! தமிழில் எனது முதல் படம், அஜித்குமாருக்கு எனது முதல் படம். மேலும் A (அஜித்) - B (பரத்வாஜ்) - C (சரண்) மூவரின் கூட்டணி. உன்னை பார்த்த பின்பு நான்.. கொண்டாடிய அனைத்து அஜித் ரசிகர்களுக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். இவரின் பதிவு லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.

    சரண் இயக்கத்தில் ஆரவ் - காவ்யா தபூர் நடிப்பில் உருவாகி வரும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ராதிகா ஒப்பந்தமாகி இருக்கிறார். #MarketRajaMBBS #Arav #RadikaaSarathkumar
    `ராஜ பீமா' படத்தை தொடர்ந்து ஆரவ் அடுத்ததாக காதல் மன்னன், அமர்களம், ஜெமினி, அட்டகாசம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய சரண் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

    மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஆரவ் மார்க்கெட் ராஜாவாக டான் கதாபாத்திரத்தில் வருகிறார். ஆரவ் ஜோடியாக காவ்யா தபூர் தமிழில் அறிமுகமாகிறார். ராதிகா சரத்குமார், நாசர், யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, சாம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் ராதிகா ஆரவ்வுடன் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படப்பிடிப்பில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


    சிமோன் கே.கிங் இசையமைக்கும் இந்த படத்திற்கு கே.வி.குஹான் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இவர் சரணின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. #Arav #MarketRajaMBBS #RadikaaSarathkumar

    முருகேஷ் இயக்கத்தில் கிஷோர், சரண், பக்கோடா பாண்டி, பிரித்விராஜன், ரவி வெங்கட்ராமன், ஸ்ரீ ராம், ஆயிரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சகா’ படத்தின் முன்னோட்டம். #Sagaa #SagaaFrom1stFeb
    செல்லி சினிமாஸ் சார்பில் ஆர்.செல்வகுமார், ராம் பிரசாந்த் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சகா’. பல முன்னணி விளம்பரங்களில் பணியாற்றிய முருகேஷ் இயக்குநராக அறிமுகமாகிறார்.

    17 வயது முதல் 22 வயதுக்குள் சிறையில் உள்ள இளைஞர்களின் நட்பு, காதல், ஏமாற்றம், பழி வாங்குதல் போன்றவைகளை கதை களமாக கொண்ட படமாக “சகா” உருவாகி இருக்கிறது. கிஷோர், சரண், பக்கோடா பாண்டி, ரவி வெங்கட்ராமன், ஸ்ரீ ராம், ஆயிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகர் பாண்டியராஜனின் மகன் பிரித்திவிராஜன் முதன்முறையாக வில்லன் வேடம் ஏற்று நடிக்கிறார்.

    இசை & வரிகள் - ஷபிர், ஒளிப்பதிவு - நிரன் சந்தர், படத்தொகுப்பு - ஹரிஹரன், சண்டைப்பயிற்சி - கோட்டி, கலை ராஜூ, நடனம் - ஷெரிஃப் சதீஷ் சாண்டி, ஒலி வடிமைப்பாளர் - கீதா குரப்பா, தயாரிப்பு நிர்வாகம் - ஜெயக்குமார், தயாரிப்பு - ஆர்.செல்வகுமார் & ராம்பிரசாத், எழுத்து, இயக்கம் - முருகேஷ்



    படம் பற்றி இயக்குனர் முருகேஷ் கூறுகையில், “குற்றம் செய்து சிறையில் உள்ள இளைஞர்கள் புதிய வாழ்வை அடைய துடிக்கிறார்கள். அவர்களுக்கு வரும் தடைகளையும் அவர்கள் அதை எதிர்கொள்ளும் விதத்தையும் சகா திரைப்படத்தில் அப்பட்டமாக அப்படியே காட்டியுள்ளோம்” என்றார்.

    படம் பிப்ரவரி 1-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. #Sagaa #Kishore #Saran #PakodaPandi #PrithviRajan #SreeRaam #Aayira #3DaysToGoForSagaa #SagaaFrom1stFeb

    ராஜபீமா படத்தை தொடர்ந்து சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் என்ற படத்தில் நடிப்பதை ஆரவ் உறுதிப்படுத்தியுள்ளார். #Arav #MarketRajaMBBS
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆரவ் தற்போது `ராஜ பீமா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ஆரவ் அடுத்ததாக காதல் மன்னன், அமர்களம், ஜெமினி, அட்டகாசம் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சரண் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

    இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில், ஆரவ் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம், சரண் இயக்க, கமல் நடித்த வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தை நினைவுகூறும் விதமாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.


    இதில் ஆரவ் மார்க்கெட் ராஜாவாக டான் கதாபாத்திரத்தில் வருகிறார். ஆரவ் ஜோடியாக காவ்யா தபூர் தமிழில் அறிமுகமாகிறார். ராதிகா சரத்குமார், நாசர், யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, சாம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    சிமோன் கே.கிங் இசையமைக்கும் இந்த படத்திற்கு கே.வி.குஹான் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இவர் சரணின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Arav #MarketRajaMBBS

    ×