என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sai Abhayankar"

    • சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
    • குட் நைட்' படத்தின் இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் நடிக்க உள்ளார்

    அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்திலும் சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

    அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் 'குட் நைட்' படத்தின் இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் நடிக்க உள்ளார். மேலும் படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்றப் போவதாகவும் அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது

    இப்படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சாய் அபயங்கர், பிரபல பின்னணி பாடகர்கள் திப்பு - ஹரிணி தம்பதியின் மகன் ஆவார்.
    • ஜி.வி பிரகாஷ், சந்தோஷ் நாராயணன், அனிருத் என அனைவரும் பாட்டைக் கேட்டு பாராட்டினர்.

    சுயாதீன இசைக்கலைஞரான சாய் அபயங்கர் இசையமைத்து பாடிய 'கட்சி சேர' மற்றும் 'ஆச கூட' பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் சமீபகால சென்சேஷனாக இருந்து வருகிறது. இசை, குரல், பாடல் வரிகள், நடனம் என அனைத்திலும் இந்த பாடல்கள் ஸ்கோர் செய்துள்ளன.  சாய் அபயங்கர், பிரபல பின்னணி பாடகர்கள் திப்பு - ஹரிணி தம்பதியின் மகன் ஆவார். தனது முதல் பாடலிலேயே ரசிகர்களின் மனத்தைக் கவர்ந்த சாய் அபயங்கர், பாடல் குறித்த சுவாரஷ்யமான விஷயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

     இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹுமானுடன் வேலை பார்த்த ஹென்ரி குருவிலா தனது குரு என தெரிவிக்கும் சாய், அவரிடமே இசை தொடர்பாக நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன் என்று தெரிவித்தார். முதலில் 'கட்சி சேர' பாடலை கேட்ட ஏ.ஆர் ரகுமானுக்கு பாடல் பிடித்துப்போகவே அதை ஷேர் செய்துள்ளார். தொடர்ந்து ஜி.வி பிரகாஷ், சந்தோஷ் நாராயணன், அனிருத் என அனைவரும் பாட்டைக் கேட்டு பாராட்டினர்.

     

    முக்கியமாக நடிகர் தனுஷ், பாடல் நல்லா இருக்கு, குரல் நல்லா இருக்கு, செம்ம கேட்சியா இருக்கு, கண்டிப்பா ஹிட்டாகும் என்று சொல்லி பாராட்டினார் என்று தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதன்படி கட்சி சேர பாட்டும், ஆச கூட பாட்டும் ஹிட்டாகியுள்ளது. சாய் அபயங்கர் அடுத்து என்ன பாட்டுடன் வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×