என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "RJ balaji"
- ஆர்.ஜே.பாலாஜி தற்போது நடித்துள்ள படம் சிங்கப்பூர் சலூன்.
- இப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆர்.ஜே.பாலாஜி தற்போது கதாநாயகனாக நடித்து வரும் படம் 'சிங்கப்பூர் சலூன்'. இந்த படத்தை 'ரவுத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார். ஆர்.ஜே.பாலாஜி இதில் சிகையலங்கார நிபுணராக நடிக்கிறார். இதற்காக அவர் சுமார் ஒன்றரை மாதம் சிகையலங்கார நிபுணர்களிடம் பயிற்சி பெற்றுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் - ஆர்.ஜே.பாலாஜி
இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜுடன், ஆர்.ஜே.பாலாஜி எடுத்துக் கொண்ட புகைப்படமும் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடித்த திரைப்படம் 'ரன் பேபி ரன்'.
- இப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடித்த திரைப்படம் 'ரன் பேபி ரன்'.இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, எஸ் யுவா ஒளிப்பதிவு செய்திருந்தார்.

ரன் பேபி ரன்
இப்படம் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ரன் பேபி ரன்' திரைப்படம் வருகிற மார்ச் 10-ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
Get set for a thrill ride! ⚡#RunBabyRun from March 10 on #Disneyplushotstar@Prince_Pictures @RJ_Balaji @aishu_dil @jiyenkrishna @lakku76 @SamCSmusic @realradikaa @RajAyyappamv @smruthi_venkat @actorvivekpra @dopyuva pic.twitter.com/m6CwJFLI9M
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) February 27, 2023
- ஆர்.ஜே.பாலாஜி தற்போது 'ரன் பேபி ரன்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
- சிவகார்த்திகேயன், சந்தானம் என்று யாரையும் போட்டியாக நினைக்கவில்லை என்று ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி ஏற்கனவே எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது 'ரன் பேபி ரன்' படத்தில் நடித்து இருக்கிறார். இப்படம் குறித்து அவர் கூறும்போது. ''எனது முதல் படத்தில் அரசியலும், 2-வது படத்தில் ஆன்மிகமும் இருந்தது. ரன் பேபி ரன் திரில்லர் படமாக தயாராகி உள்ளது. ஒரு இமேஜுக்குள் அடங்கிவிட கூடாது என்பதற்காக வித்தியாசமான கதைகளில் நடிக்கிறேன்.
ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கியிருக்கும் ரன் பேபி ரன் வேறு களம். இந்த படம் இருக்கை நுனியில் அமர வைக்கும் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி உள்ளது. சிவகார்த்திகேயன், சந்தானம் என்று யாரையும் போட்டியாக நினைக்கவில்லை. நான் படங்களில் நடிப்பது அதிர்ஷ்டம். எனக்கு நீண்ட தூரம் ஓடவேண்டும். எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் படங்களின் இரண்டாம் பாகம் எடுப்பேன். புதிதாக சிங்கப்பூர் சலூன் உள்பட 3 படங்களில் நடிக்கிறேன். ஊரடங்கில் எல்லோரும் திரில்லர் படம் பார்த்து பழகி விட்டனர். அதனால் இப்போது விதவிதமான திரில்லர் படங்கள் வருகின்றன. மைக்கேல் மதன காமராஜன் மாதிரி ஒரு படத்தில் நடிக்க ஆசை உள்ளது" என்றார்.
- இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் திரைப்படம் ‘ரன் பேபி ரன்’.
- இப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தற்போது இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் திரில்லர் படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, எஸ் யுவா ஒளிப்பதிவு செய்கிறார். 'ரன் பேபி ரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஆர்.ஜே.பாலாஜி
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி கூறியதாவது, "இப்போதெல்லாம், படத்தின் வசூல் பற்றி இளைஞர்கள் அதிகமாகக் கவலைப்படுகிறார்கள். அமெரிக்காவில் எவ்வளவு வசூல், ஐரோப்பாவில் இவ்வளவு வசூல் என்று அவர்களின் நேரமும் ஆற்றலும் வீணாகிறது. கோடிகள் செலவழித்து படம் தயாரிப்பவர்கள் இதுபற்றி கவலைப்பட்டுக் கொள்வார்கள். இளம்தலைமுறையினர் கவலைப்படுவதில் தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடு இல்லை" என்று கூறினார்.
- இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி 'ரன் பேபி ரன்' படத்தில் நடித்துள்ளார்.
- இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தற்போது இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் திரில்லர் படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, எஸ் யுவா ஒளிப்பதிவு செய்கிறார். 'ரன் பேபி ரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ரன் பேபி ரன்
இந்நிலையில், 'ரன் பேபி ரன்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் கார்த்தி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். தற்போது இந்த டிரைலர் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
- இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி 'ரன் பேபி ரன்' படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தின் தீம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தற்போது இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் திரில்லர் படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, எஸ் யுவா ஒளிப்பதிவு செய்கிறார். 'ரன் பேபி ரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ரன் பேபி ரன்
இந்நிலையில் இந்த படத்தின் தீம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மற்றும் லவிதா எழுதி பாடியுள்ள இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'ரன் பேபி ரன்' திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆர்.ஜே.பாலாஜி தற்போது நடித்துள்ள படம் சிங்கப்பூர் சலூன்.
- இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு 'சிங்கப்பூர் சலூன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை 'ரவுத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார். ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் சிகையலங்கார நிபுணராக நடிக்கிறார். இதற்காக அவர் சுமார் ஒன்றரை மாதம் சிகையலங்கார நிபுணர்களிடம் பயிற்சி பெற்றுள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி
இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் மேலும் பல முக்கிய நடிகர்-நடிகைகள் நடித்துள்ளனர். படத்தை அடுத்த வருடம் கோடையில் திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக ஆர்.ஜே.பாலாஜி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தாடி, மீசையுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் தாடி, மீசை இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இதனை தெரிவித்துள்ளார்.
- ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.
- இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வடகறி, நானும் ரவுடி தான், தேவி, வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்து பிரபலடைந்தவர் ஆர்.ஜே.பாலாஜி. அதன்பின்னர் எல்கேஜி படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் படங்களில் கதாநாயகனாக நடித்து இணை இயக்குனராகவும் பணியாற்றினார்.

சிங்கப்பூர் சலூன்
இந்நிலையில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதி கிரிக்கெட் போட்டியின் துவக்கத்தில் வெளியிட்டார். இப்படத்திற்கு 'சிங்கப்பூர் சலூன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை 'இதற்குத்தானே ஆசைப் பட்டாய் பாலகுமாரா', 'ஜூங்கா' படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு கோடையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வீட்ல விசேஷம்’.
- ‘பதாய் ஹோ’ படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள இப்படம் ஜூன் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
மூக்குத்தி அம்மன் படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'வீட்ல விசேஷம்'. இப்படத்தை என்.ஜே. சரவணன் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இணைந்து இயக்கியுள்ளனர். இதில், சத்யராஜ், ஊர்வசி, கே.பி, எஸ்.லலிதா, அபர்ணா பாலமுரளி, யோகி பாபு உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'பதாய் ஹோ' படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகியுள்ளது. இப்படத்தினை போனிகபூரின் பே வியூ புரொஜக்ட்ஸ் லிமிடெட், ஜீ ஸ்டுடி யோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படம் ஜூன் 17-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இதன் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் 'இது மாதிரி ஃபன்னியா தான் சாங் அனோன்ஸ்மெண்ட் வீடியோலாம் பண்ணுனாரு நம்ம நெல்சன்... டேய் நெல்சா' என்று பதிவிட்டிருந்தனர்.
அதற்கு பதிலளித்த ஆர்.ஜே. பாலாஜி,'நெல்சன் மிகப்பெரிய இயக்குனர். நான் பல ஷோஸ்களில் அவருடன் பணியாற்றி இருக்கிறேன். அவருடைய படங்களின் தீவிர ரசிகன். எதிர்காலத்தில் அவர் தனது படங்களின் மூலம் நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவார். தயவு செய்து இப்படி பேசுவதை நிறுத்துங்கள்' என்று பதிவிட்டு இயக்குனர் நெல்சனுக்கு ஆதரவு அளித்துள்ளார்.
