என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாய் அபயங்கர்"

    • சாய் அபயங்கர் இசையமைத்து பாடிய பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் ஹிட் அடித்தது.
    • சாய் அபயங்கர் இசையமைத்த டியூட், பல்டி ஆல்பங்கள் ரசிகர்களை கவர்ந்தன.

    சாய் அபயங்கர், பிரபல பின்னணி பாடகர்கள் திப்பு - ஹரிணி தம்பதியின் மகன் ஆவார். சுயாதீன இசைக்கலைஞரான சாய் அபயங்கர் இசையமைத்து பாடிய 'கட்சி சேர' மற்றும் 'ஆச கூட' பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் ஹிட் அடித்தது.

    இதையடுத்து அவர் இசையமைத்த டியூட், பல்டி ஆல்பங்கள் ரசிகர்களை கவர்ந்தன. இதனால் பல பெரிய நடிகர்களின் படங்களுக்கு தற்போது சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார்.

    இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் வைத்து சாய் அபயங்கரிடம் தன மகளுக்கு நடிகை தேவயானி வாய்ப்பு கேட்டுள்ளார்.

    மேடையில் சாய் அபயங்கரிடம் பேசிய தேவயானி, "முதலில் சாய் அபயங்கரின் அம்மா - அப்பாவின் ரசிகை நான். இப்போது சாய் அபயங்கரின் ரசிகை. என் மகளும் அவரின் ரசிகை தான். என் மகள் இனியா நன்றாக பாடுவாள். அவளுக்கு உங்களுடன் பாட வேண்டும் என்பது தான் கனவு. எதாவது வாய்ப்பு இருந்தால் என் மகளுக்கு கொடுங்கள்" என்று தெரிவித்தார்.

    • ராஜ்குமார் பெரியசாமி D55 படத்தை ஒரு பெரிய அளவில் ஆக்ஷன் அதிரடி படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார்
    • D55 படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார்

    தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி இணையும் படம் 'D55'. இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் ஸ்டுடியோ தயாரிக்கிறது.

    இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி D55 படத்தை ஒரு பெரிய அளவில் ஆக்ஷன் அதிரடி படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார் என கூறப்பட்டது. இதனை தொடர்ந்து, இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், 'D55' படத்தின் முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, 'D55' படத்தின் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

    • இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் ஸ்டுடியோ தயாரிக்கிறது.
    • D55 ஆக்ஷன் அதிரடி படமாக வரவுள்ளது.

    தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி இணையும் படம் D55. இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் ஸ்டுடியோ தயாரிக்கிறது.

    இந்நிலையில், D55 படத்தின் முக்கிய அறைவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பதாக இயக்குனர் புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

    இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி D55 படத்தை ஒரு பெரிய அளவில் ஆக்ஷன் அதிரடி படமாக எடுக்க முடிவு செய்துள்ளார். இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே மற்றும் சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    இனிவரும் நாட்களில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நடிகை சாய் பல்லவி மற்றும் நடிகர் கதிர் இப்படத்தில் முக்கிய நடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளதாகவும் கூறப்பட்டது.
    • இனிவரும் நாட்களில் ‘தலைவர் 173’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 173-வது படத்தை 'பார்க்கிங்' படத்தை இயக்கி கவனம் ஈர்த்த ராம்குமார் பாலகிருஷ்ணன் தான் இயக்கப்போவதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும், நடிகை சாய் பல்லவி மற்றும் நடிகர் கதிர் இப்படத்தில் முக்கிய நடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளதாகவும் கூறப்பட்டது.

    இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்தும் எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில், தற்போது 'தலைவர் 173' படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.



    படத்திற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருவதால் இனிவரும் நாட்களில் 'தலைவர் 173' குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கருக்கு இப்படம் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாய் அபயங்கர் தற்போத சூர்யாவின் 'கருப்பு', ராகவா லாரன்ஸின் 'பென்ஸ்', அல்லு அர்ஜூன் - அட்லீயின் கூட்டணியில் உருவாகி வரும் AA22XA6 மற்றும் கார்த்தியின் மார்ஷல் உள்ளிட்ட படங்களில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் டியூட்.
    • இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

    இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'டியூட்'. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

    இப்படத்தில் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17-ந்தேதி வெளியாகி பெரிய அளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது.

    இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெற்ற இடம்பெற்ற "Oorum Blood" பாடல் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதாக தெரிவித்த இசையமைப்பாளர் சாய் அபயங்கர், நன்றி தெரிவிக்கும் விதமாக லவ் யூ மக்களே எனவும் கூறியுள்ளார்.

