என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேவயானி"
- நகுல் நாயகனாக நடித்து உருவாகி உள்ள படம் வாஸ்கோடகாமா.
- இப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
5656 புரொடக்ஷன்ஸ் சார்பில் டத்தோ. பா.சுபாஸ்கரன் தயாரிப்பில் நகுல் நாயகனாக நடித்து உருவாகி உள்ள படம் வாஸ்கோடகாமா.இப்படத்தை ஆர்ஜிகே இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த' வாஸ்கோடகாமா ' திரைப்படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே. எஸ். ரவிகுமார்,நடிகை தேவயானி கலந்து கொண்டார்கள்.
விழாவில் நடிகை தேவயானி பேசும் போது,
"என் தம்பி நகுல் நடித்த பட விழாவில் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
அவனுக்கு நான் முறையில் அக்கா என்றாலும் வயதில் சின்னவனாக இருப்பதால் அவனை நான் அம்மாவைப் போல் பார்த்துக் கொள்வேன்.அவனுக்கு நான் இன்றும் அம்மாதான்.சின்ன வயதில் இருந்து துறுதுறு என்று இருப்பான். நல்ல திறமைசாலி.
இன்று என் அப்பாவும் அம்மாவும் இல்லை. ஆனால் இங்கே நாங்கள் இருப்பதைப் பார்த்து அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நான் இங்கே இருப்பதை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஆசீர்வாதம் இங்கே நிரம்பி இருப்பதாக நினைக்கிறேன்.எப்போதும் அவனுக்கு ஆதரவாக இருந்த அவர்கள் இப்போதும் இருப்பார்கள் என்று நினைக்கிறேன் "என்று கூறி வாழ்த்தினார் .
நாயகன் நகுல் பேசும் போது,
"எனது வாழ்க்கை எங்கே தொடங்கி எங்கே போகிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. மும்பையில் பள்ளியில் படித்த போது அக்கா இங்கே நடிக்க வந்து விட்டார். அவருக்காக, அவர் அழைத்ததால் இங்கு வந்து விட்டோம்.
நான் முதலில் பைலட் ஆக வேண்டுமென்று ஆசைப்பட்டு முயன்றேன் . பிறகு விஸ்காம் சேர்ந்தேன். அதுவும் ஒரு காதலுக்காக மாறினேன். அதுவும் நிறைவேறவில்லை.
ராணுவத்தில் சேர ஆசைப்பட்டேன் .அதற்காக எடையெல்லாம் குறைத்தேன்.அதுவும் நடக்கவில்லை .
ஏதோ ஒரு அதிர்ஷ்டம், ஏதோ ஒரு ஆசீர்வாதம் காரணமாக இங்கு வந்து சேர்ந்து விட்டேன்.
ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தால் தான் பாய்ஸ் படத்தில் நடிக்க வந்தேன். பிறகு காதலில் விழுந்தேன் வந்தது. நான் ஒன்று நினைத்தால் எல்லோரும் இன்னொன்றை என்னிடம் ரசித்தார்கள். நான் பாடலாம் என்றால் அவர்கள் நகுல் நன்றாக ஆடுகிறார் என்றார்கள்.
பல தடைகள் தாமதங்களுக்குப் பிறகு எப்படியோ அடுத்தடுத்த படங்கள். இப்படித்தான் மாசிலாமணி வந்தது, பிறகு வல்லினம் வந்தது.சில மாதங்கள் எந்த வேலையும் இல்லாமல் கூட இருந்தேன் .ஒரு கட்டத்தில் புலம்பதில் பயனில்லை என்று புரிந்தது. எதெது எப்போது நடக்குமோ அதது அப்போது நடக்கும் என்கிற தெளிவு வந்தது.
இரண்டு மணி நேரம் சிரிக்கச் சிரிக்க இந்த வாஸ்கோடகாமா படத்தின் கதையைச் சொன்னார் ஆர்ஜிகே. அதேபோல் எடுத்துள்ளார். இதுவரை நான் நடிக்காத டார்க் ஹ்யூமர் கதை இது .
