என் மலர்
நீங்கள் தேடியது "Sarath Kumar"
- ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளராக சிவஞான குருநாதன் நியமிக்கப்படுகிறார்.
- பாலமுருகன் சிவகங்கை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
சென்னை:
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளராக செயலாற்றி வந்த பன்னீர்செல்வம் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு ராமநாத புரம் மேற்கு மாவட்ட அவைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளராக சிவஞான குருநாதன் நியமிக்கப்படுகிறார்.
நெல்லை மாநகர் மாவட்ட பொறுப்பாளராக செயல்பட்டு வந்த மாநில மாணவரணி துணைச் செயலாளர் நட்சத்திர வெற்றி நெல்லை மாநகர மாவட்ட பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அழகேசன் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
சிவகங்கை வடக்கு மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்த மலைக்கண்ணன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, பாலமுருகன் சிவகங்கை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மறைவை தொடர்ந்து அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மறைவை தொடர்ந்து அடுத்த மாதம் பிப்ரவரி 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியதாவது:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடவில்லை என்றும், எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இந்த கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இன்றும், நாளையும் விருப்ப மனு வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விருப்ப மனு வாங்குவது ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சரத்குமார் கூறும்போது, தவிர்க்க முடியாத காரணங்களால் முக்கிய நிர்வாகிகள் சிலர் இன்று வர இயலவில்லை. எனவே, நாளை (ஞாயிறு) முதல் விருப்ப மனுக்கள் வாங்கப்படும்.
ஏற்கனவே அறிவித்தபடி நாளை விருப்ப மனு வாங்கப்படும் தொகுதிகளுக்கு நாளையே வாங்கப்படும்.
இன்று வாங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (திங்கள்) மனு வாங்கப்படும்.
இவ்வாறு சரத்குமார் கூறினார். #sarathkumar #parliamentelection

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமாரின் பிறந்தநாளை “சமத்துவ ரத்ததான தினமாக” கொண்டாட இருக்கிறோம். எனவே கட்சி நிர்வாகிகள் வருகிற 14-ந் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக தங்கள் பகுதிகளிலுள்ள தன்னார்வலர்களுடனோ, என்.ஜி.ஓ. நிறுவனங்களுடனோ, தனியார் மற்றும் பொது நிறுவனங்களுடனோ இணைந்து ரத்ததான முகாம் நடத்த வேண்டும்.
இதுவரை தமிழகத்தில் நடந்திடாத வகையில் மிகப்பெரிய அளவில் இந்த ரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதே தலைவர் ஆர்.சரத்குமாரின் எண்ணம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தொடர் பெட்ரோல், டீசல் விலையேற்றம் மூலம் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிக்கின்றது. நாட்டு பொருளாதார சுமையை விலையேற்றத்தின் மூலம் மக்கள் மீது திணிப்பது ஏற்புடையதல்ல. கர்நாடகத் தேர்தலின்போது 19 நாட்களாக பெட்ரோல், டீசலின் விலையை ஏற்றாமலும் தேர்தல் முடிவுக்கு பிறகு தொடர் விலையேற்றம் செய்வதும் மக்களை ஏமாற்றும் செயல்.
மக்கள் நலன், தொழில்கள், வணிகம் உள்ளிட்ட அனைத்தையும் பாதிக்கக்கூடிய பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பதற்கு மத்திய அரசு அறிக்கை மட்டுமே விடாமல், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பலமுறை வலியுறுத்தியிருந்தது போல பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு இவற்றை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர வேண்டும் எனவும், மாநில அரசின் வருவாய் பாதிக்கும் என்ற போதிலும் தமிழக அரசு பெட்ரோலிய பொருட்கள் ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்குள் கொண்டுவருவதற்கு முழு ஆதரவு நல்கி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜெம் நிறுவனம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடப் போவதாகவும், மாற்று இடம் கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்து இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த எரிவாயுத் திட்டத்தையும் தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம். மக்களைத் திரட்டி கடுமையான போராட்டத்தை மேற்கொள்வோம் என மத்திய அரசுக்கு எச்சரிக்கிறேன். நெடுவாசல் வெற்றிக்கு மக்கள் போராட்டமே காரணம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு வேறு இடம் ஒதுக்கித்தர வேண்டும் என ஜெம் நிறுவனம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. ஏற்கனவே, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிரான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளதாலும், தமிழக அரசின் காலதாமதத்தால் இழப்பு ஏற்பட்டதாலும் ஜெம் நிறுவனம் இத்தகைய முடிவு எடுத்திருப்பது பலவிதமான போராட்டங்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் கிடைத்த முதல் வெற்றி” என்று தெரிவித்துள்ளார்.