    இசையமைப்பாளர் சாய் அபயங்கர், சூர்யா நடிக்கும் கருப்பு உள்பட பல படங்களில் இசையக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


    சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் 800 கோடி ரூபாய் செலவில் இப்படம் பிரமாண்டமாக உருவாகிறது.

    அல்லு அர்ஜுனின் 22ஆவது படம் பான் வேர்ல்டு படமாக உருவாக இருக்கிறது. இப்படம் சுமார் 800 கோடி ரூபாய்க்கு அதிகமான பொருட்செலவில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட இருக்கிறது. இப்படத்தில் கோலிவுட், பாலிவுட்டில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த அட்லீ இயக்குகிறார். அட்லீக்கு இது 6ஆவது படமாகும்.

    சன் பிக்சர்ஸ் இப்படத்தை இயக்குகிறார். இந்த நிலையில் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். 21 வயதான சாய் அபயங்கர் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படத்திற்கு இசையமைக்க அடுத்தடுத்து ஒப்பந்தமாகி வருகிறார்.

    ஹாலிவுட்டில் அவதார் திரைப்படத்தை போல் இந்த படத்திற்காக ஒரு உலகத்தை கிராபிக்ஸ் தொழிநுட்ப உதவியுடன் உருவாக்கி வருகின்றனர். அல்லு அர்ஜுன் இப்படத்தில் மூன்று கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    கருப்பு படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

    ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும்.

    இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    மேலும், இவர்களுடன் ஸ்வாசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி நடித்துள்ளனர். படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

    படத்தின் ரிலீஸ் இன்னும் உறுதியாகவில்லை. திரைப்படம் பொங்கலுக்கு வெளி வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தின் ரீ -ரெகார்டிங் பணிகளை சாய் அபயங்கர் முடித்துள்ளார்.

    இந்நிலையில், கருப்பு படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 20ம் தேதி அன்று கருப்பு படத்தின் முதல் பாடல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும்.

    இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    மேலும், இவர்களுடன் ஸ்வாசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி நடித்துள்ளனர். படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

    படத்தின் ரிலீஸ் இன்னும் உறுதியாகவில்லை. திரைப்படம் பொங்கலுக்கு வெளி வரலாம என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ரீ -ரெகார்டிங் பணிகளை சாய் அபயங்கர் தொடங்கியுள்ளார். இதனை அவர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

    • மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஷேன் நிகாம் முக்கியமானவர்.
    • தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வரும் பல்டி திரைப்படம் செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஷேன் நிகாம் முக்கியமானவர். இவர் சில மாதங்களுக்கு முன் மெட்ராஸ்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் கலையரசன், நிஹாரிகா, ஐஷ்வர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

    இந்நிலையில் அடுத்ததாக ஷேன் நிகாமின் 25- வது திரைப்படமான பல்டி படத்தை அறிமுக இயக்குநரான உன்னி சிவலிங்கம் இயக்கியுள்ளார். இப்படத்தில் இவருடன் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் சாந்தனு பாக்கியராஜ் ,செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

    படத்தின் இசையை சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இது இவர் இயக்கும் முதல் மலையாள திரைப்படமாகும். இந்நிலையில் படத்தின் முதல் பாடலான ஜாலக்காரி வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை விநாயக் சசிகுமார் வரிகளில் சாய் அபயங்கர் மற்றும் சுபலாஷினி இணைந்து பாடியுள்ளனர். பாடல் காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    படத்தை சந்தோஷ் குருவில்லா தயாரிக்க தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வரும் செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    • சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அவரது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.

    சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அவரது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'சலம்பல' பாடலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால் சில சுழ்நிலைக்காரணமாக பாடலை வெளியிட முடியவில்லை எனவே பாடலை இன்று இரவு வெளியிட இருக்கின்றனர். இப்பாடலை சூப்பர் சுப்பு வரிகளில் சாய் அபயங்கர் பாடியுள்ளார். பாடலை குறித்த எதிர்ப்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்பாடல் ஒரு ஃபன் காதல் தோல்வி பாடலாக உருவாகியுள்ளது.

    இந்நிலையில், அனிருத் மற்றும் சாய் அபயங்கர் ஒன்றாக இருக்கும் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனேவே வெளியான இப்பாடலின் ப்ரோமோ வீடியோ நல்ல வரவேற்பை பெற்றது. மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.


    • தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவர் சாம் சிஎஸ்.
    • கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2 திரைப்படத்திற்கு பின்னணி இசையமைத்து பெரும் புகழைப்பெற்றார் சாம்

    தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவர் சாம் சிஎஸ். இவரது இசையில் உருவான விக்ரம் வேதா, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், கைதி ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது.

    கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2 திரைப்படத்திற்கு பின்னணி இசையமைத்து பெரும் புகழைப்பெற்றார் சாம்.

    மறுபக்கம் வெறும் 3 இண்டிபெண்டண்ட் பாடல்களை வெளியிட்ட சாய் அபயங்கரிடம் 8 திரைப்படங்கள் லைன் அப்பில் உள்ளது. அந்த பட்டியலில், சூர்யா, அல்லு அர்ஜுன், கார்த்தி போன்ற டாப் ஹீரோக்களின் படங்களை கையில் வைத்துள்ளார்.

    இன்னும் ஒரு திரைப்படம் கூட வெளியாகாமல் எப்படி இத்தனை படங்களில் சாய் அபயங்கர் கமிட் ஆனார். அவர் பிரபல பாடகர்களின் மகனாக இருப்பதால் தான் என நெட்டிசன்கள் பேச , சாம் சிஎஸ் போன்ற இசையமைப்பாளர்களுக்கு ஏன் பெரிய திரைப்படங்கள் கிடைப்பதில்லை என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வந்தனர். அதற்கு பதிலளிக்கு வகையில் சாம் சிஎஸ் சில விஷயங்களை கூறியுள்ளார் அதில் அவர்

    "சாய் திறமைவாய்ந்த மியூசிசியன் என்பது எனக்கு தெரியும். அவரை புக் பண்ணிய இயக்குனர்களுக்கு தெரியும். ஆடியன்ஸுக்கு ஏன் தெரியவில்லை என்றால் அவருடைய படங்கள் எதுவுமே இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் நிஜமாகவே அவருக்கு நிறைய திறமை இருக்கிறது. அவர் நிறைய பாடல்களை பண்ணி வைத்திருக்கிறார். அவரை கமிட் பண்ணிய டைரக்டர்கள் அவருடைய ஒர்க் பிடித்து தான் பண்ணுகிறார்கள். அவருமே எந்தவித பி.ஆர் வேலைகளும் செய்து வரவில்லை. அவருடைய 2, 3 பாடல்கள் தான் ரிலீஸ் ஆகிருக்கு அதுக்குள்ள எப்படி இவ்ளோ வாய்ப்பு என்று தான் கேட்கிறார்கள்.

    மேலும் சாய் அபயங்கரை இப்படி சித்தரித்து நானே இதுபோன்று பதிவிட்டு எனக்கான பி.ஆர் வேலைகளை செய்து வருகிறேனா என ஒருவர் கேட்டார். ஒருவேளை நான் தான் அப்படி போட்டேன் என ஆதாரத்துடன் ஒருவர் சொல்லிவிட்டால் நான் சினிமாவை விட்டே விலகி விடுகிறேன்.

    அவருக்கு அதிகமான திரைப்படம் கிடைக்கிறது எனக்கு எந்த ஃபீலிங்கும் இல்லை, எனக்கு அப்படி தோணவும் தோணாது, நான் செய்யும் வேலைகளில் மிக திருப்திகரமாக உணர்கிறேன்" என கூறியுள்ளார்.

    • ‘தங்கம்' என்ற படத்தில் நடித்த உன்னி சிவலிங்கம் என்பவர், இந்தப் படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார்.
    • இந்தப் படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார்.

    மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக இருப்பவர், ஷான் நிகம். இவரது நடிப்பில் விளையாட்டை மையமாக வைத்து 'பல்டி' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. 'தங்கம்' என்ற படத்தில் நடித்த உன்னி சிவலிங்கம் என்பவர், இந்தப் படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்தப் படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். இதன் மூலம் மலையாளத்தில் அவர் அறிமுகம் ஆகிறார்.

    இது தொடர்பாக, மலையாள முன்னணி நடிகர் மோகன்லால், சாய் அபயங்கரை மலையாள சினிமாவிற்கு வரவேற்பது போன்ற வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

    கட்சி சேர புகழ், ஆச கூட போன்ற ஆல்ப பாடல்களுக்கு இசையமைத்ததன் மூலமாக கவனம் பெற்ற சாய் அபயங்கர், தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் 'டியூட்' சூர்யா நடிக்கும் 'கருப்பு' ராகவா லாரன்ஸ் - நிவின்பாலி நடிக்கும் 'பென்ஸ்' ஆகிய படங்களுக்கும், சிம்புவின் 49-வது படம், அல்லு அர்ஜூன் நடிப்பில் அட்லி இயக்கும் படம், சிவகார்த்திகேயன் படம் ஆகியவற்றிற்கும் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×