சினிமாவில் விமர்சனம் கூடாது என்பது அல்ல ,அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சினிமா நூற்றாண்டு கண்டு விட்டது. இதை நம்பி பலபேர் இருக்கிறார்கள். விமர்சனம் என்கிற பெயரில் சினிமாவை அழித்து விடாதீர்கள்." என்று கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த 2008 ஆம் வெளியான 'காதலில் விழுந்தேன்' படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஹீரோ அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்தது.
- டி-3 இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் 'தி டார்க் ஹெவன்' படத்தில் நகுல் பிசியாக நடித்துவருகிறார்.
பிரபல தமிழ் நடிகை தேவயானியின் இளைய சகோத்தரர் நகுல் சங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆவார். நகுல் நடப்பில் கடந்த 2008 ஆம் வெளியான 'காதலில் விழுந்தேன்' படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஹீரோ அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்தது.
இதைத்தொடர்ந்து மாசிலாமணி, தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், வல்லினம், நான் ராஜாவாகப் போகிறேன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னணி பாடகராகவும் உள்ள நகுல் இடையில் சூப்பர் சிங்கர் 7 நிகச்சியில் சிற்ப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டார்.
தற்போது டி-3 இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் 'தி டார்க் ஹெவன்' படத்தில் நகுல் பிசியாக நடித்துவருகிறார். இந்நிலையில் அறிமுக இயக்குனர் ஆர்.ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல் நடித்து வெகுநாட்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருந்த 'வாஸ்கோடகாமா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி 'வாஸ்கோடகாமா' படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராஜகுமாரன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'நீ வருவாய் என'.
- இந்த படத்தில் நடிகை தேவயானி கதாநாயகியாக நடித்தார்.
தமிழ் திரையுலகில் 'தொட்டால் சிணுங்கி' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை தேவயானி, காதல் கோட்டை உள்பட பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
'நீ வருவாய் என' படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் ராஜகுமாரன். அந்த படத்தில் நடிகர்கள் அஜித், பார்த்திபன், நடிகை தேவயானி ஆகியோர் நடித்தனர். அந்த படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. அப்போது நடிகை தேவயானிக்கும் இயக்குனர் ராஜகுமாரனுக்கும் காதல் மலர்ந்து அந்த காதலும் வெற்றி பெற்றது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்துக்கு பிறகு தேவயானி நடிக்கவில்லை. கணவர் ராஜகுமாரனுடன் கிராமத்தில் குடியேறி விவசாயத்தில் ஆர்வம் காட்டினார். இந்த தம்பதிக்கு பிரியங்கா ராஜகுமாரன், இனியா ராஜகுமாரன் ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
ராஜகுமாரன்- தேவயானி
ராஜகுமாரன் இயக்கத்தில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த 'நீ வருவாய் என' படத்தின் 2-ம் பாகத் தில் நடிகர் விஜய் மகன் சஞ்சயையும், தேவயானி மகள் பிரியங்காவும் ஜோடியாக நடிக்க போவதாக தகவல்கள் வெளியானது.
இது பற்றி தேவயானியின் கணவரும், இயக்குனருமான ராஜகுமாரனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:- திரை உலகில் நான் இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக சேர்ந்த பிறகு தான் எனக்கு நம்பிக்கை வந்தது. 15 வருடங்கள் போராடி தான் சினிமா துறையில் வெற்றி பெற்றேன்.
சஞ்சய்- இனியா தேவயானி
1999-ல் சூப்பர்குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் தயாரிப்பில் உருவான "நீ வருவாய் என" படத்தை முதல் முதலாக இயக்கினேன். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பிறகு 2-ம் பாகத்தை உருவாக்கும்படி பலரும் கூறி வந்தார்கள். இப்போது அதற்கான திரைக்கதையை எழுதி முடித்துவிட்டேன். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும்.
இந்த படததில் நடிகர் விஜய் மகன் சஞ்சயை நடிக்க வைக்க திட்டம் உள்ளது. எனது மகள்களுக்கும் சினிமா ஆசை உள்ளது. எனவே சஞ்சய் ஜோடியாக எனது மகளை நடிக்க வைக்கவும் ஆலோசித்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்